Published:Updated:

Evening Post: 'நீட்': சட்டப் போராட்டத்திலும் பின்னடைவா?-தேமுதிக-வினர் மனநிலை-10 நிதித் தீர்மானங்கள்!

Vikatan Highlights January 4
Listicle
Vikatan Highlights January 4

'நீட்': சட்டப் போராட்டத்திலும் தமிழக அரசுக்கு பின்னடைவா?, காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில், விஜயகாந்த் உடல்நிலையும் தேமுதிக-வினர் மனநிலையும்!, வாழ்வில் வளம் சேர்க்கும் 10 நிதித் தீர்மானங்கள்!, இருமல் டானிக் குழந்தைகளுக்கு உயிரிழப்பு வரை ஏற்படுத்துமா? ,


1
நீட் தேர்வு

'நீட்': உச்ச நீதிமன்றம் கண்டிப்பு... சட்டப் போராட்டத்திலும் பின்னடைவா?

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில், தமிழக அரசு தொடர்ந்து வாய்தா கேட்பது குறித்து உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டி உள்ளது இவ்விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட ரீதியான போராட்டத்திற்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

நீட் விலக்கு மசோதா

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு நிச்சயமாக விலக்குப் பெறுவோம்' என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான காரணங்கள் தொடர்பாகப் பரிந்துரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு, செப்டம்பர் 13-ம் தேதி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், குடியரசுத் தலைவருக்கோ மத்திய அரசுக்கோ அந்த மசோதாவை அனுப்பாமல் ஆளுநர் ஆர்.என். ரவி நீண்ட நாட்களாக தன்னிடமே வைத்துக்கொண்டிருந்தார். பின்னர் இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு அவர் அதனை திருப்பி அனுப்பி, அதில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் அவருக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் அதனை நிலுவையில் வைத்திருந்த நிலையில், பல்வேறு மட்டங்களிலிருந்தும் எழுந்த அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே, ஒருவழியாக அந்த மசோதாவை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

திரெளபதி முர்மு

கிடப்பில் போட்ட குடியரசுத் தலைவர்

இந்த நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை. அந்த மசோதா அவரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில்தான் உள்ளது.

* நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் மத்திய அரசு இருப்பதால், குடியரசுத் தலைவரும் அதற்கு மாறான நிலைப்பாட்டை மேற்கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது.

* அதன் காரணமாகத்தான் அவர் தமிழக அரசு அனுப்பிய மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டார்.

* இத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே தமிழகத்தில் நடந்து முடிந்துவிட்டது.

* 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தைப் பார்க்கும்போது, சட்ட ரீதியாகவும் தமிழக அரசுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்றே தெரிகிறது.

உச்ச நீதிமன்றம்

வாய்தா கேட்ட தமிழக அரசு

மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் காரணமாக தமிழக ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுவதாக கூறி, அதனை ரத்து செய்யுமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 'நீட்' விலக்கு சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ரிட் மனுமீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைக்க தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள் தமிழக அரசின் ரிட் மனுமீதான விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் திரு. அஜய் ரஸ்தோகி, திரு. பேலா திரிவேதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

கண்டிப்பு காட்டிய நீதிபதிகள்

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, "தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளதால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்" எனக் கேட்டார்.

ஆனால், அவரது இந்த கோரிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற ரிட் மனுக்களை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்க முடியாது என்றும், உச்ச நீதிமன்றம் ஒன்றும் கிடங்கு அல்ல என்றும், நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றும் மிக காட்டமாக கூறினர்.

New Year Sale

* " இம்மசோதா குடியரசுத் தலைவரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதன் மூலம், 'நீட்' சட்டத்தின் அடிப்படைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

* இனியும் ஆளுநர், குடியரசுத் தலைவரைக் காரணம் கூறி வழக்கில் மீண்டும் கால அவகாசம் கோரினால், உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என தமிழக அரசை எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்தகட்ட விசாரணைக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசமே உள்ள நிலையில், அதற்குள் குடியரசுத் தலைவர் 'நீட்' விலக்கு மசோதா மீது முடிவெடுப்பாரா என்பது கேள்விக்குறியே.

இதனால் தற்போதைய சூழ்நிலையில், 'நீட்' தேர்வுக்கு எதிரான சட்ட ரீதியான போராட்டத்திலும் தமிழக அரசுக்கு பின்னடைவான நிலையே காணப்படுகிறது.


