Evening Post:'நம்ம ஸ்கூல்':இபிஎஸ் -சீமான் விமர்சனம் ஏன்?-DMK கூட்டணியில் கமல்?IPL ஏலம் அப்டேட்ஸ்!

ஸ்டாலின் தொடங்கிய 'நம்ம ஸ்கூல்' திட்டம்... இபிஎஸ் -சீமான் கடும் விமர்சனம் ஏன்?, அதிமுக: ரேஸில் முந்துவது யார்?!, திமுக கூட்டணிக்குள் ஐக்கியம் ஆகிறாரா கமல்ஹாசன்?!, IPL ஏலம்: 16 கோடிக்கு ஸ்டாக்ஸை அள்ளிய சிஎஸ்கே, பணக்காரர்களாக மாற 6 அம்சங்கள், 'கனெக்ட்': சினிமா விமர்சனம்

'நம்ம ஸ்கூல்': இபிஎஸ் -சீமான் கடும் விமர்சனம் ஏன்?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இத்திட்டத்தை விமர்சித்துள்ளார்.
தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளுக்கு உதவ விரும்பும் முன்னாள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அரசின் பங்களிப்புடன் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்தும் 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த திங்களன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் தலைவராக தொழிலதிபர் வேணு சீனிவாசனும், தூதுவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

'பழைய திட்டத்துக்கு புதிய நாமகரணம்'
இந்த நிலையில், இந்த திட்டம் ஏற்கெனவே தனது தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்து வந்த திட்டம்தான் என்றும், அந்த திட்டத்துக்குத்தான் தங்கிலீஷில் "நம்ம ஸ்கூல்" என்று நாம கரணம் சூட்டி திமுக அரசு செயல்படுத்தி இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், " எனது தலைமையிலான
* அம்மாவின் அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக அரசு,
* கடந்த 19.12.2022 அன்று அம்மாவின் ஆட்சியில், பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே செயல்படுத்தபட்ட சி.எஸ்.ஆர் ( CSR)எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு, தங்கிலீஷில் "நம்ம ஸ்கூல்" என்று நாம கரணம் சூட்டி, இந்த அரசின் முதலமைச்சர் மீண்டும் அதை துவக்கி வைத்திருக்கிறார்.
23.5.2017 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் இருந்த தொழில் நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் எளிய, நம்பகத்தன்மை கொண்ட இணைய வழித்தடமும் ஏற்படுத்தும் விதமாக,
* நான் 5.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், இணையவழி நிதி திரட்டும் இணைய தளத்தை (https://contribute.tnschools.gov.in) தொடங்கும் விழாவை எளிமையாக தொடங்கி வைத்தேன்.
' 3 கோடி ரூபாய் வீண்'
எனது ஆட்சிக் காலத்தில் எளிமையாக துவக்கி வைக்கப்பட்ட, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும் இத்திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக நேற்றைய நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.
அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ளது என்று கூறும் இந்த அரசு, மூன்று கோடி ரூபாயை வீணடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன்? சொல் ஒன்று, செயல் ஒன்று எனவும், சித்தம் போக்கு-சிவம் போக்கு என்றும் செயல்படும் இந்த அரசு, மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்" எனக் கூறியுள்ளார்.

சீமானும் விமர்சனம்
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டத்தை விமர்சித்தார்.
* " தமிழக அரசின் நம்ம ஸ்கூல் ஃபவுன்டேஷன் திட்டத்திக்கு மக்களிடம் பிச்சைக் கேட்கிறார்கள். ஆனால், ரூ.39 கோடிக்கு சமாதி, ரூ.80 கோடிக்கு பேனா சின்னம் கட்ட பணம் இருக்கிறது.
* மக்களிடம் பணம் வாங்கி பள்ளிக்கூடம் கட்டினால் அரசு எதற்கு இருக்கிறது? கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது? "எனக் கேள்வி எழுப்பியதோடு,
* 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டத்தின் தலைவராக தொழிலதிபர் வேணு சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
"கோயில் புனரமைப்பில் கொள்ளையடித்த, சிலை கடத்தல் வழக்கில் பெயர் இடம்பெற்ற வேணு சீனிவாசனிடம் எதற்காக அந்த திட்டத்தை வழங்க வேண்டும்? இது எப்படி சேவையாகும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் "50 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் கொத்தடிமைகள்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்!" என சீமான் மிக காட்டமாக இன்று அளித்த அந்த பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

