Published:Updated:

Evening Post: இபிஎஸ் திடீர் உற்சாகம்...ஏன்?-உதயநிதியைப் புறக்கணித்த சீனியர்கள்-அப்செட்டான இளையராஜா

Vikatan Highlights December 5
Listicle
Vikatan Highlights December 5

எடப்பாடியின் திடீர் உற்சாகம்... பாஜக-வின் திடீர் ட்விஸ்ட்டின் பின்னணி, மிஸ்டர் கழுகு: உதயநிதியைப் புறக்கணித்த சீனியர்கள், பாஜக-வைக் கலாய்க்கும் சுவாமி, வருமான வரி சேமிப்புக்கு 8 எளிய வழிகள்..!, ஒரு நாளில் பல முறை உறவு... சாத்தியமா?, கோலிவுட் ஸ்பைடர்: அப்செட்டான இளையராஜா...


1
எடப்பாடி பழனிசாமி - மோடி

எடப்பாடியின் திடீர் உற்சாகம்... காரணம் என்ன?

ஓ. பன்னீர் செல்வத்துடன் இணக்கமாக செல்ல வலியுறுத்தியது, பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது தனியாக சந்திக்க நேரம் தராதது உள்ளிட்ட பல காரணங்களால் டெல்லி பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் இருந்து வந்த திடீர் அழைப்பினால் உற்சாகமடைந்துள்ளார்.

எடப்பாடியின் மீது அதிருப்தி

ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓ. பன்னீர் செல்வத்துடன் ஏற்பட்ட மோதல், அதனைத் தொடர்ந்துஅதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 'அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக' தேர்ந்தெடுக்கப்பட்டது போன்றவற்றை டெல்லி பாஜக தலைமை ரசிக்கவில்லை.

* மேலும் வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒற்றுமையாக இருந்தால்தான் திமுக-வை வெல்ல முடியும் என்ற அரசியல் கணக்கு காரணமாக சசிகலா மற்றும் அமமுக தினகரன் ஆகியோரை அதிமுக-வுக்குள் சேர்க்க வேண்டும் என எவ்வளவோ வலியுறுத்தியும் அதனை அவர் உறுதியாக ஏற்க மறுத்துவிட்டார்.

* இதன் காரணமாக எடப்பாடி மீது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

அதனால்தான், மோடி அண்மையில் சென்னை வந்தபோது எடப்பாடி தனியாக சந்திக்க நேரம் கேட்டும் கொடுக்கப்படவில்லை. மேலும் எடப்பாடி ஆதரவு முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. இதன் காரணமாக சமீப காலமாக எடப்பாடி மிகவும் அப்செட்டில் இருந்தார். அதே சமயம் எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்டோருடன் இணக்கமாக செல்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

டெல்லியில் இருந்து வந்த அழைப்பு

இந்த நிலையில்தான், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறையிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

எடப்பாடி உற்சாகம்

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மற்ற மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எப்படி அழைப்பு அனுப்பப்பட்டதோ அப்படித்தான் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது என்றபோதிலும், தன்னை 'அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்' எனக் குறிப்பிட்டு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதுதான் எடப்பாடிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

மோடி, எடப்பாடி பழனிசாமி

இந்த உற்சாகத்தைத் தொடர்ந்து, மோடியைப் பாராட்டியும் அழைப்புக்கு நன்றி தெரிவித்தும் அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், " உலக அரங்கில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜி20 அமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரின் கடின உழைப்பால், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உயர்மட்ட பிரமுகர்களுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியதன் காரணமாக, ஜி20ன் தலைமைப் பொறுப்பு சாத்தியமானது. இது 130 கோடி இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளது.

ஜி20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்" எனக் கூறியுள்ளார்.

திடீர் ட்விஸ்ட்டின் பின்னணி என்ன?

இந்நிலையில், எடப்பாடியை 'இடைக்கால பொதுச்செயலாளர்'என்று குறிப்பிட்டு, மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பது தமிழ்நாடு அரசியலில் புதிய ட்விஸ்ட்-ஆக கவனிக்கப்படுகிறது.

