Evening Post:உதயநிதி: அதிவேகமா?-அமைச்சரானதில் துர்காவின் பங்கு!வரிவரம்பு உயருமா?காசியும் தமிழகமும்!

உதயநிதியின் வளர்ச்சியில் 'அதிவேகம்' காட்டுகிறதா திமுக?- உதயநிதி அமைச்சரானதில் துர்காவின் பங்கு, மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சம் ஆகுமா?, காசியும் தமிழகமும்! - சுவாரஸ்ய தகவல்கள், SIP முதலீட்டுக்கு எது பெஸ்ட்?மூன்று முகம்: 80 & 90ஸ் தமிழ் சினிமா!

உதயநிதியின் வளர்ச்சியில் 'அதிவேகம்' காட்டுகிறதா திமுக?
தீவிர அரசியலுக்கு வந்து நான்காண்டுகள், எம்.எல்.ஏ ஆன 19 மாதங்களிலேயே அமைச்சராக அவதாரமெடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இது குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், கட்சியில் ஜூனியர் லெவலில் உள்ளவர்களெல்லாம் அமைச்சராவது குறித்து தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் வெளிப்படுத்திய குமுறல்களைப் பார்க்கும்போது, உதயநிதியின் வளர்ச்சியில் கட்சித் தலைமை அதிவேகம் காட்டுகிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
குமுறி தீர்த்த ஆர்.எஸ்.பாரதி
மறைந்த முன்னாள் திமுக. எம்.பி. ஜின்னாவின் படத்திறப்பு விழா, கடந்த டிசம்பர் 4 -ம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது.
திமுக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சியின் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி , "தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நான், ஜின்னா போன்றவர்கள் கட்சியில் பொறுமையாக இருந்தோம்.
* எனக்கு 69 வயதில்தான் எம்.பி பதவி கிடைத்தது. ஜின்னாவுக்கு 70 வயதில்தான் எம்.பி. பதவி கிடைத்தது.
* அதே சமயம் நாங்க கொண்டு வந்து சேர்த்தவன் எல்லாம் மந்திரியாகிட்டான், எம்.பி. ஆகிட்டான். அதுவேறு விஷயம்.
* எங்களுக்கு காலதாமதமாகத்தான் பதவி வந்தது. காரணம், ஒரே கொடி, ஒரே தலைவர் என்று பொறுமையாக இருந்த காரணத்தினாலும், என்றாவது ஒரு நாள் பதவி வந்தே சேரும் என்பதாலும்தான்.
இன்று வந்திருக்கும் இளைஞர்கள் எல்லாம், நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம், பதவி கிடைக்கவில்லை, எங்களை எல்லாம் ஒதுக்கிட்டாங்க என்கின்றனர். ஒதுக்குவாங்க; அப்படித்தான் நடக்கும்.
* அதையெல்லாம் ஜீரணித்துதான் இந்த கட்சியில் இருக்க வேண்டும்.
கடைசிவரை திமுகவின் தொண்டன் என்று சொல்வதுதான் பெருமையே தவிர, வேறு பெருமை இல்லை" எனப் பேசி இருந்தார்.
எதனால் அப்படி பேசினார்?
உதயநிதியை அமைச்சராக்குவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் கடந்த ஒரு மாத காலமாகவே முதல்வர் ஸ்டாலின் விவாதித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'ஆர்.எஸ்.பாரதி யாருடைய ‘ஸ்லீப்பர் செல்’?' என்று கேள்வியுடன் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது.
தனது மகன்களில் ஒருவரான சாய் லட்சுமிகாந்துக்கு கட்சியில் கவுன்சிலர் சீட் கேட்டு, அது கிடைக்காமல் போனது, தன்னை மீண்டும் மாநிலங்களவை எம்.பி-யாக்காதது மற்றும் திமுக தரப்பில் இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் தொடரப்படும் வழக்குகளில் திமுகவின் மாநிலங்களவை எம்.பி-யான வில்சன் முன்னிலைப்படுத்தப்படுவது போன்றவை ஆர்.எஸ்.பாரதிக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையிலேயே, மேலும் பொறுக்க முடியாமல் அவர் இவ்வாறு பேசி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

உதயநிதிக்கு வாழ்த்து
இருப்பினும், உதயநிதி இன்று அமைச்சராக பதவியேற்றதை வரவேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, " திமுக மூத்த தலைவர்கள் முதல் கடைசி தொண்டர்கள் வரை எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இன்று நடைபெற்றது. உதயநிதியை அமைச்சராக நியமித்த கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கழக தோழர்கள் சார்பிலும், மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தின் தலை சிறந்த அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்கிற முழு நம்பிக்கை என்னைப் போன்றவர்களுக்கு இருக்கிறது. அவர் அரசியலிலே காலடி வைத்த நாள் முதல் வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்து வருகிறார். தொடர்ந்து எல்லா வெற்றியும் அவருக்கு கிடைக்கும். தமிழகத்துக்கு அது பயன்படும்" எனக் கூறினார்.
உதயநிதியின் வளர்ச்சியில் 'அதிவேகம்' காட்டுகிறதா திமுக?
இந்த நிலையில் உதயநிதியின் வளர்ச்சியில் திமுக தலைமை அதிவேகம் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன... அது உண்மைதானா..?
இது தொடர்பான விமர்சனங்கள், அதற்கு திமுக தரப்பில் சொல்லப்படும் விளக்கங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

