Published:Updated:

Evening Post:'இந்தி'துன்புறுத்தல்- நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு-கிசுகிசு-நிதி திட்டமிடல் வழிமுறை

Vikatan Highlights December 28
Listicle
Vikatan Highlights December 28

நடிகர் சித்தார்த் கிளப்பிய 'இந்தி 'சர்ச்சை, `பாஜக எண்ணங்களை நிறைவேற்றும் திமுக' - சீமான் சொல்வது உண்மையா?, கிசுகிசு: மாஜி காக்கி போட்ட உத்தரவு!, புத்தாண்டு, பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள், நிதித் திட்டமிடலுக்கு தேவையான 8 தீர்மானங்கள்!, தங்கர்பச்சான் ஆவேச பேட்டி!


1
நடிகர் சித்தார்த்

" 'இந்தி'யில் பேசுமாறு துன்புறுத்தல்! " - நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டால் பரபரப்பு!

துரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியில் பேசுமாறு சொல்லி துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி, நடிகர் சித்தார்த் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு, சமூக ஊடகங்களில் பரபரப்பாக பற்றிக்கொண்டுள்ளது.

அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், இது குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி உள்ளார்.

பாஜக-வுடன் மோதல்

பொது விஷயங்கள் தொடர்பாக நடிகர் சித்தார்த் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக பாஜக அரசுக்கு எதிரான கருத்துகளையும் அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் கொரோனா பரவலின்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அப்படி பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், இருப்பதாக யாராவது வதந்தி பரப்பினால் புரளியை பரப்புவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக ட்வீட் செய்த சித்தார்த், " பொய் சொன்னால் அறை விழும்" என அதிரடியாக பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் சித்தார்த் மோடியை டேக் செய்து பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது. பின்னர் ஒருவழியாக இந்த விவகாரம் அடங்கியது.

'மதுரை விமான நிலையத்தில் இந்தி துன்புறுத்தல்'

சித்தார்த்தின் இன்ஸ்டாகிராம் பதிவு

இந்த நிலையில்தான், சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவில் , மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியில் பேசுமாறு துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக சித்தார்த் தனது பதிவில்,

* "மதுரை விமான நிலையத்தில் CRPF அதிகாரிகளால் நானும் என் பெற்றோரும் 20 நிமிடம் துன்புறுத்தலுக்குள்ளானோம். அவர்கள் வயதான எனது பெற்றோரின் பைகளில் இருந்த நாணயங்களை எடுக்கச் செய்தார்கள்.

* மேலும் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்ட போதும், அவர்கள் எங்களிடம் பலமுறை இந்தியிலேயே பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, 'இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்' எனக் கூறினர்.

* வேலையற்றவர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டுகின்றனர்" எனக் கூறியிருந்தார்.

சித்தார்த் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்

இந்த நிலையில், இந்த விவகாரம் ட்விட்டரில் #MaduraiAirport என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்டான நிலையில், அந்த பக்கத்தில் சித்தார்த்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

சு.வெங்கடேசன் பதிவு

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி-யான சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், "மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய இயக்குநரிடம் கோரியுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

அதேபோன்று மேலும் பலர், தங்களுக்கும் இதேபோன்ற அனுபவம் நேர்ந்துள்ளதாகவும், தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த பாதுகாப்பு அதிகாரிகளை விமான நிலையங்களில் நியமிக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் CISF வீரர்கள்தான் நிற்பார்கள். அதை சித்தார்த் தவறுதலாக CRPF எனக் குறிப்பிட்டுவிட்டதாக தெரிகிறது. இதைச் சுட்டிக்காட்டியும், இந்தியில் பேசச் சொல்லி துன்புறுத்தியாக சித்தார்த் கூறிய கருத்துக்கு எதிராகவும் பாஜக ஆதரவாளர்களால் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

பாஜக ஆதரவாளர்களின் பதிவு

" இந்த தோல்வியடைந்த நடிகர் சினிமா வாய்ப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாக கதறி அழுதுகொண்டிருக்கிறார். யாராவது அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

1. இந்தியில் பேசுவது துன்புறுத்தல் அல்ல

2. அவர்கள் ( பாதுகாப்பு அதிகாரிகள் CRPF அல்ல CISF

3. அவர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களே தவிர, அவரைப் போல் வேலையில்லாதவர்கள் அல்ல" என்ற ரீதியிலும் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.