அதிமுக-வில் அடுத்தடுத்து போட்டிக் கூட்டம்... ரேஸில் முந்துவது யார்?!
பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுக-வில் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. சசிகலா, பன்னீர், எடப்பாடி என மூன்று பேரும் நான் தான் அதிமுக என்று சண்டையிட்டுக்கொண்டிருக்க, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் "என்னுடைய இயக்கத்தைக் கொண்டு அதிமுக-வை மீட்டெடுப்பேன்" என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் என்னதான் நடக்கிறது..?
நிலைமை யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

ராகுல் யாத்திரையில் கமல்... திமுக கூட்டணிக்குள் ஐக்கியமா?!
பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வம் ராகுல்காந்தி, இந்த யாத்திரையில் பங்கேற்க அழைப்பு விடுத்து, கமலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் கமல் இதில் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் நிலையில், கமல்ஹாசன் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதன் மூலம் இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யமும் இணைகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம், திமுக வட்டாரங்கள் என்ன சொல்கின்றன?
பாஜக இதை எப்படி பார்க்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய கட்டுரையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

IPL ஏலம்: 16 கோடிக்கு ஸ்டாக்ஸை அள்ளிய சிஎஸ்கே!
இன்று நடந்த ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன், ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிகபட்ச விலைக்கு ஏலம் போன வீரர் எனும் சாதனையை படைத்திருக்கிறார்.
அவருக்காக கொடுக்கப்பட்ட ஏலத்தொகை என்ன..?
ஆஸ்திரேலிய அணிக்காக அதிரடியாக ஆடி வரும் கேமரூன் க்ரீனை எந்த அணி வாங்கியது?
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸை சென்னை அணி எவ்வளவு தொகைக்கு வாங்கியது?

பணக்காரர்களாக மாற இந்த 6 அம்சங்கள்தான் காரணம்!
நம் நாட்டைப் பொறுத்த வரையில் ஏழைகள் ஏழைகளாகவே, நடுத்தர வருமானப் பிரிவினர் நடுத்தர மக்களாகவே இருக்கிறார்கள். ஆனால், பணக்காரர்கள் மட்டும் மேலும் பணக்காரர்களாக மாறி வருகிறார்கள்.
இது யார் தவறு? பணக்காரர்களின் தவறா? இல்லை. பணக்காரர்கள் பின்பற்றும் கீழ்க்காணும் 6 அம்சங்களை கடைபிடித்தால் யாரும் பணக்காரர் ஆக முடியும் என்கிறார் நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன்( Aismoney.com).

சினிமா விமர்சனம்: பயமுறுத்துகிறதா நயன்தாராவின் 'கனெக்ட்'?
ஹாரர் படங்கள் என்றாலே அதில் காமெடியையும் கவர்ச்சியையும் கலந்து கமெர்ஷியல் ஆக்கிவிடுவதுதான் தமிழ் சினிமாவின் சமீபகால டெம்ப்ளேட்.
அதிலிருந்து விலகி, சீரியஸாக ஹாரர் ஜானரை மட்டுமே கருத்தில்கொண்டு வரும் படங்கள், தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பானதாக அமைந்துவிட்டால், ஹாரர் விரும்பிகளுக்கு நல்லதொரு ட்ரீட்தான்.
`மாயா', `கேம் ஓவர்' என சீரியஸான ஹாரர் மற்றும் சூப்பர்நேச்சுரல் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வின் சரவணனின் `கனெக்ட்' அந்த வரிசையில் சென்று அமர்கிறதா, இல்லை ஏமாற்றுகிறதா?