Published:Updated:

Evening Post: பாஜக:EPS நிலைப்பாடு என்ன?-அண்ணாமலை:கலாய் போஸ்டர்-PPF:சில விஷயங்கள்-விஜய் பட அப்டேட்!

Vikatan Highlights December 27
Listicle
Vikatan Highlights December 27

பாஜக கூட்டணி: எடப்பாடி-யின் நிலைப்பாடு என்ன?, அண்ணாமலையை விமர்சித்து கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டர், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச்சென்ற ஆட்சியர்!, PPF கணக்கு... சில தெரியாத விஷயங்கள், அந்தரங்க உறுப்பில் வாடை: ஆண்களும் பெண்களும் அறிந்துகொள்ள வேண்டியவை!, விஜய் பட அப்டேட்!


1
எடப்பாடி பழனிசாமி - மோடி

பாஜக கூட்டணி: எடப்பாடி-யின் நிலைப்பாடு என்ன?

பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளும் அளவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டதாக செய்திகள் அலையடித்த நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் சூசகமாக வெளிப்படுத்தினார்.

பாஜக வலியுறுத்தலை நிராகரித்த எடப்பாடி

வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு ஓபிஎஸ், டி.டி.வி தினகரனின் அமமுக மற்றும் சசிகலா ஆகியோரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு இணக்கமாக போகுமாறு பாஜக மேலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை எடப்பாடி ஏற்கவில்லை. தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.

இது தொடர்பாக தம்மிடம் பேச வந்த பாஜக மேலிட தூதுவர்களிடம்,

* "சின்னம் முடக்கப்பட்டாலும் கூட கவலையில்லை... தம்மால் ஒருபோதும் ஓபிஎஸ், தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து செயல்பட முடியாது" என எடப்பாடி திட்டவட்டமாக கூறியதாக செய்திகள் வெளியாகின.

* மேலும், 'தவறான வழிகாட்டுதலால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி அ.தி.மு.க-வை பலவீனப்படுத்த முயன்றால், அதனால் உங்களுக்குத்தான் பெரும் பாதிப்பு' என்று கூறி, தேர்தல் புள்ளிவிவரங்களையும், ஓ.பி.எஸ்-ஸின் செல்வாக்கு குறித்த டேட்டாக்களையும் டெல்லிக்குக் கொடுத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

சி.வி.சண்முகம்

திரி கொளுத்திய சி.வி. சண்முகம்

இந்த நிலையில்தான் கடந்த 17 ம் தேதியன்று கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்.எல்.சி.க்கு எதிராக அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.பி. சி.வி சண்முகம்,

* " தமிழகத்தில் மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் திமுக, டெல்லி சென்றால் மத்திய அரசிடம் 'அம்மா, அய்யா, தாயே...' என கெஞ்சுகின்றனர். பாஜக அரசு சொல்லும் பணிகளை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சத்தமின்றி திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.

* நாடாளுமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி வரப்போகிறது.

* விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கழற்றி விடப்போகிறது.

* திமுகவிடம், ' ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் கழற்றி விடுங்கள்' என்று பாஜக கூறுகிறது" எனத் திரி கொளுத்தினார்.

அண்ணாமலை ரியாக்சன்

சி.வி சண்முகத்தின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக கூட்டணியை கழற்றிவிடும் நோக்கத்தில், எடப்பாடியின் தூண்டுதலின் பேரிலேயே சி.வி சண்முகம் இவ்வாறு பேசி இருக்கலாம் என பாஜக வட்டாரத்தில் சந்தேகம் எழுந்தது.

இருப்பினும் இது தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, " பாஜக சார்பில் யாரேனும் எதாவது கருத்து சொல்கிறார்கள் என்றால் அவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும். அதனால் நான் அதை பின் தொடரவில்லை சேர்ந்துவிட்டாரா? என்று கேட்டு சொல்கிறேன்.

திமுக அல்லது பாஜகவின் அதிகாரப்பூர்வ தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பேச வேண்டும். அதை தவிர்த்துவிட்டு யார் பேசினாலும் அது யூகம்தான். அதற்கு பதிலளிக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

'அதிமுக-வை பாஜக கட்டுப்படுத்தவில்லை'

இப்படி அதிமுக - பாஜக இடையே உரசலும், கருத்து மோதலும் ஏற்பட்ட நிலையில்தான், பாஜக உடனான கூட்டணி தொடர்பான தனது நிலைப்பாட்டை சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக- வின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை தலைமை கழகத்தில் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி

இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி,

* " நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குசாவடி அளவில் அதிமுக-வை வலுப்படுத்த வேண்டும்.

