Published:Updated:

Evening Post:'மாண்டஸ்' புயல்... முழு அப்டேட்ஸ்-'விந்தணு குறைக்கும் சோம்பு'- கார்/பைக்: மழை டிப்ஸ்

Vikatan Highlights December 9
Listicle
Vikatan Highlights December 9

கரையைக் கடக்கும் 'மாண்டஸ்' புயல்... விமானங்கள் ரத்து... எங்கெல்லாம் பாதிப்பு..?, 'மாண்டஸ் புயல்': சென்னை மாநகராட்சி அவசர உதவி எண், ஏரிகளின் நிலை என்ன?, குஜராத்: காங்கிரஸ் படுதோல்வி ஏன்?, 'விந்தணுவைக் குறைக்கும் சோம்பு...', மழை நேரங்களில் கார்/பைக் ஓட்டும்போது...


1
மாண்டஸ் | கடல் சீற்றம்

கரையைக் கடக்கும் 'மாண்டஸ்' புயல்... விமானங்கள் ரத்து... எங்கெல்லாம் பாதிப்பு..?

ங்கக்கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல் இன்று நள்ளிரவு சமயத்தில் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல், காரணமாக புதுச்சேரி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் படிப்படியாக காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது.

விமானங்கள் ரத்து

மாண்டஸ் புயல் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்கள் மீண்டும் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட விமானங்கள்

இந்த நிலையில் மாண்டஸ் புயலானது எப்போது, எங்கே கரையைக் கடக்க உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல் என்ன..? எங்கெங்கு கன மழை பெய்யும்..?

மாண்டஸ் புயலால் பெய்து வரும் தொடர் மழை, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சென்னையில் என்ன நிலை, அரசின் அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

================================

மாண்டஸ் புயல் தொடர்பான மேலும் செய்திகளைப் படிக்க கீழே உள்ள தலைப்புகளில் க்ளிக் செய்க...

மாண்டஸ் புயல்: `தேவையற்ற பயணத்தை தவிருங்கள்...' - எச்சரிக்கையாக இருப்பது எப்படி? இங்கே க்ளிக் செய்க

'மாண்டஸ் புயல்': சென்னை மாநகராட்சி அவசர உதவி எண் வெளியீடு - க்ளிக் செய்க

மாண்டஸ்: ஆர்ப்பரிக்கும் அலை... மெரினா மாற்றுத்திறனாளிகளுக்கான பாலம் சேதம்! | Photo Album க்ளிக் செய்க

'மாண்டஸ்' புயலால் அதிகரிக்கும் நீர் வரத்து: பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நிலை என்ன? க்ளிக் செய்க


2
நிதி மாநாடு...

தொழில் செய்ய உகந்த மாநிலம்: தமிழகம் 14-லிருந்து 3-வது இடத்திற்கு முன்னேற்றம்..!

ந்திய தொழிலக கூட்டமைப்பு (CII) மற்றும் நாணயம் விகடன் இணைத்து சென்னை வேளச்சேரியில் பன்னிரெண்டாவது நிதி மாநாட்டை(Financial Conclave) நடத்தியது. இந்த மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மாநாட்டில் பேசிய பழனிவேல் தியாகராஜன், "தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் 14-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்துக்கு வந்த அந்நிய முதலீடு, அதனால் உருவான வேலைவாய்ப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த அவரது பேச்சை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்: காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?!

குஜராத் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்ற கேள்வியெழுத்திருக்கிறது.

குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் முனைப்புக் காட்டின. இதனால் அந்த மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவியது. மோர்பில் பால விபத்து போன்றவற்றின் காரணமாக பா.ஜ.கவுக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவு அதை பொய்யாக்கிவிட்டது.

இந்த நிலையில், கடந்த தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி இந்த முறை வெறும் 17 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்துள்ளதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


4
ஆப்பிள் விவசாயம்

இமாச்சல பிரதேசம்: ஆட்சியை அகற்றிய ஆப்பிள்!

மாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 68 இடங்களில் காங்கிரஸ் 40 இடங்களை வென்றுள்ளது. பாஜக 25 இடங்களிலும் சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
பாலியல் தொழில் ( சித்திரிப்புப் படம் )

14,000 பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்... திடுக்கிடும் தகவல்கள்!

தெலங்கானாவின் சைபராபாத் காவல்துறைக்கு, ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடைபெறுவதாகப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சைபராபாத் காவல்துறை, சிறப்பு அதிரடிக்குழு மற்றும் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து நடத்திய சோதனை வேட்டையில் கிடைத்த தகவல்கள், காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

14,000 பெண்களுடன் மொபைல் ஆப், ஆன்லைன் பணப்பரிமாற்றம், நிர்வாண வீடியோ கால், , OYO அறைகள் என பக்கா ஹைடெக்காக இயங்கிய

இந்தக் கும்பலின் செயல்பாடுகள் குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை குறித்து முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
மழை

மழை நேரங்களில் கார்/பைக் ஓட்டும்போது... எச்சரிக்கை 'டிப்ஸ்'!

ழையில் நனைந்து கொண்டே டீ குடித்து விட்டு, பஜ்ஜி சாப்பிட்டபடி ஸ்டேட்டஸ் போட வேண்டுமானால் ஜாலியாக இருக்கலாம்; லைக்ஸ் அள்ளலாம். அதேநேரம், மழையில் பைக்ஸ் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணிப் படுத்தி எடுத்தால்… தெரியும்.

இது மாதிரிப் பிரச்னைகளைத் தவிர்க்க… மழை நேரங்களில் எப்படி வாகனம் ஓட்ட வேண்டும் என்பதைப் பற்றிய விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
சோம்பு/ மசாலா பொருட்கள்

'விந்தணுவைக் குறைக்கும் சோம்பு...' - ஆண்கள் எவ்வளவு எடுக்க வேண்டும்?

மையலில் சோம்பு பயன்படுத்துவதை விட உணவகங்களில் சாப்பிட்டு முடித்த பின் தனியே சாப்பிடுவதே மிக அதிகம். ஜீரணத்துக்கு உதவும் என்பதே சோம்பு பற்றிய நம் பொதுவான கருத்து. அதைத் தாண்டி, சோம்புவுக்கு ஆன்ட்டிகோலினெர்ஜிக் (Anticholinergic) தன்மை உண்டு. அதாவது, அதிகமாகச் சாப்பிட்டவுடன் வரும் வயிற்று வலியை இது குறைக்கிறது.

பிரசவித்த பெண்களுக்கு பால் சுரப்பை இது அதிகப்படுத்தும். எனவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தங்கள் உணவில் சோம்பு அதிகளவு சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால், ஆண்கள் சோம்பு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை... ஏன், ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து டாக்டர் அருண்குமார் சொல்லும் தகவலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...