Published:Updated:

Evening Post:சூர்ய சிவா ராஜினாமா பின்னணி-சத்துணவு மையங்கள் மூடலா?கொரோனா-US காரணமா?மீண்டும் விசித்ரா

Vikatan Highlights December 6
Listicle
Vikatan Highlights December 6

பாஜக-விலிருந்து திருச்சி சூர்யா சிவா திடீர் ராஜினாமா... பின்னணி என்ன? `மூடப்படுகிறதா சத்துணவு மையங்கள்?', சென்னை: 'பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மறுசீரமைப்பு', 'கொரோனா பரவ அமெரிக்காவே காரணம்': ஆராய்ச்சியாளர் பகீர் தகவல், வேலை கிடைத்தவுடன் இளைஞர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது...


1
அண்ணாமலை | காயத்ரி ரகுராம் | சூர்யா சிவா

காயத்ரி ரகுராம்... அடுத்து கேசவ விநாயகமா..? சூர்ய சிவாவின் ராஜினாமா பின்னணி!

மிழக பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கி, கட்சியில் நடவடிக்கைக்குள்ளான திருச்சி சூர்யா சிவா, தாம் பாஜக-விலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆபாச ஆடியோ விவகாரம்

தமிழக பா.ஜ.க ஓ.பி.சி அணியின் தலைவராக இருந்த திருச்சி சூர்யா சிவா, தமிழக பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காயத்ரி ரகுராம், சூர்யா சிவாவை போலீஸார் கைதுசெய்ய வேண்டும் என்றும், கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

காயத்ரி ரகுராம் நீக்கமும் சர்ச்சையும்

இதனைத் தொடர்ந்து, " காயத்ரி ரகுராம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்" என தமிழக பாஜக தலைமை அறிவித்தது.

அதே சமயம், தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான சூர்யா சிவா மீது பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழுவினை அமைத்த அண்ணாமலை, விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை மட்டும் விதிப்பதாக அறிவித்தார்.

இது தமிழக பாஜக-வில் உள்ள அண்ணாமலைக்கு எதிராக உள்ள கோஷ்டியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காயத்ரி ரகுராமும் இதை சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.

சூர்யா சிவா

இந்த நிலையில், சூர்யா சிவாவும், டெய்சியும் "எங்களுக்கிடையேயான பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்துக் கொண்டோம். அக்கா, தம்பியாக நாங்கள் தொடர்ந்து பயணிக்க முடிவெடுத்துள்ளோம்" என கூட்டாகப் பேட்டி கொடுத்தனர்.

கேசவ விநாயகம் Vs அண்ணாமலை

இதனிடையே சர்ச்சைக்குரிய ஆடியோவில், கேசவ விநாயகத்தையும் டெய்சி சரணையும் தொடர்புபடுத்தி சூர்ய சிவா பேசியிருந்தார்.

மேலும்,

* அந்த ஆடியோ சமூக ஊடகங்களில் கசிவதற்கு முன்னரே, அதனை அண்ணாமலையிடம் டெய்சி ஒப்படைத்தும், சூர்ய சிவா மீது அண்ணாமலை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல, அவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும், ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியானதாலேயே வேறு வழியின்றி அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலை அறிவித்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும், ஏற்கெனவே கட்சியில் தனக்கு ஆதரவாக செயல்படாததாலேயே காயத்ரி ரகுராமின் பதவியை பறித்து அவரை அண்ணாமலை கட்சியிலிருந்து ஓரங்கட்டியதாக கூறப்பட்டது.

கேசவ விநாயகம்

இந்த நிலையில்,

* " பா.ஜ.க மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆர்.எஸ்.எஸ் தலைமையால் நேரடியாக நியமிக்கப்பட்டவர் என்பதால் அவர் தமிழக பாஜகவில் அதிகாரம் மிக்கவராக திகழ்கிறார்.

* கட்சி நியமனங்கள் தொடர்பாக அண்ணாமலையின் பரிந்துரைகள் சில சமயங்களில் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

* இதனால் கேசவ விநாயகம் மீது அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, அவரைக் காலி செய்ய தக்க தருணத்தை எதிர் நோக்கி இருந்ததாகவும், அதற்கேற்ப அவரது இமேஜை டேமேஜ் செய்யும் வகையில் சூர்ய சிவா பேசிய ஆடியோவை வைத்து 'கேம்' ஆடிவிட்டார்" என்றும் செய்திகள் வெளியாகின.

