Published:Updated:

Evening Post:வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ-விசாரணையில் 2 அமைச்சர்கள்-'வாரிசு':உதயநிதி மீது குற்றச்சாட்டு!

Vikatan Highlights November 21
Listicle
Vikatan Highlights November 21

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ... எச்சரிக்கும் அமைச்சர், ஆட்டம் காண்கிறதா கே.எஸ்.அழகிரி பதவி?!, மிஸ்டர் கழுகு: மேலிட விசாரணையில் 2 அமைச்சர்கள், 'வாரிசு' ரிலீஸ்: உதயநிதி மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு, நிதி சுதந்திரத்தை பெறுவது எப்படி? ஆரூர்தாஸ்... நெகிழும் எம்.எஸ். பாஸ்கர்...


1
மெட்ராஸ் ஐ

தமிழகத்தில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ... தினமும் 4,500 பேர் பாதிப்பு! 

மிழகத்தில் 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதோடு, கூட்டமாக காணப்படும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு கடந்த சில மாதங்களாகத்தான் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறனர். இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பரவி வந்த நிலையில், சமீப நாட்களாக இதன் பரவல் வேகம் அதிகரித்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமும் 4500 பேர் வரை பாதிப்பு

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

* தமிழ்நாடு முழுவதும் தினமும் 4,000 முதல் 4,500 பேர் வரை இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

* சென்னையில் நாள்தோறும் சராசரியாக 80 முதல் 100 பேர் வரை இந்த நோயினால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை எழும்பூர் கண்நோய் மருத்துவமனையை போன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை என 10 இடங்களில் கண் மருத்துவம் பார்க்கும் மையங்கள் இருக்கின்றன.

அதேபோல தமிழ்நாடு முழுவதிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், சில வட்டார அரசு மருத்துவமனைகள் என 90 இடங்களில் அரசு கண் மருத்துவ மையங்கள் இயங்கி வருகின்றன.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மெட்ராஸ் ஐ வருவது ஏன்?

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. யாருக்கும் பார்வை இழப்பு என்ற பாதிப்பு இல்லை.

* இந்த பாதிப்பு கண்ணின் முன் பகுதியான வெள்ளைப்படலத்தில் வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு கண்நோய் ஆகும்.

* மண்டல கண் மருத்துவவியல் நிலையத்தின் சார்பில் இந்த வைரஸ் மாதிரிகளை எடுத்து கிண்டியில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகத்தில் நடத்திய பரிசோதனைக்கு பிறகு, அடினோ மற்றும் என்ரோ என்று சொல்லக்கூடிய வைரஸ் தாக்குதலினால் மெட்ராஸ் ஐ வருகிறது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

அறிகுறிகள்...

* இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இது எப்படி உறுதி செய்யப்படுகிறது என்றால், கண்ணில் உறுத்தல் இருக்கும். சிவந்த நிறமாக மாறும். அதிக கண்ணீர் சுரக்கும். அரிப்பு ஏற்படும்.

* கண் வீங்கும். கண்ணில் அடிக்கடி அழுக்கு சேரும். கண் இமைகள் ஒட்டிக்கொள்ளும். இவைதான் மெட்ராஸ் ஐ அறிகுறிகள் ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கைகளினால் தொடுவது கூடாது.

* கண்களை தொட்டு விட்டு, அக்கம் பக்கம் இருப்பவர்களைத் தொட்டால் அவர்களுக்கும் அந்த பாதிப்பை ஏற்படுத்தும். இது எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் ஆகும்.

எனவே குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது ஒருவருக்கு இந்த கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முடிந்தவரை 3 முதல் 4 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

அலுவலகங்களுக்கு செல்வதையோ, பள்ளிகளுக்கு செல்வதையோ, வணிக வளாகங்களுக்கு செல்வதையோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.

Madras eye

சிகிச்சை முறை

* இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண் சொட்டு மருந்தை தாங்களாகவே கடையில் வாங்கி போட்டுக்கொள்ளக்கூடாது.

* சுய சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. முறையாக கண் மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையினை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

கண்நோய்க்கு போடப்படும் மருந்தின் தன்மை, வீரியம் போன்றவைகள் ஒவ்வொரு மருந்துக்கும், நோயின் பாதிப்பு தன்மைக்கு ஏற்பவும் மாறுபடும். எனவே கடையில் போய் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி போட்டுக் கொள்வதன் மூலம் கருவிழிகள் பாதிப்புக்கு உள்ளாகும். பார்வை இழப்பும் ஏற்படும்.

எனவே மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை போட்டுக் கொள்ளக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு கண்நோய் ஏற்பட்டால் அவர்களுக்காக வாங்கும் சொட்டு மருந்து பாட்டிலை வேறு ஒருவருக்கு பயன்படுத்தக் கூடாது" எனத் தெரிவித்தார்.


