Published:Updated:

Evening Post:ட்விட்டர் ஊழியர்கள் கண்ணீர்-BJP-க்கு எதிராக வீடியோ RSSபேரணிக்கு உத்தரவு-தாம்பத்ய நேரம்

Vikatan Highlights November 4
Listicle
Vikatan Highlights November 4

ட்விட்டர் இந்தியா ஊழியர்களை கண்ணீர் வடிக்கை வைத்த மின்னஞ்சல், பாஜக-வுக்கு எதிராக தெலங்கானா முதல்வர் வெளியிட்ட வீடியோ, RSS பேரணி.. தமிழக அரசின் வாதம் நிராகரிப்பு, குஜராத் தேர்தல் களத்தில் முந்துவது யார்? 'இம்ரான்கானை கொல்ல முயன்றது ஏன்?', தாம்பத்ய உறவுக்கு எந்த நேரம் சரியானது?


1
ட்விட்டர்

பணி நீக்க நடவடிக்கை... ட்விட்டர் இந்தியா ஊழியர்கள் கண்ணீர்!

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து எதிர்பார்த்தது போலவே பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார் எலான் மஸ்க். இந்த நிலையில், ட்விட்டர் இந்தியா ஊழியர்கள் இன்று காலை வந்த இ-மெயிலால் தங்கள் வேலை நீடிக்குமா என்ற கலக்கத்தில் உள்ளனர்.

ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் தெரிவித்திருந்தது.

ஆனால், அதன் பிறகு எலான் மஸ்க் அதிலிருந்து பின்வாங்கினார். இதனால் ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம், அக்டோபர் 28-க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று கெடு விதித்ததைத் தொடர்ந்து, அன்றைய தினமே ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தின் இறுதி செய்து, அந்த நிறுவனத்தைக் கைப்பற்றினார்.

எலான் மஸ்க்

தொடங்கிய பணி நீக்கம்

அதனைத் தொடர்ந்து எதிர்பார்த்தபடியே தனது அதிரடிகளைத் தொடங்கினார் எலன் மஸ்க்.

* ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டரின் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

* மேலும் 7,500 ஊழியர்கள் ட்விட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களில் இருந்து எவரையெல்லாம் நீக்கலாம் என்ற பட்டியலைத் தயார் செய்து வருவதாக தகவல் வெளியானது.

* நவம்பரில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும், சுமார் 4,500 முதல் 5,000 பேர் வரை நீக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியானதால், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மிகுந்த கலக்கமடைந்தனர்.

கலக்கத்தில் ட்விட்டர் இந்தியா ஊழியர்கள்

* யார் யாருக்கு வேலை பறிபோகுமோ என்ற பீதியிலேயே கடந்த சில தினங்களாக ட்விட்டர் பணியார்கள் நாட்களைக் கடத்தி வந்தனர்.

* இந்த நிலையில், எந்தெந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை, டுவிட்டர் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் என்று தகவல் வெளியானது.

எலோன் மஸ்க்கின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து,

* அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே ட்விட்டர் இந்தியா ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறத் தொடங்கிவிட்டனர்.

* உலகெங்கிலும் உள்ள மற்ற ட்விட்டர் அலுவலகங்களைப் போலவே, ட்விட்டர் இந்தியா அலுவலகத்திலும் இன்று குழப்பம் நிலவியது. பல ஊழியர்கள் தங்களின் வேலை என்னவாகுமோ என்ற கலக்கத்துடன் கண்ணீர் வடித்தனர்.

உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் ஊழியர்களுக்கு இன்று அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், ஊழியர்கள் வேலைக்கு கிளம்பினாலும் அவர்களை வீடு திரும்புமாறும், பணியில் நீடிக்கிறீர்களா இல்லையா என்பது குறித்து அவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் வரும் வரை காத்திருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்ப்பட்டிருந்தது.

முழு அளவில் நீக்கம் எந்த பிரிவுகளில்?