2
அண்ணாமலை

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு: அண்ணாமலை பதில்! 

அண்மையில் தமிழக பா.ஜ.க-வில் மாநில பொறுப்பிலிருந்த காயத்ரி ரகுராம், நேற்று அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ``அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. உண்மையான தொண்டர்கள் அண்ணாமலையால் விரட்டியடிக்கப்படுவதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காயத்ரி ரகுராம் விலகல், அவர் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது.

அவர் அளித்த பதிலை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
திருமகன் ஈவெரா - இவிகேஎஸ் இளங்கோவன்

திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ காலமானார்! 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன். இவரின் மகன் திருமகன் ஈ.வெ.ரா (46) இன்று மாரடைப்பால் காலமானார்.

சுமார் 12 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்

விஜயகாந்த் உடல்நிலையும் தேமுதிக-வினர் மனநிலையும்!

புரட்சிகர வசனங்களினாலும் அதிரடியான சண்டைக் காட்சிகளாலும் தமிழ்த் திரையுலகின் `புரட்சிக் கலைஞராக' வலம் வந்தவர் விஜயகாந்த்.

இப்போது உடல் நலக்குறைவால் பேச வார்த்தையில்லாமலும் எழுந்து நிற்க பலமில்லாமலும் வீல் சேரில் அமர்ந்திருக்கும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

முன்பு `கேப்டன்... கேப்டன்....' என மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்த தொண்டர்கள், இன்று தழுதழுத்தக் குரலில் கண்ணீர் ஏந்தி நிற்பதைக் காணும்போது `காலம்தான் எவ்வளவு கொடுமையானது' என்ற வரிகளே நினைவுக்கு வருகின்றன.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
சேமிப்பு

வாழ்வில் வளம் சேர்க்கும் 10 நிதித் தீர்மானங்கள்!

புத்தாண்டு வந்துவிட்டது. அனைவரும் புதிய ஆரம்பத்துக்குத் தயாராகிவிட்டோம். புத்தாண்டில், புது மனிதராக புதிய வாழ்க்கை முறையைப் (Lifestyle) பின்பற்ற தீர்மானம் போடுகிறோம்.

புத்தாண்டில் நமது தனிப்பட்ட நிதி தொடர்பான பின்வரும் 10 தீர்மானங்களை நிறைவேற்றி, அதை வாழ்க்கையில் தொடர்ந்து பின்பற்றுவது மூலம் வாழ்வில் கூடுதல் வளங்களைச் சேர்க்க முடியும்.

நிதி ஆலோசகர் கிஷோர் சுப்ரமணியன் ( நிறுவனர், https://www.shreeconsultants.in) சொல்லும் அந்த 10 தீர்மானங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
இருமல் டானிக் ( மாதிரிப்படம் )

இருமல் டானிக் குழந்தைகளுக்கு உயிரிழப்பு வரை ஏற்படுத்துமா? மருத்துவரின் எச்சரிக்கை!

மீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில், இருமல் டானிக் பருகிய குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக வந்திருக்கும் செய்தி அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது.

மருத்துவர்களிடம் காத்திருக்க வேண்டுமே என்று கருதியும், மருத்துவர் கட்டணத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும், பெற்றோர்கள் நேரடியாக மருந்தகங்களில் இருமல் டானிக்குகள் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போக்கு இருப்பதைக் காண முடிகிறது. இது ஆபத்தான பழக்கம்.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா இது குறித்து தெரிவித்துள்ள விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
லெஜண்ட் சரவணன்

மிஸ்டர் மியாவ்: ‘லெஜண்ட்’ -  அண்ணாச்சியின் உறுதி!

ஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. ஆனாலும், அஜித்தின் மேனரிசம் தொடங்கி ஆர்ட் டைரக்‌ஷன் வொர்க் வரை ஈர்ப்பான விஷயங்களும் நிறைய இருக்கின்றனவாம். ‘பெரிய அளவுக்கு ஹைப் ஏற்ற வேண்டாம்’ என அஜித் சொன்னதன் பேரில்தான், ட்ரெய்லரில் இந்த அளவுக்கு அடக்கிவாசித்தார்களாம்...

மிஸ்டர் மியாவில் மேலும்...

‘லெஜண்ட்’ -  அண்ணாச்சியின் உறுதி!

சாதித்த ' ராங்கி'

ரஜினியின் அடுத்த இயக்குநர்

உலக நடிகரின் உடல்நிலை

சூடான கோலிவுட் செய்திகளை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...