Published:Updated:

Evening Post:பாஜக-வில் வெடித்த கலகம்-அமைச்சர்களிடையே மோதல்-எடப்பாடியின்கெத்து-Health Insurance-கவனம்

Vikatan Highlights November 22
Listicle
Vikatan Highlights November 22

கட்சி நிர்வாகியின் ஆபாச பேச்சால் தமிழக பாஜக-வில் வெடித்த கலகம், திமுக அமைச்சர்களிடையே முட்டல் மோதல், பாஜக-வையும் அடித்து ஆடும் எடப்பாடி, நெல்லை: ரயிலில் 14 கி.மீ தொங்கியபடி பயணம், மருத்துவக் காப்பீட்டில் கட்டாயம் கவனிக்க வேண்டியவை,


1
அண்ணாமலை | காயத்ரி ரகுராம் | சூர்யா சிவா

கட்சி நிர்வாகியின் ஆபாச பேச்சு... கொந்தளித்த காயத்ரி ரகுராம்... பாஜக-வில் வெடித்த கலகம்!

சொந்த கட்சியின் பெண் நிர்வாகியையே மிக ஆபாசமாக திட்டும் பாஜக நிர்வாகியின் ஆடியோ ஒன்று வெளியானதைத் தொடர்ந்து சஸ்பெண்ட், கட்சி மேடையில் பங்கேற்க தடை என தமிழக பாஜக வட்டாரம் பரபரத்துக் கிடக்கிறது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்களையும் நிர்வாகிகளையும் மட்டுமல்லாது, சொந்த கட்சியிலேயே கூட தனக்குப் போட்டியாக கருதுபவர்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசும் போக்கு கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து அரசியல் கட்சி மேடைகளிலும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.

குஷ்பு குறித்த பேச்சு... கொந்தளித்த பாஜக

கடந்த மாதம் சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாஜக-வில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

இதையடுத்து சைதை சாதிக்கை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

குஷ்பு

மேலும், சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை குஷ்பு டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து மனோ தங்கராஜ், " நடிகை குஷ்பு மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியதைத் தொடர்ந்து ஒரு வழியாக இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

பாஜக-வை அலற வைத்த ஆபாச ஆடியோ...

இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க.,வின் சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணிடம் தமிழக பா.ஜ.க.,வின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருக்கும் சூர்யா சிவா ஆபாசமாக பேசும் சர்ச்சை ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் இன்று காலை முதல் பரவியது.

அதில் சூர்யா சிவா பேசிய பேச்சைக் கேட்டவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். அந்த அளவுக்கு மிகவும் மோசமான வார்த்தைகளால் அவர் பேசியிருந்தார்.

சூர்யா சிவா

இதைத் தொடர்ந்து, திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சூர்யா சிவாவின் ஆபாச பேச்சைக் குறிப்பிட்டு,

"பெண்களை தவறாக பேசினால் கையே வெட்டுவேன் எனச் சொன்ன அண்ணாமலை என்ன செய்யப்போகிறார்?" எனக் கேள்வி எழுப்பி, தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர்.

இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கடியை கொடுத்த நிலையில், சூர்யா சிவாவுக்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் காயத்ரி ரகுராமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம்

கொந்தளித்த காயத்ரி ரகுராம்

இந்த நிலையில், தன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

* அப்போது, கட்சிக்கு களங்கம் எனக்கூறி தம்மை சஸ்பெண்ட் செய்தது தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் அளிக்காமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், " ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. என்னை விமர்சனம் செய்தால் திருப்பி பதிலடி கொடுப்பேன்.

* என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை. கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன்.

* எனது 8 வருட உழைப்பை களங்கம் என்று கூறினால் எனக்கு கோபம் வரும். என் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுகிறது. மேலிடத்திற்கு என்னை பற்றி தவறான கருத்துக்கள் அனுப்பப்படுகிறது.

* சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம் அளிக்கிறது.

கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர்தான். என் மீது தவறு இல்லாதபோது நான் பயப்பட வேண்டியதில்லை. பாஜக மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் நடந்தது என்ன? ஆடியோவில் சூர்யா சிவா என்ன பேசினார், சஸ்பெண்ட் செய்யப்படும் அளவுக்கு காயத்ரி ரகுராம் பதிவிட்ட ட்வீட் என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


2
ஆழியாறு குடிநீர் திட்டம்

திமுக அமைச்சர்களிடையே முட்டல் மோதல்... சொல்லியடித்த செந்தில் பாலாஜி!

