Published:Updated:

Evening Post:ஜெ.பாணியில் எடப்பாடி?, அரசியலை நோக்கி விஜய்?கழுகார் அப்டேட்ஸ்- ஸ்மார்ட்போன் பாதிப்பு!

Vikatan Highlights December 15
Listicle
Vikatan Highlights December 15

ஜெயலலிதா பாணியை கையிலெடுக்கிறாரா எடப்பாடி?, உதயநிதி பதவியேற்பில் துரைமுருகன் அடித்த கமென்ட், அரசியல் பாதையை நோக்கி நகர்கிறாரா விஜய்?!, கழுகார் அப்டேட்ஸ், 'ஸ்மார்ட்போனால் தம்பதியர் உறவில் விரிசல்', மிஸ்டர் மியாவ்: வெற்றி நடிகரின் அன்பில் 'திலக' நடிகை!


1
எடப்பாடி பழனிசாமி

'அட்டாக் அறிக்கை ' : ஜெயலலிதா பாணியை கையிலெடுக்கிறாரா எடப்பாடி ?

மிழக அரசியலில் 'அறிக்கை அரசியல்' செய்வது ஒன்றும் புதிதானதல்ல. எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்கு அதுவும் ஒரு வகையான உத்தியாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என்றாலும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி அதை திடீரென இன்று கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, அவர் ஜெயலலிதா பாணியைக் கையிலெடுத்துள்ளாரோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கருணாநிதியின் செயல்பாடு

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதி, ஆட்சியில் இல்லாத காலகட்டங்களில் ஓர் எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய பணி வெகு சிறப்பாகவே பார்க்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், ' திமுக ஆளும் கட்சியாக இருக்கும்போதை விட எதிர்க்கட்சியாக வெகு சிறப்பாகவே செயல்படும்' என அரசியல் விமர்சகர்கள் கூறுவதுண்டு. அந்த அளவுக்கு ஆளுங்கட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், கண்டனக் கூட்டம் என நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்.

இவை தவிர செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கும் குறைவிருக்காது. அறிவாலயம் சென்றால் ' தலைப்பு செய்தி'க்கான 'கன்டன்ட்'டுடன் ( content) வரலாம் என நம்பிக்கையுடன் செல்வார்கள் செய்தியாளர்கள். கருணாநிதியும் அவர்களை ஏமாற்ற மாட்டார். இது தவிர சென்னை தவிர்த்த பிற ஊர்களுக்குச் சென்றாலும், தலைப்புச் செய்தி போடும் அளவுக்கு நிச்சயம் 'கன்டன்ட்' கொடுத்து விடுவார்.

கருணாநிதி

இதுபோக ஆளும் அரசின் அன்றாட செயல்பாடுகளை ஸ்கேன் செய்தும், கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டியும் கருணாநிதியிடமிருந்து அறிக்கை வரத் தவறாது. அதிலும் அவர் விடுக்கும் 'கேள்வி - பதில்' பாணி அறிக்கை, அவர் சுட்டிக்காட்ட நினைக்கும் பிரச்னையை மிக எளிதாக மக்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிடும். இதற்கு அரசிடம் இருந்து பெரும்பாலும் உடனடி ரியாக்சன் வெளிப்படும். விளக்கமோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படும்.

இவையெல்லாம் போக சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்கள், குற்றச்சாட்டுகள் தனி. என்றாலும், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டங்களில், ' தம்மை அவமரியாதையாக பேசுவார்கள் எனக்கூறி கருணாநிதி பெரும்பாலும் சட்டமன்றத்துக்கு செல்வதை தவிர்த்துவிட்டார்.

ஜெயலலிதா பாணி வேறு

கருணாநிதியின் பாணி இதுவென்றால், ஜெயலலிதா எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டங்களில் செய்தியாளர்களைச் சந்திப்பது என்பது மிக அரிதான ஒன்றாகவே இருக்கும். கருணாநிதியைப் போன்றே எதிர்க்கட்சியாக இருந்தபோது பெரும்பாலும் சட்டமன்றத்துக்கு செல்வதை தவிர்த்துவிட்டார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான் 3 அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே முக்கிய மாவட்டங்களில் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தி அரசுக்கு எதிரான கருத்துகளை ஆவேசமாக வெளியிடுவார். அதே சமயம் மாநிலம் முழுவதும் நடக்கும் பிரச்னைகளை வரிசையாக பட்டியலிட்டு, வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது திமுக அரசை காய்ச்சி எடுத்து, கண்டன அறிக்கைகள் வருவதில் குறைச்சலே இருக்காது. ஊடகங்கள் மூலமாக அவை மக்களின் கவனத்துக்கு செல்லும் என்பதால் அரசு தரப்பில் உடனடி விளக்கங்கள், மறுப்புகள் வரும்.

ஜெயலலிதா | அதிமுக

எடப்பாடியின் திடீர் மாற்றம்

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு பின்னர் நடந்த பரபரப்பான அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர் முதல்வராகி, அதிமுகவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பாணியில் பெரும்பாலும் அறிக்கைகள் விட்டதில்லை.

எதுவானாலும் செய்தியாளர்கள் சந்திப்பில் மிக சகஜமாக பேசி விடுவார். அதேபோன்று பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களிலும் அவர் சோடை போனதில்லை. திமுகவை வாங்குவாங்கென்று வாங்கிவிடுவார்.

