Evening Post:'தலித் துணை முதல்வர்':ஸ்டாலினால் முடியுமா?-எந்தகட்சியில் வாரிசு அதிகம்?Avatar:விமர்சனம்

'தலித் துணை முதல்வர்'... பாஜக கோரிக்கை... ஸ்டாலினால் முடியுமா?, தமிழக அரசியலில் வாரிசுகள் அதிகம் எங்கே?!, அமைச்சரவையில் உதயநிதிக்கு ஏன் 10-வது இடம்?!,2022: ஸ்விக்கி உணவுகளில் எது முதலிடம்?, ஒன்றுக்கும் மேல் கிரெடிட் கார்ட் சரியா?, Avatar: விமர்சனம்

'தலித் துணை முதல்வர்': ஸ்டாலினால் முடியுமா?
இந்தியாவில் தமிழ்நாடுதான் 'சமூக நீதியின் தொட்டில்' என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றன திராவிட கட்சிகள். ஆனால், இந்தியாவில் உச்சமாக சாதிய தீண்டாமை தலைவிரித்தாடும் உத்தரப்பிரதேசத்தில் கூட தலித் வகுப்பைச் சேர்ந்த மாயாவதி நான்கு முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்துவிட்டார்... இங்கு அது இன்னும் தொலைதூர கனவாகவே இருக்கும் சூழலில்தான், "பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும்" என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி இருக்கிறார் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவரும் எம்.எல்.ஏ-மான வானதி சீனிவாசன்.
'தலித் விரோத கட்சி'
வானதியின் இந்த கோரிக்கைக்குப் பின்னால் திமுக-வை 'கார்னர்' செய்யும் அரசியல் இல்லாமல் இல்லை. முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரது மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் வலுவாக காலூன்ற துடிக்கும் பாஜக, அதற்காக பல்வேறு வியூகங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த 2020 ஆம் ஆண்டில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கிளம்பிய சர்ச்சையின்போது, அந்த பிரச்னையை மிகத் தீவிரமாக கையிலெடுத்து, 'திமுக ஒரு தலித் விரோத கட்சி' என்பது போன்ற பிரசாரத்தை மேற்கொண்டது.
அந்த பிரசாரத்துக்கு வலு சேர்க்கும் விதமாக பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முரசொலி அறக்கட்டளைக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி, அதன்பேரில் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு வந்த நிகழ்வெல்லாம் அரங்கேறியது.

'திமுகவில் தலித் தலைவர் சாத்தியமா?'
அந்த சமயத்தில் தமிழக பாஜக தலைவராக தலித் வகுப்பைச் சேர்ந்த எல். முருகன் நியமிக்கப்பட்ட நிலையில், " சமூக நீதியின் முன்னோடி தாங்கள்தான் என்று பெருமையடித்துக் கொள்கிறது திமுக. ஆனால் அந்த கட்சி உண்மையில் தலித்துகளை மூளைச் சலவை செய்து ஏமாற்றி வருகிறது. அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்களில் பெரும்பாலானோர் தலித் விரோதிகள்தான். ஆனால் எங்கள் கட்சியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த எல். முருகனை மாநில தலைவராக்கி உள்ளார் மோடி. இதுதான் உண்மையான சமூக நீதி... திமுகவில் இது நடக்குமா..? " என அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், திமுக தரப்பில் இக்குற்றச்சாட்டு கடுமையாக மறுக்கப்பட்டது. "தலித்துகளுக்கு அண்ணா, கலைஞர் கால ஆட்சிகளில் ஏராளமான நன்மைகளைச் செய்தது திமுகதான். 1969 ல் கருணாநிதி முதலமைச்சரானவுடன் குடிசை மாற்று வாரியம் மூலம் தலித்துகளுக்கு இலவச கான்க்ரீட் வீடுகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தினார். அவரது ஆட்சியில்தான் சமத்துவபுரம் உருவானது.
அம்பேத்கர் பெயரில் சட்டப்பல்கலைக்கழகம் தொடங்கியது அவர்தான். இதுபோன்று இன்னும் ஏராளமாக சொல்லலாம். அதேபோன்று தலித் வகுப்பைச் சேர்ந்தவருக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கவில்லை என்பதையும் ஏற்க முடியாது. தலித் வகுப்பைச் சேர்ந்த அ. ராசாவுக்கு, மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த் தொலைதொடர்பு இலாகாவை வாங்கிக்கொடுத்தது அவர்தானே..? அது மட்டுமல்லாமல் ராசாவுக்கு எதிரான 2ஜி ஊழல் குற்றச்சாட்டில் திமுக மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தபோதும், ராசாவை 'திமுகவின் தகதகாய சூரியன்' என அழைத்து கடைசி வரை அவருக்கு அரணாக நின்று பாதுகாத்தவர்தான் கருணாநிதிதான்.