2
சீமான்

`பாஜக எண்ணங்களை நிறைவேற்றும் திமுக' - சீமான் குற்றச்சாட்டு... ஒரு பார்வை!

நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க-வின் ‘பி’ டீம் என்று தி.மு.க-வினர் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். ‘என் அளவுக்கு பா.ஜ.க-வை யாரும் விமர்சிப்பதில்லை’ என்று கூறி, தி.மு.க-வினரின் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துவரும் சீமான், ‘பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணிவைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றும், தி.மு.க மறைமுகமாக பா.ஜ.க-வின் கொள்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிவருகிறது’ என்றும் கூறியிருக்கிறார்.

அவரது குற்றச்சாட்டுகள் உண்மையா..? இது குறித்த விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கிசுகிசு

கிசுகிசு: மாஜி காக்கி போட்ட உத்தரவு!

ஃபயர் துறை பாலிடிக்ஸ்

ஃபயர் துறைக்குள் நடக்கும் பாலிடிக்ஸ், முதன்மையானவர் கவனம் வரை போயிருக்கிறதாம். உச்ச பதவியில் இருப்பவரையே வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கிற அளவுக்கு என்ன நடந்தது என, காக்கி வட்டாரத்துக்குள்ளும் பரபரப்பு பற்றி எரிகிறது. காக்கி அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம்தான் ஃபயர் துறைக்குள் இவ்வளவு அமளி துமளி நடக்கக் காரணமாம். ‘இவர் அவருடைய ஆள்’, ‘அவர் இவருடைய ஆள்’ என ஆளாளுக்கு நடக்கும் கோஷ்டிப்பூசலை விசாரித்த முதன்மையானவருக்குத் தலை கிறுகிறுத்துப் போய்விட்டதாம்.

இது தவிர...

மாஜி காக்கி போட்ட உத்தரவு!

வாரிசுப் புள்ளியின் பிளாக் லிஸ்ட்!

துணிவானவரின் முடிவு!

கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள அரசியல் சீக்ரெட்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4

புத்தாண்டு, பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்புக் கட்டண ரயில்கள் குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
நிதித் திட்டமிடல்

நிதித் திட்டமிடலுக்கு தேவையான 8  தீர்மானங்கள்!

புது வருடம் 2023 பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் சில தீர்மானங்களை எடுத்து பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அவரின் வாழ்க்கையை வளமாக்க முடியும்.

அப்படிப்பட்ட முக்கியமான 8 நிதித் தீர்மானங்களை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
Naegleria fowleri ( Social media )

மனித மூளையை உண்ணும் அமீபா... பரிதாபமாக பலியான நபர் - அறிகுறிகள் என்ன?

"இது ஒரு செல் உயிரினம். பொதுவாக வெப்பம் மற்றும் தண்ணீர் அதிகம் உள்ள இடங்களில் இது போன்ற அமீபாக்கள் காணப்படும்.

இதற்கான அறிகுறி மூளைக்காய்ச்சல் மட்டுமே. இது மிகவும் அரியவகை என்பதால் இதை முழுவதும் குணப்படுத்துவதற்கான தீர்வு இதுவரை இல்லை..."

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
இயக்குநர் தங்கர்பச்சான்

"நாடகத்தனமான சினிமாக்கள்...!" - தங்கர்பச்சான் ஆவேச பேட்டி!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், ஆர்.வி. உதயகுமார், எஸ்.ஏ சந்திரசேகர், நடிகர் யோகி பாபு, கதாநாயகியாக அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து படத்தின் இயக்குநர் தங்கர்பச்சான், படத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை அதிதிபாலன் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

பேட்டியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...