Published:Updated:

Evening Post:தேர்தல் ஆணையர்: விளாசிய நீதிமன்றம்-மிரள வைக்கும் OPS-கைமாறும் பினாமி நிலம்-லோன் டிப்ஸ்!

Vikatan Highlights November 23
Listicle
Vikatan Highlights November 23

உச்ச நீதிமன்றம் மத்திய அரசை விளாசியது ஏன்?, எடப்பாடி தரப்பை மிரள வைக்கும் ஓ.பி.எஸ், தலைவர் பதவிக்கு காய் நகர்த்தும் கார்த்தி சிதம்பரம், கிசுகிசு: கைமாறும் சின்னத்தலைவியின் பினாமி நிலம், குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்குவது எப்படி?கவனத்தை ஈர்க்காத கலகத் தலைவன்..!


1
தேர்தல் கமிஷன்

EC: 'டி.என். சேஷன் போன்றவர்களே தேவை!'- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசை மிகக் கடுமையாக விளாசியுள்ள உச்ச நீதிமன்றம், " மத்தியில் ஆட்சிக்கு வரும் எல்லா அரசுகளுமே, 'ஆமாம் சாமி' போடுபவர்களையேதான் தேர்தல் ஆணையர்களாக நியமிப்பதாகவும், தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை தைரியமாக மேற்கொண்ட டி.என். சேஷன் போன்றவர்களே, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு இப்போது தேவை" என்றும் கடுமையாக கூறி உள்ளது மத்திய அரசு வட்டாரத்தை அதிரவைத்துள்ளது.

சுதந்திரமான நியமனம் கோரி வழக்கு

அண்மையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் 2022 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக நவம்பர் 18 ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் நியமனம் சுதந்திரமான முறையில் இருக்க வேண்டும் என்றும், அவர்களை உச்சநீதிமன்றத்தில் உள்ளது போல கொலீஜியம் முறையில் தேர்வு செய்ய குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்

இந்த மனுவை கே.எம்.ஜோஸ்பே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோதுதான் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது நீதிமன்றம்.

" தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து மத்திய அரசு பேசுவதெல்லாம் வெறும் வாய்வார்த்தைதான். தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலத்தில் ஓய்வு பெறுவதை கருத்தில் கொண்டே மத்திய அரசு நியமனங்களை மேற்கொள்கிறது.

தலைமை தேர்தல் ஆணையர்களின் அதிகாரத்தை வரையறுக்கும் தேர்தல் ஆணைய சட்டம் 1991ன் பிரிவு 4, அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அவர்கள் தேர்தல் ஆணையர்களாக நீடிக்கலாம் எனக் கூறுகிறது. இந்த சட்டத்தின் 2வது அம்சத்தைக் கருத்தில் கொண்டே தலைமை தேர்தல் ஆணையர்களை அரசு நியமிக்கிறது.

* கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 8 ஆண்டுகளில் 6 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்துள்ளனர்.

* தற்போதைய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 2015 முதல் 2022 ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில் 8 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாகி உள்ளனர்.

* தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட இருப்பவர்களின் பிறந்த தேதி அரசிடம் இருப்பதால், அதை அரசு பயன்படுத்திக்கொள்கிறது. இது மிக மிக மிக மோசமான நடவடிக்கை.

'ஆமாம் சாமி' போடுபவர்களே நியமனம்...

* தேர்தல் ஆணையரின் சுதந்திரம் மிக முக்கியமானது. அவர்தான் தேர்தல் ஆணையத்தின் முகமாக இருக்கிறார் எனும்போது அவர் சுதந்திரமானவராக இருக்க வேண்டும்.

* ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வரும் எல்லா அரசுகளுமே, 'ஆமாம் சாமி' போடுபவர்களையேதான் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கிறது எனக் குற்றம் சாட்டியது நீதிமன்றம்.

T. N. Seshan

'டி.என். சேஷன் போன்றவர்களே தேவை...'

* மேலும், 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்து தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட டி.என். சேஷன் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்திற்குத் தேவை.

* அவரைப் போன்றவர்களெல்லாம் எப்போதாவதுதான் இந்த பதவிக்கு வருகிறார்கள்.

எனவே, இந்த பொறுப்புக்கு மிகச் சரியான நபர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையராக அண்மையில் அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

யார் இந்த டி.என் சேஷன்?

1989-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட டி.என்.சேஷன், 1990- ம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமராக ஆனபோது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் ஆணையத்துக்கு இருந்த அதிகாரத்தை மக்கள் புரிந்துகொண்டது, சேஷனின் பதவிக்காலத்தில்தான். வாக்காளர் அடையாள அட்டை முறையைக் கொண்டு வந்ததும் அவர்தான்.

