Published:Updated:

Evening Post:கவர்னர்: திமுகவின் அடுத்த அஸ்திரம்-கடுப்பில் கமல் கட்சியினர்-வாடகை வீடுதான் பெஸ்ட்டா?

Vikatan Highlights November 10
Listicle
Vikatan Highlights November 10

தமிழக ஆளுநரை நீக்க ஜனாதிபதியிடம் மனு கொடுத்த திமுக-வின் அடுத்த அஸ்திரம், அரசாணை 115 ரத்து பின்னணி என்ன, கழுகார் அப்டேட்ஸ்: கடுப்பில் கமல் கட்சியினர், மகள் பிறந்தது குறித்து நெகிழும் தீபா, வாடகை வீடா...சொந்த வீடா... எது பெஸ்ட்?, சென்னைக்கு வந்த கதை... நடிகர் சூரி


1
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

ஆளுநருக்கு எதிரான திமுகவின் அடுத்த அஸ்திரம்..!

மிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அப்பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ள திமுக, அடுத்தகட்டமாக அவருக்கு எதிரான அடுத்த அஸ்திரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளது.

தமிழக ஆளுநருக்கு எதிராக மனு

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் ரவி பேசியது திமுக-வை கொந்தளிக்க வைத்த நிலையில், இனியும் பொறுக்க முடியாது என்ற ரீதியில், ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என். ரவியை நீக்கக்கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகள்தான் இந்த மனுவைப் பெற்றுக்கொண்டனர்.

மோடி, திரௌபதி முர்மு

பதவி நீக்கம் சாத்தியமா?

இந்த மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் பெற்றுக்கொள்ளாத சூழ்நிலையில்,

* மனு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவார் என்பது கேள்விக்குறியே.

* மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

* முர்முவை வேட்பாளராக முன்னிறுத்தி, அவரை வெற்றி பெறச் செய்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான்.

* அதே சமயம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள், முர்முவுக்கு எதிராக போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.

இத்தகைய சூழலில், ஆளுநர் ரவி மீதான நடவடிக்கையெல்லாம் திமுக எதிர்பார்க்க முடியாது.

திமுக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்

திமுக-வுக்கும் இது நன்கு தெரியும் என்றாலும், ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை அக்கட்சி மேற்கொண்டதாக தெரிகிறது.

அதே சமயம், திமுகவின் இந்த நடவடிக்கையை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், " ஆளுநருக்கு தனது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமை உள்ளது.

வானதி சீனிவாசன்

* திமுக அரசுக்கு தனது விருப்பம் போல செயல்பட முடியவில்லை. எல்லா உண்மைகளையும், தவறுகளையும் ஆளுநர் கண்டுபிடித்து விடுகிறார்.

* அதனை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமருக்கு உடனுக்குடன் சொல்லி விடுகிறார் என வருத்தம் இருக்கலாம். அதனால், திமுகவினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம்.

தமிழகத்தின் நலன், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

* எனவே, ஆளுநர் மீது வெறுப்பை கக்காமல், மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் தமிழகத்தின் நலனுக்காக அவருடன் திமுக அரசு இணைந்து செயல்பட வேண்டும்" எனக் கூறி உள்ளார்.

ஆளுநருக்கு எதிரான திமுக-வின் அடுத்த அஸ்திரம்!

இந்த நிலையில், ஆளுநர் ரவிக்கு எதிரான அடுத்த அஸ்திரமாக நீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது. இத்தகவலை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசுகையில், "தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பா.ஜ.க.காரர்களைப் போல பேசி வருகிறார். ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம்.

குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்" என அறிவித்தார்.

ஒரே மேடையில் ஸ்டாலின் - ஆளுநர்... என்ன நடக்கும்?

ஆளுநர் ரவிக்கும் ஆளும் திமுக-வுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ள இந்த சூழ்நிலைகளுக்கு இடையேதான், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியிலுள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

இதனால், விழா மேடையில் எத்தகைய காட்சிகள் அரங்கேறுமோ, யார் யார் என்னென்ன பேசப்போகிறார்களோ என்பது குறித்த எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.


