Published:Updated:

Evening Post:தனுஷுக்கு முதலிடம்-தஞ்சம் தேடும் மாஜி-2 ஆண்டாக மாஸ்க்...பாதிப்பா? -பாக்யராஜின் அதகளம்!

Vikatan Highlights December 7
Listicle
Vikatan Highlights December 7

Top 10 பட்டியலில் முதலிடம்... நடிகர் தனுஷுக்கு கிடைத்த புகழ்,கிசுகிசு: தஞ்சம் தேடும் மாஜி அமைச்சர், 'ரிசார்ட்' திறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த அமைச்சர்கள், டேர்ம் இன்ஷூரன்ஸ்... 10 முக்கிய விஷயங்கள், 2 வருடமாக மாஸ்க் ...பாதிப்பு ஏற்படுமா?80 & 90ஸ்: கே. பாக்யராஜின் அதகளம்!


1
தனுஷ்

இந்தியாவின் பிரபல நட்சத்திரம் தனுஷ்... Top 10 பட்டியலில் முதலிடம்!

ந்தியாவின் பிரபல திரை நட்சத்திர பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம்பெற்றுள்ளதாக பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான IMDB (ஐஎம்டிபி) அறிவித்துள்ளது.

சர்வதேச அளவிலான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஓடிடி படைப்புகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேகரித்து வழங்கும் ஆன்லைன் தகவல் தளம் IMDB. இந்த தளத்தின் சார்பில், மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிடப்பட்டு வருகிறது.

முதலிடத்தில் தனுஷ்

அதன்படி, நடப்பு 2022 ஆம் ஆண்டின் 'டாப் 10' இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது.

* இந்த பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் தனுஷ்.

* தனுஷ் நடித்த 'தி க்ரே மேன்' ஹாலிவுட் திரைப்படம் முதல் தமிழ் திரைப்படமான 'திருச்சிற்றம்பலம்' வரையிலான அவரது சமீபத்திய வெற்றிப்படங்கள் இந்த சாதனைக்கு களம் அமைத்து கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMDB Top - 10 பட்டியல்

* சுமார் 20 கோடி பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் IMDB, தனது தளத்தின் வாராந்திர தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிப்போரை தொகுத்து பரிசீலித்ததன் அடிப்படையில், இந்த 'டாப் 10' பட்டியலை உருவாக்கி உள்ளது.

அலியா பட், ஐஸ்வர்யா ராய்

இதில் தனுஷுக்கு அடுத்தபடியாக பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். பிரம்மாஸ்திரா-1, RRR, கங்குபாய் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கிடைத்த புகழ் அலியாபட்டுக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

மூன்றாம் இடத்தை பொன்னியின் செல்வன் -1 படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் பெற்றுள்ளார். நான்காவது இடத்தை தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ராம்சரண் தேஜா பிடித்துள்ளார்.

அலியா பட்

தொடர்ந்து 5-வது இடத்தில் 'யசோதா' திரைப்படத்தில் நடித்திருக்கும் சமந்தா உள்ளார். அதற்கடுத்த 6, 7, 8, 9 மற்றும் 10 - வது இடங்களை பாலிவுட் நட்சத்திரங்களான ஹிர்த்திக் ரோஷன், கியரா அத்வானி, தெலுங்கு நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூன் மற்றும் KGF-2 படத்தில் நடித்த நடிகர் யாஷ் பிடித்துள்ளனர்.

இந்திய திரையுலகைப் பொறுத்தவரை கடந்த பல ஆண்டுக் காலமாக பாலிவுட் நட்சத்திரங்களே ஆதிக்கம் செலுத்தி, புகழிலும் செல்வாக்கிலும் முதலிடத்தை வகித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுக் காலமாகவே தென்னிந்திய திரையுலகம் இந்திய அளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக 'பாகுபலி'-க்குப் பின்னர் வந்த KGF, RRR, கமலின் 'விக்ரம் - 2' மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற Pan India படங்கள் பாலிவுட்டிலும் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது.


2
கிசுகிசு

கிசுகிசு: தஞ்சம் தேடும் மாஜி அமைச்சர்!

ட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் முக்கியப் பதவிக்கு முட்டி மோதிய ஜாம்பவான்களுக்கு மத்தியில், அசால்ட்டாக அந்த இருக்கையில் வந்து அமர்ந்தார் நான்கெழுத்து காக்கி அதிகாரி. சிட்டியில் முக்கியத்துவத்தோடு இருக்கும் இரு அதிகாரிகளை இந்த நியமனம் எச்சில் விழுங்கவைத்ததாம். 'எந்த ரூட்டில் இல்லத்தை அணுகினார்?' என விசாரித்துக்கொண்டே இருக்கிறார்களாம்.

