Evening Post:அரசுப் பள்ளிக்கு உதவும் திட்டம் தொடக்கம்-அண்ணாமலை:சீனியர்கள் அட்வைஸ்-Credit cardதவறுகள்

அரசுப் பள்ளிகளுக்கு உதவும் திட்டம் தொடக்கம்,செந்தில்பாலாஜி vs அண்ணாமலை - ட்விட்டரில் தெறிக்கும் 'வாட்ச் அரசியல்', அண்ணாமலைக்கு சீனியர்கள் அட்வைஸ் .. ஏன்?,fifa: கனவை நிஜமாக்கிய மாவீரன் மெஸ்ஸி, கிரெடிட் கார்டு.. நீங்கள் செய்யும் 9 தவறுகள், விஜய்சேதுபதி திடீர் 'ஸ்லிம்' ரகசியம்!

'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' - அரசுப் பள்ளிகளுக்கு உதவும் திட்டம் தொடக்கம்!
தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளுக்கு உதவ விரும்பும் முன்னாள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் அரசுப் பள்ளிகள்
தமிழகத்தில் நகரம் தொடங்கி குக்கிராமங்கள் வரை தமிழகமெங்கும் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து இன்று நல்ல நிலையில் உள்ளவர்கள் இந்தியாவின் பல நகரங்களில் மட்டுமல்லாது, உலகமெங்கும் உள்ளனர்.
அவர்களை நல்ல நிலைமைக்கு உயர்த்திய அரசுப் பள்ளிகளில் பல இன்னும் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் உள்ளன. குறிப்பாக சுகாதாரமான கழிப்பறைகள் என்பதுதான் மிகப்பெரிய தேவையாக உள்ளது.
இது தவிர பள்ளிக்கான சுற்றுச்சுவர் கட்டுதல், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், அறிவியல் பாடங்களுக்கான ஆய்வுக்கூட வசதிகள், கணினிகள், நூலகங்கள் போன்ற தேவைகளும் உள்ளன.
என்னதான் அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும், அந்த நிதி அனைத்து அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த போதுமானதாக இல்லை.
உதவ விரும்பும் முன்னாள் மாணவர்கள்
இந்த நிலையில், அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அங்கு படித்து இன்று நல்ல நிலைமையில் உள்ள முன்னாள் மாணவர்களும் உதவலாமே என்ற குரல்கள் அடிக்கடி எழுகின்றன.
அதே சமயம், பல அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தங்களது சொந்த ஊர்களுக்கு வரும்போது, பழைய நினைவுகளுடன் தாங்கள் படித்த அரசுப் பள்ளிக்குச் சென்று பார்வையிடுகின்றனர்.
அப்போது தாங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டுக்காக ஏதாவது உதவி செய்து கொடுக்கின்றனர். இன்னும் சிலர் யாரை சந்திப்பது என்பதுபோன்ற குழப்பங்களால் செய்ய நினைக்கும் உதவிகளைச் செய்யாமல் போய்விடுகின்றனர்.
கைகொடுக்கும் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன்' திட்டம்
இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளைச் செய்து கொடுக்க விரும்பும் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நபர்கள், தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள், அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து உதவுவதை ஊக்கப்படுத்தும் வகையிலும்,
* அரசின் பங்களிப்புடன் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்தும் வகையிலும் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன்' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார்.
* அப்போது தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்தின் தலைவர் வேணு சீனிவாசனிடம் வழங்கினார்.
* இந்த ஃபவுண்டேஷனின் தூதுவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாம் இந்தளவிற்கு உயர்வதற்கு, இந்த உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது பள்ளிக் கூடம் தான். 'அந்தப் பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா?' என்ற உன்னதமான நோக்கத்தோடு 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' நம்ம ஊர் பள்ளி என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.
'அரசுடன் மக்கள் கைகோக்க வேண்டும்'
* எல்லாவற்றையுமே அரசாங்கம் செய்து விட முடியாது. மக்களும் கைகோக்க வேண்டும்;
* பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தைத் தெரிவிக்கலாம். அதற்கான வாசற்படிதான் இந்த நம்ம ஊர் பள்ளி திட்டம்.
'நம் பள்ளி - நம் பெருமை' என்ற திட்டத்தை நான் இங்கே தொடங்கி வைத்திருக்கிறேன்.
* அரசுப் பள்ளிகள் என்பவை அரசின் சொத்துகள் மட்டுமல்ல, அது மக்களுடைய சொத்துக்களுமாகும்.
உள்ளூர் மக்களுடன் முன்னாள் மாணவர்களுடன், தொழிற்துறையுடன், உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் கைகோப்பதற்காகவும் 'நம்ம ஊர் பள்ளி' அடித்தளம் அமைத்திருக்கிறது.
* உங்கள் ஒவ்வொரு ரூபாயும் அரசுப் பள்ளிகளுக்கே செலவிடப்படும் என உறுதி கூறுகிறேன்.
* நம் பிள்ளைகளின் கல்விக்கென உங்களிடம் நிதியுதவி வேண்டி நிற்கும் இந்தக் கோரிக்கையை ஏற்று நம் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காக வாரி, வாரி வழங்கிடவேண்டும்.
அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துவோம், நாம் காண விரும்பிய கனவுப் பள்ளியை நாம் உருவாக்குவோம்" எனக் கூறினார்.
நீங்கள் படித்த அரசுப் பள்ளிக்கு உதவிட நினைத்தால் நீங்களும் இத்திட்டம் மூலம் உதவிடலாம்.

