Published:Updated:

Evening Post:அதிமுக -பாமக: அதிகரிக்கும் மோதல்!-மிஸ்டர் கழுகு-வரிச் சலுகை முதலீடு சரியா?-'ஹேராம்'ஏன்?

Vikatan Highlights January 2
Listicle
Vikatan Highlights January 2

அதிமுக-வைத் தொடர்ந்து சீண்டும் பாமக... மாறுமா கூட்டணி கணக்குகள்? ,பணமதிப்பிழப்பு நடவடிக்கை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!, மிஸ்டர் கழுகு,கடுகடுத்த ப.சிதம்பரம்!, " 'ஹேராம்' எடுத்தது அதனால்தான்..!": கமல் - ராகுல் உரையாடல், வரிச் சலுகைக்காக முதலீடு செய்யலாமா?விஜய்க்கு அட்வைஸ்!


1
ராமதாஸ் - அன்புமணி

அதிமுக-வைத் தொடர்ந்து சீண்டும் பாமக... மாறுமா கூட்டணி கணக்குகள்? 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து அதிமுக-வைச் சீண்டும் வகையில் பேசி வரும் நிலையில், அதிமுக தரப்பிலிருந்து இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதால், இவ்விரு கட்சிகளின் கூட்டணி கணக்குகள் மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அன்புமணியின் அரசியல் கணக்கு

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தை முன்வைத்து எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அந்தக் கட்சியில் பிளவை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஓபிஎஸ், தினகரன் மற்றும் சசிகலாவுடன் சமாதானத்துக்கு எடப்பாடி தயாராக இல்லாத சூழலில், இது தொடர்பான வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் சரி அல்லது சின்னம் முடக்கப்பட்டாலும் சரி, அது நிச்சயம் அதிமுக-வின் வாக்கு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்தும்.

இதை கருத்தில்கொண்டுதான் பாமகவின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ், வரவிருக்கும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி என அறிவித்து, அதனை நோக்கிய செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

அவர் பாமக தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கொடியை ஏற்றிவைத்து நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார் அன்புமணி. தவிர, ஏற்கெனவே கட்சிப் பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

மறுபுறம், போதைப்பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யப் போராட்டம், தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மூன்று நாள் நடைப்பயணம், அரியலூர் - சோழர் பாசன திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி நடைப்பயணம் என பம்பரமாகச் சுழன்று வருகிறார் அன்புமணி.

அதிமுகவை சீண்டிய அன்புமணி

இந்த நிலையில்தான், கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதியன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "இன்றைய சூழலில் பாமக எந்த கூட்டணியிலும் இல்லை. 2026-ல் பாமக தலைமையிலான கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வகுக்க உள்ளோம். அது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

அன்புமணியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தினாலும், அதிமுக தரப்பில் அதற்கு பெரிதாக ரியாக்சன் வெளிப்படவில்லை.

New Year Sale

இந்த நிலையில்தான், கடந்த டிசம்பர் 30-ம் தேதியன்று நடைபெற்ற பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்,

* "சில கட்சிகள் விளம்பர அரசியல் செய்துவருகிறார்கள். ஒரு கட்சி என்ன செய்கிறது என்பதை செய்தியை பார்த்துதான் தெரிய வருகிறது.

* ஒருவர் வாட்ச் காட்டுகிறார். ஒருவர் அடுக்கு மொழியில் பேசுகிறார். நமக்கு தெரிந்தது வளர்ச்சி அரசியல். நமக்கான அங்கீகாரம் வரும்.

* தமிழக மக்களுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை. தமிழகத்தில் அடுத்த மிகப்பெரிய கட்சி நாம்தான். களம் நன்றாக உள்ளது.

* அதிமுக 4 ஆக உடைந்துள்ளது. திமுக மீது பலமான விமர்சனம் உள்ளது. மற்ற கட்சிகளின் சத்தம் மட்டுமே ஒலிக்கிறது.

தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் தொடங்கி 10 ஆண்டுகளுக்குள் முடிந்தேபோனது. கட்சியின் கொள்கை எத்தனை மக்களை சென்றடைகிறது என்பது முக்கியம். எண்ணிக்கை அல்ல. கடந்த தேர்தலில் முக்கிய முடிவு எடுத்தது நமக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதை நோக்கிதான்" எனக் கூறியிருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக பதிலடி

இதில், "அதிமுக 4 ஆக உடைந்துள்ளது" என அவர் பேசியதுதான் அதிமுக தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக-வால் தான் பாமகவிற்கு சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் இடம் கிடைத்தது.

பாமகவுக்கு அடையாளம் குடுத்ததே நாங்கதான்; நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால?

பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த முடியாது. அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். சிறுமையான கருத்தை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையில் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டாம். சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்" எனக் கூறினார்.

கூட்டணி கணக்குகள் மாறுமா?

