Published:Updated:

Evening Post:நளினி உள்பட 6 பேர் விடுதலை காரணம்-Dr.இளையராஜா- 80&90ஸ்-குருதிப்புனல்

Vikatan Highlights November 11
Listicle
Vikatan Highlights November 11

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன காரணம், இந்த வழக்கு கடந்து வந்த பாதை, இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம், சவுக்கு சங்கர் வழக்கில் தீர்ப்பு, 80 & 90ஸ் தமிழ் சினிமா- குருதிப்புனல்


1
உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த 6 பேர்

நளினி உள்பட 6 பேர் விடுதலை; நீதிமன்றம் சொன்ன காரணம் என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மூலம் நளினி உள்ளிட்டவர்கள் நடத்திய நீண்ட சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

வரவேற்பும் எதிர்ப்பும்

இந்த தீர்ப்புக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளபோதிலும், காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ளது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்,

* " உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முற்றிலும் தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இந்திய உணர்வுடன் செயல்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" எனக் கூறி உள்ளார்.

விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன காரணம்?

ஆனால்,

* இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் எத்தகைய காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டாரோ, அதே காரணங்கள் இவர்கள் 6 பேருக்கும் பொருந்தும் என்றும், அதன் அடிப்படையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சில் இடம்பெற்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் பி. வி. நாகரத்னா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன்

பேரறிவாளவன் விடுதலை ஏன்?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவந்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய

* 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் 161-வது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம், கடந்த 2018, செப்டம்பர் 6-ம் தேதியன்று தீர்ப்பளித்தது.

* இதையடுத்து இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய அப்போதைய அதிமுக அரசு முடிவெடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை 2018, செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரைத்தது.

* ஆனால், அந்தப் பரிந்துரை மீது முடிவெடுப்பதில் தமிழ்நாடு ஆளுநர் கால வரம்பற்ற தாமதம் செய்தார்.

* இதைச் சுட்டிக்காட்டி அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த மே மாதம் 18-ம் தேதியன்று பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

நளினி, தாய் பத்மா

விடுதலை கோரி வழக்கு

இதையடுத்து, இந்தத் தீர்ப்பு மற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்றும், எனவே மற்ற 6 பேர்களும் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் நளினி உட்பட சிறையிலிருக்கும் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துவந்தனர்.

* இந்த நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு ஏற்கெனவே கொண்டுவந்திருந்த தீர்மானத்தை மேற்கோள்காட்டி, நளினியும் ரவிச்சந்திரனும் தங்களை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

* அதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

* இதையடுத்து இவர்கள் விடுதலை கோரி வழக்கு தொடர்ந்த நிலையிலேயே, உச்ச நீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்ய இன்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு, "சிறையில் 30 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஆறு பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்தது" எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையை படிக்க இங்கே க்ளிக் செய்க...

"இன்னைக்குப் பொழுது நல்லா விடிஞ்சிருக்கு..!" என விடுதலை தீர்ப்பு குறித்து நளினி பகிர்ந்த நெகிழ்ச்சியான பகிர்வைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
மே 21, 1991 - ராஜீவ் காந்தியின் கடைசி பிரஸ்மீட்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 6 பேர் விடுதலை… வழக்கு கடந்து வந்த பாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்... மோடியின் 'தமிழ் மொழி' பேச்சு... ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியிலிருக்கும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர், மோடி இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பேசியது என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும், விழா நிகழ்ச்சிகளின் முழுமையான அப்டேட்ஸையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


4
சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை; புதிதாக 4 வழக்குகளில் கைது!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கர் மீதான சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருக்கும் நிலையில், மேலும் நான்கு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த 6 மாதக்கால சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
நபீலா சையத்

அமெரிக்க இடைத் தேர்தல்: வரலாறு படைத்தார் 23 வயதாகும் இந்திய வம்சாவளி நபீலா சையத்!

ந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபீலா சையத், அமெரிக்காவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரான கிரிஸ் போஸ் என்பவரை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறார்.

இதன் மூலம் மிக இளம் வயதில் இல்லினாய்ஸ் பொதுச் சபையின் உறுப்பினராகியிருக்கிறார் நபீலா...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
குருதிப்புனல்

குருதிப்புனல்: இப்படியொரு போலீஸ் படம் இனிமேல் எடுக்க முடியுமா? கமல் - பி.சி.ஸ்ரீராம் செய்த மேஜிக்!

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

இது கமல்ஹாசனின் பிறந்த நாள் வாரம் என்பதால், அவருடைய முக்கியமான திரைப்படம் ஒன்றை நினைவுகூரலாம். ஒருவர் தன்னையும் முன்னகர்த்திக் கொண்டு தான் சார்ந்த துறையையும் இணைத்து நகர்த்திக் கொண்டு சென்றால் அவரை அத்துறையின் முன்னோடி எனலாம்.

அப்படியாகத் தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர் கமல். பல்வேறு நுட்பங்களைத் தமிழிற்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தியவர்.

அப்படியான நுட்பங்களில் ஒன்றைத் தமிழிற்கு அறிமுகம் செய்த 'குருதிப்புனல்' திரைப்படத்தைப் பற்றி இந்த வாரம் பார்க்கலாம். ஆம், 1995-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதியன்று வெளியான இந்தத் திரைப்படத்தில்தான் தமிழில் முதன்முறையாக டால்பி ஒலிநுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...