Published:Updated:

Evening Post:தமிழிசையை எச்சரிக்கும் திமுக!-முடிவை மாற்றிய RSS- கிசுகிசு-சிக்கனத்துக்கான வழிகள்!

Vikatan Highlights November 5
Listicle
Vikatan Highlights November 5

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை திமுக கடுமையாக எச்சரித்துள்ளது ஏன், RSS பேரணி ஒத்திவைப்புக்கான காரணம் என்ன?கிசுகிசு: மாஜி காக்கி தலைவரிடம் ஆதங்கப்பட்ட துணிவானவர், விராட் கோலி: எல்லா களத்திற்குமானவன், தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்த எளிய வழிகள், 'லவ் டுடே' விமர்சனம்


1
ஸ்டாலின், ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் விவகாரம்: தமிழிசையை  எச்சரிக்கும் திமுக!

மிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்போவதாக அறிவித்தன. இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த பிரச்னையில் வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழிசைக்கு திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரும் திமுக

தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதன் அடுத்தகட்டமாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்போவதாக அறிவித்திருந்த திமுக, இதற்கான குறிப்பாணையில் நவம்பர் மூன்றாம் தேதிக்குள் கையெழுத்திடுமாறும் கூட்டணி கட்சி எம்.பி-க்களைக் கேட்டுக்கொண்டிருந்தது.

எதிர்ப்பு தெரிவித்த தமிழிசை

இந்த நிலையில், புதுவை ஆளுநர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

* அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, " மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்திற்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

* நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது" எனக் கூறியிருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசைக்கு எச்சரிக்கை விடுத்த திமுக

இதனைத் தொடர்ந்து தமிழிசைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்!' என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரபூர்வமான ஏடான முரசொலியில் இன்று வெளியான கட்டுரையில்,

* " தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்னையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் காட்டமாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுரையில், "பலருக்கு 'மைக்மேனியா' - இன்னும் சிலருக்கு ‘கேமரா மேனியா' என்பார்கள்! அதாவது, கேமராவில் முகத்தைக் காட்ட வேண்டும், மைக்கில் பேச வேண்டும் எனும் 'மேனியா' - அதாவது ஒருவித மனவியாதி சிலருக்கு அதிகம் உண்டு! அத்தகைய மனநோய் நமது தெலுங்கானா ஆளுநர்; மன்னிக்கவும் அவரை ஆளுநராக தெலுங்கானா அரசோ, மக்களோ மதிப்பதில்லை; அவரும் 'மதியாதார் வாசல் மிதியேன்' - என்ற முறையில் அங்கு அதிகம் செல்வதைத் தவிர்த்து இப்போதெல்லாம் புதுச்சேரி மாநிலத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்!

* தெலுங்கானாவில் வாயைத் திறக்க முடியவில்லை! அவர்களை மிரட்ட இவர் முறத்தை எடுத்தால்; தெலுங்கானா ஆட்சியாளர்கள் அவர்கள் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து மிரட்டி ஓடஓட விரட்டுகிறார்கள்!.

'எல்லை தாண்டி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்!'

ஆளுநருக்கான அதிகாரம் என்ன என்பதுகூட புரியாது, தமிழ்நாட்டின் ஆளுநர் ரவிக்கு இவர் வக்காலத்து வாங்கி, பிரபல தொலைக்காட்சியின் விவாத மேடையில் தோன்றி ஆவேசமாக பேசியுள்ளார்.

* முதலில் அவர் தமிழ்நாட்டு அரசியலில் வேறு ஒரு மாநில ஆளுநராக இருந்து தலையிடுவதே தவறு!

இந்த நடைமுறையின் தாத்பர்யத்தை உணராமல், நான் தமிழ்நாட்டில் மூக்கை நுழைப்பேன், தேவைப்பட்டால் வாலை நுழைப்பேன் என்றெல்லாம் பேசி வருகிறார்!

* தமிழ்நாட்டுக்கு என ஒரு ஆளுநர் இருக்கும் போது - அவரது எல்லைக்குள் ஏன் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் இங்கு மூக்கை நுழைக்கிறார் என்ற கேள்வியின் நியாயத்தை உணராது, அடிக்கடி தமிழ்நாட்டின் விவகாரங்களில் தலையிடுகிறார்.