எல். முருகனை தமிழக தலைவராக நியமித்ததைப் பெரிதாக பேசுகிறார்கள் பாஜக-வினர். தமிழகம் பாஜக-வுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலம். மற்ற செல்வாக்குள்ள மாநிலங்களில் அந்த கட்சி தலித் ஒருவரை தலைவராக நியமிக்குமா?" என்று திமுகவினர் அப்போது கேள்வி எழுப்பி இருந்தனர்.
அமைச்சரவையில் தலித்துகளின் நிலை
அதே சமயம் 2011 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி ஒன்றில், " தமிழக அமைச்சரவைகளில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு
* எப்போதுமே ஆதி திராவிடர் நலத்துறை அல்லது கால்நடைத்துறை போன்ற முக்கியத்துவம் இல்லாத இலாகாக்களே வழங்கப்படுகின்றன.
* இது ஒருவகையான அரசியல் பாகுபாடும், மறைமுகமான தீண்டாமையும்தான். அதேபோன்று பொது தொகுதிகளிலும் தலித் வகுப்பினர் வேட்பாளராக நிறுத்தப்படுவதில்லை" எனக் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலை இன்றளவும் நீடிக்கிறது என்பதில் மாற்றமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஸ்டாலினால் முடியுமா?
இத்தகைய நிலையில்தான், "பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும்" என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி இருக்கிறார் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவரும் எம்.எல்.ஏ-மான வானதி சீனிவாசன்.

வானதி கோரிக்கையின் பின்னணியில் அரசியல் ஆதாய நோக்கம் இருந்தாலும், அவரது கோரிக்கை திமுகவால் நிராகரிக்க முடியாத ஒன்றுதான்.
* ஆனால் கட்சி பதவிகளிலும், அமைச்சரவையிலும் சாதிய படிநிலையில் பட்டியலின வகுப்புக்கு மேல் இருப்பவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
* மேலும், தலித் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் நீடிப்பதற்கே போராடும் நிலைதான் இன்றைய எதார்த்தம்.
இப்படியான ஒரு சூழலில் வானதி சீனிவாசனின் கோரிக்கையை செயல்படுத்துவது முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த அளவுக்கு சாத்தியமானது...? அதை செயல்படுத்தி பார்க்கும் துணிச்சல் அவருக்கு உண்டா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!
வானதி சீனிவாசன் அறிக்கையை படிக்க...
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க கோரி வானதி சீனிவாசன் விடுத்த அறிக்கையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க....

திமுக Vs அதிமுக - தமிழக அரசியலில் வாரிசுகள் அதிகம் எங்கே?!
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கப் போகிறார் என்கிற செய்தி வெளியானதிலிருந்து, தமிழகத்தில் வாரிசு அரசியல் குறித்த விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கின.
தமிழகத்தில் வாரிசு அரசியல் சகஜமாகிவிட்டதா, திமுக, அதிமுக இரண்டு கட்சியில் எங்கு வாரிசுகள் அதிகம்? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு ஏன் 10-வது இடம்?!
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் போது, ஆளுநருடன் அமைச்சர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு அமைச்சர்கள் 34 பேரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தில் சீனியர்கள் நின்றிருக்க அமைச்சர் உதயநிதி அமர்ந்திருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது.
அமைச்சர்கள் பட்டியல் வரிசையில் 10-வது இடம் உதயநிதிக்கு வழங்கப்பட்டதே இதற்கு காரணம் எனச் சொல்லப்படும் நிலையில், அவருக்கு ஏன் அந்த இடம் வழங்கப்பட்டது என்பது குறித்து விவரமறிந்தவர்கள் சொல்வது என்ன..?

2022: ஸ்விக்கியில் வாங்கிய உணவுகளில் எது முதலிடம்?
ஒவ்வோர் ஆண்டும், ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (Swiggy), மக்கள் தங்களிடம் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பற்றிய தகவல்களை வெளியிடும். அந்த வகையில் இந்த 2022-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளைப் பற்றிய தகவல்களை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.
இதில் எந்தெந்த உணவுகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டன என்பது குறித்து ஸ்விக்கி வெளியிட்டுள்ள பட்டியலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

ஒன்றுக்கும் மேல் கிரெடிட் கார்ட் வைத்துக்கொள்வது சரியா?
கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் பலரும், ஆஃபர் போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்ட்களை வைத்துக்கொள்கின்றனர். இது சரியா... இதனால் பாதிப்புகள் உண்டா...?

அடிக்கடி சளி, காய்ச்சல்... நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்குமா?
ஜூரம், சளி, தலைவலியெல்லாம் வந்தால் தடுக்கக்கூடாது. அதெல்லாம் வந்தால்தான், நம்முடைய நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் என்கிறார்கள். இதில் உண்மை இருக்கிறதா?
கோவையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஆதித்யன் குகன் இது குறித்து அளித்த பதிலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

Avatar: The Way of Water விமர்சனம்: மீண்டும் சாதிக்கிறாரா ஜேம்ஸ் கேமரூன்?
2009-ம் ஆண்டு வெளியான `அவதார்' அதுவரை இல்லாத புதிய தொழில்நுட்பங்களை சினிமாவுக்குள் புகுத்தியது. மோஷன் கேப்சரிங், 3டி தொழில்நுட்பம் என இரண்டிலுமே உச்சத்தைத் தொட்ட படைப்பாக, பட்டி தொட்டி எங்கும் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்தது.
தற்போது அதன் இரண்டாம் பாகமான `அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தை எடுத்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்த முறையும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வெற்றி பெறுகிறாரா?