Published:Updated:

Evening Post: ராகுல் யாத்திரை: உளவுத்துறை மீது புகார்-மிஸ்டர் கழுகு- பண வசூல் புகாரில் Byju's

Vikatan Highlights December 26
Listicle
Vikatan Highlights December 26

ராகுல் காந்தியின் யாத்திரை.... உளவுத் துறை மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!, மிஸ்டர் கழுகு: கடுப்பில் தி.மு.க புள்ளிகள்... ஏன்?, எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு, "சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை!", பண வசூல் புகாரில் Byju's, ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ்...ஆரோக்கிய உணவா?


1
பாரத் ஜோடோ யாத்திரை

ராகுல் யாத்திரை... உளவுத்துறை மீது குற்றச்சாட்டு!

ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை யாத்திரை' யை கொரோனாவைக் காரணம் காட்டி மத்திய அரசு நிறுத்த முயல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது உளவுத் துறையை வைத்து மிரட்டுவதாக அடுத்த குற்றச்சாட்டுக் கிளம்பி உள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை யாத்திரை' ( Bharat Jodo Yatra ) மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

கடந்த செப்டம்பர் 7 -ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,அரியானா மாநிலத்தை அடுத்து, 108-வது நாளான டிசம்பர் 24 அன்று பதர்பூர் வழியாக தலைநகர் டெல்லியில் நுழைந்தது.

டெல்லி யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

கமல் - ராகுல்

முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுலின் யாத்திரையில், காங்கிரஸ் கட்சியினரைத் தவிர்த்து அந்தந்த ஊர்களிலுள்ள இளைஞர்கள், மாணவிகள், சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது, கை குலுக்குவது என உற்சாகமாக பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.

யாத்திரையை கைவிட அரசு அறிவுறுத்தல்

இந்த நிலையில், சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்த தகவல்கள் கடந்த வாரம் வெளியானதைத் தொடர்ந்து,

* "பாரத் ஜோடோ யாத்திரையின் போது முகக் கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி என கொரோனா தடுப்பு நடவடிக்கைப் பின்பற்றுங்கள்.

* அப்படி இல்லை என்றால் தேசத்தின் நலன் கருதி யாத்திரையைக் கைவிடுங்கள்" என ராகுல் காந்திக்கும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

அரசியல் உள்நோக்கம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆனால், இதில் தேச நலன் என்பதைக் கடந்து 'யாத்திரையை முடக்கும் யோசனை' என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் , "பாரத் ஜோடோ யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற சொல்லியிருக்கிறது பாஜக அரசு. பாஜக-வால் காங்கிரஸ் மக்களிடம் சென்று சேர்வதைப் பொறுத்துக்க கொள்ள முடியவில்லை. இந்த யாத்திரையால் காங்கிரஸ் அடைந்திருக்கும் பிரபலத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுவதை இது காட்டுகிறது. யாத்திரைக்கு இடையூறு செய்து அதை சீர்குலைக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கம். இதில் மக்களின் நலன் இல்லை, வெறும், அரசியல் உள்நோக்கமே இருக்கிறது" என குற்றம்சாட்டினார்.

'உளவுத் துறை விசாரணை'

இந்த நிலையில், இந்த யாத்திரையில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் உரையாடியவர்களிடம் மத்திய அரசு தனது உளவுத் துறை மூலம் (Intelligence Bureau) விசாரணை நடத்தி மிரட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

Intelligence Bureau

இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ்,

* " இந்த யாத்திரையில் ரகசியம் ஏதுமில்லை. ஆனால், ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்று அவருடன் உரையாடிய பலர் உளவுத் துறையால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

* எல்லா வகையான கேள்விகளையும் அவர்களிடம் உளவுத் துறையினர் கேட்டுள்ளனர்.

* ராகுல் யாத்திரை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதற்றமடைந்துள்ளனர்" என ட்வீட் செய்துள்ளார்.


2
மிஸ்டர் கழுகு

மிஸ்டர் கழுகு: எகிறிய பார் கமிஷன்... கடுப்பில் தி.மு.க புள்ளிகள்!

வழக்கு தொடரத் தயாராகும் ஓ.பி.எஸ்!

2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட அ.தி.மு.க வரவு-செலவு ஆடிட் ரிப்போர்ட்டைத் தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கிறது.

இதனால், எடப்பாடி பழனிசாமியைக் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானம், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் உள்ளிட்டவற்றையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்று எடப்பாடித் தரப்பு நம்புகிறது.

ஆனால், பன்னீர் தரப்போ, "ஓ.பி.எஸ் பொருளாளராக இருந்தபோது தயார் செய்யப்பட்டதுதான் அந்த ஆடிட் ரிப்போர்ட். எனவே, அதை ஏற்றுக்கொண்டிருப்பது செல்லாது" என்ற ஒரு பாயின்டைப் புதிதாகக் கண்டுபிடித்திருக்கிறது. இதைவைத்து, 'தேர்தல் ஆணையம் செய்தது தவறு' என வழக்கு போடும் முடிவில் இருக்கிறதாம் பன்னீர் தரப்பு.

மிஸ்டர் கழுகு-வில் மேலும்...

எகிறிய பார் கமிஷன்... கடுப்பில் தி.மு.க புள்ளிகள்!