இது எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த அங்கீகாரம் என அவரது ஆதரவாளர்கள் குதூகலமடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

திடீர் ட்விஸ்ட்டின் பின்னணி என்ன? பாஜகவின் டெல்லி தலைமையில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


2
உதயநிதி ஸ்டாலின்

மிஸ்டர் கழுகு: உதயநிதியைப் புறக்கணித்த சீனியர்கள்!

தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடந்த விழாவில் அமைச்சர்கள் பட்டாளத்தோடு பங்கேற்று, எம்.ஜி.ஆர்., ஜானகி குறித்து ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார். இதன் பின்னணி என்ன..?

தி.மு.க-வின் முப்பெரும்விழாவுக்கு இணையாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்கள் தி.மு.க-வினர்.

ஆனால், சீனியர் அமைச்சர்கள் சிலர் இதனை புறக்கணித்த நிலையில், உதயநிதிக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லப்பட்ட விஷயம்...

எம்.ஜி.ஆர் ரசிகர்களை ஈர்க்கிறதா தி.மு.க?

இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த எம்.எல்.ஏ!

சாமி அமைச்சரிடம் கெஞ்சும் உடன்பிறப்புகள்..!

மிஸ்டர் கழுகு தரும் விறுவிறுப்பான அரசியல் பின்னணி செய்திகளை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
அண்ணாமலை

"ஸ்டாலின் உறுமினால் 'மியாவ்' எனக் கத்தும் தமிழக பாஜக-வினர்!"

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, பா.ஜ.க-வை-ச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட, அவ்வப்போது மோடியையும், பா.ஜ.க-வையும் நேரடியாகவே விமர்சித்துவருகிறார். சீனாவின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில்கூட, பிரதமர் மோடியை அவர் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் தமிழக பாஜக குறித்து தனது ட்விட்ட பக்கத்தில் கூறியிருப்பதை படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
வருமான வரி

வருமான வரி சேமிப்புக்கு 8 எளிய வழிகள்..! 

டப்பு 2022-23-ம் நிதி ஆண்டு முடிவடைய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், எவற்றுக்கெல்லாம் வரிச் சலுகை உள்ளன, வரி சேமிப்புத் திட்டங்களுக்கான முதலீடு, வேலை மாறும்போது என்ன செய்ய வேண்டும், வருமான வரி கணக்கு தாக்கலுக்கான . கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்ப்பது எப்படி என்பது உள்பட

வருமான வரித் திட்டமிடலை மேற்கொள்வது தொடர்பாக நிதி ஆலோசகர் த.ராஜன் சொல்லும் 8 எளிய வழிகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
தாம்பத்ய உறவு

ஒரு நாளில் பல முறை உறவு... சாத்தியமா?

காதலிக்கும்போது கூடவே இருக்க வேன்டும், தொட்டுப் பேச வேண்டும், முத்தமிட வேண்டும் என்பது போன்ற உணர்வுகள் ஆண், பெண் மனங்களுக்குள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதே சமயம் தாம்பத்ய உறவில் இந்த உணர்வு நீடிக்குமா...?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
இளையராஜா

கோலிவுட் ஸ்பைடர்: அப்செட்டான இளையராஜா... ஏன்?

விஜயகாந்த் உடல்நிலை

விஜயகாந்த் உடல்நிலை அப்படியேதான், முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. முன்பு நல்ல நிலைக்கு வந்து உட்காரவும், நல்லபடியாகப் பேசவும் முயற்சி செய்த கேப்டன் இப்போது சோர்ந்திருப்பதாகக் கேள்வி. மூன்று மணி நேர விமானப் பயணத்துக்கு அவர் தயாரானதும், அவரை சிங்கப்பூர் வரை அழைத்துச் சென்று சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாமா என்று அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

மேலும்...

ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் கொடுக்க உள்ள அன்பளிப்பு...

அப்செட்டான இளையராஜா

அட்லியின் 'ஜவான்' படத்துக்குத் தொடரும் சிக்கல்

நெகிழ வைத்த கார்த்திக்

சந்தானத்தின் அக்கறை

என... கோலிவுட் ஸ்பைடர் தரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...