Published:Updated:

Evening Post: சர்ச்சையில் ராஷ்மிகா-'ஸ்மார்ட் மீட்டர்' பாதகமானதா?கழுகார் அப்டேட்ஸ்-PANCARD மோசடிகள்!

Vikatan Highlights December 29
Listicle
Vikatan Highlights December 29

'தென்னிந்திய படம்னாலே ஐட்டம் சாங்தான்!' - சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா, மின் கணக்கீடு: 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் மக்களுக்கு பாதகமானதா?, கழுகார் அப்டேட்ஸ்! ரெட் கார்டு வாங்கிய பாஜக பிரமுகர், ராகுல் மீது CRPF குற்றச்சாட்டு, பான் கார்டு மோசடிகள்... தப்பிப்பது எப்படி?,


1
ராஷ்மிகா மந்தனா

'தென்னிந்திய படம்னாலே ஐட்டம் சாங்தான்!' - சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா

"பாலிவுட் பட வாய்ப்புக்காக ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கலாமா..?" என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் 'புஷ்பா' புகழ் ராஷ்மிகா மந்தனா.

கன்னட திரையுலகில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ராஷ்மிகா. அப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ராஷ்மிகாவிற்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ' கீதா கோவிந்தம்' படம் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றார்.

புகழைக் கொடுத்த 'புஷ்பா'

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'பான் இந்தியா' படமான 'புஷ்பா - தி ரைஸ்' படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அந்த படத்தில் இடம்பெற்ற 'சாமி... சாமி' பாடல் தென்னிந்தியாவில் மட்டுமல்லாது இந்தியிலும் வைரலானது.

இந்த படத்தினால் கிடைத்த புகழைத் தொடர்ந்தே, தமிழில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.

* பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய்யின் 'வாரிசு' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

* இதில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே... ரஞ்சிதமே...' பாடல் செம ஹிட் அடித்துவிட்ட நிலையில், ராஷ்மிகாவின் கேரியரில், அவரது 'கிராப்' கிடுகிடுவென ஏறிக்கொண்டிருக்கிறது.

விஜய் - ராஷ்மிகா

'காந்தாரா' வால் ஏற்பட்ட சர்ச்சை

இப்படி புகழின் உச்சாணிக்கொம்பில் ஏறிக்கொண்டிருப்பவர்கள், பேட்டியின்போதோ அல்லது திரையுலக விழாக்களிலோ கலந்துகொண்டு பேசும்போது பேசும் வார்த்தையில் கவனம் இல்லாமல் போய்விட்டால், அது அவர்களுக்கு சிக்கலைக் கொண்டுவந்துவிடும்.

அப்படித்தான் அவர் அண்மையில், பாலிவுட் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, ' தனது முதல் கன்னட படமான 'கிரிக் பார்ட்டி'யின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை சொல்லவில்லை என்றும், 'காந்தாரா' படத்தை அவர் பார்க்கவில்லை என்றும் கூறியது சர்ச்சையானது.

'தென்னிந்திய படம்னாலே ஐட்டம் சாங்தான்!'

இந்த நிலையில்தான் பாலிவுட் படங்களின் பாடல்களைப் புகழ்ந்தும், தென்னிந்திய படங்களின் பாடல்கள் வெறும் 'ஐட்டம்' பாடல்கள்தான் என்ற ரீதியிலும் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் ராஷ்மிகா.

பாலிவுட்டில் ராஷ்மிகா நடித்திருக்கும் 'மிஷன் மஞ்சு' திரைப்படம், வருகிற ஜனவரி 19-ம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய ராஷ்மிகா, பாலிவுட் படங்களின் ரொமான்டிக் பாடல்கள் தனக்குள் பல ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், அப்பாடல்களைக் கேட்டே தான் வளர்ந்ததாகவும் கூறினார்.

அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. அடுத்து அவர் பேசியதுதான் சர்ச்சையாகி விட்டது.

" தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா சாங், ஐட்டம் சாங் மற்றும் குத்துப்பாடல்கள்தான் அதிக அளவில் வருகிறது. மெலடி மற்றும் ரொமான்டிக் பாடல்கள் அதிகமாக வருவதில்லை. ஆனால் இந்தி திரைப்படங்களில் அப்படிப்பட்ட பாடல்கள் அதிகமாக இருக்கிறது" எனக் கூறினார்.

'மிஷன் மஞ்சு' இசை வெளியீட்டு விழாவில்...

தெலுங்கு திரையுலகம் கண்டனம்

இதுதான் கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகினரைக் கொதிக்க வைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கு திரையுலகில் அவரது இந்த பேச்சுக்கு, "பாலிவுட் பட வாய்ப்புக்காக ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கலாமா..?" என்ற ரீதியில் எதிர்ப்பு கருத்துகள் எழுந்துள்ளன.

* " ராஷ்மிகா மந்தனா வேறு ஊருக்கு மாறியவுடன் தனது முந்தைய ரசிகர் பட்டாளத்தை அவமதிப்பதற்கு ஒரு சிறப்பு திறமையை பெற்றுள்ளார். பெங்களூர்/ஹைதராபாத்/மும்பை.

* தென்னிந்திய படங்கள் அவருக்கு மசாலா மற்றும் ஐட்டம் சாங்ஸ்!

