Published:Updated:

Evening Post:கோவிட்: டீன் ஏஜிலேயே முதுமை பிரச்னை-எடப்பாடியை காப்பாற்றுகிறாரா ஸ்டாலின்?DSP விமர்சனம்!

Vikatan Highlights December 3
Listicle
Vikatan Highlights December 3

கொரோனா பாதிப்பு டீன் ஏஜ் பிள்ளைகளிடம் ஏற்படுத்தி உள்ள அதிர்ச்சியளிக்கும் பாதிப்பு, எடப்பாடியைக் காப்பாற்றுகிறாரா ஸ்டாலின்?, சொல்லியடித்த வேலுமணி, அதானி குழுமம் வசமான என்.டி டிவி, உறவுக்குள் விரிசலை உண்டாக்கும் 'கேஸ்லைட்டிங்' பிரச்னை, DSP விமர்சனம்!


1
covid-19

கொரோனா பாதிப்பு: முன்கூட்டியே முதுமையடையும் டீன் ஏஜ் பிள்ளைகள்!

லகையே ஆட்டுவித்து ஒருவழியாக அடங்கி உள்ள கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டுச் சென்ற தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில், கொரோனா தொற்று நோய் பரவிய காலத்தில் வாழ்ந்த டீன் ஏஜ் எனப்படும் பதின்ம வயது பிள்ளைகளுக்கு முன்கூட்டியே முதுமை ஏற்படக்கூடிய அறிகுறிகள் தெரிவதாக அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

உலகையே புரட்டிப் போட்ட கோவிட்

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உலகையே பெரும் பீதிக்குள் தள்ளிய கோவிட் -19 தொற்றுநோய், உலக அளவில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு, தொழில், வர்த்தக துறை வீழ்ச்சி, அதனால் ஏற்பட்ட வேலை இழப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவை ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் கோவிட் நோய் தாக்குதலுக்குள்ளானவர்கள் அதிலிருந்து மீண்டாலும், அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளினால் பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் பலவிதமான உடல் உபாதைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

முன்கூட்டியே முதுமை அடையும் டீன் ஏஜ் மூளைகள்

இந்த நிலையில்தான், கோவிட் காலத்தில் வாழ்ந்த டீன் ஏஜ் பிள்ளைகளின் மூளை, முன்கூட்டியே முதுமை அடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

கோவிட் காலத்தில் இந்த டீன் ஏஜ் பிள்ளைகளின் மன நலம் வெகுவாக பாதிக்கப்பட்டதால், அவர்களது கவலை மற்றும் மனச்சோர்வு அதிகரித்திருப்பதாக முன்பே ஆய்வுகள் தெரிவித்தன.

* இந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட புதிய ஆய்வில் இந்த பிள்ளைகளின் மூளை முன்கூட்டியே முதுமை அடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக 'Biological Psychiatry: Global Open Science' என்ற அமெரிக்க மருத்துவ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

* இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கோவிட் தொற்றுக்கு முன் 15 முதல் 18 வயதுடையவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் அறிக்கைகளையும்,

* தொற்றுநோய்களின் போது எடுக்கப்பட்ட அதே வயதுடைய அவர்களின் சகாக்களின் ஸ்கேன் அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்ததில் இந்த விஷயம் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

அதாவது இந்த டீன் ஏஜ் பிள்ளைகளின் மூளை, கோவிட்டுக்கு முன்பு இருந்த மூளையை விட மூன்று வயது அதிகமாக இருப்பதாகக் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

சித்திரிப்புப் படம்

பாதிக்கப்பட்ட மன நலம்

இந்த டீன் ஏஜ் பிள்ளைகள், அவர்கள் வயதுக்கு ஏற்ற தோற்றத்துடன் காணப்பட்டாலும், அவர்களின் மூளை முதுமையாக காணப்படுகிறது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான இயன் கோட்லிப் தெரிவித்துள்ளார்.

* "கோவிட் தொற்றுநோயின் போது அவர்கள் அனுபவித்த மன அழுத்தம், அவர்களின் மன ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, அவர்களின் மூளையிலும் ஏற்படுத்திய விளைவுகளையும் இது உறுதிப்படுத்துகிறது" என அவர் மேலும் கூறியுள்ளார்.

