Published:Updated:

Evening Post: உதயநிதி இலாகா என்ன?-Mr கழுகு:புலம்பும் கமல் கட்சி நிர்வாகிகள்- கனமழை எச்சரிக்கை!

Vikatan Highlights December 12
Listicle
Vikatan Highlights December 12

அமைச்சராகும் உதயநிதிக்கு ஒதுக்கப்படும் இலாகா என்ன?-26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!, மிஸ்டர் கழுகு: புலம்பும் கமல் கட்சி நிர்வாகிகள்!, "திமுக-வில் ஏற்றுக்கொள்வார்கள்..!"- திருச்சி சூர்யா நம்பிக்கை, பா.இரஞ்சித்- விக்ரம் கூட்டணியின் புதிய பாணி!


1
உதயநிதி

அமைச்சராகும் உதயநிதி...  இலாகா என்ன? 

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் நாளை மறுதினம் அமைச்சராக பதவியேற்க இருப்பதாகவும், இதற்காக கோட்டையில் அவருக்கான அறை தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலாகா என்ன?

* உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், உதயநிதி அமைச்சராவதையொட்டி தமிழக அமைச்சர்களில் சிலரது இலாகாக்கள் மாற்றியமைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

* குறிப்பாக அமைச்சர்கள் பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன், மெய்யநாதன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

* இதில் தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சரான ஐ. பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரான பெரிய கருப்பன் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்படலாம்.

* அதேபோன்று வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் சுற்றுலா துறை அமைச்சராகவும், தற்போதைய சுற்றுலா துறை அமைச்சரான டாக்டர் எம். மதிவேந்தன் வனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படலாம் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தினரின் வலியுறுத்தல்

முன்னதாக அரசியலுக்கே வரமாட்டார் எனக் கூறப்பட்ட உதயநிதி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 -ம் தேதியன்று திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே திமுக ஆட்சிக்கு வந்தால் அவர் அமைச்சராவார் என்ற பேச்சுகள் கிளம்பின. இந்த நிலையில், 2021 ல் திமுக ஆட்சியைப் பிடித்ததும் உதயநிதி அமைச்சராகாததற்கு 'வாரிசு அரசியல்' விமர்சனம் மிக பலமாக முன்வைக்கப்படலாம் என்பதால், அப்போதைக்கு அது தவிர்க்கப்பட்டது.

மேலும் தான் நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படங்கள், சினிமா விநியோக தொழிலில் காட்டி வரும் ஆர்வம் காரணமாக, குடும்பத்தினரின் வற்புறுத்தலையும் மீறி அமைச்சராவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். இந்த நிலையில், இனியும் தாமதிக்கக்கூடாது என்ற குடும்பத்தினரின் வலியுறுத்தலைத் தொடர்ந்து உதய நிதி அமைச்சர் பதவி ஏற்பது உறுதியாகி விட்டதாக தெரிகிறது.

தந்தையுன் உதயநிதி

உதயநிதி அன்று சொன்னது என்ன?

முன்னதாக 2014 ல் 'நண்பேன்டா' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், "எனக்கு அரசியலில் எப்போதும் ஈடுபாடு இருந்தது கிடையாது. சொல்லப்போனால் எனக்கு அரசியலே வேண்டாம். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்!" எனக் கூறி இருந்தார்.

அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க...

"எனக்கு இளைஞரணியா... சிரிப்புதான் வருது!"

அதேபோன்று 2013 ஜனவரியில் விகடனுக்கு அளித்த பேட்டியில் "நீங்கள் இளைஞரணி அமைப்பாளர் ஆகப்போவதாக சொல்கிறார்களே?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, "எனக்கு இளைஞரணியா... சிரிப்புதான் வருது!"என்றார்.

அந்த பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

குடும்பத்தினருடன் ஸ்டாலின்

"பிசினஸ்தான் உதயநிதி ஐடியா!"

அதேபோன்று உதயநிதியின் தந்தை மு.க. ஸ்டாலினும், 2013 ஏப்ரலில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், "அரசியலில் இஷ்டமில்லை... பிசினஸ்தான் உதயநிதி ஐடியா!" எனக் கூறியிருந்தார்.

அந்த பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இது வரும் நாளில் குறைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
கமல்

மிஸ்டர் கழுகு: 'கமல் அவ்வளவு பிஸியா..?'- புலம்பும் நிர்வாகிகள்!

தென்காசிக்குச் சென்ற முதல்வரை வரவேற்பதில் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சிவ பத்மநாதனுக்கும் லடாய் ஆகிவிட்டது. "இது ஒன்றும் கட்சி நிகழ்ச்சியில்ல... அரசு நிகழ்ச்சி... மாவட்டச் செயலாளரையெல்லாம் முன்னிலைப்படுத்த முடியாது" என்று அமைச்சர் தரப்பு கூற, "அப்படியென்றால், தலைவர் சி.எம்-மாக தென்காசி வரும்போதெல்லாம் நாங்க பக்கத்துலயே வரக் கூடாதா?" என மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் கொதித்திருக்கிறார்.