மன்னர் பிரமுகரின் சொத்து முடக்க பின்னணி!

அண்ணாமலைக்கு எதிராக கொதிக்கும் அதிமுக நிர்வாகிகள்!

முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
புதிய எழும்பூர் ரயில் நிலையத்தின் மாதிரிப் படம்

எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு - ரூ.734.91 கோடி மதிப்பில் பணிகள் தொடக்கம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையக் கட்டடம் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்தது. 144 ஆண்டுகள் கடந்தும் எழில் வனப்புடன் விளங்குகிறது. நாள்தோறும் 562 ரயில்கள் கையாளப்படுகின்றன.

முக்கியமான நேரங்களில் ஒரே நேரத்தில் 24,600 பயணிகள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இங்கு பயணிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்படவிருக்கிறது.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
மனுஷ்ய புத்திரன்

'திருச்சி சூர்யா தி.மு.க-வின் ஸ்லீப்பர் செல்லா?' - மனுஷ்ய புத்திரன் விளக்கம்!

'தி.மு.க ஒரு குடும்பக் கட்சி... அங்கே கருணாநிதி குடும்பத்தினரைத் தவிர யாரும் பெரிய பதவிக்கு வர முடியாது' என்றும், 'பெண்ணுரிமை, சுயமரியாதை என்று பேசிவிட்டு, முதல்வரின் கான்வாயில் பெண் மேயரைத் தொங்கிக்கொண்டு வரவைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?' என்றும் தி.மு.க-வைத் துளைத்தெடுக்கின்றன எதிர்க்கட்சிகள்.

இந்த விமர்சனங்கள் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு, தி.மு.க ஐடி விங் ஆலோசகர், கவிஞர் மனுஷ்ய புத்திரன் அளித்த பதில்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
சுஷாந்த் சிங் ராஜ்புத்

"சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை!"- அதிர்ச்சி தந்த உடற்கூராய்வாளர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பிரேதத்தை உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா, அவரின் மரணம் தற்கொலை அல்ல கொலை, உயர் அதிகாரிகளின் அழுத்தத்தினால் சரியாக உடற்கூராய்வு செய்யமுடியவில்லை என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்த பரபரப்பான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
பைஜூஸ்...

பண வசூல் புகாரில் Byju's... அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

'பிச்சை புகினும் கற்கை நன்றே' – ஔவை மூதாட்டியின் வாக்கு உண்மைதான். அதற்காக பெற்றோரைப் பிச்சைக்காரர் களாக்குவது எந்த விதத்தில் நியாயம்? சமீப காலமாக பைஜூஸ் எஜு டெக் ( Byju's ) நிறுவனம் பற்றி வெளியாகும் செய்திகள் மேற்கண்ட கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது.

"என்ன... பைஜூஸா?" என்று பலரும் ஆச்சர்யப்படுவதில் அர்த்தம் இல்லாமலில்லை. அந்த அளவுக்கு பள்ளிகளுக்கான ஆன்லைன் கல்வியில் புகழ் பெற்று விளங்குகிறது இந்த நிறுவனம்.

ஆனால், சமீபகாலமாக பைஜூஸ் மீது அதிகரிக்கும் புகார்கள் மற்றும் அது தொடர்பான அதிர்ச்சியளிக்கும் பின்னணி குறித்த தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
ஓட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸர்

ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ்... ஆரோக்கிய உணவா?

"நவீன உணவுகள் குறித்து நிறைய விளம்பரங்கள் வருகின்றன. அவற்றைப் பார்த்து நம்பி, மக்கள் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் விளம்பரங்களில் சொல்லப்படும் சத்துகள் அவற்றில் இருக்கின்றனவா, அல்லது மிகைப்படுத்தப்படுகின்றனவா என்றும் பார்ப்போம்.

முதலில் ஓட்ஸ். நாம் தினசரி சாப்பிடும் உணவுகளைப் போல இதில் எந்தச் சுவையும் இல்லாவிட்டாலும்கூட ஆரோக்கியத்திற்காக மக்கள் இதைச் சேர்த்துக்கொள்கிறார்கள். 4,000-5,000 வருடங்களுக்கு முன் பண்டைய சீனர்கள் ஓட்ஸை உணவில் சேர்த்துக்கொண்டார்கள். கிரேக்கர்கள் அதன் சுவை பிடிக்காமல் ஓட்ஸ் பயிரைக் களைச்செடியாகவே கருதினர்..."

'ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ்... ஆரோக்கிய உணவா?' என்பது குறித்து டாக்டர் அருண்குமார் எழுதியுள்ள இந்த கட்டுரையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


8
சிங்கமுத்து

" வடிவேலு, 'நீ மனசு விட்டுடக் கூடாது! தொடர்ந்து நடி..!" சிங்கமுத்து

கைச்சுவைக்கு உடல்மொழி மிகப்பெரிய பலம்! அப்படி தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலமாக மக்களை சிரிக்க வைப்பவர்களில் ஒருவர்தான் நடிகர் சிங்கமுத்து.

தனது மகன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கான விவாதத்தில் இருந்தவரை ஒரு தேநீர் இடைவெளியில் சந்தித்துப் பேசினோம்.

வடிவேலுவுக்கும், சிங்கமுத்துக்குமான வழக்கு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பார்த்தீங்களா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு அளித்த விரிவான பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...