Published:Updated:

Evening Post:'வாரிசு' படம்:சீமான் எச்சரிக்கை!ஆளுநர் கொந்தளிப்பு ஏன்?டெல்லி கொலையில் அதிர்ச்சி தகவல்!

Vikatan Highlights November 18
Listicle
Vikatan Highlights November 18

'வாரிசு' பட சிக்கலும் சீமான் விடுத்த எச்சரிக்கையும், நாளை வங்கி வேலை நிறுத்தம், ஆளுநர் ரவி கொந்தளிப்பின் பின்னணி, எடப்பாடி தன்னிச்சையாக இருப்பது ஏன்?, டெல்லி பெண் கொலையில் மேலும் அதிர்ச்சி தகவல்கள், சாப்பிட்டவுடன் கழிப்பறை...தவிர்க்க வேண்டிய காய்கறிகள்...'கோவை சரளா' நாடக உலகம்


1
வாரிசு விஜய்

'வாரிசு' படத்துக்கு சிக்கல்... விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!

தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கி உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'வாரிசு' ரிலீஸுக்கு எழுந்த சிக்கல்

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் 'வாரிசு' படத்தை பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

* இந்த படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் கட்டுப்பாட்டில் ஆந்திரா - தெலங்கானா பகுதிகளில் சுமார் 40% திரையரங்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் 'வாரிசு' படத்தை தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

* இந்த நிலையில், 'வாரிசு' படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

* பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹ ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் Waltair Veerayya ஆகிய படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் செயலாளர் பிரசன்னா குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எதிர்ப்புக்கு காரணம் என்ன?

கடந்த 2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரஜினி நடித்த 'பேட்ட' படத்தின் தெலுங்கு மொழி டப்பிங் படத்தை, பிரசன்ன குமார் வெளியிட்டார். அப்போது அதற்கு தில்ராஜு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று புதிய விதியை உருவாக்கினார். இதன் எதிரொலியாகவே அவரது 'வாரிசு' படத்துக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தெரிகிறது.

சீமான், விஜய்

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்...

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தொடர்பாக தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், " விழாக் காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

* எண்ணற்ற தெலுங்குத் திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த் திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத் தவறான முன்னுதாரணமாகும்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத் துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ்த் திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

* நேரடித் தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாகினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது, தமிழ்த் திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.

* இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும். இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது.

ஆகவே, தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத் திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வன்மையாக எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


2
வங்கி வேலை நிறுத்தம் ( Zee News )

நாடு முழுவதும் நாளை வங்கி வேலை நிறுத்தம்... காரணம் என்ன?

நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் நவம்பர் 19-ம் தேதி (நாளை) வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் ஏன் என்பது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், எஸ்.பி.ஐ வங்கியாளர் தாமஸ் பிரான்கோ உள்ளிட்டவர்கள் சொல்வது என்ன?

இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
ஆளுநர் ஆர்.என் ரவி

'ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல' - ஆளுநர் ஆர்.என்.ரவி கொந்தளிப்பு... பின்னணி என்ன?!

திமுக அரசுடன் ஒருபக்கம் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, லோக் ஆயுக்தா தினத்தையொட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், 'ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல' என்று பேசியது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக பாஜக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக தரப்பில் என்ன சொல்கிறார்கள்..? ஆளுநருக்கான அதிகாரம்தான் என்ன? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
எடப்பாடி பழனிசாமி

யாரையும் சேர்த்துக்கொள்ளாமல் எடப்பாடி தன்னிச்சையாக இருப்பது ஏன்?

"தினகரனுடன் கூட்டணி அமைக்க ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை" என எடப்பாடியும், "எடப்பாடியுடன் கூட்டணி அமைக்கக் கால் சதவிகிதம் கூட வாய்ப்பில்லை" எனத் தினகரனும் சொல்லி, புது திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் என யாரையும் சேர்த்துக்கொள்ளாமல் தன்னிச்சையாக எடப்பாடி இருப்பதற்கான காரணம் என்ன..? இது குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் நம்மிடம் விரிவாக பேசினார்.

அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
அல்தாஃப்புடன் ஸ்ரத்தா

மது, நெட்பிளிக்ஸ், சிகரெட், சாப்பாடு... ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாஃப்!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்த பார்ட்னர் அல்தாஃப் பூனாவாலா கடந்த மே 18-ம் தேதி கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இக்கொலை 6 மாதத்திற்கு பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலை தொடர்பாக டெல்லி போலீஸார் அல்தாஃபை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அல்தாஃப் அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான் என்கிறது போலீஸ்.

இதுவரை அவன் அளித்த வாக்குமூலம் பகீர் கிளப்புவதாக உள்ளது. அதனை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
சர்வதேச ஆண்கள் தினம்

சர்வதேச ஆண்கள் தினம்: வாங்க... ஒரு ஜாலியான குட்டி சர்வே!

வம்பர் 19... 'சர்வதேச ஆண்கள் தினம்' எல்லோருக்குமே பொதுவாகவே கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளை முன்னிட்டு ஆண்களின் நடை, உடை, விருப்பம் சார்ந்த கேள்விகளுக்கு, உங்கள் கருத்துக்களை இந்த சின்ன சர்வேயில் 'டிக்' செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

"சர்வேயெல்லாம் சரி, ஆண்கள் தினம் ஏன் கொண்டாடுறாங்க.." ன்னு கேக்குறீங்களா? சர்வே முடிவில் அதற்கான விடை கொடுத்திருக்கிறோம்!

தவறாம இந்தக் குட்டி சர்வேயில் கலந்துக்கோங்க!

சர்வே இணைப்புக்கு இங்கே க்ளிக் செய்க...


7
காய்கறிகள்

சாப்பிட்டவுடன் கழிப்பறை செல்லும் உணர்வு... தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன?

'எல்லாக் காய்கறிகளும் நல்லதுதானா, சில நோய்களுக்கு குறிப்பிட்ட காய்கறிகளைத் தவிர்ப்பது நல்லது என்கிறார்களே' என்ற சந்தேகம் பலருக்கு உண்டு.

சிலருக்கு Irritable Bowel Syndrome என்ற பிரச்னை உண்டு. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வயிறு கலக்கி கழிப்பறை செல்ல வேண்டிய உணர்வு ஏற்படுவது, வாயுத்தொல்லை அல்லது வயிறு உப்பி இருப்பது இந்த Irritable Bowel Syndrome.

இந்தப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய, சேர்க்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன?

டாக்டர் அருண்குமார் சொல்லும் ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


8
கோவை அனுராதா

அப்போ இப்போ - 8 : 'கோவை சரளா எங்க நாடக ட்ரூப்பைச் சேர்ந்தவங்கதான்!' - கோவை அனுராதா

காஸ்ட்லி மாப்பிள்ளை', 'மாண்புமிகு மாமியார்' போன்ற பல சீரியல்களையும், மேடை நாடகங்களையும் இயக்கியவர் நடிகராகவும் வலம் வந்த கலைமாமணி கோவை அனுராதாவை அப்போ இப்போ தொடருக்காக சந்தித்துப் பேசினோம்.

"கோவை சரளா எங்க ட்ரூப்பை சேர்ந்தவங்க என்பதில் எங்களுக்குப் பெருமை! ரொம்ப திறமையான பொண்ணு; எங்க ஸ்டேஜ் டிராமாவிலிருந்த பொண்ணு இன்னைக்கு சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்காங்கன்னு சொல்றப்ப அத்தனை சந்தோஷம்!" எனச் சொல்லும் கோவை அனுராதா, எம்ஜிஆர், சிவாஜி குறித்தும் அவர்களது படங்கள் குறித்தும் சிலாகித்துப் பேசுகிறார்.

தொடர்ந்து நாடக உலகிற்குள் அடியெடுத்து வைத்ததற்கு யார் காரணம், எம்ஜிஆர் ஏன் அவரது வழிகாட்டி என ஏராளமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவற்றை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க..