2021 ல் திமுக-விடம் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சித் தலைவரான பின்னரும் இதே அணுகுமுறை தொடர்ந்த நிலையில்தான், திமுக அரசைக் கண்டித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை ஜெயலலிதா பாணியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சில சமயங்களில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்னையை மட்டுமே முன்வைத்து அறிக்கை வெளியிட்டு வந்த எடப்பாடி, இன்று வெளியிட்டுள்ள அறிக்கை அதிலிருந்து மாறுபட்டதாக உள்ளது.

திராவிட மாடல் ஆட்சி, சட்டம் ஒழுங்கு நிலை, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காசங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பிரச்னை, சென்னையில் நடக்கும் கஞ்சா வியாபாரம், ராமநாதபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு, குடும்ப அரசியல்..." எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி, முதல்வர் ஸ்டாலினை 'பொம்மை முதல்வர்' என மிக காட்டமாக விமர்சித்துள்ளதைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. எனவே வரும் நாட்களில் எடப்பாடியின் 'அறிக்கை அரசியலும்' தீவிரமாகலாம்.

எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அந்த அறிக்கையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
உதயநிதி ஸ்டாலின்

துரைமுருகன் அடித்த கமென்ட்... உதயநிதி பதவியேற்பு சுவாரஸ்யங்கள்!

தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழா முதல் தலைமை செயலகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது வரை பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறி இருக்கிறது.

துரைமுருகன் அடித்த கமென்ட் உட்பட உதயநிதி பதவியேற்பில் நடந்த மேலும் பல சுவாரஸ்யங்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
விஜய்

அடிக்கடி ரசிகர்களுடன் சந்திப்பு - அரசியல் பாதையை நோக்கி நகர்கிறாரா விஜய்?!

சினிமாவில் ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்த நடிகர் விஜய், பின்னாளில் தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாகப் பரிணாம வளர்ச்சி கண்டார். முன்னதாக, "என்னை தாலாட்ட வருவாளோ.. நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ..."என்று பாடும் 'லவ்வர் பாய்' ஹீரோவாக வலம் வந்தார். பிறகு ஆக்க்ஷன் படங்களின் தெறிக்கவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், பல சீனியர் நடிகர்களுக்கு ஏற்பட்ட அரசியல் ஆசை நடிகர் விஜய்க்கும் தொற்றிக்கொண்டது என்கிறார்கள். அதனால்தான் அவர் சமீப காலமாக ரசிகர்களைத் தொடர்ந்து சந்தித்து வருவதாக சொல்கிறார்கள்.

அரசியல் பாதையை நோக்கி நகர்கிறாரா விஜய்...? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: மன்னிப்புக் கேட்டு அகற்றிய உதயநிதி!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...

கீதா ஜீவனின் `அடடே' அரசியல்!

" பா.ஜ.க-வில் தி.மு.க கவுன்சிலர்களைச் சேரவிடாமல் தடுத்ததோடு, மாநகராட்சி கவுன்சிலர்களெல்லாம் என் பக்கம்தான் என்பதைத் தன் மேயர் தம்பிக்கும் உணர்த்திவிட்டார் அமைச்சர்" என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

கழுகார் அப்டேட்ஸில் மேலும்...

மன்னிப்புக் கேட்டு அகற்றிய உதயநிதி!

ட்விட்டரில் பொங்கிய டி.ஆர்.பி.ராஜா...

கமலாலயத்தில் குவியும் புகார்கள்!

மதுரையிலும் எதிர்க்கோஷ்டி... கடுப்படித்த மாஜி காக்கி!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
கணவன் - மனைவி

'ஸ்மார்ட்போனால் தம்பதியர் உறவில் விரிசல்' - ஆய்வு சொல்வதென்ன? 

ன்றைய டிஜிட்டல் உலகில் `ஸ்மார்ட்போன்' இல்லாமல் ஓர் அணுவும் அசைவதில்லை. நமக்கு பல வகைகளில் அவை உதவியாக உள்ளன. அதே நேரம், அதீத ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் உறவுகளில் சிக்கல் ஏற்படுவதாக, குறிப்பாக இந்தியாவில் தம்பதிகளில் 88% பேரின் உறவுச்சூழல் பாதிப்பு அடைவதாக ஆய்வு கூறுகிறது.

அதிர்ச்சி அளிக்கக்கூடிய இந்த ஆய்வு முடிவுகள் குறித்த மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு

மார்ச் 31 கடைசிநாள்: பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி? 

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது தாமதக் கட்டணத்துடன் இணைக்கபடுவதற்கும் மார்ச் 31-ம் தேதி கடைசியாகும். ஆதாருடன் இணைக்கப்படாத பான் 1.4.2023 முதல் செயலிழந்துவிடும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்த வருமான வரித்துறையின் முழுமையான அறிக்கை, பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
ஜான்வி கபூர்

மிஸ்டர் மியாவ்: வெற்றி நடிகரின் அன்பில் 'திலக' நடிகை!

மீபத்தில் ரிலீஸான விளையாட்டுப் படம் நல்ல வசூலைக் குவித்திருக்கிறது. ஆனாலும், படத்தின் நாயகன் எதிர்பார்த்த லாபம் இன்னும் பெரிதாம்.

மிஸ்டர் மியாவில் மேலும்....

வெற்றி நடிகரின் அன்பில் 'திலக' நடிகை!

தொடரும் 'வணங்காத ' பஞ்சாயத்து!

ஸ்டைலிஷான இயக்குநரின் அலப்பறைகள்!

படிக்க இங்கே க்ளிக் செய்க...