Evening Post:'மக்கள் ஐடி': அவசியமா?-Sim swapping: புதிய மோசடி!-வீட்டுக் கடன் அடைக்க 3 உத்திகள்

'தமிழக அரசின் மக்கள் ஐடி' : அவசியமா... அநாவசியமா?, மணப்பெண்ணுக்கு திண்டாட்டம்... கொங்கு இளைஞர்களிடம் அரங்கேறும் மோசடி!, சிம் ஸ்வாப்பிங்: புதிய ஹைடெக் மோசடி!, வீட்டுக் கடனை விரைந்து அடைக்க அருமையான 3 உத்திகள்..!, ஆங்கிலப் புத்தாண்டு 2023 ராசிபலன்கள்!, சினிமா விமர்சனம்: 'ராங்கி'

'தமிழக அரசின் மக்கள் ஐடி' : அவசியமா... அநாவசியமா? - ஒரு பார்வை
தமிழக அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் தனித்துவமிக்க புதிய அடையாள எண்ணை வழங்க முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதில், "தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் ஒரு தனித்துவம் மிக்க அடையாள எண்ணை உருவாக்க விரும்புகிறது. மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் தகவல் தொகுப்பைத் தமிழ்நாடு அரசு உருவாக்க விரும்புகிறது.
அந்தத் தகவல் தொகுப்பை உருவாக்குவதன் மூலம், திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துதல் ஆகியவை மேம்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமிக்க ஓர் அடையாளம் உருவாக்கப்படும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் 'மக்கள் ஐடி' தேவையில்லை" என பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. என்ன காரணங்களை முன்வைத்து அந்த கட்சி இதனை எதிர்க்கிறது..?
இது குறித்து அரசியல் ஆய்வாளர் துரை கருணாவின் பார்வை என்னவாக இருக்கிறது..?
'மக்கள் ஐடி' தேவையில்லை" என்ற பாஜக-வின் கருத்துக்கு தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் சொல்லும் விளக்கம் என்ன..?

மணப்பெண்ணுக்கு திண்டாட்டம்... கொங்கு இளைஞர்களிடம் அரங்கேறும் மோசடி!
ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கோவை மாவட்டங்களில் 40 வயதைக் கடந்தும், திருமணம் ஆகாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இவர்களைக் குறிவைத்து மோசடி செய்யும் கும்பல்களும் அதிகரித்திருப்பது கொங்கு மண்டலத்தின் புதிய தலைவலியாகிவருகிறது.
இந்தத் திருமண மோசடிக் கும்பலால், அண்மையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள, கோயில்பாளையம் புதூரைச் சேர்ந்த 43 வயதான பழனிசாமியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏமாற்றப்பட்டிருக்கிறார்.
மேலும், குன்னத்தூர், தோட்டத்துப்பாளையம், பங்களாபுதூர் பகுதிகளிலும் இதே போன்று மோசடித் திருமணங்கள் நடத்திருப்பதாக வந்த அடுக்கடுக்கான புகார்களும்தான் இந்த மோசடியின் அதிர்ச்சி பக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச அரங்குகளுடன் சென்னைப் புத்தகக் காட்சி!
ஜனவரி மாதம் வந்தாலே புத்தக விரும்பிகளுக்குக் குதூகலம் தொடங்கிவிடும். காரணம் ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைப் புத்தகக் காட்சி.
புதினம், அறிவியல், ஆரோக்கியம், சமூக சிந்தனை எனப் பல்வேறு துறை சார்ந்த லட்சக்கணக்கான புத்தகங்கள், 800+ அரங்குகள், தினமும் நடைபெறும் இலக்கிய மன்றங்கள், கண்காட்சிகள், சொற்பொழிவு என்று களைகட்டும் பபாசி புத்தகக் காட்சி, இம்முறை வரும் ஜனவரி 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
புத்தகக் காட்சி குறித்த மேலும் விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

சிம் ஸ்வாப்பிங் என்றால் என்ன? இது ஒருவகை ஹைடெக் மோசடி!
இன்றைய உலகம், மோசடிகள் என்னென்ன ரூட்டுகளில், என்னென்ன டைப்புகளில் வரும் என்று தெரியாத உலகமாக மாறி வருகிறது. எப்போதும் 'அலெர்டா இருடா ஆறுமுகம்' என்ற மோடில்தான் நாம் அனைவருமே இருக்க வேண்டியதாக இருக்கிறது. ஒவ்வொரு தினமும் புதுப்புது மோசடிகள் காளான் போல முளைத்து, நம்முடைய காசைக் கபளிகரம் செய்துவிடுகின்றன.
ஆனால் மக்களுக்கு இந்தப் புதுப்புது மோசடிகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. சமீப காலமாக பலரையும் பணத்தையும் கொள்ளை அடிக்க வழிசெய்துகொடுத்துக் கொண்டிருக்கிறது "சிம் ஸ்வாப்பிங் (Sim Swapping)" மோசடி.
அது என்ன சிம் ஸ்வாப்பிங்... இந்த முறையில் எப்படி மோசடி நடைபெறுகிறது..?

வீட்டுக் கடனை விரைந்து அடைக்க அருமையான 3 உத்திகள்..!
மாதச் சம்பளக்காரர் களுக்கு மாதத்தின் ஆரம்பத்தில் இரண்டு குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) வருவது வழக்கம். முதல் எஸ்.எம்.எஸ், 'உங்கள் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப் பட்டுள்ளது' என்பதாக இருக்கும். இரண்டாவது எஸ்.எம்.எஸ், 'உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இ.எம்.ஐ பிடித்தம் செய்யப்பட்டுள்ளது' என்பதாக இருக்கும். இந்த நிலையில், மீதமுள்ள சொற்ப சம்பளத்தைதான் இதர செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டிய கஷ்டமான நிலை.
இத்தகைய சூழலில், வீட்டுக் கடனை விரைந்து அடைக்கும் வகையிலான லாபகரமான மூன்று உத்திகளைச் சொல்கிறார் நிதி ஆலோசகர் ஏ.ஜி.வி.ஶ்ரீநாத் விஜய் (இணை நிறுவனர், https://gbvmfservices.in/).

ஆங்கிலப் புத்தாண்டு 2023 ராசிபலன்கள்!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்.

சினிமா விமர்சனம்: 'ராங்கி' - த்ரிஷாவின் ஒன் வுமன் ஷோ ஈர்க்கிறதா?
ஒரு போலி ஃபேஸ்புக் கணக்கினால் உருவாகும் சர்ச்சை, எப்படிச் சர்வதேச தீவிரவாதம் அளவுக்குச் செல்கிறது என ஒரு சுவாரஸ்யமான கதைக் கருவைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
ராங்கி என்னும் போல்டான பூச்சுடன் தையல்நாயகியாக த்ரிஷா. கொஞ்சம் க்ரே ஷேடு கலந்த, அதே சமயம் அரசியல் ரீதியாகப் பண்பட்ட ஓர் ஆழமான பாத்திரத்தைக் கச்சிதமாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.
சர்வதேச பிரச்னைகள், ஃபேஸ்புக் ஆபாச வீடியோ, தீவிரவாதம் எனப் பல தளங்களில் பயணிக்கும் இந்த 'ராங்கி' படமாக நம்மை ஈர்க்கிறாளா? பேசப்பட்டிருக்கும் அரசியல் சார்ந்த விஷயங்களில் தெளிவு இருக்கிறதா?