அடுத்து கொரோனாவை விட பயங்கரமான தொற்றா?

கொரோனா வைரஸ்

இதனிடையே கொரோனாவை விட பயங்கரமான தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்களும், உலக சுகாதார நிறுவனமும் (WHO) விடுக்கும் எச்சரிக்கைகள் என்ன..?

இன்னொரு தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி சொல்லும் விளக்கங்களுடன் கூடிய விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

'18 மாதங்களாக ஒரு FIR - கூட போடவில்லை!' - எடப்பாடியைக் காப்பாற்றுகிறாரா ஸ்டாலின்?

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக மாறி மாறி வரும் நீதிமன்ற அறிவிப்புகளால் 'இந்த முறை எடப்பாடியின் கை ஓங்குமா, இல்லை பன்னீரின் கை ஓங்குமா' என்கிற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டேயிருக்கிறது.

இந்த நிலையில், "விரைவில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவார் எடப்பாடியார். அவர் வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்" என அவரின் ஆதரவாளர்களும், "எடப்பாடியின் இந்தப் பாதை வளர்ச்சிக்கானது அல்ல" என எதிர்த்தரப்பினரும் மோதிக்கொள்கின்றனர்.

மேலும், "தி.மு.க-வுடன் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அனுசரணையாக இருந்துவருகிறார்" என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இக்குற்றச்சாட்டுக்கான பின்னணி, எடப்பாடியின் எதிர்காலம், அடுத்தகட்ட திட்டங்கள்தான் என்னென்ன? இது குறித்து அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கும் கருத்துகளுடன் கூடிய விரிவான கட்டுரையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
வேலுமணி

'இது எங்க ஏரியா...' - சொல்லியடித்த வேலுமணி!

2021 சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. ஆனாலும் கண்டால் வரச் சொல்லுங்கள் என்பது போலத்தான் அவர்களின் செயல்பாடு இருந்தது.

கோவை மாவட்ட அரசியலும் திமுக Vs பாஜக என்பது போல பல பஞ்சாயத்துகள் நடக்க, ஒன்றரை ஆண்டுக்கு பிறகு அதிமுக தனது வலிமையை காட்டும் வகையில் ஓர் போராட்டத்தை நடத்தியிருக்கிறது.

இது குறித்த விரிவான ரிப்போர்ட்டைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
அதானி குழுமம்

என்.டி டிவி அதானி குழுமம் வசமானது!

முன்னணி ஊடகத்துறை சார்ந்த என்.டி டிவி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் தமது பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

என்டிடிவி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் தற்போது அதானி குழுமத்திடம் சென்றுள்ளதால் இந்த முடிவினை அவர்கள் எடுத்துள்ளனர்.

இதற்கான பின்னணி காரணம், இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்படும் தாக்கம் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
கணவன் - மனைவி

உறவுக்குள் விரிசலை உண்டாக்கும் 'கேஸ்லைட்டிங்' பிரச்னை..!

ந்தேகம், கோபம், பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு தராதது, சரி... தவற்றை உணர்ந்து நடக்காதது... உறவுமுறை பிரச்னைகளுக்கு இதுபோன்று பல காரணங்கள் இருக்கின்றன.

இதில், 'கேஸ்லைட்டிங் (Gaslighting)' எனும் சிக்கல், பல உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.

கேஸ்லைட்டிங் என்றால் என்ன?

யாரெல்லாம் கேஸ்லைட்டிங்கை அதிகம் பயன்படுத்துவார்கள்?

இப்போது கவனம் பெறுவது ஏன்?

தீர்வு என்ன?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
விஜய் சேதுபதி | DSP Review

DSP Review: மற்றுமொரு டெம்ப்ளேட் காக்கிச்சட்டை சினிமா!

சாதா இளைஞன் ஊருக்குள் கெத்தாய் சுற்றும் தாதாவோடு உரசினால் என்னாகும்? கொலவெறி தாதாவை டி.எஸ்.பி-யாகி பழி தீர்க்கும் அதே அரதப்பழசான போலீஸே இந்த DSP! விஜய் சேதுபதி - பொன்ராம் கூட்டணியில் இந்த டி.எஸ்.பி வசீகரித்தானா... வதைத்தானா?

விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...