Published:Updated:

Evening Post:திமுக மனு: தவிர்த்த ஜனாதிபதி- DMK அரியாசனத்தில் மாற்றம்-கிசுகிசு-அரை நிர்வாண ராகிங்

Vikatan Highlights November 9
Listicle
Vikatan Highlights November 9

கவர்னருக்கு எதிரான திமுக மனு... தவிர்த்த குடியரசுத் தலைவர், திமுக-வின் அரியாசனத்தில் மாற்ற ரேகைகள், 'ஜி-20 லோகோவில் பாஜக விளம்பரம்'-கிசுகிசு: திகைத்துப்போன அதிகாரிகள், வேலூர் சி.எம்.சி விடுதியில் அரை நிர்வாண ராகிங், மாணவனுக்கு ஆசிரியை பாலியல் வன்கொடுமை,வேதனை பகிர்ந்த ராஷ்மிகா


1
ஸ்டாலின் - ரவி

கவர்னருக்கு எதிரான திமுக மனு... சந்திப்பைத் தவிர்த்த குடியரசுத் தலைவர்!

மிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும் இடையேயான மோதலின் உச்சமாக, ஆளுநர் பதவியிலிருந்து ரவியை டிஸ்மிஸ் செய்யக்கோரி வழங்கிய மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் பெற்றுக்கொள்வதை தவிர்த்தது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மாநில அரசின் நிர்வாக விஷயங்களில் தலையிடுவது உட்பட பல்வேறு விதங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு தங்களுக்கு குடைச்சல் கொடுத்து வருவதாக தமிழகம், டெல்லி, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன் காரணமாகவே கடந்த குடியரசு தினத்தின்போது, ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த திமுக கூட்டணி

இந்த நிலையில், சமீபத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் ரவி பேசியது மற்றும் ' இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என சொல்கிறார்கள். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல' என அவர் பேசியதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

* இதனையடுத்து தமிழக ஆளுநர் ரவி பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசட்டும் என திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டன.

இதன் அடுத்தகட்டமாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்கக்கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அம்மனுவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

நேரில் பெறுவதை தவிர்த்த குடியரசுத் தலைவர்

இந்த நிலையில், இம்மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் நேரில் அளிப்பதற்காக, நேரம் ஒதுக்கக்கோரி திமுக எம்.பி கனிமொழி மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், குடியரசுத் தலைவர் அதற்கு நேரம் ஒதுக்கவில்லை. தமிழக ஆளுநருக்கு எதிரான மனுவை நேரில் பெற்றுக்கொள்ள தவிர்க்கவே, குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் சார்பில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அதிகாரிகளிடம் அந்த மனு கொடுக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவானது இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...

அந்த மனுவில், " தமிழகம் வெவ்வேறு மதம், மொழி, சாதியைப் பின்பற்றுவர்கள் அமைதியாக வாழும் சொர்க்கம். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கைகள் மீது தமக்கு இருக்கும் அவநம்பிக்கையை வெளிப்படையாக பிரச்சாரம் செய்கிறார். பிரிவினையை தூண்டும் வகையில் பேசுகிறார். இது அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை உருவாக்குகிறது.

தமிழக அரசு, தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கையில் ஈடுபாடு கொண்டுள்ளது. ஆனால் ஆளுநர் அபாயகரமான, பிரிவினைவாத, மதவாத பிரச்சாரங்களை பொதுவெளியில் முன்னெடுக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

'உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்'

தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றிக் காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவது பற்றிய எங்கள் அதிருப்தியை அவருக்கான உச்சபட்ச மரியாதையுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

* தனது நடத்தையாலும் செயல்களாலும், ஆர்.என்.ரவி அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட கவர்னர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார்.

* ஆகவே, தமிழ்நாடு கவர்னர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கி, அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.


2
ஸ்டாலின்

முதல்வரின் உடல்நிலை... திமுக-வின் அரியாசனத்தில் மாற்ற ரேகைகள்..!

