Published:Updated:

Evening Post:இபிஎஸ்:கையைப் பிசையும்BJP-கழுகார் அப்டேட்ஸ்:பழிதீர்த்த பட்னாவிஸ்-பொன்முடிமகன் சர்ச்சை..

Vikatan Highlights November 17
Listicle
Vikatan Highlights November 17

பிடி கொடுக்காமல் நழுவும் எடப்பாடியால் கையைப் பிசையும் பாஜக, சிவசேனா: பழிதீர்த்த பட்னாவிஸ், கழுகார் அப்டேட்ஸ்: எதிர்க்கட்சிகள் வாயடைத்த அமைச்சர், TNCA தலைவரான பொன்முடி மகன்... எப்படி சாத்தியம்?,ஆண்களின் விந்தணுக்கள் சரிவு, இன்னொரு மண் சார்ந்த கதையுடன் வரும் 'களவாணி' சற்குணம்..!


1
எடப்பாடி பழனிசாமி

கதவை சாத்திய எடப்பாடி... கடுப்பான தினகரன்... கையைப் பிசையும் பாஜக!

திமுகவுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும் விவகாரத்தில் எடப்பாடி பிடி கொடுக்காமல் இருப்பதால், பாஜக-வுக்கு கையைப் பிசையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமையை முன்வைத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அந்த கட்சியில் பிளவை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் தன் பக்கம் இருப்பதால், ஓபிஎஸ் உடன் இணக்கமாக செல்ல எடப்பாடி மறுத்து வருகிறார்.

பாஜகவின் கணக்கு

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -வைக் கூட்டணியில் வைத்துக்கொண்டு கணிசமான இடங்களைக் கைப்பற்றிவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளது பாஜக மேலிடம். ஆனால் அதற்கு எடப்பாடி, பன்னீர் செல்வம் இடையே சமரசம் ஏற்படுவது மட்டுமல்லாமல் தினகரன் மற்றும் சசிகலாவையும் அதிமுகவுக்குள் சேர்த்துக்கொண்டு மீண்டும் பழைய வலிமையுடன் தேர்தலை சந்தித்தால்தான் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் எனக் கருதுகிறது பாஜக.

கடந்த சட்டசபை தேர்தலில் தினகரனின் அமமுக, தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளைக் கணிசமாக பிரித்ததால்தான் அந்த பகுதிகளில் அதிமுக பின்னடைவைச் சந்தித்ததாக கூறப்பட்டது. அதனால்தான் தினகரனையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக விரும்புகிறது.

* பாஜக-வின் இந்த விருப்பத்துக்கு பன்னீர் செல்வம், தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் ஒப்புக்கொண்டாலும், இவர்களை அதிமுக-வில் சேர்ப்பதில்லை என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார்.

* தனது இந்த நிலைப்பாட்டை அவர், தனது டெல்லி பயணங்களின்போது பாஜக-வின் அரசியல் விவகாரங்களைக் கையாளும் அமித் ஷாவிடம் நேரடியாகவும் தெரிவித்துவிட்டார்.

பன்னீர், எடப்பாடி, மோடி

அப்செட்டான எடப்பாடி

ஆனாலும், பாஜக மேலிடம் மீண்டும் மீண்டும் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாது, தனது விருப்பமும் எண்ணமும் அதுவே என்பதை எடப்பாடிக்கு திட்டவட்டமாக உணர்த்தி வருகிறது.

அதன் வெளிப்பாடாகத்தான்

* அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவரை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதிக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களின் வரிசையில் எடப்பாடிக்கு அருகிலேயே பன்னீர் செல்வமும் நிற்க வைக்கப்பட்டார்.

* சட்டசபையிலேயே பன்னீர் செல்வத்துக்கு அருகில் அமர விரும்பாத எடப்பாடி, இப்படி தன்னை பன்னீருக்கு பக்கத்தில் நிற்க வைத்ததை அறவே விரும்பவில்லை. மேலும் மோடியுடன் தனியாக பேச நேரம் கேட்டும் அனுமதிக்காததும் எடப்பாடியை ரொம்பவே அப்செட்டாக்கியதாக தெரிகிறது.

* இதன் வெளிப்பாடாகத்தான், மோடி தமிழகம் வந்த மறுதினம் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி நேரில் சந்திக்கச் செல்லவில்லை எனக் கூறப்பட்டது.

சீர்காழியில் காட்டிய சீற்றம்

இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், சீர்காழியில் நேற்று மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, "எங்கள் கட்சி வேறு, அவர்கள் கட்சி வேறு. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடி ஏதாவது அரசு நிகழ்ச்சிக்கு வந்தால் போய் பார்ப்போம். அமித்ஷா தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்தார். அவரை ஏன் எடப்பாடி பழனிசாமி போய் பார்க்கவில்லை என்கின்றனர். நாங்க அதிமுக. எங்களுக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் போய் பார்ப்போம். மற்றபடி போய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" எனச் சீற்றம் காட்டினார்.

மேலும், தினகரனையும் அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடியாது; அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி அப்போது திட்டவட்டமாக கூறிவிட்டார். எடப்பாடியின் இந்த சீற்றமும் கோப முகமும் பாஜக-விடம் அவர் இதுவரை காட்டாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தினகரன்

கொந்தளித்த தினகரன்

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தன்னை சேர்த்துக்கொள்ள முடியாது எனத் திட்டவட்டமாக கூறி, எடப்பாடி கதவைச் சாத்தியது தினகரனைக் கொந்தளிக்க வைத்ததது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " நான் அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிசாமியுடன் செல்வேன் என்று எங்கும் சொல்லவில்லை. அதிமுக என்பது இன்று செயல்படாத கட்சியாக உள்ளது.

* எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். ஒரு கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, சின்ன கட்சியாக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் வரும்போது கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அங்கு அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

* அதிமுக தலைவர் யார் என்பதை நீதிமன்றம் போய் முடிவு செய்யும் இடத்தில் அந்த கட்சி இருக்கிறது" எனப் பொரிந்து தள்ளினார்.

கையைப் பிசையும் பாஜக...

இந்த நிலையில், எடப்பாடியின் சமீபத்திய பேட்டி, அமித் ஷாவைச் சந்திக்காதது போன்றவை, நாடாளுமன்ற தேர்தலை பாஜக கூட்டணி இல்லாமலேயே சந்திக்கும் நிலைக்கு அவர் தயாராகிவிட்டார் அல்லது வேறு சில அரசியல் கணக்குகளைப் போட்டு வைத்துள்ளார் என்பதை உணர்த்தி உள்ளது.

ஆக மொத்தத்தில் அதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்த பாஜக மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்காததால், அந்தக் கட்சி கையைப் பிசையும் நிலையில் உள்ளது. ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலுக்குள் எடப்பாடி இறங்கி வராவிட்டால் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தின் கதி என்னவாகும் என்பதும் கேள்விக்குறியே!


2
பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே

"ஆமாம் நான்தான் சிவசேனாவை உடைத்தேன்!" - பட்னாவிஸ் பழிதீர்க்க காரணமான அந்த சம்பவம்!

சிவசேனாவை நான்தான் உடைத்தேன் என்றும், எனக்கு யாராவது துரோகம் செய்தால் நான் பழிவாங்குவேன் என்றும் தெரிவித்திருக்கிறார் பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ்.

அவர் துரோகம் எனக் குறிப்பிடுவது எதை, உத்தவ் தாக்கரேவை பழிதீர்க்க காரணமாக அவர் குறிப்பிடும் சம்பவம் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


3
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: எதிர்க்கட்சிகள் வாயடைத்த அமைச்சர்!

தலைநகருக்குப் பக்கத்தில் இருக்கும் மாவட்டத்தில், ஆளுங்கட்சிக்கும், அமைச்சருக்கும் எதிராக அதிமுக வாயைத்திறக்காமல் இருப்பது ஏன்?, குமரியில் கல்லாகட்டும் கவுன்சிலர் கணவர்கள், தினகரனின் திடீர் உற்சாகத்துக்கு என்ன காரணம்? சென்னையில் அமித் ஷா அப்செட்டானது ஏன்..?

கழுகார் அப்டேட்ஸில் இடம்பெற்றுள்ள விறுவிறுப்பான பல அரசியல் தகவல்களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


4
சிகாமணி, பொன்முடி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரான அமைச்சர் பொன்முடி மகன்..! எப்படி சாத்தியம்?!

மிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடியுன் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அவருக்கு எப்படி இந்த பதவி கிடைத்தது, அவரது தந்தையின் தலையீடு இருந்ததா என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5

இந்திய ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு... ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்!

`உலகின் பல நாடுகளில் உள்ள ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது' எனச் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

இதற்கான காரணம் என்ன, ஆய்வுத் தகவல்கள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
வேலை

திடீர் வேலை நீக்கம்; பதறாமல் சமாளிப்பது எப்படி?

ன்றைய சூழலில் எப்போது யாருக்கு வேலை போகும் என்றே தெரியாத நிலைதான் பெரும்பாலான வேலைகளில் இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், சில விஷயங்களைக் கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டுக்கொண்டால் அதுபோன்ற சமயங்களில் எளிதில் சமாளித்துவிடலாம்.

அது என்ன ஸ்மார்ட்டான விஷயங்கள்..? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


7
பட்டத்து இளவரசன்

'வெற்றிலைத் தோட்டம்... கபடிக் களம்...' - மண் சார்ந்த கதையுடன் வரும் 'களவாணி' சற்குணம்!  

கொஞ்ச நாள் முன்னாடி போயிருந்தேன். அங்கே பெரிய கபடிப் போட்டி நடந்தது. நானே முன்னாடி கபடி பிளேயர்தான். அங்கே பார்த்தால் ஒரு டீம் இறங்குச்சு. அந்த டீம்ல தாத்தா வயசுல, அப்பா வயசுல, மகன் வயசுல, பேரன் வயசுலன்னு ஆள் சேர்ந்து இறங்குறாங்க. இது என்னடா புதுசா இருக்குன்னு ஆச்சரியம் தாங்க முடியலை. விசாரித்தால் அப்படித்தான் குடும்பமே சேர்ந்து ஆடிட்டு இருக்குன்னு சொன்னாங்க. அப்பவே அதில் ஒரு கதை தோணுச்சு. அப்படி வந்ததுதான் இந்தப் 'பட்டத்து அரசன்.'

- தீர்க்கமாகப் பேசுகிறார் இயக்குநர் சற்குணம். பெயர்தான் 'களவாணி.' ஆனாலும் இன்னமும் பேசப்படுகிற படத்தை எடுத்தவர்.

கபடியும் அதை ஒட்டிய வாழ்க்கையுமாக படம் எப்படி வந்திருக்கிறது என்பது குறித்து பேசும் சற்குணம், தொடர்ந்து தனது படங்களில் அதர்வா இடம் பெறுவது குறித்தும், ராஜ்கிரண், ராதிகா என இப்படத்தில் பெரும் ஸ்டார்ஸ்களுடன் வேலை செய்த அனுபவம் குறித்தும் பேசும் விரிவான பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...