Evening Post: கொரோனா அலர்ட்: மக்களுக்கு அறிவுரைகள் என்ன?உதயநிதி விழாவில் சர்ச்சை-கழுகார் அப்டேட்ஸ்

கொரோனா அலர்ட் ... மக்களுக்கு மருத்துவ சங்கம் சொல்லும் அறிவுரைகள் என்ன?, உதயநிதி விழாவில் ஹாக்கி வீரர்கள் அவமதிப்பா?,பொங்கல் பரிசு அறிவிப்பு, கழுகார் அப்டேட்ஸ்: கலங்கும் மாஜி காக்கி!, உங்களைக் கண்காணிக்கும் வருமான வரித்துறை, 'பயணங்கள் முடிவதில்லை' : 80 & 90ஸ் தமிழ் சினிமா

கொரோனா அலர்ட் ... மக்களுக்கு மருத்துவ சங்கம் சொல்லும் அறிவுரைகள் என்ன?
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் BF.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் உயர்மட்ட மருத்துவர்கள் அமைப்பான இந்திய மருத்துவ சங்கமான IMA (Indian Medical Association), கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலும் பரவிய ஒமிக்ரான் BF.7
சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் மற்றொரு திரிபுநிலையான ஒமிக்ரான் BF.7 வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.
இதனிடையே, இந்த புதிய வகை தொற்று இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* கடந்த 24 மணி நேரத்தில் 145 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அவற்றில் நான்கு பேருக்கு BF.7 வகை திரிபு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இன்று இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்துவது, தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்ட நிலையில், இரு அவைகளிலும் இன்று பெரும்பாலான உறுப்பினர்கள் முகக் கவசம் அணிந்திருந்தனர்.
பொதுமக்களுக்கான IMA அறிவுறுத்தல்கள்
இந்த நிலையில், "இப்போதைக்கு, நிலைமை ஆபத்தானதாக இல்லை. எனவே பீதி அடையத் தேவையில்லை. இருப்பினும் வருமுன் காப்பது சிறந்தது" எனக் கூறியுள்ள இந்திய மருத்துவ சங்கமான ஐஎம்ஏ, ( IMA - Indian Medical Association),கொரோனா பரவல் நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக, சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
1. அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
2. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
3. சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர்கள் மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
4. திருமணம், அரசியல் அல்லது சமூக கூட்டங்கள் போன்ற பொதுவான கூடுதல் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
5. வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்கவும்.
6. காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு (loose motions) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
7. முன்னெச்சரிக்கையாக கோவிட் தடுப்பூசியை விரைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
8. அவ்வப்போது வெளியிடப்படும் அரசு அறிவுரைகளைப் பின்பற்றவும்.

அரசுக்கும் அறிவுறுத்தல்
மேலும், 2021 -ம் ஆண்டு காணப்பட்டது போன்ற எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும்விதமாக அவசரகால மருந்துகள், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கி, தயாராக இருக்க வேண்டும் என்றும் ஐஎம்ஏ வலியுறுத்தி உள்ளது.
இதனிடையே இந்தியாவில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் இன்று அறிக்கை தாக்கல் செய்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,
* " புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளிடம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே நாட்டில் இதுவரை 28 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதி உடையவர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் கேட்டுக்கொண்டுள்ளார்.
'பீதியடைய தேவையில்லை'
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட்டின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா, " நமது சிறந்த தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் சாதனை பதிவை கருத்தில் கொண்டு நாம் புதிய வகை கொரோனா பரவல் குறித்து பீதியடைய தேவையில்லை. இந்திய அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல்களை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி விழாவில் சர்ச்சை... ஹாக்கி வீரர்கள் அவமதிப்பா?
ஒடிசாவில் ஜனவரி 13 முதல் நடக்கவிருக்கும் ஹாக்கி உலகக்கோப்பையை முன்னிட்டு வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் அந்த உலகக்கோப்பை பல மாநிலங்களுக்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த வகையில் நேற்று அந்த உலகக்கோப்பை சென்னையை வந்தடைந்தது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் உலகக்கோப்பையை காண்பிக்கும் நிகழ்வு காலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றிருந்தார். இதில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஹாக்கி வீரர்கள் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு! ரொக்கம் எவ்வளவு?
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை உள்ளிட்ட தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

