Published:Updated:

Evening Post:மழை:திமுக பெருமிதம் சரியா?BJP-க்கு சிக்கலா?கழுகார் அப்டேட்ஸ்-தாம்பத்யம்: visual-story

Vikatan Highlights November 3
Listicle
Vikatan Highlights November 3

சென்னை மழையை கையாண்ட விதத்தில் திமுக பெருமிதம் கொள்கிறது.. இது ஏற்புடையதுதானா?, கழுகார் அப்டேட்ஸ், நீதித்துறையினருக்கு கேரள நீதிமன்றம் கண்டிப்பு ஏன்? முதல்வர்களை உருவாக்க இதுவா வழி? தாம்பத்ய உறவு: எப்போதெல்லாம் தவிர்க்க வேண்டும்?, நவம்பர், டிசம்பர் ரிலீஸ் படங்கள்


1
சென்னை மழை

சென்னை மழை: திமுக பெருமிதம் ஏற்புடையதுதானா?

சென்னை மழை தொடர்பாக திமுகவும், அதிமுகவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கையால் சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என திமுக பெருமிதம் தெரிவிக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே திமுக அரசை தற்போது காப்பாற்றி இருக்கிறது என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்தில் அக்டோபர் 29-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. சென்னையில் கடந்த இரண்டு நாள்களாகவே கனமழை கொட்டித்தீர்க்கிறது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி, மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு

இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை எழிலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வளாகத்திலுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் வந்த முதல்வர் ஸ்டாலின், மழை நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை சீரழித்து விட்டார்கள். அதை சரி செய்ய நிறைய வருடம் ஆகும். ஆனால் நாங்கள் ஒன்றரை ஆண்டில் முடித்து விடுவோம் என்ற நம்பிகை உள்ளது" என்றார்.

பதிலடி கொடுத்த எடப்பாடி

இதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

* " 'முதலமைச்சரின் பேட்டியில், அம்மாவின் ஆட்சியில் 10 ஆண்டுகளில் நிறைவேற்றாததை, ஓராண்டில் நிறைவேற்றிவிட்டதாக மார்தட்டியுள்ளார்.

* அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே வாடிக்கையாகக் கொண்ட இந்த ஆட்சியாளர்கள், அம்மா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும் திட்டமிடப்பட்டு நடைபெற்று வந்த பணிகளில் ஒருசிலவற்றை தொடர்ந்து செய்துவிட்டு 'ஊரில் கல்யாணம், மாரில் சந்தனம்' என்ற வகையில் நெஞ்சை நிமிர்த்தி செல்வது கேலிக்குரியதாகும்'' எனக் கூறி இருந்ததோடு,

* 2 நாள் மழைக்கே தமிழகம் இற்றுப் போய்விட்டதாகவும் வாய்ச்சொல் வீரர்களால் மக்கள் அல்லல் படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

'திமுகவை காப்பாற்றியது அதிமுகதான்'

அதேபோன்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "இரண்டு நாள் பெய்த மழையையே திமுக அரசால் சரியாக கையாள முடியவில்லை. மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப் பட்டது. அதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுகவின் இயலாமை காரணமாக மழை நீர் அதிக இடங்களில் தேங்கி நிற்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மேற்கொண்ட நடவடிக்கையே திமுக அரசை தற்போது காப்பாற்றி இருக்கிறது" என்றார்.

சேகர் பாபுவின் பெருமிதம்

இதற்கு அமைச்சர் சேகர் பாபு, கடந்த 3 நாட்களாக மழை பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி எங்கேயும் சென்று ஆய்வு செய்யாதது ஏன் கேள்வி எழுப்பினார்.