"ஒரு தாயின் சபதம்" - உதயநிதி பதவியேற்பில் துர்காவின் பங்கு
"அமைச்சர் பதவியையே விரும்பாத உதயநிதியை சம்மதிக்க வைத்து, சீனியர்களை சரிகட்ட வைத்து, குடும்பத்திற்குள் எழுந்த குமுறல்களை சாந்தப்படுத்தி, ஒரு அரசியல் அத்தியாயத்தை புதிதாக எழுதியிருக்கிறார் உதயநிதியின் தாயாரான துர்கா ஸ்டாலின்" என்கிறார்கள் விவரமறிந்த மூத்த அமைச்சர்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன்தான் உதயநிதியின் பட்டாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே உதயநிதி அமைச்சரானது எப்படி..?
விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
சினிமா, அரசியல் என்ட்ரி... ஒற்றை செங்கல் பிரசாரம் டு அமைச்சர்... உதயநிதியின் கிராஃப்!
விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
"இனி நடிக்க மாட்டேன்; மாமன்னன் கடைசி" - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சம் ஆகுமா?
2023-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், அடிப்படை வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

காசியும் தமிழகமும்! - சுவாரஸ்ய தகவல்கள்...
ஏழு புண்ணிய நகரங்களில் மூத்தது காசி. காசிக்கு அடையாளம் கங்கை. பரந்துவிரிந்து ஓடும் கங்கைத் தாய் சகலரின் பாவங்களையும் தான் ஏற்றுக் கொள்பவள். வருணா, அசி என்ற இரு ஆறுகள் ஓடுவதால் இது வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது.
காசி வெறும் கோயில் நகரம் மட்டுமல்ல, அது நம்முள் ஆன்மிக விழிப்பை ஏற்படுத்தும் ஒரு உன்னதத் தலம். அங்கு நம்ப முடியாத பல ஆச்சர்யங்கள் உள்ளன. அங்கு எப்போதும் சிவசக்தி அதிர்வுகள் வெளியாகிக் கொண்டே இருப்பதால் தியானமும் யோகமும் எளிதில் வசப்படும் என்கிறார்கள்.

Tamil Thalaivas: 'இனிதான் ஆரம்பம்!'- சரித்திர வெற்றியைப் பெற்ற தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி 9 ஆவது சீசன் எலிமினேட்டர்-2 சுற்றில் தமிழ் தலைவாஸ் யுபி யோதா அணிகள் மோதின. டை பிரேக்கரில் 6-4 என வென்று தமிழ் தலைவாஸ் முதன்முறையாக அரையிறுதிக்குச் சென்று வரலாறு படைத்திருக்கிறது.
புரோ கபடி வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக நடந்த டை பிரேக்கரில் தமிழ் தலைவாஸ் வென்று புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது.

தினசரி, வாரம், மாதம்... எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு எது பெஸ்ட்?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில் பலரும் சமீப காலமாகக் கேட்கும் கேள்வி, தினசரி எஸ்.ஐ.பி, வாராந்தர எஸ்.ஐ.பி, மாதாந் தர எஸ்.ஐ.பி - இதில் யாருக்கு, எது சிறந்தது என்பதுதான்.
இந்த கேள்விக்கு, பிபின் ராமச்சந்திரன் (ரிசர்ச் அனலிஸ்ட் - Primeinvestor.in) சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

மூன்று முகம்: ரஜினியை டாப் ஹீரோவாக்கிய அலெக்ஸ் பாண்டியன்!
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்டம்
ரஜினியை ‘முன்னணி ஹீரோ’ என்கிற அந்தஸ்திற்கு உயர்த்திய முக்கியமான படங்களுள் ஒன்று ‘மூன்று முகம்’. யெஸ். ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்கிற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில், கம்பீரமும் ஸ்டைலும் கலந்து ரஜினி நடித்த இந்த அட்டகாசமான கேரக்டரை எவராலும் மறக்க முடியாது.
1982-ல் வெளியான இந்தத் திரைப்படம் வணிகரீதியான வெற்றியைப் பெற்றதோடு, இந்தியிலும் ரஜினியை வைத்து ரீமேக் செய்யப்பட்டது.