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், " பாமக தலைமையில்தான் கூட்டணி" என அன்புமணி தனி ஆவர்த்தனம் செய்வதைப் பார்த்தால், அதிமுக, திமுக கூட்டணியில் இடம்பெறாத அல்லது வெளியேற்றப்பட்ட கட்சிகளுடன் சேர்ந்து 2016 தேர்தலைப் போன்று தனித்த கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிலும், அதிமுக கூட்டணியில் பாஜக ஒருவேளை இடம்பெறாமல் போனால் நிச்சயம் அந்தக் கட்சியும் பாமக கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஆனால், இதெல்லாம் இப்போதைக்கு உள்ள சூழ்நிலையின் அடிப்படையிலான கணக்குதான். ஒருவேளை தேர்தல் நெருக்கத்தில் வழக்கம்போல் பாமக பல்டி அடித்தால், அப்போது நிலை வேறாகிவிடும்!


2
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ( vikatan )

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

2016 நவம்பர் 8 -ல் அமல்படுத்தப்பட்ட ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கி உள்ளது. 5 நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தங்களது தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

தீர்ப்பைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


3
மிஸ்டர் கழுகு

மிஸ்டர் கழுகு: "திமுக-வுக்குப் போயிடுங்க..." - அட்வைஸ் கொடுத்த பா.ஜ.க நிர்வாகிகள்!

23% வேணும்... அடம்பிடிக்கும் மேயர்!

தென்மாவட்ட மாநகராட்சி ஒன்றில், ஆளுங்கட்சி மேயரின் நடவடிக்கையால் தி.மு.க கவுன்சிலர்களே கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். எந்த வேலையாக இருந்தாலும், "என் கைக்கு 23% வந்தால் மட்டுமே அதற்கான கோப்புகளில் கையெழுத்துப் போடுவேன்" என்று அடம்பிடிக்கிறாராம். ஒரு சதவிகிதம் குறைந்தால்கூட கோபப்படுகிறாராம். "அது என்ன 23 சதவிகிதம்?" எனக் கேட்டால், "அதுதான் எனக்கு ராசியான நம்பர்" எனச் சிரிக்காமல் சொல்கிறாராம்.

மிஸ்டர் கழுகுவில் மேலும்...

விஜய்க்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள்..!

எம்.எல்.ஏ-க்கு எதிரா 'நோட் அனுப்பிய உளவுத்துறை!

ஆட்டம்போடும் ஒன்றியம்... அரவணைக்கும் அமைச்சர்!

டி.டி.வி.தினகரனின் நம்பிக்கை ஈடேறுமா?

அனைத்தையும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

"கொள்ளையடிக்கச் சொல்கிறீர்களா?"- மகன் குறித்து கேள்விக்கு கடுகடுத்த ப.சிதம்பரம்!

`வறுமையில் வாடும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கார்த்தி சிதம்பரம் ஒரு 100 ரூபாய் கொடுக்க முடியாதா?' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் காங்கிரஸ் நிர்வாகி கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
வரிச் சலுகை

வரிச் சலுகைக்காக முதலீடு செய்யலாமா?

டுத்த 90 நாள்களுக்குள் நடப்பு (2022-23) நிதியாண்டு முடிவுக்கு வந்து விடும். வரிதாரர்கள் தங்களுக்கு இந்த ஆண்டு கிடைத்த வருமானம், 31.03.2023 வரை வர வேண்டிய வருமானம், இதர வருமான வகைகள் ஆகியவற்றைக் கூட்டி வரிக்கணக்கை தயார் செய்ய வேண்டிய நேரமிது.

இதற்கு என்னென்ன விஷயங்களை நாம் தயார் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
கமல், ராகுல்காந்தி

" 'ஹேராம்' எடுத்தது அதனால்தான்..": கமல்- ராகுல் சுவாரஸ்ய உரையாடல்!  

நூறு நாள்களைக் கடந்து தொடரும் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையில், கடந்த டிசம்பர் 24-ம் தேதி அன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ராகுலுடன் இணைந்து பங்குபெற்றார். அப்போது எடுக்கப்பட்ட ராகுல், கமல் உரையாடலின் காணொளி தற்பொழுது ராகுல் காந்தியின் யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது.

அதில் ராகுல் காந்தி, கமலுக்கு புலி ஓவியத்தை பரிசாக அளித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்களிடையே நடைபெற்ற உரையாடலின் சுவாரஸ்யமான பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
விஜய், ஜேம்ஸ் வசந்தன்

'வாரிசு' விழா: விஜய்க்கு ஜேம்ஸ்வசந்தன் அட்வைஸ்! 

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா, கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி, அவர் கூறிய சில அட்வைஸ், புதிய ஸ்டைலில் தனது ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் என அனைத்துமே கடந்த வாரம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தது.

இந்த நிலையில், இந்த விழாவைத் தொடர்புபடுத்தி விஜய்க்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அட்வைஸ் செய்துள்ளார். அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...