தமக்கு நினைவு தெரிந்த காலம் முதல் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தற்போது வெள்ளம் தேங்கி நிற்கவில்லை என்றும், தென்சென்னை பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாதது மகிழ்ச்சியை தருவதாகவும், திரு.வி.க. நகரில் தேங்கி இருந்த தண்ணீர் 95% அகற்றப்பட்டு விட்டதாகவும், சென்னையின் பல இடங்களில் நடத்திய ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் வடசென்னை பகுதியில் ஒரு லட்சம் அளவுள்ள மின்மோட்டார்கள் கொண்ட தண்ணீர் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சேகர் பாபு ஆய்வு

முன்னதாக வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மாநகராட்சி என அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கையால் சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என்றும் சேகர் பாபு பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில், " மழையைத் தாங்கியதா சென்னை... கள நிலவரம் என்ன?!" என்பது குறித்த விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
குஜராத் பாலம் விபத்து

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு... பால விபத்து பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1,5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதன் காரணமாக குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலானது நாடு முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால், வரும் 2024-ம் ஆண்டில் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

இதை உணர்ந்த பாஜக-வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான கவர்ச்சிகரமான திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மோர்பி பாலம் விபத்து பாஜகவுக்கு புதிய தலைவலியை...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: லண்டன் பிசினஸ் டீலிங்... வெற்றிக் களிப்பில் வாரிசு!

அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருக்கிறார், நெல்லை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன். ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினராக இருந்தபோதிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் தீவிரமாகச் செயல்படுபவர் அவர். அண்மையில் நெருங்கிய உறவினரின் துக்க வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை நேருக்கு நேர் பார்த்தும்...

கழுகார் அப்டேட்ஸில் இடம்பெற்றுள்ள பல அரசியல் சீக்ரெட் செய்திகளை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
கேரள உயர் நீதிமன்றம்

"நீதித்துறையினர் மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது!"- கேரள நீதிமன்றம் கண்டிப்பு

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் குருவாயூர் கோயிலில் `கோடத்தி விளக்கு' (Kodathi Vilakku - Court Lamp) எனப்படும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

குருவாயூர் ஏகாதசியையொட்டி நடத்தப்படும் இந்த விழாவில் பல சடங்குகள், நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதை சாவக்காடு முன்சீப் நீதிமன்ற சங்கத்தின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று நடத்திவருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
நான் முதல்வன் திட்டம்

+2-வோடு பணிக்கு வருகிற மாணவன்... முதல்வர்களை உருவாக்க இதுவா வழி?

ண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்கும் நல்நோக்கோடு 'நான் முதல்வன்' திட்டத்தை அறிவித்தார் முதல்வர்.

'இது என் கனவுத்திட்டம்' என்றும் சொன்னார். மிகவும் ஆக்கபூர்வமான திட்டமென கல்வியாளர்களும் இந்தத் திட்டத்தை வரவேற்றார்கள்.

இப்போது 'நான் முதல்வன்' திட்டத்தின் அங்கமாக HCL Technologies நிறுவனத்துடன் இணைந்து 'Early career program' ஒன்றை அறிவித்துள்ளது அரசு. +2வில் 60% மதிப்பெண்களோடு தேர்ச்சிபெறும் மாணவர்கள் HCL நிறுவனத்தில் இணைந்து...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
தாம்பத்திய உறவு

தாம்பத்ய உறவு: எப்போதெல்லாம் தவிர்க்க வேண்டும்? # Visual Story

விருப்பமிருந்தால், மாதவிடாய்ம் கர்ப்ப காலத்திலும், வாழ்நாளின் இறுதி வரையும் தாம்பத்திய உறவு கொள்ளலாம்.

அதே நேரம் எப்போது, யாருடன், எந்தச் சூழ்நிலைகளில் செக்ஸ் கூடாது...

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
நவம்பர், டிசம்பர் படங்கள்

வாத்தி, பத்து தல மட்டுமா? நவம்பர், டிசம்பர் ரிலீஸ் படங்களின் லிஸ்ட்!

ண்டு இறுதி என்றாலே தமிழ் சினிமா பரபரப்பாகிவிடும். எடுத்து முடித்த படங்களை உடனே சென்ஸாருக்கு அனுப்பவும், ரிலீஸ் தேதிகளைக் கவனத்தில் கொள்ளவும் மும்முரமாகிவிடும்.

அந்த வகையில் இந்த மாதமும், அடுத்த மாதமும் பல படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. வருகிற நவம்பர் 4-ம் தேதி (நாளை) சுந்தர்.சி-யின் இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஶ்ரீகாந்த், யோகிபாபு நடித்த 'காஃபி வித் காதல்'...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...