Published:Updated:

Evening Post:'அரசு வேலையை ஒழிக்கவா அரசாணை?' பண மதிப்பிழப்பு:என்ன பயன்? தொழில் கடனுதவி-Covid மூலிகை

Vikatan Highlights November 8
Listicle
Vikatan Highlights November 8

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை அரசு வேலைக்கு வேட்டு வைக்கிறதா?, '10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் வரவேற்பது ஏன்?, 'தினகரன் அறிவிப்பின் பின்னணி என்ன? பணமதிப்பு நீக்கம் சாதித்தது என்ன?சொந்த தொழிலுக்கான 10 கடனுதவித் திட்டங்கள், கொரோனாவுக்கு தீர்வளிக்கும் மூலிகை மருந்து,கோலிவுட் ஸ்பைடர்


1
TNPSC

'அரசு வேலை கனவில் திராவகம் ஊற்றும் அரசாணை!' - கட்சிகள் கடும் எதிர்ப்பு!

மிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலிருந்தும் பொறியியல் கல்லூரிகளிலிருந்தும் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் முக்கிய கனவாக இருப்பது அரசு பணிகள்தான்.

ஆனால் அதற்கு வேட்டு வைக்கும் விதமாக, இளைஞர்களின் எதிர்கால கனவில் திராவகம் ஊற்றி பொசுக்கச் செய்யும் விதமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 115 இருப்பதாக கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளதோடு, அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

'அரசு வேலைக்கு வேட்டு வைக்கும் அரசாணை'

வழக்கமாக தமிழக அரசுப் பணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு ஏஜென்சிகள் மூலமாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இன்றைய சூழலில் வேலைவாய்ப்பு, அதுவும் அரசு வேலைவாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் போட்டி நிறைந்ததாகவும் குதிரைக்கொம்பாகவும் மாறிவிட்டது. ஆயினும் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மிகுந்த முயற்சியுடனும், வெளியூர்களில் தங்கி பயிற்சி மையங்களில் பயின்றும் அரசு வேலைக்காக முட்டி மோதி வருகின்றனர்.

ஏற்கெனவே சமீப காலமாக மத்திய அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், எஞ்சி இருப்பது தமிழக அரசு பணி மட்டுமே. தற்போது அதற்கும் வேட்டுவைக்கும் விதமாக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அரசு பணிக்கான தேர்வு

இதை செயல்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எம்.எப் பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ. ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக் குழுவை அரசாணை எண் 115 மூலம் தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவானது, அரசு பணிகளில், திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்ப ஆய்வு மேற்கொள்வது. டி மற்றும் சி பிரிவு பணிகளுக்கு வெளிமுகமை மூலம் பணியாட்களை நியமிக்க சாத்திய கூறுகளை ஆராய்வது, வெளிமுகமை ஆள்சேர்ப்பு நிறுவனங்களை ஆராய்ந்து அதன் மூலம் அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வது என பல்வேறு ஆய்வுகளை மேற்கண்ட குழு மேற்கொள்ள உள்ளது.

'அரசு நிரந்தரப் பணிகளை ஒழிக்கவா?'

தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.

* நிரந்தரப் பணிகளையும், சமூக நீதியையும் ஒழிப்பதற்கு வழிவகுக்கக் கூடிய தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

ஆள்தேர்வு முறையில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

* பரிந்துரைகளை அடுத்த 6 மாதங்களில் மனிதவள சீர்திருத்தக்குழு அரசிடம் வழங்கி, அவை நடைமுறைபடுத்தப்பட்டால், அரசு பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு தானாகவே அழிந்துவிடும்.

* தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

இதை உணர்ந்து கொண்டு சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 115-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

'தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம்'

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அதேபோன்று அரசாணை எண் 115-ஐ திரும்பப் பெறக்கோரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
கே.எஸ். அழகிரி

'10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் வரவேற்பது ஏன்?'

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் வரவேற்பது ஏன் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. 103-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் சரியா, தவறா என்ற விவாதத்தில்..."

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
தினகரன்

'திமுக-வை வீழ்த்த யாருடனும் கூட்டணிக்குத் தயார்' - தினகரன் அறிவிப்பின் பின்னணி என்ன?

"கூட்டணி அமைத்தால்தான் திமுக-வை வீழ்த்த முடியும். திமுக-வுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பதற்கு நாங்கள் எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம்'' என மீண்டுமொருமுறை அறைகூவல் விடுத்திருக்கிறார், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

தினகரனின் அரசியல் கணக்குதான் என்ன?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
பணமதிப்பு நீக்கம்

பாடாய்ப்படுத்திய பணமதிப்பு நீக்கம்... ஆறு ஆண்டுகளுக்குப் பின் சாதித்தது என்ன?

டந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு இந்திய அரசானது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்ததுடன், புதிய 500 ரூபாய் மற்றும் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்துக்குவிடுவதாக அறிவித்தது.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள், பறிகொடுத்த உயிர்கள் எல்லாம் வரலாறு ஆகிவிட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
கடன் உதவி திட்டங்கள்

சொந்த தொழில்... தெரிந்துகொள்ள வேண்டிய 10 கடனுதவித் திட்டங்கள்!

ற்பத்தி முதல் விவசாயத் தொழில்கள் வரை அனைத்துத் தரப்பிலும் நிலையான வளர்ச்சியை உருவாக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கடனுதவித் திட்டங்களைச் செயல் படுத்தி, தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.

அவற்றில், புதிய தொழில்முனைவோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கடனுதவித் திட்டங்கள் குறித்த விவரங்களை வழங்குகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
கீழாநெல்லி

'கொரோனா, ஒமிக்ரான்' உருமாறும் வைரஸ் நோய்களுக்கு தீர்வளிக்கும் மூலிகை மருந்து!

லகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா, ஒமிக்ரான் தாக்கம் குறைந்தாலும் முழுமையாக நம்மை விட்டு செல்லவில்லை.

கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நோய்த்தொடர்பு புரதங்களை அழிக்கும் மருந்துகள் குறித்து, மூலிகை தாவரங்களைக் கொண்டு ஆய்வு மாணவர்களுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் "கபசுரக் குடிநீர், வெற்றிலை...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
அஜித்

கோலிவுட் ஸ்பைடர்: அரை மனது அஜித்! 

ஜித்தை ‘துணிவு’க்காக விழா ஒன்றை நடத்தி அதில் மேடையேற்றிவிட பல விதங்களிலும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். முடியவே முடியாது என்று மறுத்தார். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதைப் போல...

கோலிவுட் ஸ்பைடர் தரும் முழுமையான கோலிவுட் சுவாரஸ்ய செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...