Published:Updated:

Evening Post:மீண்டும் திமுக - ஆளுநர் மோதல்-ஸ்டாலின் மீது சீமான் திடீர்ப் பாசம்-கமலின் கூட்டணி பேச்சு

Vikatan Highlights November 16
Listicle
Vikatan Highlights November 16

தமிழக ஆளுநருக்கும் திமுகவுக்கும் இடையே கேரளாவில் வெடித்த மோதலும் பதிலடியும், அமித் ஷா: எடப்பாடி புறக்கணிப்பின் பின்னணி, கமலின் கூட்டணி பேச்சு, ஸ்டாலின் மீது சீமான் திடீர்ப் பாசம், அமிர்த பலகாரம் ஆற்காடு மக்கன் பேடா, குறிவைக்கப்படும் சிவகார்த்திகேயன்!


1
ஆளுநர் ஆர்.என் ரவி

'நான் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல': மீண்டும் வெடித்த திமுக - ஆளுநர் மோதல்!

கேரள ஆளுநருக்கு எதிராக திருவனந்தபுரத்தில் இடதுசாரிகள் நடத்திய போராட்டத்தில் திமுக பங்கேற்ற நிலையில், தமிழக ஆளுநர் கே.என். ரவியும் அதே கேரளாவுக்குச் சென்று, "ஆளுநர் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல" என பேசியிருப்பதால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமாகி உள்ளது.

ஆளுநர்களின் குடைச்சல்...

தென்மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, "சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்படவில்லை. 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்" எனக் கூறி அண்மையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர். என். ரவி-யை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளித்தனர்.

ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

இதேபோல் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானும் அங்கு ஆட்சியில் உள்ள இடது முன்னணி அரசுக்கு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்து வருவதாகவும் அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநர் மாளிகையை நோக்கி நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தியது.

கேரளாவில் எதிர்ப்பைக் காட்டிய திமுக

இந்த பேரணியில் திமுக மூத்த தலைவரும் எம்.பியுமான திருச்சி சிவா கலந்து கொண்டார். கூட்டத்தில் இரு மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், " ஒன்றிய அரசு என்ன நினைக்கிறதோ அதை நிறைவேற்றுகிறவர்களை மாநில ஆளுநர்களாக பெற்றிருக்கிறோம் என்பதே வேதனையின் உச்சம். ஆளுநர்கள் ஒன்றிய அரசுக்கு மாறான அரசு நடக்கும் இடங்களில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என காத்திருக்கிறார்கள். 'நடைபெறும் அரசாங்கத்தை கலைக்க வேண்டும், அவர்களுக்கு சாதகமான மற்றொரு அரசாக மாற்ற வேண்டும்' எனச் செயல்படுகிறார்கள்.

* இப்படிப்பட்ட ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் நமது நிலைப் பாடாக இருக்க வேண்டும்.

* எல்லா அமைப்புகளையும் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஒன்றிய பாஜக அரசு, இன்று ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடிந்த அளவுக்கு இடையூறு செய்கிறார்கள்.

* மாநில அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுகிறார்கள். அதற்கு ஆளுநர்கள் துணைபோகிறார்கள்.

இந்த நிலை தொடர்ந்திடக்கூடாது. மாநில சுயாட்சிதான் திமுகவின் நிலைப் பாடு. நாம் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறோம் என்பதற்குதான் இன்றைக்கு திருவனந்தபுரம் குலுங்கும் அளவுக்கு மாபெரும் பேரணி நடந்திருக்கிறது.

* இந்த எதிர்ப்பு அலை தமிழகத்திலும் நாடெங்கும் எழும்" எனக் கூறியிருந்தார்.

திருச்சி சிவா

அதே கேரளாவில் பதிலடி கொடுத்த ஆளுநர் ரவி

இந்த நிலையில், ஆளுநர்களுக்கு எதிராக பேரணி நடைபெற்ற அதே கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில், கேரள லோக் ஆயுக்தா ஏற்பாடு செய்திருந்த லோக் ஆயுக்தா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,

* " அரசின் மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பதற்கு காரணம் இருக்கும். ஆளுநர் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல.

* ஆளுநர்கள் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள்.

* லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகள் வீழ்ச்சியடையாமல் இருக்க ஆளுநர்கள் தலையிடத்தான் செய்வார்கள்" எனக் கூறினார்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசிய ரவி

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக பேசி வரும் திமுக அரசை மேலும் சீண்டும் விதமாக, கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடையே நீட் தேர்வு குறித்தும், அதற்கு தயாராக வேண்டிய முறைகள் குறித்தும் ஆளுநர் உரையாடினார்.

பழங்குடியினர் தலைவர் பிர்சா முண்டா நினைவுநாள் நிகழ்ச்சியையொட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அப்போதுதான் அவர் இந்த உரையாடலை மேற்கொண்டார்.

