Published:Updated:

Evening Post:எடப்பாடிக்கு அடுத்த சிக்கல்!-கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்ஏன்?-குஜராத்BJP-யில் கலகம்

Vikatan Highlights November 15
Listicle
Vikatan Highlights November 15

அடுத்த ஊழல் வழக்கால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் சிக்கல், கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் ஏன்?, குஜராத்: பாஜக-விலிருந்து எம்.எல்.ஏ-க்கள் விலகல் பின்னணி, எல்.ஐ.சிக்கு அபராதம், டெல்லி கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல், நடிகர் கிருஷ்ணா மறைவு: தொடரும் சோகம்!


1
எடப்பாடி பழனிசாமி

இன்னொரு ஊழல் வழக்கு: எடப்பாடிக்கு அடுத்த சிக்கல்! 

முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறப்பட்டுள்ள புதிய ஊழல் குற்றசாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் மேல் நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்திருப்பதால், அவருக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே தலைவலியைக் கொடுத்த வழக்குகள்

ஏற்கெனவே எடப்பாடிக்கு தலைவலியை ஏற்படுத்திய கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதனையடுத்து தனிபடை போலிசாரிடமிருந்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவினர் பெற்று, விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, எடப்பாடி மீதான ரூ. 4,800 கோடி நெடுஞ்சாலை துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கும் அவருக்கு நெருக்கடியைக் கொடுத்து வந்தது. இவ்வழக்கில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

மருத்துவக் கல்லூரி கட்டுவதிலும் ஊழல்

இதனால் இந்த ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது எப்போது வேண்டுமானாலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பாயக்கூடும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில்தான், அடுத்த ஊழல் புகாரிலும் சிக்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில், " தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிகளைக் கட்ட கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மருத்துவ மாணவர்கள்

இந்த கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த மருத்துவ கட்டடங்கள் கட்டுவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுடி அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 9 லட்சத்து 99 ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டடம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 482 சதுர அடி கட்டடம் கட்டப்படவில்லை. இதன்மூலம் 52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல 11 மருத்துவக் கல்லூரிகளிலும் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கூட்டுச்சதி செய்து பெரும்தொகை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டடம்) ராஜ்மோகன், முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மை செயலாளர், தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.கே.வார்ட்ஸ் ஆகியோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் கடந்த 2021 ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி புகார் செய்தேன்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என மனுவில் கூறி இருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

'புகாரில் முகாந்திரம் உள்ளது'

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,

* " மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

* இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்பதலை பெற வேண்டியதுள்ளது.

* எனவே அரசின் ஒப்புதலுக்கு ஊழல் கண்காணிப்பு துறை ஆணையருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, " தமிழ்நாடு காவல்துறையில் இந்த புகார் குறித்து விசாரிப்பதாக கூறும்போது, சி.பி.ஐ. விசாரணை ஏன் கேட்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஏற்கெனவே ஓ. பன்னீர் செல்வத்துடனான மோதலில் கட்சி ரீதியாக நெருக்கடிகளைச் சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, அவருக்கு எதிரான வழக்குகள் மூலமாகவும் சிக்கல்கள் அதிகரித்து வருவது அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


2
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா

தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் ஏன்? 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கால்பந்து போட்டிகளில் அதிகம் ஆர்வம் கொண்ட பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலி காரணமாக கொளத்தூர், பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார்.

அப்போது அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், பிரியாவின் வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாக தெரிவித்து அறுவை சிகிச்சை...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
நரேந்திர மோடி - அமித் ஷா

குஜராத் பாஜக-வில் கலகம்... விலகும் எம்.எல்.ஏ-க்கள்! 

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுவதால் சூடுபிடித்திருக்கிறது குஜராத் தேர்தல் களம்.

25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்யும் பாஜக-வை எதிர்த்து ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், பாஜக-வில் உட்கட்சிப்பூசல்கள் வெடித்திருப்பது, அந்தக் கட்சிக்கு மேலும் தலைவலியாக அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
ஆறு பேர் விடுதலை

நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஆறு பேரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னென்ன?!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்த முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஆறு பேரும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
எல்.ஐ.சி போனஸ் பங்குகள்

இறந்தவருக்கு காப்பீடு பணம் தர மறுப்பு: எல்.ஐ.சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

டல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தவருக்கு காப்பீடு பணத்தைத் தராததால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மல்லிகா என்பவர் 2011ல் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் எல்.ஐ.சி கிளையில் இரண்டு லட்சத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துள்ளார். சில ஆண்டுகள் பிரீமியம் செலுத்திவந்தவர் இடையில் பிரீமியம் செலுத்தாமல்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
பூனாவாலா-ஷ்ரத்தா

டெல்லி: 35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி; நாய்களுக்கு சாப்பிட கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்!

மாநிலங்கள் கடந்து நாட்டையே உலுக்கி இருக்கிறது ஒரு கொலை சம்பவம். தன்னுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்த காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி, அதனை பிரத்யேகமாக வாங்கி வந்த குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்துள்ளார் காதலன்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
கிருஷ்ணா

நடிகர் கிருஷ்ணா மறைவு: மகேஷ் பாபு வீட்டில் தொடரும் சோகம்!

ழம்பெரும் நடிகரும், மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா (80) உடல்நலக் குறைவால் இன்று (15.11.2022) காலமானார்.

நடிகர் கிருஷ்ணா, தெலுங்குத் திரையுலகில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்தவர். பத்மபூஷன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். மேலும், இவர் 1989-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி-யாகவும் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்திருந்தார்.

இவரின் மறைவு தெலுங்குத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, இந்த வருடம் 2022-லேயே...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...