ழியாறு ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தை அரசு மறுபரிசீலனைக்கு எடுத்துள்ளதாகவும், அதற்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது கொங்கு மண்டல விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ள போதிலும், திமுகவில் அரசியல் அனலை கிளப்பியுள்ளது.

இதற்கு என்ன காரணம்..? விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
எடப்பாடி பழனிசாமி

பாஜக-வையும் அடித்து ஆடும் எடப்பாடி... அதிரடி நகர்வுகளின் பின்னணி என்ன?

னியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அமித் ஷா செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வந்திருந்தார். அன்றைய தினம் எடப்பாடி சென்னையிலிருந்தும், அமித் ஷா-வை சந்திக்காமலிருந்தது, அது குறித்து அவர் அளித்த விளக்கமும் அரசியல் களத்தில் பேசு பொருளானது.

இந்த நிலையில் பாஜக, அதிமுக இடையேயான உறவில் சற்று விரிசல் ஆரம்பமாகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில், வரும் தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா என்பது குறித்தும், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியின் கருத்து என்ன என்பதையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்

நெல்லை: ரயிலில் 14 கி.மீ தொங்கியபடி பயணம் - உயிரைக் காப்பாற்றிய ஊழியர்கள்!

யில் புறப்பட்டுச் சென்றதால், ஓடும் ரயிலில் கடைசியில் இருந்த கண்காணிப்பு பெட்டியில் ஏறியுள்ளார். அது பூட்டப்பட்டிருந்ததால் தொங்கியபடியே பயணிக்கும் நிலைமை உருவானது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை தோறும் கொங்கன் ரயில்வே வழியாக மும்பை தாதருக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான தகவலை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு... கட்டாயம் கவனிக்க வேண்டியவை..!

ந்தியாவில் கோவிட் 19 பரவலுக்குப் பிறகு, மருத்துவக் காப்பீடு (Health Insurance) அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இருப்பினும் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுக்கும்போது எவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும் என்கிற விவரம் பலருக்கும் தெரியவில்லை; சிலருக்கும் புரியவில்லை.

ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் குறித்து பிரபல நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன் (Aismoney.com) சொல்வதைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
Budweiser ( Budweiser )

FIFA World Cup 2022 ரவுண்ட் அப்: டீ சர்ட்டுக்குத் தடை டு வெல்லும் அணிக்கு அன்லிமிட்டெட் பீர் வரை!

லகக்கோப்பையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றிய டெய்லி அப்டேட் இதோ!

பெல்ஜியம் அணி வீரரான கெவின் டி புருய்னின் டி-ஷர்ட்டின் காலரில் 'Love' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியான 24 மணி நேரத்திற்குள், காலரில் ‘லவ்’ என்று எழுதப்பட்ட டி-ஷர்ட் அணிந்து ஆட்டத்தில் ஆடக்கூடாது என்று FIFA தெரிவித்துள்ளது. மேலும், இது போன்று விதியை மீறி செயல்படும் வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்றும் FIFA எச்சரித்துள்ளது.

மேலும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றிய அப்டேட்டைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
நடிகர் சிவகுமார்

"பத்து வருஷத்துக்கொருமுறை லைஃப்ஸ்டைலை மாத்தலைனா போர் அடிச்சுடும்!" - நடிகர் சிவக்குமார்

கோயம்புத்தூரில் சூலூர் பக்கத்தில் இருக்கும் காசிகவுண்டன்புதூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர்; அந்தக் கிராமத்தில் பள்ளி இறுதி வகுப்பை முடித்து, சென்னைக்கு வந்து ஓவியக் கல்லூரியில் பயின்றவர்; பிறகு சினிமா துறையில் நுழைந்தவர் பழனிசாமி என்கிற நடிகர் சிவகுமார்.

நடிப்புத்துறையில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தனி மனித வாழ்க்கைப் பயணத்தில் பலருக்கு எடுத்துக்காட்டாக, 'திரையுலக மார்க்கண்டேயன்' என்கிற முத்திரையுடன் 80 வயதைக் கடந்து உற்சாகமாக வலம்வருகிறார்.

இன்றுவரை எனர்ஜி குறையாமல் இயங்குபவர் அதற்கான காரணங்களையும் பகிர்ந்துகொண்டார். அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...