Published:Updated:

Evening Post: ரயில்வே: கொத்தாக தேர்வான வட இந்தியர்கள்-EPS-க்கு அங்கீகாரம்?- கிசுகிசு: பவனின் அன்பு!

Vikatan Highlights December 21
Listicle
Vikatan Highlights December 21

தென்னக ரயில்வே பணியில் கொத்து கொத்தாக தேர்வான வட இந்தியர்கள், எடப்பாடியை அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்?, கிசுகிசு: பவன்காரரின் அன்பில் சொக்கிப்போன வாரிசு!, செறிவூட்டப்பட்ட அரிசி நல்லதா?, மெஸ்ஸியின் க்ளாஸிக் காதல் கதை, மிஸ்டர் மியாவ்: டாப் ஒன்' சர்ச்சையும் பேசச் சொன்ன ஹீரோவும்!


1
ரயில்

தென்னக ரயில்வே பணி: கொத்து கொத்தாக தேர்வான வட இந்தியர்கள்!

யில்வே பணியிடங்களில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் திணிக்கப்பட்டு, தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு நிகழ்வு தென்னக ரயில்வேயில் அரங்கேறி இருப்பது தமிழக இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'20 ஆண்டுக் காலமாகவே இதுதான்...'

கடந்த பல ஆண்டுகளாகவே ரயில்வே, வங்கித் துறை, வருமான வரித்துறை, தபால் அலுவலகங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள், என்.எல்.சி போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் நியமனம் தேடிக்கண்டுபிடிக்கக்கக்கூடிய அளவிலும், வட மாநிலத்தவர்களின் நியமனம் 80 முதல் 90 சதவீதம் வரை இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்த பின்னர் இது அதிகமாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளபோதிலும், கடந்த இருபதாண்டு காலமாகவே திட்டமிட்டே இவ்வாறு வட இந்தியர்கள் அதிக அளவில் மத்திய அரசு பணிகளில் புகுத்தப்பட்டு வருவதாக 'தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பு' போன்ற இயக்கங்கள் குற்றம் சாட்டுகின்றன

இதற்கு உதாரணமாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த கால பணி நியமனங்கள் குறித்த தரவுகளை சுட்டிக்காட்டுகின்றனர்.

* 2012 -ம் ஆண்டு சென்னை ரயில்வே மண்டலத்தில் 884 காலியிடங்களுக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நடத்திய வேலைவாய்ப்புக்கான தேர்வில் 80 தமிழர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

* 2013 -ம் ஆண்டில், குரூப்-டி பணிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC) 2,361 காலியிடங்களை நிரப்பியபோது, அதில் 74 தமிழர்கள் மட்டுமே மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோன்று 2002 மற்றும் 2005 -ம் ஆண்டுகளுக்கு இடையில், திருச்சியில் உள்ள

* பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) 138 இன்ஜினீயர்களைத் தேர்ந்தெடுத்தது, அதில் ஒருவர் கூட தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை.

* 2008 -ம் ஆண்டு, 77 எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயர்களைத் தேர்வு செய்த போது, அதில் 17 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

திருச்சி BHEL

* சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகம் 2008 -ம் ஆண்டு 200 உதவியாளர் பணியிடங்களை நிரப்பியது. அதில் நான்கு பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

2014 ல் 78 பல்வேறு பணியிடங்களை நிரப்பியபோது, அதில் 3 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

* அதேபோல், ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் தேர்வு செய்யப்பட்ட 100 சார்ஜ்மேன்களில் 15 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

* 2011 -ம் ஆண்டு, இங்கு 108 அப்பரன்டீஸ்களுக்கான நியமனத்தில் அதில் 15 பேர் மட்டுமே தமிழர்களாக இருந்தனர்.

லாலு போட்ட பிள்ளையார் சுழி

ரயில்வே பணி நியமனங்களைப் பொறுத்தமட்டில், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தபோது இந்தி மொழி பேசுபவர்களுக்கு, குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்களை ரயில்வேயில் அதிக அளவில் பணியமர்த்தினார். அந்தபோக்கு 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் இன்னும் அதிகமாகிவிட்டது.

அதிர்ச்சி அளித்த தென்னக ரயில்வே

இந்த நிலையில்தான், தமிழக இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தென்னக ரயில்வேயில் நடந்துள்ள மேலும் ஒரு பணி நியமன விவரம் தெரியவந்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமானன இடங்களை வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கூட்ஸ் கார்டுகள், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், முதுநிலை வணிகம் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ஐந்தாம் நிலை மற்றும் ஆறாம் நிலை பணிகளுக்கு 964 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.

* இதில் 750-க்கும் அதிகமானோர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், 200 பேர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

அன்புமணி ராமதாஸ்

இது குறித்து அதிர்ச்சி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்,

* இந்த பணி நியமன முறை, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ என்ற ஐயத்தை எழுப்பியிருப்பதாக கூறியுள்ளார்.

"தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்களைத் தேடித்தேடி பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாறாக, பட்டியலில் பாண்டேக்கள், சவுத்திரிகள், சவுகான்கள், மீனாக்கள், பிஸ்வாஸ்கள், குமார்கள் தான் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள்.

* எந்த பணிக்கும் தமிழர்கள் தொடர்ச்சியாக 4 பேர் கூட தேர்ந்தெடுக்கப் படாத நிலையில், வட இந்தியர்கள் மட்டும் கொத்துக் கொத்தாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இல்லை.

இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்படும் வகையில் 100% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் பணியிடங்களில் 50% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்" என அவர் மேலும் கூறியுள்ளார்.


2
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியை அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்?

அ.தி.மு.க-வில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை தலைமை விவகாரம் பூதகரமாக வெடித்தது. அதைத் தொடர்ந்து, ஏற்பட்ட பிரச்னைகளால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரண்டு பிரிவாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய நடவடிக்கை எடப்பாடி ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
கிசுகிசு

கிசுகிசு: பவன்காரரின் அன்பில் சொக்கிப்போன வாரிசு!

ஆளுங்கட்சியை வெளுத்தெடுத்த குட்கா மாஜி!

வழக்குகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கடுமையாகப் போராடிய குட்கா மாஜி, ஒருகட்டத்தில் ஆளுங்கட்சியோடு ஐக்கியமாகவும் திட்டமிட்டார். காவிக் கட்சிப் பக்கமும் காய்நகர்த்திப் பார்த்தார். எதுவும் வொர்க்அவுட் ஆகாததால், சொந்த ஊர்ப் பக்கம் வந்து கட்சிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாராம். கடந்த வாரம் சொந்த மாவட்டத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், ஆளுங்கட்சியை வெளுத்தெடுத்துவிட்டாராம். "போன மாசம் வரைக்கும் கட்சி தாவ ரெடியா இருந்த ஆளு இப்போ இந்தப் போடு போடுறாரே…" எனத் திகைத்துப்போனார்களாம் மீடியேட்டர்கள்.

கிசுகிசு பகுதியில் மேலும்....

பவன்காரரின் அன்பில் சொக்கிப்போன வாரிசு!

டெல்லி கொடுத்த கிரீன் சிக்னல்!

ஏமாந்து போன டெல்லி மில்க் புள்ளியின் வாரிசு!

கதர்க் கட்சியில் புதிய மாற்றம்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
ஆன்லைன் ரம்மி

'ஆன்லைன் ரம்மிக்கு தடை' - பிரிவு 162-ஐ பயன்படுத்துவதில் என்ன சிக்கல்?!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரிவு 162-ஐ பயன்படுத்தி தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

அப்படி பிரிவு 162-ஐ பயன்படுத்தி ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடியுமா?

இது குறித்து நம்மிடம் பேசிய சைபர் க்ரைம் சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் சொல்வதைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
அரிசி

செறிவூட்டப்பட்ட அரிசி..! நல்லதா... கெட்டதா ?

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன; அது நமக்கு நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா?

இது குறித்து 'பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்' அனந்து, ஊட்டச்சத்து நிபுணர் ஶ்ரீமதி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் தெரிவிக்கும் கருத்துகளுடன் கூடிய கட்டுரையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
Messi - Antonela Roccuzzo ( @antonelaroccuzzo )

மெஸ்ஸியின் க்ளாஸிக் காதல் கதை முதல் 3 குழந்தைகளின் தந்தை வரை..!

ன்று அர்ஜென்டினா மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க மெஸ்ஸி எனும் வீரனே காரணம். ஆனால் இந்த நீண்ட நெடிய பயணத்தில் அவருடன் வழிநெடுக இருந்தது, அவரின் மனைவி அன்டோனெல்லா ரோகுஸோ (Antonela Roccuzzo). இதில் அழகு என்னவென்றால், இவர்கள் பால்ய கால சிநேகிதர்கள்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
வர்ஷினி சௌந்தரராஜன்

மிஸ்டர் மியாவ்: டாப் ஒன்' சர்ச்சையும் பேசச் சொன்ன ஹீரோவும்!

ஃபேமிலி சென்டிமென்ட் இயக்குநரின் நம்பிக்கை!

நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருந்த ஃபேமிலி சென்டிமென்ட் இயக்குநருக்கு, இப்போது அடுத்த பட வாய்ப்பு இல்லையாம். 'ஒரே ஒரு ஃப்ளாப்தானடா கொடுத்தேன்…' என நொந்துபோனவர், அட்டகாசமான கதையோடுதான் அடுத்த படம் எனச் சொல்லி தீவிரமான சிந்தனையில் அமர்ந்துவிட்டாராம்.

மிஸ்டர் மியாவ் தரும் மேலும் பல சூடான கோலிவுட் செய்திகள்...

அசுர நடிகரின் கோபம்!

சோர்ந்துபோன புயல் காமெடி!

மும்பையில் முதலீடு செய்யும் நடிகர்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...