செந்தில்பாலாஜி vs அண்ணாமலை - ட்விட்டரில் தெறிக்கும் 'வாட்ச் அரசியல்'!
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் கைகடிகாரம் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கியது என சமூக வலைதளங்களில் விவாதமானது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா?" எனப் பதிவிட்ட நிலையில், இந்த விவகாரம் ட்விட்டரில் பற்றிக்கொண்டுவிட்டது.
இரு கட்சியினரும் மாறி மாறி விமர்சிக்கும் இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்த சீனியர்கள்... ஏன்?
பா.ஜ.க மாநில மையக்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. முதன்முறையாக, இந்தக் கூட்டத்தில் அண்ணாமலைக்குக் கட்சி சீனியர்கள் சிலர், அட்வைஸ் செய்ததாகச் சொல்கிறார்கள் கமலாலயத்தினர்.
மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த மையக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

ARGvsFRA: திக் திக் நொடிகள்! எம்பாப்பே புயல்; அசராமல் கனவை நிஜமாக்கிய மாவீரன் மெஸ்ஸி!
"இருக்கையின் நுனிக்கு வர வைத்த, நகம் கடிக்க வைத்த, நெஞ்சடைக்க வைத்த" போன்ற சொற்கள் தேய்வழக்காக இருப்பினும், சில வரலாற்று நிகழ்வுகள் இவற்றையெல்லாம் நமக்கு நிகழ்வாழ்விலேயே நிகழ்த்திக்காட்டும்.
முக்கியமாக ஏதாவது ஒரு விளையாட்டின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது தங்களது ரசனைக்குரிய ஒரு விளையாட்டு கொடுக்கும் அந்தப் பரவசத்தை அடைந்திருப்பார்கள். ஒருவர் இருவரல்ல, கோடிக்கணக்கான உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு அப்படியான ஒரு அதீதப் பரவசத்தை அளித்த நிகழ்வாக நேற்றைய உலகக்கோப்பைக் கால்பந்து இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது.
ஆட்டத்தின் விறுவிறுப்பான நிகழ்வுகள், திக் திக் நொடிகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

பாலைவனத்தில் உலகின் முதல் அக்ரி டூரிசம்... அனகோண்டா வடிவில் பிரம்மாண்ட `அக்ரி ஹப்'
நம்மிடம் உள்ள விவசாய நிலங்கள் எல்லாம் பிளாட்டாகவும், வீடுகளாகவும் மாறி வரும் சூழ்நிலையில், விளைநிலங்கள் இல்லாத துபாய் பாலைவன பூமியில் விவசாயத்தை மேற்கொள்ள பலமுயற்சியை எடுத்துவருகிறது...
பாலைவன பூமியில் விவசாயத்தை முன்னெடுக்க துபாய் போன்ற நாடுகள் விவசாயத்தில் பலவிதமான புதுமுறைகளை கையாண்டு வருகிறது. செங்குத்து தோட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த நிலையில், தற்போது உருவாக்கிவரும் `அக்ரி ஹப்’ முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது
ஆச்சரியத்தில் விழி உயர் வைக்கும் இந்த விவசாய முயற்சி குறித்த சுவாரஸ்யமான தகவலை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

கிரெடிட் கார்டு... நீங்கள் செய்யும் 9 தவறுகள்!
கிரெடிட் கார்டை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்துவதால்தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது பலரும் செய்யும் பொதுவான தவறுகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் நாம் அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருக்கலாம்.
அந்த 9 தவறுகள் என்னென்ன என்பதை விளக்குகிறார் நிதி ஆலோசகர் கிஷோர் சுப்ரமணியன் ( நிறுவனர், https://www.shreeconsultants.in).

கோலிவுட் ஸ்பைடர்: விஜய்சேதுபதி திடீர் 'ஸ்லிம்' ரகசியம்!
ராமராஜன் இப்போது 'சாமானியன்' என்ற படத்தில் நடித்துவருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. அதில் கே.எஸ்.ரவிக்குமார் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.
எப்போதும் படத்தின் கதை என்ன, தனது கேரக்டர் என்ன என்று கேட்டு, அதன் பின்னரே நடிக்க ஒப்புக்கொள்ளும் ரவிக்குமார், இந்த படத்துக்கு மட்டும் இயக்குநர் கேட்ட உடனேயே ஒப்புக்கொண்டுவிட்டார்.
கே.எஸ். ரவிக்குமார் ஒப்புக்கொண்டது ஏன்?
இன்னும் தொடங்காத படம்... காத்திருக்கும் விஜயகாந்தின் மகன்!
பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?
'லால் சலாம்' படத்திலும் ரஜினி!
கோலிவுட் ஸ்பைடர் தரும் சுவாரஸ்யமான கோலிவுட் செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...