'சம்பந்தப்பட்ட மா.செ., கனிமொழி ஆதரவாளர் என்பதாலேயே இந்த ஓரங்கட்டல்' என்று ஒரு குரூப் கொளுத்திப்போட்டிருப்பதால், விவகாரம் இப்போதைக்கு ஓயாது என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு பகுதியில் மேலும்...

தேர்தல் வரும் பின்னே... ஜால்ரா ஓசை வரும் முன்னே...

அறிக்கைவிடக்கூட நேரமில்லை... கமல்ஹாசன் ரொம்ப பிஸி!

கலெக்டரை எச்சரித்த தங்கம்... 'பேக்' அடித்த எம்.எல்.ஏ!

முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
சூர்யா சிவா

"திமுகவில் என்னை ஏற்றுக்கொள்வார்கள்" - திருச்சி சூர்யா

டியோ சர்ச்சையிலிருந்து பேசுபொருளான பா.ஜ.க நிர்வாகி திருச்சி சூர்யா, இப்போது அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அதற்கு என்ன காரணம்.... பா.ஜ.க-வில் நடக்கும் உட்கட்சிப்பூசல்... போன்ற விஷயங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“தி.மு.க பாரம்பர்ய குடும்ப உறுப்பினரான நீங்கள் திடீரென்று பா.ஜ.க-வில் இணைந்தீர்கள். போன வேகத்திலேயே விலகியும் இருக்கிறீர்களே?”

“அந்த ஆடியோவில் நீங்கள் பேசியது சரியா?”

தமிழக பா.ஜ.க இரு குழுவாகச் செயல்படுகிறதா?”

நீங்கள் அடுத்து தி.மு.க-வில் சேரப்போவதாக தகவல்கள் வருகிறதே?”

பரபரப்பான கேள்விகளுக்கு திருச்சி சூர்யா அளித்த விரிவான பதில்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
ரயில்வே

``தீபாவளி வருமானம் ரூ.3 கோடி!” தெற்கு ரயில்வேயிடம் பயணிகள் எதிர்பார்ப்பது என்ன?

தீபாவளித் திருநாளை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ 2.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரயில்களைக் கொண்டு மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டது முக்கியமானது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
லிஜ்ஜட் சகோதரிகள்

லிஜ்ஜட்: முதலீடு 80 ரூபாய்... இன்று  ரூ.1,600 கோடி; எப்படி சாத்தியமனது?

ந்த ஏழு பெண்களுக்கு பெரிய அளவில் படிப்பில்லை; வசதியான குடும்பப் பின்னணியும் இல்லை. அவர்கள் கையில் இருந்தது வெறும் 80 ரூபாய்தான். அந்தப் பணத்தை முதலீடாக வைத்து, சொந்தத் தொழிலைத் தொடங்கினார்கள். இன்று அவர்கள் தொடங்கிய நிறுவனத்தின் டேர்ன் ஓவர் ரூ.1,600 கோடியாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? எப்படி இது நிஜமானது என்று பார்ப்போம், வாருங்கள்.

நம்பிக்கை இன்றி சோர்ந்து கிடக்கிறவர்களையும் துடிப்போடு எழுந்து உட்காரச் செய்யும் இந்த கதையின் தொடக்கம் 1959-ஆம் ஆண்டு. இந்தியாவில் 8% பெண்களுக்கு மட்டுமே கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த காலம் அது. அப்போதுதான், மும்பையில் சாதாரண பின்புலத்தில் வாழ்ந்து வந்த ஏழு குஜராத்தி பெண்கள், ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து, அப்பளம் விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
விக்ரம், ரஞ்சித்

கோலிவுட் ஸ்பைடர்: பா.இரஞ்சித்- விக்ரம் கூட்டணியின் புதிய பாணி!

அஜித் மகளாக நடித்தவர் இப்போ ஹீரோயின் அவதாரம்!

'விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், இப்போது கதாநாயகியாகிவிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார்.

மலையாளத்தில் பேசப்பட்ட 'கப்பேலா', தெலுங்கில் 'புட்டபொம்மா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. 'கப்பேலா'வில் அன்னாபென் நடித்த ரோலில் அனிகா நடிக்கிறார். தமிழில் ஹிப்ஹாப் ஆதியின் ஜோடியாகிறார். அந்தப் படத்தை 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.

கோலிவுட் ஸ்பைடரில் மேலும்...

'விஜய் 67' படத்தின் டைட்டில் அறிவிப்பு!

பா.இரஞ்சித்- விக்ரம் கூட்டணியின் புதிய பாணி!

மீண்டு எழும் ஆஸ்கார் பிலிம்ஸ்!

சாண் போனால் முழம் சறுக்கும் கார்த்திக் முயற்சி!

அன்று ஜெய்சங்கர்... இன்று யோகிபாபு!

முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...