2
கே.எஸ்.அழகிரி

'டெல்லிக்குச் சென்ற பஞ்சாயத்து' - ஆட்டம் காண்கிறதா கே.எஸ்.அழகிரி பதவி?!

மிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் உள்ளிட்ட சில நிகழ்வுகளால் கே.எஸ்.அழகிரி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் எனப் பேச்சு எழுந்துள்ளது.

இது குறித்த விரிவான செய்தி மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் விகடனுக்கு அளித்த பேட்டி உள்ளிட்டவற்றை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
மிஸ்டர் கழுகு

மிஸ்டர் கழுகு: அமுக்கப்பட்ட தீபாவளி 'ஸ்வீட்' ... மேலிட விசாரணையில் 2 அமைச்சர்கள்!

ற்றைத் தலைமை விவகாரத்தால், அ.தி.மு.க-வே சுணங்கிவிட்டது... ஒற்றுமைக்கு வழி பிறக்காதா என்று சில சீனியர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் அமைச்சர்களோ, 'ஆத்தா... கட்சி மட்டும் ஒண்ணு சேர்ந்துடக் கூடாது' என்று வேண்டாத தெய்வம் இல்லையாம்.

மிஸ்டர் கழுகு தரும் மேலிட விசாரணையில் 2 அமைச்சர்கள், ரெளடியைக் கடத்திய போலீஸ், கணக்கெடுக்கப்படும் முன்னாள் அமைச்சரின் சொத்து விவரங்கள், அமைச்சரின் நாட்டாமைத்தனம், இபிஎஸ் - ஓபிஎஸ் இணையக்கூடாது என நினைக்கும் முன்னாள் அமைச்சர்... உள்ளிட்ட சீக்ரெட் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
சோனியா காந்தி - ராகுல் காந்தி

'என் அம்மா அப்படித்தான்..!' - நினைவலைகளைப் பகிர்ந்த ராகுல்!

பாரத் ஜோடோ யாத்ரா பயணத்தின் இடையில் ராகுல் காந்தியிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' எனப் பேட்டி எடுத்தவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு ராகுல் காந்தி அளித்த பதில், அவரது அம்மா சோனியா காந்தி குறித்து பகிர்ந்த தகவல் உள்ளிட்டவற்றைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
வாரிசு; விஜய்

வாரிசு ரிலீஸ்: உதயநிதி மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் குறித்தும் 'வாரிசு' பட ரிலீஸ் குறித்தும் கடம்பூர் ராஜூ கூறிய பரபரப்பான குற்றச்சாட்டு குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி

காசி தமிழ் சங்கமம்: சிவகாசியும் தென்காசியும் போற்றும் வடகாசியின் மகத்துவங்கள்!

வடக்கே வசிப்பவர்கள் ராமேஸ்வரத்துக்கு வர விரும்புவதும், தமிழகத்தில் வசிக்கும் இந்துக்கள் காசிக்கு செல்ல விரும்புவதும் தொன்றுதொட்ட வழக்கமாகவே உள்ளது. ராமாயண யாத்திரை செல்பவர்களுக்கு காசியும் ராமேஸ்வரமும் முக்கியத் தலங்களாக உள்ளன.

சரி... காசிக்கு ஏன் தமிழகத்தில் அத்தனை முக்கியத்துவம்? தென்காசி என்ற தலம் உருவானது ஏன்? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
நிதிச் சுதந்திரம்

நிதிச் சுதந்திரம்: விரும்பிய விஷயத்திற்குச் செலவிடும் வாழ்க்கையை அடைய என்ன செய்ய வேண்டும்?

நிதிச் சுதந்திரம் என்றால் என்ன..? ஒருவர் அவருடைய நேரத்தை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அவர் விரும்பிய விஷயத்திற்குச் செலவிடுவதை நிதிச் சுதந்திரம் எனச் சொல்லலாம். இதைப் பெற என்ன செய்ய வேண்டும்?

பிரபல நிதி ஆலோசகர் ஆர்.வெங்கடேஷ் சொல்லும் ஆலோசனைகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


8
ஆரூர் தாஸ்

ஆருர்தாஸ்: 'அவர் கற்றுக்கொடுத்த வித்தைதான் என்னைக் காப்பாற்றுகிறது!'- எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்

சிவாஜி, எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் தனித்துவமான வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் ஆரூர்தாஸ். தமிழ் திரையுலகின் பிதாமகராக போற்றப்பட்ட அவர் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

நாகர்கோவிலில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரிடம் ஆரூர்தாஸின் நினைவுகள் குறித்து கேட்டோம்.

வருத்தம் தோய்ந்த குரலில் அவர் பகிர்ந்த நினைவலைகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...