* தமிழ்நாட்டு ஆளுநர் ரவி விபரம் தெரியாதவர் போல அவருக்காக இவர் பேச முற்படுகிறார்.

ஸ்டாலின்

'எரிமலையோடு விளையாடாதீர்கள்'

தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்னையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

* தெலுங்கானாவில் பட்ட அடிக்கு தமிழ்நாட்டில் வந்து வீரம் காட்டக் கூடாது!

* உங்களது எல்லை தெலுங்கானா! அங்கே ஜம்பம் சாயவில்லை என்பதால், தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து வீரம் காட்டாதீர்கள்! பொறுமையை பயம் என எண்ணி விடாதீர்கள்;

* எரிமலைகள் பொறுமையாகத்தான் இருக்கும்; வெடித்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!" எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக-வின் இந்த எச்சரிக்கை ஆளுநர்களுக்கும் அக்கட்சிக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.


2
ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு: காரணம் என்ன?

மிழ்நாட்டில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்தத் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த விவகாரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது எனக் கூறி அனுமதி தர மறுத்த தமிழக அரசு, பின்னர் நவம்பர் 6-ம் தேதி பேரணி நடத்தலாம் என கூறியது.

இந்த நிலையில், 44 இடங்களில் பேரணி நடத்தலாம் என நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்ட போதிலும், பேரணியை ஒத்திவைப்பதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கிசுகிசு

கிசுகிசு: மாஜி காக்கி தலைவரிடம் ஆதங்கப்பட்ட துணிவானவர்!

டிக்கடி உடல்நலப் பிரச்னைகள் வருவதால், வெளிநாட்டுக்குப் போய் சிகிச்சை எடுக்க நினைக்கிறாராம் முதன்மையானவர். இதுவரை மூன்று முறை அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணப்பட்டு, கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாம்.

அப்போதே சிகிச்சை எடுத்திருந்தால், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வந்திருக்காது என்கிறார்களாம் மருத்துவர்கள். இதற்கிடையில் கவர்னர் விவகாரம் தொடங்கி, கோவைச் சம்பவம் வரையிலான நிகழ்வுகள் உச்சபட்ச டென்ஷனை ஏற்படுத்தியிருப்பதால்...

கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள பல அரசியல் சீக்ரெட் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
மதுபோதையில் மகளிர் கல்லூரிக்குள் வந்த இளைஞர்கள்

மதுரை: மகளிர் கல்லூரியில் மதுபோதையில் அராஜகம்... கைதான 10 இளைஞர்கள்!

துரையில் உள்ள இரண்டு மகளிர் கல்லூரிகளில் மதுபோதையில் இளைஞர்கள் சிலர் செய்த வன்முறை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில், மாநகர காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கடந்த 30-ம் தேதி தேவர் ஜெயந்தியன்று மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் வந்திருந்தனர்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5

விராட் கோலி: எல்லா களத்திற்கும் காலத்திற்குமானவன்!

விராட் கோலியின் டெஸ்ட் களத்தின் பக்கங்கள், வெள்ளை நிறத்தால் அல்ல, வானவில்லின் வண்ணங்களால் ஆனவை. பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும், இந்திய அணியில் புதுமைகளையும், புரட்சிகளையும் புகுத்தியவர்.

உண்மையில், டி20-ல் கோலி தொட்டிருக்கும் உச்சம், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிச் சிலாகிக்கப்படவேண்டிய ஒன்று!

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
செலவு செய்தல்...

தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்த 8 எளிய வழிகள்..!

தேவை இல்லாத செலவுகள் இன்றைக்கு இன்பம் தருவதாக இருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் அவை துன்பத்தைத் தருவதாக இருக்கும். அந்த வகையில், தேவை இல்லாத செலவுகளை எப்போதும் தவிர்ப்பது அவசியமாகும்.

தேவை இல்லாத செலவு களைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும் 8 எளிய வழிகளைத் தெரிந்துகொள்ள...

இங்கே க்ளிக் செய்க...


7
லவ் டுடே

Love Today Review: இது 2K கிட்ஸின் ரகளையான லவ் ஸ்டோரி!

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்ற `அப்பா லாக்' (App(a) Lock) என்ற குறும்படத்தை மையமாக வைத்து, `கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் படம் `லவ் டுடே' (Love Today).

விரிவான விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...