Published:Updated:

Evening Post:மோடியைப் புகழ்ந்த இளையராஜா- கிசுகிசு: அமைச்சரின் புலம்பல்-ஒரே சோப் உபயோகிப்பது சரியா?

Vikatan Highlights November 19
Listicle
Vikatan Highlights November 19

'காசி - தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் மோடியைப் புகழ்ந்த இளையராஜா, சீராய்வு மனுவால் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை மாற்றி எழுதப்படுமா?, கிசுகிசு: அமைச்சரின் ராஜினாமா புலம்பல்,பாஜக நிர்வாகி மீதான சர்ச்சை, ஒரே சோப், ஷாம்பூ, உபயோகிப்பது சரியா?, கலகத் தலைவன்: விமர்சனம்


1
'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி

'காசி தமிழ் சங்கமம்' ... தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பு... மோடியைப் புகழ்ந்த இளையராஜா!

வாரணாசியில் நடைபெற்று வரும் 'காசி - தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு பிரதமர் மோடியைப் பாராட்டியதோடு, இசை நிகழ்ச்சியையும் நடத்தினார்.

'காசி தமிழ் சங்கமம்'

தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் இடையே கலாசார உறவுகளை மேம்படுத்தும் வகையில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிகள், கடந்த 16-ம் தேதி வாரணாசியில் தொடங்கியது.

* இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாட்டிலிருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்திலிருந்து இந்த நிகழ்ச்சிக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

வரவேற்பும் எதிர்ப்பும்...

இந்த மாணவர்கள் வாரணாசி பல்கலைக்கழகத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு கலாச்சாரம், பண்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மத்திய அரசின் திட்டம் எனச் சொல்லப்படும் நிலையில், இது தொடர்பாக மாநில அரசுடன் எதுவும் கலந்தாலோசிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே சமயம் ஆளும் திமுக தரப்பில் இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

கே. பாலகிருஷ்ணன்

இந்த நிலையில்,

* இதன் பின்னணியில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியும் ஆர்.எஸ்.எஸும் இருப்பதாகவும், கல்லூரி மாணவர்களை குறிப்பாக ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ப்பதற்காகத்தான் இந்த முயற்சி நடைபெறுகிறது என்றும்,

* தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கு மாணவர்களை பிடிக்க இவர்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளி - கல்லூரி மாணவர்களை தொடர்ந்து ரயிலில் அழைத்துச் சென்றால் அந்த ரயில் முன்பாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்தக் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்ட திருக்குறள் மொழி பெயர்ப்பு

இந்த நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி இன்று முறைப்படி தொடங்கி வைத்ததோடு, திருக்குறளின்‌ 13 மொழிகளின் மொழி பெயர்ப்பு புத்தகத்தையும் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ராஜ்யசபை எம்.பி-யான இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இளையராஜா

புகழ்ந்து தள்ளிய இளையராஜா

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, இந்த நிகழ்ச்சியை நடத்த எண்ணியதற்காக பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில்,

* " காசி நகருக்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கிருப்பவர்கள் அனைவரும் விளக்கி பேசினர்.

* பாரதியார் இங்கே இரண்டு வருடம் தங்கிப் படித்திருக்கிறார். இங்கு படித்து அவர் கற்றுக்கொண்ட விசயங்களை, இங்குள்ள புலவர் பெருமக்களின் விவாதங்களை நேரில் கண்டு, கேட்டு தெரிந்து கொண்ட பாரதியார், இந்தியாவில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நேரத்தில், காசி நகர் புலவர்களின் விவாதங்களை கேட்க ஒரு கருவி செய்வோம் என்று பாடியிருக்கிறார்.

* பெருமை மிக காசி நகரத்தில் தமிழ் சங்கத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமருக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்தேன்.

* என் உணர்வுகளை என்னால் முழுவதும் வெளிபடுத்த முடியவில்லை.

* எல்லாம் வல்ல இறைவனால் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த புகழும் மென்மேலும் ஓங்குக" எனக் கூறினார்.

இசை நிகழ்ச்சி

இசை நிகழ்ச்சி

அதனைத் தொடர்ந்து காசி தமிழ் சங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக இசைஞானி இளையராஜா தலைமையிலான குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற 'ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம்...' எனத் தொடங்கும் பாடலை இளையராஜா பாடினார்.

இந்தப் பாடலை பிரதமர் மோடியும் உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் உள்பட மேடையில் இருந்த பலரும் வெகுவாக விரும்பி ரசித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய உரையை முழுவதுமாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
6 பேர் விடுதலை

சீராய்வு மனு: 6 பேர் விடுதலை மாற்றி எழுதப்படுமா?! 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நீண்ட நாட்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான நீதிபதி பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் காணப்பட்ட நிலையில், ஆறு பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மனுவில் மத்திய அரசு கூறியிருப்பது என்ன..? மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 6 பேர் விடுதலை மாற்றி எழுதப்படுமா? இது குறித்து, வழக்கறிஞர் சீனிவாச ராவ் என்ன சொல்கிறார் என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
கிசுகிசு

கிசுகிசு: அமைச்சரின் ராஜினாமா புலம்பல்!

