Published:Updated:

Evening Post:மீண்டும் அச்சமூட்டும் கொரோனா-கமலின் 2024 'பிளான்'- வீட்டுக்கடன் டிப்ஸ்-2023 பலன்கள்!

Vikatan Highlights December 20
Listicle
Vikatan Highlights December 20

சீனாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனாவால் உலக நாடுகள் அச்சம்!, காங்கிரஸ் உடன் கூட்டணியா... கமலின் 2024 'பிளான்' என்ன?!, வாக்காளர் அடையாள அட்டை... முகவரி மாற்றம் செய்வது எப்படி?, உயரும் வீட்டுக் கடன் இ.எம்.ஐ..! என்ன செய்ய வேண்டும்? 2023 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்,


1
கோவிட் 19

சீனாவில் தாண்டவமாடும் கொரோனா.... உலக நாடுகள் அச்சம்!

சீனாவில் மிக வேகமாக பரவி வரும் புதிய கொரோனா நோய் தொற்றால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அடுத்த சில மாதங்களில் அந்த நாட்டில் சுமார் 80 கோடி பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கணித்துள்ள நிலையில், இந்த தொற்று பிறநாடுகளுக்கும் பரவலாம் என்பதால் உலக நாடுகள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

கட்டுப்பாடுகள் தளர்வால் அதிகரித்த கொரோனா

கடந்த மாதத்திலிருந்தே சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த கட்டுப்பாடு தளர்வுகள்தான் தற்போது சீனாவுக்கு எமனாக மாறிவிட்டது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கொரோனா பரவல் விகிதம், முந்தைய இரண்டு அலைகளைக் காட்டிலும் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நாளுக்கு நாள் உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகரித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

கடந்த சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்தபடியே இருப்பதாக மயானங்களில் பணியாற்றுபவர்கள் தெரிவிப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

"வழக்கமாக ஒரு நாளைக்கு 30 அல்லது 40 உடல்கள்தான் வரும். ஆனால், மீண்டும் கொரோனா பரவலுக்கு பிறகு எங்களது பணிச்சுமை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றுகிறோம். தினமும் மயானத்துக்கு 200 உடல்கள் வருகின்றன" என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

இந்த நிலையில், சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்றும், வருகிற 2023 ம் ஆண்டில் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழக்க கூடிய அபாயம் உள்ளதாகவும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.

தலைநகர் பீஜிங்கில் உடல்கள் தகனம் இடைவிடாது நடைபெறுகிறது. பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. அதே சமயம், கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராடியதை மனதில் கொண்டோ என்னவோ, ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சி, " தொற்றால் யார் பாதிக்கப்பட விரும்புகிறார்களோ பாதிக்கட்டும். யார் இறந்து விடுவோம் என்று நினைக்கிறார்களோ இறக்கட்டும் என்பதாக ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் எண்ணமாக உள்ளது" என எரிக் பீகல் டிங் கூறியுள்ளார்.

'80 கோடி பேர் பாதிக்கப்படலாம்'

* இந்த நிலையில், சீனாவில் வரும் நாட்களில் அந்த நாட்டின் மக்களில் சுமார் 80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என தொற்று நோய் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

* சுமார் 140 கோடி பேரைக்கொண்ட சீனாவில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீம் பேருக்கு இரண்டு டோஸ் செலுத்தப்பட்டிருப்பதாகவும்,

* இந்த தடுப்பூசி, நோய் தாக்குதல் உள்ளானவர்களைக் குணப்படுத்துவதில் நன்கு வேலை செய்தாலும், தொற்றை எதிர்த்து போராடுவதில் போதிய வீரியம் இல்லை என்றும் பிரிட்டனை சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் பென் கவுலிங் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்றாவது டோஸ் தேவைப்படும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 1 கோடி பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கோ அல்லது உயிரிழக்கும் ஆபத்திலோ இருப்பதாகவும் பென் கவுலிங் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்

காரணம் என்ன?

* மேலும், கொரோனா பரவலின் முதல் இரண்டு அலைகளின்போது மற்ற உலக நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று, சீன மக்களில் பெரும்பாலானோர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகவில்லை.

