Published:Updated:

Evening Post:Article158(2):ஆளுநர் பதவி தப்புமா?பாம்பு:சீமான் சொல்வது உண்மையா?பிரபுக்கு ரஜினிஅட்வைஸ்!

Vikatan Highlights November 29
Listicle
Vikatan Highlights November 29

தமிழக ஆளுரை பதவி நீக்கக் கோரி வழக்கு... சிக்கலை ஏற்படுத்திய Article 158(2), தமிழகத்தில் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடியா?, பாம்பு புற்றுக்கு பால்.... சீமான் சொல்வது உண்மையா? - கோடீஸ்வரராக 8 விஷயங்கள், பிரபு குடும்ப சொத்து பஞ்சாயத்து... ரஜினி, கமல் அட்வைஸ்!


1
நீதிமன்றம்

Article 158(2): ஆளுநரை நீக்க வழக்கு ... பதவி தப்புமா?

மிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 158 (2) ன் கீழ் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கால், ரவியின் ஆளுநர் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பதவியேற்றதிலிருந்தே முட்டல் மோதல்...

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்தே ஆட்சியில் உள்ள திமுக அரசுக்கும் அவருக்கும் இடையேயான முட்டல் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிலும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம், கடந்த 27 ம் தேதியுடன் காலாவதியானது. இந்த மசோதா தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. கடிதம் எழுதினார். அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசும் அதற்கு விளக்க கடிதத்தை அனுப்பி வைத்தது. ஆனாலும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், மீண்டும் பழைய நிலையே நீடிக்கிறது.

ஆளுநர் ரவி

பதவி நீக்கக் கோரி வழக்கு

இந்த நிலையில், புதுவையில் உள்ள ஆரோவில் பவுண்டேஷன் அமைப்பின் தலைவராக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் தாக்கல் செய்துள்ள மனுவில்,

* " தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற நாளிலிருந்து அவர் ஒரு பிரச்னைக்குரிய நபராகவே உள்ளார்.

* பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.

* தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் கோப்புகளை நிலுவையில் வைத்து பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார்.

* மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, புதுவையில் உள்ள ஆரோவில் பவுண்டேஷன் அமைப்பின் தலைவராக நான்காண்டு காலத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

* 2021 ம் ஆண்டு அக்டோபர் 6 ம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் இதற்கான நியமனம் செய்யப்பட்டுள்ளது.

* 1988 ம் ஆண்டு ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோவில் சர்வதேச நகரம்

'Article 158( 2) - க்கு எதிரானது'

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு (Article)-158 (2) - ன் கீழ் ஆளுநர் எந்த ஒரு ஆதாயம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதையும் மீறி அவர் தலைவராக உள்ளார்.

* இதன் மூலம் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார்.

* இது ஆளுநராக அவர் பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறானது என்பதால், அவர் ஆளுநராக பதவிவகிக்கத் தகுதியற்றவர்.

* எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மனுதாரர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி இந்த மனுவைத் தாக்கல் செய்து, வழக்கை கையில் எடுத்துள்ள நிலையில், இந்த மனு நாளை மறுதினம் விசாரணைக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.

கிடப்பில் 50+ சட்ட மசோதாக்கள்!

இந்த நிலையில், 2018 முதல் 2022 வரை தமிழக அரசால் குடியரசுத் தலைவர், ஆளுநரின் ஒப்புதலுக்காக 67 மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 54 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதில் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்டது எத்தனை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனுப்பப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்கள் எத்தனை, இதுகுறித்து உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் சொல்வது என்ன என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
அண்ணாமலை ( கோப்புப் படம் )

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: தமிழக அரசு மீது அண்ணாமலை திடீர் குற்றச்சாட்டு!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநரை சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் சென்னை வந்தபோது அவரது பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

அண்ணாமலை பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
திருப்பூர் ரயில்வே நிலையம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் 'இந்தி' வார்த்தை... கடும் எதிர்ப்பால் அகற்றம்!

திருப்பூர் ரயில் நிலையத்திலுள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் `இன்ஃபர்மேஷன் சென்டர்' எனக் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் தொடர்பு மையத்தில், அண்மையில் தமிழுக்கு பதில் இந்தியில் `சகயோக்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
சீமான்

'புற்று... பால் ... பாம்பின் இனப்பெருக்கம் தடை' - சீமான் சொல்வது உண்மையா?

"புற்றில் பால் ஊற்றினால் அந்த வாடையில் ஆண் பாம்பும் பெண் பாம்பும் ஒன்று சேராது. இதனால் பாம்பின் இனபெருக்கம் குறையும். இதற்காகவே புற்றில் பால் ஊற்றும் வழக்கம் மக்களிடையே தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது" என்று பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான்.

பொதுவாகவே சீமான் பேசும் பேச்சுகளை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுவது வழக்கம். இந்த முறை அதிகமாகவே கலாய்த்து வருகிறார்கள்.

இது உண்மையா..? உயிரினங்கள் குறித்து நுட்பமாக ஆராய்ந்து வரும் சூழலியலாளர் கோவை சதாசிவம் சொல்வதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' : மன்னிப்பு கேட்ட இஸ்ரேலியத் தூதர்!

53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த திரைப்பட விழாவில் 'ஜெய் பீம்' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் திரையிடப்பட்டன.

இந்த நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் குறித்து இஸ்ரேலிய இயக்குநர் பேசியது சர்ச்சையானது. அவர் பேசியது என்ன..?

அவரது பேச்சைக் கண்டித்து அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் ட்வீட் செய்தது உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
கோடீஸ்வரராக வேண்டுமா..?

கோடீஸ்வரராக 8 விஷயங்கள்!

ணம் சம்பாதிக்கும் ஆசை அனைவருக்கும் உண்டு. அதற்கான மூளையும் உழைப்பும் சேரும்போது, சாத்தியங்கள் விரிவடையும். கூடவே, அடிப்படையான, அவசியமான பொருளாதாரத் திட்டமிடலும் சேரும்போது அது விரைவாக நடக்கவும் கைகொடுக்கும்.

அந்த வகையில், கோடீஸ்வரராக விரும்புபவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 8 அம்சங்களைச் சொல்கிறார் பிரபல நிதி ஆலோசகர் (Aismoney.com) சிவகாசி மணிகண்டன். அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....


7
ரஜினி - கமல்

பிரபு குடும்ப சொத்து பஞ்சாயத்து... ரஜினி, கமல்  அட்வைஸ்! 

சிவாஜி குடும்பத்தில் சொத்துப் பிரச்னை விஸ்வரூமெடுத்துவிட்டது. உடன்பிறப்புகளுக்குள் பிரச்னை நடந்து அது நீதிமன்றம் வரைக்கும் போயிருக்கிறது...

இது குறித்த பஞ்சாயத்தில் பிரபுவுக்கு ரஜினி, கமல் செய்த அட்வைஸ், 'வாரிசு' பட சிக்கலுக்கு காரணம், இழுத்துக்கொண்டே செல்லும் அஜித் படம், ரஜினிக்கு மருத்துவர்களின் எச்சரிக்கை... உள்பட '

கோலிவுட் ஸ்பைடர்' தரும் விறுவிறுப்பான சினிமா செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...