லைக் கட்சியின் பணிவானவரும், சின்ன தலைவியும் போனில் பேசுகிற அளவுக்கு இணக்கமாகிவிட்டார்களாம். பழைய மன வருத்தங்களை மறக்கச் சொல்லி பணிவானவர் சொல்ல, "அதையெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன். நாம கட்சியின் அடுத்தகட்டத்தை நோக்கித்தான் இப்போ யோசிக்கணும்" எனச் சொன்னாராம் சின்ன தலைவி...

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் நடக்கும் உள்ளடிகள், கதர்க் கட்சிக்கு ஸ்கெட்ச் போடும் ஐ.ஏ. எஸ் அதிகாரி!, துணிவானவரின் வருத்தத்துக்கு காரணம் உள்பட கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள பல அரசியல் சீக்ரெட்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
அண்ணாமலையுடன் அலிஷா அப்துல்லா

'டிகிரி வாங்கும் முன்பே ட்ரீட்மென்ட்?' - பாஜக நிர்வாகி மீதான சர்ச்சையும் பதிலும்

பாஜக நிர்வாகி அலிஷா சமீபத்தில் இந்தி மொழி குறித்துப் பேசியது சர்ச்சை ஆனது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அலிஷா அப்துல்லா தனது படிப்பை முடிக்கும் முன்பே கிளினிக் ஒன்றை நடத்திவருவதாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு மற்றும் அதற்கு அலிஷா அப்துல்லா அளித்த பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
நிதி நிர்வாகம்

தேவை Vs விருப்பம்: பிள்ளைகளை பொருளாதார புத்திசாலிகளாக வளர்ப்பது எப்படி..?

ந்தியா போன்ற உலகின் வளரும் நாடு களில் நுகர்வுக் கலாசாரம் முந்திக்கொண்டு இருப்பதால், பல இளைஞர்கள் சம்பாதிக்க ஆரம்பித்ததும் கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன் மாதத் தவணைகளை சுலபமாக பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இதனால், அவர்கள் தேவையில்லாத கடன் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

இந்த நிலையில், பிள்ளைகளைப் பொருளாதார ரீதியாக புத்திசாலிகளாக மாற்றுவதற்கு பெற்றோர்கள் எப்படி உதவலாம் என்பது குறித்து நாணயம் விகடனில் வெளியாகி உள்ள சிறப்பு கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
சோப் ( மாதிரிப்படம் )

Doctor Vikatan: காலங்காலமாக ஒரே சோப், ஷாம்பூ, காஸ்மெட்டிக்ஸ் உபயோகிப்பது சரியா?

சிலருக்கு குறிப்பிட்ட சோப், ஷாம்பூ, காஸ்மெட்டிக்ஸ் என எல்லாமே செட் ஆகிவிடும். பல வருடங்களாக அவற்றையே உபயோகிப்பார்கள். சோப், பவுடர் உள்ளிட்ட காஸ்மெட்டிக்ஸ் என எல்லாவற்றையும் வருடக் கணக்கில் மாற்றாமல் உபயோகிப்பது சரியா அல்லது அவ்வப்போது அவற்றை மாற்ற வேண்டுமா? மாற்ற வேண்டும் என்றால் எத்தனை மாதங்களுக்கொரு முறை மாற்றலாம்?

சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் தரும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
'கலகத்தலைவன்'

கலகத் தலைவன்: விமர்சனம்

ரு சீசனில் தமிழ் சினிமாவில் கார்ப்பரேட்டுகளைப் பற்றி வரிசையாக படங்கள் வந்தன. அவை பெரும்பாலும் கார்ப்பரேட் முதலாளிகள் என்ற தனிப்பட்ட நபரை மட்டும் வில்லன்களாகச் சித்திரித்தன. அதே கார்ப்பரேட் ஆனால், அதன் அரசியலைக் கொஞ்சம் சமகால குறியீடுகளுடன் அணுகினால் அதுதான் 'கலகத் தலைவன்'.

'தடையறத் தாக்க', 'மீகாமன்', 'தடம்' எனக் களம் மற்றும் விறுவிறு திரைக்கதைகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மகிழ் திருமேனியின் 'கலகத் தலைவன்' தடையின்றி நம் மனதில் தடம் பதிக்கிறானா?

கதாநாயகனாக உதயநிதிக்கு இந்தப் படம் எப்படி? 'பிக் பாஸ் புகழ்' ஆரவ் வில்லன் கேரக்டரில் மிரட்டுகிறரா?

விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...