Published:Updated:

Evening Post:ரிமோட் வாக்குப்பதிவு:எதிர்ப்பு ஏன்?- முன்னாள் MP மரணத்தில் திருப்பம்-விடைபெற்றார் பீலே!

Vikatan Highlights December 30
Listicle
Vikatan Highlights December 30

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: எதிர்ப்பு ஏன்?, தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர் மோடி!, திமுக முன்னாள் எம்.பி மரண வழக்கில் 'பகீர்' திருப்பம்,'விடைபெற்றார் கால்பந்து அரசன் பீலே!, Mutual Fund:இளைஞர்கள் மாற காரணம்?சினிமா விமர்சனம்: டிரைவர் ஜமுனா


1
வாக்குப்பதிவு இயந்திரம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: எதிர்ப்பு ஏன்?

புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடையே எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

குறையும் வாக்கு சதவீதம்

தங்களது சொந்த மாநிலங்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலரும் சொந்த மாநிலத்தைவிட்டு வெளிமாநிலங்களுக்குப் புலம்பெயர் தொழிலாளர்களாகச் செல்கின்றனர். இப்படிச் செல்பவர்களில் ஏராளமானோர், தேர்தல்களின்போது வாக்களிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

வெகு சிலரே தேர்தலின்போது சொந்த ஊர் சென்று வாக்களிக்கின்றனர். இதனால், அத்தகைய ஊர்களில் பதிவாகும் வாக்கு சதவீதம் குறைகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது மொத்தமாகவே 67.4 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. இதற்குப் புலம்பெயர் தொழிலாளர்களும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது.

ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கு ஏதுவாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் உருவாக்கியிருக்கிறது. இதனையடுத்து இந்த இயந்திரம் தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்க அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலை ஆணையம் அழைப்பு விடுத்துவருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் ( AP )

காங்கிரஸ் எதிர்ப்பு ஏன்

இதனிடையே நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையே இன்னும் கேள்விக்குறியாக இருப்பதால், வாக்குச்சீட்டு முறையே வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையையே சீர்குலைத்துவிடும் என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* " தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பிக்கையானது, தேர்தல் ஆணையத்தின் மீது மத்திய அரசால் கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக மீண்டும் மீண்டும் மீறப்பட்டுள்ளது.

* மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

* துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் தவறான பயன்பாடு குறித்த அச்சங்களுக்கு முறையாக தீர்வு காணப்படவில்லை.

* வாக்காளர்களும் கட்சிகளும் தேர்தல் முறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

இத்தகைய சூழலில், இந்த சந்தேகத்திற்கிடமான முறையை, பல தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் (Multi-constituency voting machine) மூலம் மற்ற இடங்களுக்கு நீட்டிக்க முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்.

* இது தேர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை கடுமையாக குறைத்து மதிப்பிட வைத்துவிடும்" எனக் கூறியுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்

'குஜராத் உதாரணம்'

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி கூடுதல் பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக தேர்தல் அட்டவணையை அறிவிப்பதில் தாமதம் செய்ததாக கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ்,

* " ஒவ்வொரு பிரச்னையின்போதும் தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

* குஜராத்தில், இந்த முறை, சந்தேகத்திற்கிடமான வாக்குப் பதிவை நாங்கள் கண்டோம்.

* வாக்குப்பதிவுக்கு முந்தையை கடைசி நேரத்தில் 10-12% வாக்குகள் பதிவானது. இது ஒவ்வொரு வாக்கும் வெறும் 25-30 வினாடியிலேயே பதிவானதைக் காட்டுகிறது. ஆனால் உண்மையில் இப்படி நடப்பது சாத்தியமற்றது.

இத்தகைய நிலையில், பல தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மற்ற இடங்களுக்கு நீட்டிக்க முடியுமா என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள்" எனக் கூறியுள்ளார்.

திருமாவளவனும் எதிர்ப்பு

இதனிடையே ரிமோட் வாக்குப்பதிவு முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க-வும் தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்துவிட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
பிரதமர் மோடி

தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர் மோடி!

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (30/12/2022 ) அதிகாலை 3:30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 99.

இது தொடர்பாக பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் இருக்கிறது" எனத் தன்னுடைய தாய்க்கு இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
முன்னாள் எம்.பி மஸ்தான்

திமுக முன்னாள் எம்.பி மரண வழக்கில் 'பகீர்' திருப்பம்... உறவினர்களே கொன்றது அம்பலம்!

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவுச் செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.பி மஸ்தான். இவர், சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தார். கடந்த 22-ம் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கத்தில் திடீரென மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. அவர் மரணத்துக்கு ஹார்ட்அட்டாக்-தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் அவர் உறவினர்களாலேயே காரில் வைத்துக் கொல்லப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

என்ன நடந்தது...? கொலை நடந்தது ஏன் என்பது உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


4
'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்

'நம்ம ஸ்கூல்' திட்டம் ஆபத்தானதா... கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்?

ரசுப் பள்ளிகளை மேம்படுத்த, தனியார்களிடம் நிதியுதவிகள் பெறும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' என்ற திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கல்வியாளர்களும் இந்த திட்டம் ஆபத்தான திட்டம் என்கிறார்கள். எதனால் இவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
பீலே

Pele: "மூன்று உலகக்கோப்பைகள்; முடிவுபெறாத சகாப்தம்"- விடைபெற்றார் கால்பந்து அரசன் பீலே!

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். கால்பந்து உலகின் கடவுளாக மதிக்கப்பட்டு உலகமெங்கிலும் ஆராதிக்கப்பட்ட ஒரு பெரும் கலைஞன் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறான்.

இந்த பயணம் அவனுக்கு அத்தனை சுலபமானதாக இருந்திருக்கவில்லை. எத்தனையோ வலிகள் எத்தனையோ வீழ்ச்சிகள் அத்தனையையும் கடந்துதான் இவன் கடவுளாக மாறினான்!

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
மியூச்சுவல் ஃபண்ட்

FD-க்குப் பதில் Mutual Fund...இளைஞர்கள் மாற காரணம்?

ளம் முதலீட்டாளர் கள் இன்று ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் பிற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த மாற்றத்துக்குப் பின்னால் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன.

அந்த காரணங்கள் என்ன என்பதை விளக்குகிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் சதீஷ்குமார்.

அவற்றை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
டிரைவர் ஜமுனா விமர்சனம்

சினிமா விமர்சனம்: டிரைவர் ஜமுனா

ன்பது ஆண்டுகளுக்குப் பின் 'வத்திக்குச்சி' பட இயக்குநர் கின்ஸ்லின் கையில் எடுத்திருக்கும் கதைக்களம்.

பக்கவாதத்தால் அவதியுறும் தாய், தந்தையின் இறப்பு, உதவாமல் ஓடிப்போன தம்பி, இவற்றால் தனியாளாகக் குடும்பத்தைச் சுமப்பது, ஓட்டுநர் தொழில்மீது உள்ள காதல் என முதற்பாதியில் வரும் டிரைவர் ஜமுனா கதாபாத்திரங்களுக்கான காட்சிகளில், ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...