கோயில் திருவிழாக்கள், விசேஷங்களின்போது கோயிலுக்கு வெளியே உலா வருவதற்கு உற்சவமூர்த்தி தான் செல்வார். மூலவர் எப்போதும் கோயிலுக்கு உள்ளேயேதான் அமர்ந்திருப்பார். அதே பாணியைத்தான் இப்போது தி.மு.க-வும் கையில் எடுத்திருக்கிறது.

நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர்கள் சிலர், "முதல்வரின் உடல்நிலை முன்புபோல இல்லை. துபாய் பயணத்தின்போதே முழு உடல் பரிசோதனையை செய்து கொண்டார். சில மருந்துகளையும் தொடர்ச்சியாக எடுத்துவருகிறார். இந்தச் சூழலில்தான்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
ஜி-20 லோகோ

"ஜி-20 லோகோவில் தாமரை; பாஜக வெட்கமின்றி விளம்பரம் செய்கிறது!"

ந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் என 20 உறுப்பினர்களைக் கொண்ட ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை அடுத்த மாதம் இந்தியா ஏற்கவிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, ஜி20-ன் கருப்பொருள் (Theme), சின்னத்தை (logo), பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

அதில், `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற வாசகமும், சின்னத்தில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
கிசுகிசு

கிசுகிசு: மீசை அமைச்சரின் தம்பி வழக்கு... திகைத்துப்போன அதிகாரிகள்!

ரசு ரீதியான தகவல்களை, காவிக் கட்சியின் மாஜி காக்கிக்குக் கசியவிடும் அதிகாரிகள் யார் யார் என்கிற விசாரணையைத் தீவிரமாக்கிவருகிறது உளவுத்துறை.

முதல்வர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் உள்ளே விவாதிக்கப்படும் விஷயங்கள் வரை காக்கி மாஜிக்குச் சொல்லப்படுகின்றனவாம். சமீபத்தில் முதல்வருடன் ஐந்து அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்ட கூட்டத்தில்...

கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள பல அரசியல் சீக்ரெட்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
ராகிங் காட்சி

அரை நிர்வாணத்துடன் எல்லை மீறிய ராகிங்; வேலூர் சி.எம்.சி விடுதியில் அதிர்ச்சி!

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாணவர் விடுதி, பாகாயம் பகுதியில் இருக்கிறது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் ஜூனியர் மாணவர்கள் பலரையும் ஆடைகளைக் கழற்றச் சொல்லி உள்ளாடையுடன் விடுதி வளாகத்தைச் சுற்றிவரச் செய்த சீனியர் மாணவர்களின் ‘ராகிங்’ வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வீடியோ காட்சியில், மாணவர்கள் பலரும் அரை நிர்வாணத்துடன்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

டியூஷனுக்கு வந்த மாணவனுக்கு ஆசிரியை பாலியல் வன்கொடுமை!  

கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மாணவன் 11-ம் வகுப்பு படித்துவந்தான். அவனது நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படவே, பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை அணுகியிருக்கின்றனர். இதையடுத்து அவர்கள் அந்த மாணவனை மனநல ஆலோசனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

அங்குதான், அந்த மாணவன் தனக்கு நடந்த கொடுமையை விவரித்திருக்கிறான். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில்...

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
ராஷ்மிகா மந்தனா

"நான் பேசிய விஷயமே எனக்கு எதிராக மாறியது!"- வேதனை பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா

பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, தனது ஆரம்ப காலங்களிலிருந்து நிறைய கேலிகளையும், தன்னைப் பற்றிய பொய்யான தகவல்களையும் பலர் பரப்பி வருவதாகவும் இதனை இத்தனை நாட்கள் பொறுத்து வந்ததாகவும் வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஒரு சில விஷயங்கள் என்னை சில நாட்களாக, சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இதுபற்றி வெளிப்படையாகப் பேச வேண்டிய தருணம் இது என்று நினைக்கிறன். இதை நான்..."

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...