உண்மையில் நான்கெழுத்து அதிகாரி அந்தப் பதவிக்கு பெரிய அளவில் ரூட் எடுக்கவே இல்லையாம். 'அரசியல் செய்ய மாட்டார். சட்டம்-ஒழுங்கைக் கவனிப்பதில் கைதேர்ந்தவர்' என அதிகார வட்டாரத்தில் பரவிய செய்தியைவைத்து முதன்மையானவரே அவரை நியமித்ததாகச் சொல்கிறார்கள்.

மேலும்...

காவிக் கட்சிக் கதவை தட்டிய மாஜி அமைச்சர்!

அண்ணன் தலைவரின் உற்சாகம்..!

ஆதங்கத்தில் கப்பல் தலைவரின் கட்சி நிர்வாகிகள்!

கிசுகிசு பகுதியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க....


3
அமைச்சர்கள் ஆய்வு

'ரிசார்ட்' திறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த அமைச்சர்கள்! 

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புகளின் தரம் மற்றும் அங்கு உப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நிலங்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த நிலையில், உப்பு நிறுவனத்துக்குள் சென்று முறையாக ஆய்வு செய்யாமல் பெயரளவுக்கு வெளியே நின்றிருந்தபடியே நிறுவனத்தை பார்த்து விட்டு காரில் புறப்பட்டு சென்றனர். அமைச்சர்களை நேரில் பார்த்து மனுக்களை கொடுப்பதற்காக நீண்ட நேரம் வெளியில் காத்திருந்த உப்பளத் தொழிலாளர்களையும் அவர்கள் சந்திக்காமல் சென்றது தொழிலாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மாநகராட்சி தேர்தல்: பாஜக-வை வீழ்த்திய ஆம் ஆத்மி!

டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டியில் நிலவியது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 250 வார்டுக்கும் சேர்த்து 50% வாக்குகள் பதிவாகியது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

முடிவுகளை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ்... 10 முக்கிய விஷயங்கள்!

நம்மவர்களுக்கு குடும்பத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்க டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு வந்திருக்கிறது. ஆனால், எந்த நிறுவனத்தில் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற குழப்பம் இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

மேலும், டேர்ம் பிளான் பாலிசிக்கு அதிக பிரீமியம் கட்டினால் நல்ல பாலிசியா, காப்பீடு நிறுவனம், இழப்பீட்டை சரியாகக் கொடுக்குமா, எந்த டேர்ம் பிளான் சரியாக இருக்கும் என்கிற குழப்பங்களும் காணப்படுகின்றன.

இந்த நிலையில், எந்த டேர்ம் பாலிசி எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
மாஸ்க்

2 வருடமாக மாஸ்க் ... பாதிப்பு ஏற்படுமா?

"எனக்கு அடிக்கடி சளி, ஜுரம் என ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டிருக்கும். ஆனால், கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து அந்தப் பிரச்னை கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

விடாமல் மாஸ்க் அணிந்து வருகிறேன். ஒருவேளை அதுதான் காரணமாக இருக்குமா? தொடர்ந்து மாஸ்க் அணிவது சரியா தவறா? அப்படி அணிந்து வந்தால் இம்யூனிட்டி பவர் குறையும் என்கிறார்களே..?"

சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி அளிக்கும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
இன்று போய் நாளை வா

80 & 90ஸ்: கே. பாக்யராஜின் அதகளம்! 

'திரைக்கதை மன்னர்' என்று பெயர் எடுத்திருந்த பாக்யராஜ், பெரிய மெனக்கெடல் ஏதுமின்றி இடது கையால் எழுதியது இந்தப் படத்திற்காக இருக்கலாம். படம் முழுவதும் அப்படியொரு லாஜிக் இல்லாத மேஜிக் நிகழ்ந்திருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதையை ஒரே இரவில் அவர் எழுதி முடித்தார் என்றொரு தகவல் உண்டு.

எண்பதுகளின் இளைஞர்களின் மனநிலையை, பெண்களை சைட் அடிப்பதற்காக அவர்கள் செய்யும் சேட்டைகளும் மிக இயல்பான திரைமொழியில் உருவாக்கிய பாக்யராஜ், 'இந்தப் படத்தின் நோக்கம் பொழுதுபோக்கு மட்டுமே' என்று டைட்டில் கார்டில் முன்ஜாமீன் வாங்கியிருப்பார்.

ஒரு பெண்ணிடம் அறிமுகமான அடுத்த நிமிடத்திலேயே ‘சாட்டிங்’ ‘பிளிர்ட்டிங்’ என்பது 2கே கிட்ஸுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் எண்பதுகளின் இளைஞர்களுக்கு அப்படியல்ல.

இக்கட்டுரையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...