சூர்யா சிவாவின் ராஜினாமா பின்னணி

இந்த நிலையில்தான் சூர்யா சிவா, தாம் பாஜக-விலிருந்து திடீரென விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , " அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா சிவா ( DIXITH )

சூர்ய சிவா, தனது அறிவிப்பில் கட்சியிலிருந்து விலகுவதை மட்டும் அறிவித்திருந்தால் விவகாரம் அதோடு முடிந்திருக்கும். ஆனால்,

" வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜக-வை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும்" என்று குறிப்பிட்டிருப்பதுதான் இதில் உள்ள ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது.

" கட்சியிலிருந்து விலகுபவர் கேசவ விநாயகம் பெயரை ஏன் இழுக்க வேண்டும். இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது. சூர்ய சிவா விவகாரம் கட்சிக்கு அண்மையில் பெரிய அளவில் டேமேஜை ஏற்படுத்திவிட்டது. மேலும் இந்த விவகாரத்தைக் கையாண்ட விதத்தில் அண்ணாமலை மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதன் பின்னணியில் கேசவ விநாயகம் இருக்கலாம் என சூர்ய சிவாவும் அண்ணாமலையும் கருதுவதாலேயே, அறிக்கையில் கேசவ விநாயகத்தைக் காலி செய்யும் நோக்கத்தில் அவருக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டிருக்கலாம்" என தமிழக பாஜக-வில் உள்ள அண்ணாமலைக்கு எதிர் கோஷ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் சூர்ய சிவா ராஜினாமா குறித்து அண்ணாமலை தரப்பில் அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


2
சத்துணவு

`மூடப்படுகிறதா சத்துணவு மையங்கள்?' 

ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகள், நகராட்சி அலுவலர்களுக்கு பிறப்பித்த ஒரு உத்தரவு சத்துணவு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

"இது சத்துணவு மையங்களை மூடுவதற்கான திட்டம் என கொதிக்கின்றனர் சத்துணவு ஊழியர்கள். அந்த உத்தரவு என்ன..? இது குறித்து அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் மற்றும் இதன் பின்னணி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
போராட்டம் எதிரொலி: புறநகர் ரயில் சேவை நிறுத்தம்!

சென்னை: 'பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மறுசீரமைப்பு' - நவீன இன்ஜின், ஏசி கோச்...

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மோசமான நிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில், பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மறு சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. இதன் மூலம் நவீன இன்ஜின், ஏசி கோச் போன்ற பல்வேறு நவீன வசதிகளைப் புகுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
கொரோனா வைரஸ்

'கொரோனா பரவ அமெரிக்காவே காரணம்': ஆராய்ச்சியாளர் பகீர் தகவல்!

சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் வைராலஜி பிரிவில் விஞ்ஞானியாக வேலை செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரு ஹப் என்பவர், `வூஹானை பற்றிய உண்மைகள்’ (The Truth About Wuhan) என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.

அந்தப் புத்தகத்தில், அவர் அமெரிக்க அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
நிதி திட்டமிடல்

வேலை கிடைத்தவுடன் இளைஞர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது இதைத்தான்..!

அண்மையில் ட்விட்டர், ஃபேஸ்புக், அமேசான், கூகுள் எனப் பல நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது அடுத்த நல்ல வேலை தேடும் வரைக்கும், குடும்பத்தின் அவசிய தேவைகளை நிறைவேற்றவும் முன்கூட்டியே சில நிதி திட்டமிடல்களை மேற்கொண்டால், இதுபோன்ற சூழல்களை அதிகம் சிக்கல் இல்லாமல் கடந்து சென்று விடலாம்.

எனவே இன்றைய காலத்தில் வேலைக்குச் சேரும் இளைஞர்கள், குறிப்பாக புதிதாக வேலைக்குச் சேர வேண்டியவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து நிதி ஆலோசகர் எம்.சதீஷ் குமார் ( நிறுவனர், http://sathishspeaks.com) சொல்லும் ஆலோசனைகளுடன் கூடிய விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
விசித்ரா

" கிளாமர் எண்ணத்தை உடைக்கணும்!" - ரீ என்ட்ரி கொடுக்கும் விசித்ரா

'விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்...!' பாடலை இப்ப பிளே பண்ணினா கூட 90ஸ் கிட்ஸ் துள்ளி குதிச்சு கொண்டாட ஆரம்பிச்சிடுவாங்க. பெரும்பாலான இளைஞர்களுக்கு அந்தப் பாடலில் ஆடியிருக்கும் விசித்ரா மிகவும் பிடித்த நடிகை.

விகடன் `அப்போ இப்போ' தொடருக்காக அவரைச் சந்தித்தோம். அவர் அளித்த விரிவான பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...