* இதனால், கொரோனா தாக்கினால் இயல்பாக ஏற்படக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதே இந்த முறை, கொரோனா பரவல் அதிகமானதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

உலக நாடுகள் அச்சம்

இதனிடையே கொரோனாவை எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வைட்டமின் 'சி' அதிகம் தேவை என்பதால், எலுமிச்சைப்பழங்கள் உள்ளிட்ட 'சி' சத்து அதிகம் உள்ள பொருட்களை வாங்க சீன மக்கள் சந்தைகளில் குவிகின்றனர்.

* இந்த நோய் பரவல் காரணமாக சீனாவில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. தொழில்கள் முடங்கி உள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளன.

* இதனால், சீன ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உலக அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, சீனாவில் பரவி வரும் கொரோனா பரவல் பிற உலக நாடுகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளதால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.

இதனால், ஒருவேளை கொரோனா பரவல் வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவை மேற்கொண்டுள்ளன.


2
கமல்ஹாசன்

காங்கிரஸ் உடன் கூட்டணியா... கமலின் 2024 'பிளான்' என்ன?!

ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையில் கமல் பங்கேற்கப் போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து சில அரசியல் கூட்டணி கணக்குகள் குறித்த பேச்சுகள் கிளம்பி உள்ளன.

குறிப்பாக திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கைகோத்து தனிக்கூட்டணி உருவாகலாம் என்றும் யூகங்கள் கிளம்பி உள்ளன.

இத்தகைய சூழலில், கமல்ஹாசனின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உண்மையான 'பிளான்' என்ன..? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
இந்தியா - சீனா எல்லை

சீன எல்லை விவகாரம்: பிரதமருக்கு கிடுக்கிப்பிடி போடும் காங்கிரஸ்!

மீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அதில், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி எதுவும் பேசாமல் உள்ள நிலையில், சீன எல்லை விவகாரத்தில் பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விடாப்பிடியாகக் கூறிவருகிறது.

இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
வாக்காளர் பட்டியல்

வாக்காளர் அடையாள அட்டை...  முகவரி மாற்றம் செய்வது எப்படி? 

வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றுவதை எளிதாக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆன்லைன் மூலமாகவும், ஆஃப்லைனிலும் முகவரி மாற்றத்தை எவ்வாறு எளிதாக மேற்கொள்ளலாம் என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
வீட்டுக் கடன்

உயரும் வீட்டுக் கடன் இ.எம்.ஐ..! என்ன செய்ய வேண்டும்?

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் டிசம்பர் 7-ம் தேதி முதல் 6.25% ஆக உயர்ந்திருக்கிறது. இந்த 0.35% உயர்வால் வங்கிக் கடன்களின் வட்டி விகிதமும், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் உயர்ந்திருக்கின்றன.

இந்த நிலையில், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் (https://winworthwealth.com/) எஸ்.கார்த்திகேயன் சொல்லும் ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
2023 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

2023 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

நிகழும் சுபகிருது வருடம் மார்கழி மாதம் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை தசமி திதியில், சமநோக்குடைய அஸ்வினி நட்சத்திரம், மேஷம் ராசி, கன்னி லக்னத்தில், சிவம் நாமயோகத்தில், தைத்துலம் நாமகரணத்தில், நள்ளிரவு 12.01 மணிக்கு 1.1.2023-ம் ஆண்டு பிறக்கிறது.

இந்த 2023 -ம் புத்தாண்டில் 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்ன என்பதை விளக்குகிறார் கே.பி.வித்யாதரன்.

அதனை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
ஷாருக் கான், தீபிகா படுகோன்

'பதான்' பட பாடல்: ஷாருக், தீபிகாவை குறிவைத்து தாக்குதலா?! - தொடரும் சர்ச்சை

டந்த சில தினங்களுக்கு முன் ஷாருக்கான்-தீபிகா படுகோன் நடித்த 'பதான்' படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் 'பேக்ஷரம் ரங்' வெளியானது. இதில் தீபிகா உடை ஒரு மதத்தையும், ஷாருக்கான் உடை பாகிஸ்தான் நாட்டு கொடியைக் குறிப்பிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

எனவே, இந்தப் பாடல் காவி உடையை அவமதிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும், இந்தப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். இதன்பிறகு சமூகவலைத்தளத்தில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கிறது.

இந்த சர்ச்சை தொடர்பான முழு விவரங்களையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...