* ஆனால் அவரது ஆரம்ப கால வெற்றிக்கு கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான காதல் படங்களும், பிளாக்பஸ்டர் இசையும்தான் காரணம்" என AndhraBoxOffice.Com ட்வீட் செய்துள்ளது.

அதேபோன்று

"ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்த பிறகு, இப்போது அவர் நம் தென்னிந்திய திரைப்படத் துறையை குறைகூறி, தரம் தாழ்த்தி வருகிறார்!

* #TFI இல் வாய்ப்பு கிடைத்தபோது கன்னடத் திரையுலகுக்கும் அவர் இதையேதான் செய்தார். என்ன ஒரு பெண் இவர்?

* நீதி: ஒருமுறை ஏமாற்றுபவர், எப்போதும் ஏமாற்றுபவரே!" என Box Office - South India தரப்பில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ராஷ்மிகாவுக்கு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

" 'லைம் லைட்'டில் (limelight), அதாவது எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருப்பதற்கான தந்திரத்தை ராஷ்மிகா மிக நன்றாகவே கற்றுக்கொண்டுள்ளார்" எனப் பதிவிட்டு வருகின்றனர்.

அதே சமயம் "ராஷ்மிகா பேசியதில் என்ன தவறு?" எனக் கேட்டு இன்னொரு தரப்பு ரசிகர்கள் அவருக்கு ஆதரவான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.


2
மின் கட்டணம்

மின் கணக்கீடு: 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் மக்களுக்கு பாதகமானதா?

முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்திற்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய 'ஸ்டேடிக்' என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், குறிப்பிட்ட நாளில் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால் இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டுவிடும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் இந்த திட்டம் குறித்து மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

'ஸ்மார்ட் மீட்டர் திட்டம்' சரியானதுதானா...? இதன் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: ரெட் கார்டு வாங்கிய பாஜக பிரமுகர்!

"நாங்களும் நாலு காசு பார்க்க வேண்டாமா?"

- சுருட்டலுக்கு காய் நகர்த்தும் வாரிசு!

நிலச்சரிவு அபாயமுள்ள நீலகிரி மாவட்டத்தில், பெரிய அளவிலான கட்டுமானங்களை எழுப்பத் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. இதனால் அங்குள்ள நகராட்சிகளில் குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகளுக்கான அனுமதி வழங்கும் அதிகாரம்கூட மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுவிட்டது. பறிபோன இந்த ‘அட்சயப் பாத்திரத்தை’ மீட்பதற்காக தீவிரமாகி இருக்கிறார்கள் சில ஆளுங்கட்சி புள்ளிகள்...

கழுகார் அப்டேட்ஸில் மேலும்...

| மதுரை மேயரை எச்சரித்த நேரு! | மரத்தை வெட்டு... கட்டிங்கை நீட்டு... | புலம்பும் தாராபுரம் தி.மு.க! | டெல்லியில் ஒரு கால்... கோவையில் ஒருகால்... |

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ராகுல் காந்தி நடைப்பயணம்

பாதுகாப்பு  சர்ச்சை: ராகுல் மீது CRPF குற்றச்சாட்டு!

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. பல மாநிலங்களைக் கடந்து, கடந்த 24-ம் தேதி டெல்லியில் நுழைந்தது.

இந்த நிலையில், "பாரத் ஜோடோ யாத்திரை சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
சித்திரிப்புப் படம்

அதீத ஞாபக மறதி; மனைவியை காட்டுப்பகுதியில் விட்டுச் சென்ற கணவர்! 

யற்கை உபாதை கழிக்க காரிலிருந்து இறங்கிய மனைவியை, கணவன் ஞாபக மறதியில் காட்டுப்பகுதியில் விட்டுச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

தாய்லாந்து நாட்டில் விடுமுறையைக் கழிக்க சென்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
ஆதார்/ பான்கார்டு

பான் கார்டு மோசடிகள்... தப்பிப்பது எப்படி?

மக்கே தெரியாமல், நமது பான் கார்டை பயன்படுத்தி நிறுவனம் தொடங்கி மோசடி செய்வது, கடன் பெறுவது, வரி ஏய்ப்பு செய்வது என பல பல பான் கார்டு மோசடிகள் நடந்து வருகிறது.

இதிலிருந்து தப்பிப்பது எப்படி..? விளக்குகிறார் ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜு.

அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
Bad Breath ( Pixabay )

Doctor Vikatan: தைராய்டு இருந்தால் வாய் துர்நாற்றம் வருமா?

தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா?

சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


8
பொய்க்கால் குதிரை

பொய்க்கால் குதிரை: கமலின் கேமியோ, கிரேஸி மோகனின் முதல் படம்! 

80 & 90 ஸ் தமிழ் சினிமா

தீவிரமான உள்ளடக்கத்தைக் கொண்ட படங்களை எடுக்கும் ‘சீரியஸான’ இயக்குநர் என்கிற முகமும் கே.பாலசந்தருக்கு உண்டு. அதே சமயத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் பல முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களையும் இயக்கியவர்.

சில படங்களில் நகைச்சுவையுடன் சமூகக் கருத்துகளும் கலந்திருக்கும். சில திரைப்படங்கள் வெறுமனே சிரித்து மகிழ்வதற்காக உருவாக்கப்பட்டவை. அதில் ஒன்றுதான் ‘பொய்க்கால் குதிரை’.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...