பல கண்டிப்பான தேர்தல் விதிமுறைகளை உருவாக்கியதோடு, அப்போதைய அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

அவர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு வரை ஒப்புக்கு இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகுந்த கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினார்.

அதற்கு முன்பு வரை பொதுத்தேர்தல் என்றாலே கணக்குவழக்கில்லாமல் பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பதை அரசியல் கட்சிகள் வழக்கமாகக்கொண்டிருந்தன.

அவற்றுக்குக் கடிவாளமிட்டு, ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்தியது இவரது முக்கிய சாதனை. குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின்போது ஆளும் அரசு எந்தவிதச் சலுகையும் அறிவிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார்.


2
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ஆள் பிடிக்கும் நிர்வாகிகள்... ஆசைக்காட்டும் ஓ.பி.எஸ்... அச்சத்தில் எடப்பாடி!

திமுக-வில் இருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட டி.டி.வி தினகரனும் ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்பட தயாராகிவிட்டார்.

இந்த உற்சாகத்தில், தனது தரப்பை வலுப்படுத்த ஓ.பி.எஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தற்போது பலன் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது என்றும், இது எடப்பாடிக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளதாகவும் தகவல்கள் தடதடக்கின்றன.

இது குறித்து ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி முகாமில் உள்ள சீனியர்கள் சொல்வது என்ன..? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் தலைவர் ரேஸ்... காய் நகர்த்தும் கார்த்தி சிதம்பரம்..!

மிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிப்பதற்குப் பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக ஜோதிமணி, செல்லகுமார், கார்த்தி சிதம்பரம், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் ஆகியோர் மிக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள் என்பது தகவல்.

இதில் கார்த்தி சிதம்பரம் மிகத் தீவிரமாக முனைப்புக்காட்டும் நிலையில், தலைவர் பதவியிலிருந்து ஒருவேளை அழகிரி நீக்கப்பட்டால், புதிய தலைவராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது?

இதுகுறித்த விரிவான தகவல்களையும், காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் சொன்ன கருத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
கிசுகிசு

கிசுகிசு: கைமாறும் சின்னத்தலைவியின் பினாமி நிலம்!

ட்டம்-ஒழுங்கை கவனிக்கும் முக்கியக் காக்கி அதிகாரி, சீக்கிரமே ஓய்வுபெறவிருக்கிறார். அந்த இடத்தைப் பிடிக்க, காக்கி வட்டாரத்துக்குள் கடுமையான போட்டி....

மேலும், மாஜிக்களிடம் தடாலடி காட்டிய துணிவானவர், கதர்க் கட்சித் தலைவரின் உதறல், கோட்டையின் உச்ச அதிகாரி போட்ட உத்தரவு... என கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள மேலும் பல அரசியல் சீக்ரெட்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
கொள்ளையடித்த நகைகளுடன் கைதான சுடலைபழம்

பகலில் ரயில் பயணம்... இரவில் கொள்ளை... சென்னையில் உல்லாசம்..!

மிழகத்தின் பல மாவட்டங்களில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்பட்டது.

கைரேகை கூட விட்டுச் செல்லாத அளவுக்கு மிகக் கவனமுடன் கொள்ளை நடந்ததால் அதில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் போலீஸாரையே கிறுகிறுக்க வைத்தன. அதனை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
பர்சனல் லோன்

குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்குவது எப்படி?

ர்சனல் லோன் வாங்கலாமா கூடாதா, அப்படி வாங்குவது எனில், என்னென்ன காரணத்துக்காக வாங்கலாம், இதில் உள்ள சாதக, பாதகங்கள் என்னென்ன,

குறைந்த வட்டியில் வாங்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் பத்மநாபன் சொல்வதைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


7
கலகத் தலைவன்

மிஸ்டர் மியாவ்: கவனத்தை ஈர்க்காத கலகத் தலைவன்!

ஜித்தின் 'துணிவு' பட டப்பிங்கை 12 நாள்களில் முடித்து அசத்தியிருக்கிறார் ஹெச்.வினோத். 'பொங்கல் ரிலீஸ்' எனத் தேதி குறிக்கப்பட்ட நிலையில், 'கொஞ்சம் பொறுமையாக வரலாமே…' எனத் தயாரிப்பாளர் போனி கபூரிடம் சொன்னாராம் ஹெச்.வினோத். தன் தரப்பு நெருக்கடியை போனி கபூர் சொல்ல, எந்த மறுப்பும் சொல்லாமல், தடாலடி வேகத்தில் டப்பிங் பணியை முடித்தாராம் வினோத். அஜித்தும் நான்கைந்து நாள்களில் தன் டப்பிங்கை முடித்துக்கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...