கழுகார் அப்டேட்ஸ்: மோசடி காவியால் கலங்கும் மாஜி காக்கி!
'நாலு காசு வேணும்னா எதுவும் தப்பில்லை...'
ஜவுளிக்கடை முன்பு பஸ் ஸ்டாப் கட்டிய எம்.எல்.ஏ!
தன்னை 'கவனிக்காத' கடைகளின் வாசலில் முனிசிபாலிட்டி குப்பைத்தொட்டியை வைப்பது, சாக்கடை மூடியைத் திறந்துபோடுவதெல்லாம் கவுன்சிலர்களின் ஸ்டைல். எம்.எல்.ஏ ஒருவரோ, பிரபல ஜவுளிக்கடை வாசலில் பஸ் ஸ்டாப்பையே கட்டிவிட்டார். காரணம், சிம்பிள். 'அல்வா' மாவட்ட ஆளுங்கட்சிச் செயலாளரான இவர், கட்சி வளர்ச்சி நிதி கேட்டிருக்கிறார். "என்னது, 25 லட்சமா?" என்று வாயைப் பிளந்த கடைக்காரர், 'முடியவே முடியாது' என்று கையை விரித்துவிட்டார்.
கழுகார் அப்டேட்ஸில் மேலும்...
கே.சி.வீரமணிக்கு தைரியம் கொடுத்த அமைச்சர் | மோசடி காவியால் கலங்கும் மாஜி காக்கி |
மல்லுக்கட்டும் முன்னாள் அமைச்சரின் மகன்! | அடிதடியில் முடிந்த ஆக்கிரமிப்பு வெறி

ரயில்வே வேலைக்காக ரூ.2.67 கோடி லஞ்சம்... தமிழக பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டது எப்படி?!
ரயில்வே வேலைக்காக ரூ.2.67 கோடி லஞ்சம் கொடுத்து ஏமாத்திருக்கிறார்கள், தமிழக பட்டதாரிகள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள்.
இந்த மோசடி எப்படி அரங்கேற்றப்பட்டது என்பதைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

உங்களைக் கண்காணிக்கும் வருமான வரித்துறை... எப்படித் தெரியுமா..?
பணப் பரிவர்த்தனை செய்யும் அனைவரையும் வருமான வரித்துறை கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறது என்பது அனைவருக்கும் பரவலாக தெரிய வந்திருக்கிறது
எந்தெந்த பணப் பரிவர்த்தனைகள் வருமான வரித்துறைக்குப் போய்ச் சேருகின்றன, எப்படி வரி கணக்கிடப்படுகிறது, வரிக் கட்ட வேண்டியவர் எப்படி அடையாளம் காணப்படுகிறார் என்பது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

'பயணங்கள் முடிவதில்லை': மைக் மோகன் உருவாகக் காரணமாக இருந்த சினிமா!
80 & 90ஸ் தமிழ் சினிமா 'நாஸ்டால்ஜியா கொண்டாட்டம்'
எண்பதுகளில் மோகன் நடித்த பல திரைப்படங்கள் ‘வெள்ளி விழா’ வெற்றியைக் கண்டிருக்கின்றன. அதன் மங்களகரமான துவக்கம் என்று ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படத்தைச் சொல்லலாம்.
இதில் அவர் பாடகன் பாத்திரத்தில் நடித்து படமும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றதால், அதே போல் வேடங்களில் தொடர்ந்து நடித்து ‘மைக் மோகன்’ என்கிற அடைமொழியைப் பெற்றார். அந்தப் பட்டத்திற்கு இந்தப் படம்தான் காரணமாக இருந்தது.
80-களின் சினிமா குறித்த இந்த சுவாரஸ்ய கட்டுரையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...