இந்திய நேரப்படி இன்று இரவு 9:30 மணிக்கு ட்விட்டரில் ஊழியர்களின் வேலையின் நிலையை தெரிவிக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும், சந்தைப்படுத்தல், விற்பனை, எடிட்டோரியல் மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு போன்ற பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் முழு அளவில் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கையெழுத்திடாத எலான் மஸ்க்

இந்த பணி நீக்க உத்தரவில் முகவரி பகுதியில் "Team" என்றும், கையெழுத்திடும் பகுதியில் "Twitter" என்றே பதிவிடப்பட்டுள்ளது. பணி நீக்கத்துக்கு உத்தரவிட்ட எலன் மஸ்க்கின் பெயர் எங்கும் இடம்பெறவில்லை, இது தொடர்பான மெயிலில் தனது பெயர் இடம்பெறுவதை அவர் விரும்பாததே அதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ட்விட்டரில், குறிப்பாக ட்விட்டர் இந்தியாவில் எவ்வளவு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த முழு விவரம் நாளை முழுமையாக தெரிந்துவிடும்.


2
சந்திரசேகர ராவ்

தெலங்கானா MLA-க்களை விலைக்கு வாங்க முயற்சி - புதிய வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட கேசிஆர்!

'பாரத ராஷ்டிர சமிதி' என சமீபத்தில் தேசியக் கட்சியாக மாற்றம் செய்யப்பட்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி செய்யும் தெலங்கானாவில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை, பா.ஜ.க விலைக்கு வாங்கப் பேரம் பேசியதாக அந்தக் கட்சியினர் குற்றம்சாட்டிவந்தனர்.

இது தொடர்பாக, முதல்வர் சந்திரசேகர ராவ், தன் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக சதித்திட்டம் போட்டிருப்பதாகவும், எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 100 கோடி ரூபாய் என பா.ஜ.க-வினர் பேரம் பேசியிருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில், அது தொடர்பாக புதிய வீடியோ ஆதாரத்தைச் சந்திரசேகர ராவ் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்மீது தாக்குதல்

44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி... அரசு தரப்பு வாதம் நிராகரிப்பு!

மிழ்நாட்டில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேரணி நடத்த அனுமதி கோரியிருந்த ஆர்.எஸ்.எஸ்-ஸின் கோரிக்கைக்கு, `சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது' என காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பேரணிக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
குஜராத் தேர்தல்

பாஜக Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - குஜராத் தேர்தல் களத்தில் முந்துவது யார்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவிருக்கிறது வாக்குப்பதிவு. டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் குஜராத்தில் எந்தக் கட்சி முந்துகிறது?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
காலில் பாய்ந்த தோட்டா - இம்ரான் கான்

இம்ரான்கானை கொல்ல முயன்றது ஏன்..? துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வெளியிட்ட தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, புதிய தேர்தலுக்கான பிரசாரத்தில், லாகூரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பேரணி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் வஷீராபாத்தில் நேற்று மாலை பேரணி நடந்தது. அப்போது இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்ததாக

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
தாம்பத்யம்

இரவா, பகலா... தாம்பத்ய உறவுக்கு எந்த நேரம் சரியானது? # Visual Story

லகம் முழுக்க இரவுதான் உறவுக்கான நேரமாக இருந்து வருகிறது.

அதனால்தான், நம் கலாசாரத்தில் ' முதலுறவு நாளை முதலிரவு' என்று குறிப்பிடுகிறார்கள்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
பாலு மகேந்திராவின் 'வீடு'

பாலு மகேந்திராவின் 'வீடு': 'ஹீரோ' `முருகேசு' தாத்தா... விழிகளால் பேசிய அர்ச்சனா!

80 & 90ஸ் தமிழ் சினிமா 'நாஸ்டால்ஜியா கொண்டாட்ட' தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – 'வீடு'

'இந்த இயக்குநரின் இந்தந்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று ஒரு ரசிகன் சொல்வது வேறு. 'நான் இயக்கிய படங்களில் எனக்குப் பிடித்தவை' என்று சம்பந்தப்பட்ட இயக்குநரே சொல்வது வேறு. பின்னது ஸ்பெஷலான அம்சம். அந்த வகையில் "என்னுடைய இயக்கத்தில் எனக்கு மிகவும் திருப்தியளித்தது இரண்டு படங்கள்தான். 'வீடு' மற்றும் 'சந்தியா ராகம்'" என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் பாலு மகேந்திரா.

அவரின் இதர திரைப்படங்களில் சற்றாவது 'சினிமாத்தன்மை' இருக்கும். ஆனால் இந்த இரண்டு படங்களும் Docudrama மாதிரி உண்மைக்கு மிக நெருக்கமாகப் பயணிப்பவை. இந்தக் கட்டுரையில் 'வீடு' திரைப்படத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...