* ஓ.பி.எஸ். பணத்தைக் கொடுத்து கூட்டத்தைக் கூட்டியுள்ளார். திமுக-வின் பி டீமாக ஓ.பி.எஸ். செயல்படுகிறார்.

* கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக முடிவு செய்யும்.

* அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம்.

* அதிமுக-வை பாஜக எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என எப்போதும் பாஜக வற்புறுத்தியதில்லை.

* தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது" என தெரிவித்தார்.

எடப்பாடியின் இந்த பேச்சு, சி.வி சண்முகத்தின் பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், பாஜக உடன் இணக்கமாக செல்ல தான் தயார் என்பதை சூசகமாக வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

ஜெயக்குமார் பேட்டி

இந்த நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியை படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
போஸ்டர்

'தம்பி மல, பில்லு இன்னும் வரல!' - அண்ணாமலையை  கலாய்த்து  போஸ்டர்!

ஃபேல் வாட்சை மையப்படுத்தி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் சமூகவலைதளங்களில் யுத்தம் நடந்துவருகிறது. இதன் அடுத்த வெர்ஷனாக, கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர் ஒருவர், 'தம்பி மல, பில் இன்னும் வரல' என்ற வசனங்களுடன் போஸ்டர் ஒட்டி, பரபர பட்டாஸை கொளுத்தியிருக்கிறார்.

இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

"சாமி எல்லாருக்கும் பொதுவானது!" - பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச்சென்ற ஆட்சியர்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் கிராமத்தில், ஆதி திராவிடர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வேங்கவயல் கிராமத்துக்கு இன்று நேரில் வந்து ஆய்வு செய்ததோடு, மக்களிடம் இது குறித்து விசாரித்தபோதுதான், இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.

இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
PPF

PPF கணக்கு... சில தெரியாத விஷயங்கள்..!

பொது சேமநல நிதி (PPF) என்பது 15 வருட கால முதலீடு எனப் பலரும் நினைக்கிறார்கள். இது உண்மை அல்ல. அதைவிட சற்று அதிக கால முதலீடு அது. ஏனெனில், பி.பி.எஃப் கணக்கில் 15 ஆண்டுகள் முதலீடு செய்வது முடிந்தவுடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில்தான் முதிர்வு அடையும்.

PPF கணக்கு தொடர்பாக முதலீட்டு ஆலோசகர் க.முரளிதரன் (www.vidurawealth.com) சொல்லும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
couple ( pixabay )

அந்தரங்க உறுப்பில் வாடை: ஆண்களும் பெண்களும் அறிந்துகொள்ள வேண்டியவை! #VisualStory

ன்பில் ஆரம்பிக்கப்படும் தாம்பத்ய உறவுக்கு, வாய் துர்நாற்றம், வியர்வை வாடையைப் போலவே சங்கடம் தரும் இன்னொரு விஷயம் அந்தரங்க உறுப்பில் வருகிற கெட்ட வாடை...

எதனால் இந்த வாடை வருகிறது..? வாடையைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது உள்பட இது தொடர்பான முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
விஜய், லோகேஷ் கனகராஜ்

விஜய் 67: வியக்கவைக்கும் விஜய் பட அப்டேட்

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. இந்த விழாவிற்கு முதல்நாள் வரை 'வாரிசு' பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது.

ஆடியோ ஃபங்ஷன் அன்றுதான் மொத்த டீமும் சென்னையில் வந்து இறங்கியது. படம், பொங்கல் ரிலீஸ் என்பதால் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தீயாய்ப் பரபரக்கின்றன.

இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
2022 Rewind Quiz

2022 Rewind Quiz: அரசியலில் புலியா நீங்க... இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க மக்களே!

தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க 2022-ம் ஆண்டில் நடந்த முக்கியச் சம்பவங்களை வைத்து QUIZ தயார் செய்திருக்கிறோம்.

கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க... விடையை டிக் அடிங்க... எவ்வளவு மார்க் எடுத்தீங்கன்னு கமென்ட்ல சொல்லுங்க!

லிங்க் ---->>> https://bit.ly/3Gk6Cok