இப்படி இரு தரப்புக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், கேரளா பாணியில் விரைவிலேயே திமுகவும், ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன பேரணி ஒன்றை நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதே சமயம் அதற்கெல்லாம் அசருகிற ஆளாகவும் ஆளுநர் ரவி இல்லை என்பதால், விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதையாக மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை இந்த மோதல் நீடிக்கத்தான் செய்யும்.


2
பன்னீர், எடப்பாடி, மோடி

அமித் ஷாவிடம் மறுத்துப் பேசிய எடப்பாடி... புறக்கணிப்பின் பின்னணி!

அ.தி.மு.க-வில் நடைபெற்று வரும் உட்கட்சி பிரச்னையை வைத்து ஒரு படமே எடுக்கலாம் என்கின்றனர் கட்சி தொண்டர்கள். அந்த அளவுக்குப் பன்னீர், எடப்பாடி தரப்புக்கு இடையிலான முட்டல் மோதல்கள் நீடித்தவாறு இருக்கிறது. ஒற்றைத் தலைமையில் ஆரம்பித்த பிரச்னை இப்போது மோடி, அமித் ஷாவின் ஆதரவு யாருக்கு என்பதைப் பங்கு பிரிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது.

"கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது..."

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கமல்ஹாசன்

கமலின் கூட்டணி பேச்சு! 

ரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (16.11.2022) நடைபெற்றது.

117 மாவட்டச் செயலாளர்களில் 114 பேர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், அனைவரது செல்போன்களும் வெளியிலேயே வாங்கி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
சீமான்

"முதல்வர் ஸ்டாலின் என் அண்ணன்...!"- திடீர்ப் பாசம் காட்டும் சீமான்!

ராஜீவ் கொலை வழக்கில் பல்லாண்டுகளாகச் சிறையில் இருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அவரிடம்எழுவர் விடுதலை, பொது சிவில் சட்டம், சி.ஐ.ஏ உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம்...

சீமான் அளித்த விரிவான பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
மழை வெள்ளம்

மழை பாதிப்பு: சென்னையை 'கவனித்த' அளவுக்கு மற்ற மாவட்டங்களை கவனிக்கவில்லையா?   

ருவமழைக் காலங்களில் சென்னை மாவட்டத்துக்கு திமுக அரசு கொடுத்த முக்கியத்துவத்தை மற்ற மாவட்டங்களுக்குக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதில் சென்னையைத் தவிர்த்து, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மழையால் பலதரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களில் சிலரும், சென்னைக்கு அளித்த முக்கியத்துவம் மற்ற மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
மக்கன் பேடா

தொண்டைக்குழிக்குள் நழுவிச்செல்லும் அமிர்த பலகாரம் ஆற்காடு மக்கன் பேடா!

திசையெங்கும் வரலாற்றைத் தாங்கிப் பிடித்திருக்கும் மிகப்பழைமையான நகரம், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு. பிரியாணிக்கும் புகழ்பெற்ற இந்த ஊரின் மற்றொரு சிறப்பு ‘மக்கன் பேடா’ எனும் இனிப்புத் தின்பண்டம். 200 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்தப் பலகாரத்துக்குத் தாய்வீடும் ஆற்காடுதான்.

உருதுமொழியில் ‘மக்கன்’ என்றால் ‘நயம்’ என்றும், ‘பேடா’ என்றால் பாகில் ஊறவைக்கும் ‘இனிப்பு’ என்றும் பொருள். அப்படி, சொல்லுக்கேற்ப நயமாக தொண்டைக்குழிக்குள் நழுவிச் செல்லும் அமிர்த பலகாரமாக இருப்பதால், மக்கன் பேடா என்ற பெயர் வந்தது என்கிறார்கள், ‘தி ஆற்காடு புதிய மிட்டாய்க் கடை’ உரிமையாளர்கள் ராஜா, அருண்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
சிவகார்த்திகேயன்

மிஸ்டர் மியாவ்: ஆன்லைன் மாஃபியாக்கள்... குறிவைக்கப்படும் சிவகார்த்திகேயன்!

'டாக்டர்', 'டான்' என வரிசையாக ஹிட் அடித்த சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்திருக்க வேண்டிய படம் 'ப்ரின்ஸ்.' ஏனோ படம் சறுக்கிவிட்டது. 'பரவாயில்லை ரகம்'தான் என்றாலும், இந்த அளவுக்குக் கழுவி ஊற்றப்பட்டிருக்கவேண்டிய படம் அல்ல ப்ரின்ஸ்!

'ப்ரின்ஸ்' விமர்சனம் தொடங்கி 'மாவீரன்' படச் சிக்கல் வரை வரிசையாக சிவகார்த்திகேயனைக் குறிவைத்து ஆன்லைன் பரபரப்புகள் கிளம்பிக்கொண்டேயிருக்கின்றன...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...