2
ஸ்டாலின்

அரசாணை 115-க்கு கடும் எதிர்ப்பு: ரத்து அறிவிப்பின் பின்னணி என்ன?!

ரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, அரசு பணிக்கான ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன்படி, மனிதவள சீர்திருத்தக் குழு ஒன்றும் கடந்த மாதம் அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்:  அப்செட்டில் அமைச்சர் முதல் கடுப்பில் கமல் கட்சியினர் வரை!

ந்த ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசு வழங்கத் தீர்மானித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

இந்த முறை பொருள்களாக அல்லாமல், அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் 1,000 ரூபாய் வழங்க முடிவெடுத்திருக்கிறதாம் ஆட்சி மேலிடம்.

ஆனால்...

கழுகார் அப்டேட்ஸில் இடம்பெற்றுள்ள பல அரசியல் சீக்ரெட்டுகளை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
அண்ணாமலை

பூத் கமிட்டி: தமிழ்நாட்டில் கைகொடுக்குமா பாஜக-வின் யுக்தி?

பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, "மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் இன்று 'எனது பூத் வலிமையான பூத்' என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளனர். பூத் கமிட்டி என்பது...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
IND v ENG

இந்த முறையும் நாக் அவுட்டில் ஏமாற்றிய இந்தியா; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
தீபா

Exclusive: ஜெயலலிதா அத்தையின் ஆசீர்வாதத்தால் மகள் பிறந்திருக்கிறாள்! - நெகிழும் ஜெ.தீபா

"எங்களுக்குத் திருமணமாகி 11 வருடங்கள் ஆகுது. எல்லாம் இருந்தும் குழந்தை இல்லாதது மட்டும்தான் பெரும் ஏக்கமா இருந்தது.

இப்போ, எங்களுக்கு மகள் பிறந்திருக்கா. அந்த சந்தோஷமே எல்லா வலிகளையும் மறக்கடித்துவிட்டது" என்று நெகிழ்ச்சியும் தாய்மையும் கலந்த பூரிப்புடன் நம்மிடம் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் பேட்டியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
வீடு

வாடகை வீடா... சொந்த வீடா... எது பெஸ்ட்? - ஒரு லாபக் கணக்கீடு!

"நான் வசிப்பது சென்னையின் முக்கியமான பகுதியில்; இரண்டு படுக்கை அறைகொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில். அந்த வீட்டின் வாடகை ரூ.15,000. அதை ஐந்தாண்டுகளுக்கு முன்னர், ரூ.60 லட்சத்துக்கு என் ஹவுஸ் ஓனர் வாங்கியிருந்தார். அதற்காக அவர் ரூ.45,000 ரூபாய் வரை வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ செலுத்திவருகிறார்.

என்னைப் பொறுத்தவரை 'கடைசி வரை வாடகை வீட்டில் இருப்பதே சிறந்தது' என நினைக்கிறேன்" என்று தனது கருத்தைத் தெளிவாக முன்வைத்தார் அந்த நண்பர்.

மேலோட்டமாகப் பார்த்தால், அவர் சொன்ன காரணத்தில் கொஞ்சம் நியாயம் இருப்பதுபோல் தெரியும். கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், வேறு சில விஷயங்கள் புரியும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


8
சூரி

'சினிமா நினைப்பும் சென்னைக்கு வந்த கதையும்...' - நடிகர் சூரி பகிரும் சுவாரஸ்யம்

விடுதலை', 'ஏழு கடல் ஏழு மலை' என வித்தியாசமான படங்களில் வெவ்வேறு பயணத்தில், நடிப்பு அனுபவத்தில் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார் சூரி.

'வாழ்க்கை, கடந்து வந்த பாதை, சினிமா, வீடு, அடுத்த கட்டப் படங்கள்னு பேசுவோம் வர்றீங்களா...' என்று விகடன் டீம் அழைத்தது. நேரம் ஒதுக்கி, உற்சாகமாக உரையாடலை ஆரம்பித்தார் சூரி.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...