Published:Updated:

Evening Post:அண்ணாமலைக்கு பதிலடி-கிசுகிசு:பவனிடம் பேசும் மூவர்-அதானி வசமாகும் NDTV- மிஸ்டர் மியாவ்

Vikatan Highlights November 30
Listicle
Vikatan Highlights November 30

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த பதிலடி, 'அணில் அமைச்சர்...' - செல்லூர் ராஜூ அட்டாக்!, கிசுகிசு: பவன் புள்ளியிடம் அடிக்கடிப் பேசும் மூவர்!, அதானி வசமாகிறது NDTV?எவர் கிரீன் டேஸ்ட்... விருதுநகர் பரோட்டா!


1
அண்ணாமலை - நரேந்திர மோடி

பிரதமரின் பாதுகாப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டும் அமைச்சரின் பதிலடியும்!

பிரதமர் மோடி சென்னை வந்தபோது அவருக்கு பாதுகாப்பு வழங்கியதில் குளறுபடி நடந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பாஜக-வுக்கும் ஆளும் திமுக-வுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

ஆளுநரிடம் புகார் அளித்த அண்ணாமலை

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். அப்போது பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை நேற்று குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்திருந்தார்.

இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாநில அரசு, தனது பணியிலிருந்து தவறியிருக்கிறது, என்பதற்கான குற்றச்சாட்டை ஆதாரத்தின் அடிப்படையில் கொடுத்து வந்திருக்கிறோம்.

* பிரதமர் வந்திருந்தபோது, நேரு உள்விளையாட்டரங்கில், 150 நாடுகளில் இருந்து வந்திருக்கக்கூடிய நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். அந்த சமயத்தில் அங்கு பிரதமரின் பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய உபகரணமான மெட்டல் டிடெக்டர்ஸ் அன்று சரியாக வேலை செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய வேதனையான விஷயம்.

* உளவுத்துறை, இதற்கு காரணம் நீங்கள்தான் என்று குற்றம்சாட்டி சில காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

* எனவே தமிழக அரசு இதற்கு பொறுப்பேற்று யாரெல்லாம் இதில் தவறு செய்திருக்கிறார்களோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு மறுப்பு

இந்த நிலையில், அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு,

* "பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குளறுபடிகள் இருந்ததற்கான எந்த ஒரு தகவலும் இல்லை. பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது.

* பாதுகாப்பு உபகரணங்கள் கூட நம்மிடம் சிறப்பானதாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை அதிக எண்ணிக்கையிலான, தரமான உபகரணங்களை பயன்படுத்துகிறது.

* அண்டை மாநிலங்கள் கூட நம்மிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்களை உதவிக்காக பெற்றுச் செல்கிறார்கள்.

மேலும், நம்மிடம் இரண்டு மடங்கு பாதுகாப்பு கருவிகள் இருக்கின்றன. அதில், பயன்பாட்டுக்காலம் முடிந்தவைகளைதான் நாம் அப்புறப்படுத்துகிறோம்" எனத் தெரிவித்தார்.

மனோ தங்கராஜ்

பதிலடி கொடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்த நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், "பாஜக ஆளும் மாநிலங்களில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்கும் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

வெறுப்பு பிரச்சாரம் பிரிவினையை கக்கும் பாஜக-வினருக்கே பாதுகாப்பு வழங்கும் அரசிற்கு பாரத பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்க தெரியும்.

6-வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் அரசிற்கு அண்ணாமலை கற்றுத்தர வேண்டாம்.

பாஜக தலைவர்கள், ஆளுநரை சந்திக்கும்போது தமிழக அரசு மசோதாக்கள் குறித்து எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.


2
செல்லூர் ராஜூ

"அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராகி விட்டார்" - செல்லூர் ராஜூ அட்டாக்!

கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கருத்து தெரிவித்த நிலையில், இன்று அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

"முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கத்தான் தகுதியானவர்" எனக் கடுமையாக பேசியதோடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி கனிமொழி என அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது பதிலடியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கிசுகிசு

கிசுகிசு: அமைச்சரவையிலிருந்து பவன் புள்ளியிடம் அடிக்கடிப் பேசும் மூவர்!

* சின்ன தலைவிக்கும் இனிஷியல் புள்ளிக்கும் இடையே மௌன யுத்தம்,

* கதர்க்கட்சி தலைமையின் திடீர் முடிவு

* அமைச்சரவையிலிருந்து பவன் புள்ளியிடம் அடிக்கடிப் பேசும் மூவர்

* பணிவானவரிடம் பாசம் காட்டிய அண்ணன் தலைவர்

* வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் 3 காவிக்கட்சி வீடியோக்கள்...

- இன்று வெளியான ஜூனியர் விகடனின் கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள அரசியல் சீக்ரெட்ஸ் இவை...

அவற்றைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
அதானி - என்டிடிவி

NDTV விரைவில் அதானி வசமாகிறது? நிறுவனர்கள் ராஜினாமாவால் பரபரப்பு 

டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகிறது என்டிடிவி எனும் செய்தி நிறுவனம். கடந்த 1984-ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் பிரனாய் ராய், அவரின் மனைவியும், பத்திரிகையாளருமான ராதிகா ராய் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், என்டிடிவி விரைவில் முழுவதுமாக அதானி வசம் சென்றுவிடும் சூழல் உருவாகி உள்ளது. இது ஏன், எதனால், ராஜினாமா செய்த என்டிடிவி நிறுவனர்கள்... உள்ளிட்ட தகவலை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5

எவர் கிரீன் டேஸ்ட்... விருதுநகர் எண்ணெய் பரோட்டா!

ணவு வகைகளில், 'ஆசம்' டேஸ்ட்களுக்கு அடிக்கோடிட்டது பரோட்டா என்றால் அது மிகையாகாது. அந்த வரிசையில், விருதுநகர் எண்ணெய் பரோட்டா, கோழி சால்னா காம்பினேஷனை சுவைக்காதவர்களே இருக்க வாய்ப்பில்லை.

நம் சுவை மொட்டுகளை நன்கு விரியச் செய்து, விறுவிறுப்பாக சுவைக்கத் தூண்டும் விருதுநகர் எண்ணெய் பரோட்டாவுக்கு இந்தப் பாண்டிய தேசம் மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாடுமே அடிமை!

நாவூறும் விருதுநகர் எண்ணெய் பரோட்டாவின் வரலாறையும், வளர்ச்சியையும் ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவரான சிந்தா ஷேக் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
ஆயிஷா கான்

மிஸ்டர் மியாவ்: ஸ்டைலிஷான இயக்குநரால் அலறும் தயாரிப்பாளர்கள்!

மிழ் சினிமா உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது ‘லவ் டுடே’ படம். தமிழ்நாடு தியேட்டரிக்கல் ஷேர் மட்டும் 30 கோடியை நெருங்கும் நிலையில், பெரிய ஹீரோக்கள் பலரும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், பிரதீப்பின் டார்கெட்டோ விஜய். ஏற்கெனவே அவருக்குக் கதை சொல்லி ஓகே வாங்கி வைத்திருக்கும் பிரதீப், அவரை இயக்க இன்னும் ஒன்றரை வருடம் ஆகும்.

இந்த இடைவெளியில் பிரதீப் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்க நினைக்கிறார் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ். முன்னணி இயக்குநர்கள் நால்வரின் பெயரை `டிக்’ செய்து கொடுத்திருக்கும் பிரதீப், தனக்கான சம்பளமாக ஐந்து விரல்களைக் காட்டுகிறாராம்.

இன்று வெளியான ஜூனியர் விகடனின் 'மிஸ்டர் மியாவ்' பகுதியில் இடம்பெற்றுள்ள மேலும் பல சுவாரஸ்ய சினிமா செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க....