Published:Updated:

Evening Post: 'தமிழ்நாடு': ஆளுநரின் கசப்பு! - அதிமுக-வில் அடுத்த வாரிசு - ட்விட்டர் மூலம் பணமோசடி!

Vikatan Highlights January 5
Listicle
Vikatan Highlights January 5

'தமிழ்நாடு': ஆளுநரின் கசப்பும் அண்ணாவின் விளக்கமும்!, கழுகார் அப்டேட்ஸ்: அதிமுக-வில் அடுத்த வாரிசு, ராகுல் நடைபயணம்... மாற்றம் வருமா?, ட்விட்டர் மூலம் பணமோசடி... சிக்காமல் தப்பிப்பது எப்படி?, மது அருந்தினால் குறட்டை வராதா..? 'ஜெயிலர்' - லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!


1
ஆளுநர் ஆர்.என் ரவி

'தமிழ்நாடு': ஆளுநரின் கசப்பும் அண்ணாவின் விளக்கமும்!

மிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடு, மொழி உணர்வு உள்ளிட்ட உணர்வு சார்ந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது 'தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு குறித்து எதிர்ப்பு தெரிவித்து பேசி இருப்பதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பி உள்ளன.

" 'தமிழ்நாடு' அல்ல 'தமிழகம்' "

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிப் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அப்போது,

* " தமிழகத்தில் வித்தியாசமாக ஒரு அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் 'நாங்கள் திராவிடர்கள்' என்று சொல்கிறார்கள்.

* இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், தமிழ்நாடு அதை வேண்டாம் என்று சொல்கிறது.

* 'தமிழ்நாடு' என்பதைவிட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை நாம் முறியடிக்க வேண்டும். எது உண்மை என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு

அவரது இந்த பேச்சுக்குத்தான் தமிழ் உணர்வாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

* "இனி 'தமிழ்நாடு' என்பதை உரக்கச் சொல்வோம், அப்படியே எழுதுவோம்" என தமிழார்வலர்கள் ட்விட்டரில்' #தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக்கை இன்று ட்ரெண்ட் செய்தனர்.

ட்விட்டரில் ட்ரெண்ட்

கூடவே மதராஸ் மாநிலத்தை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956 -ம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து செய்த உயிர் தியாகம், 1969 -ம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றியதையும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

'தமிழ்நாடு' பெயர் சூட்டப்பட்ட வரலாறு

'மதராஸ் மாநிலம்' 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டதன் பின்னணி, அந்தப் பெயர் சூட்ட அப்போது காங்கிரஸ் கட்சியினரும், மத்திய அரசும் தெரிவித்த எதிர்ப்புக்கும் அண்ணா என்ன பதிலளித்தார் என்பதையும் பார்க்கலாம்...

'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை மாற்றி 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956, ஜூலை 27-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி, 76 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார். சங்கரலிங்கத்தின் மறைவு இந்தப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது.

அண்ணா

1957-ல் திமுக முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தபோதே 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் நுழைந்தது. 1957, மே 7-ம் தேதி வாக்கெடுப்புக்கு வந்த திமுக-வின் தீர்மானத்துக்கு 42 பேர் ஆதரவாகவும், 127 பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அந்தத் தீர்மானம் அப்போது தோல்வியடைந்தது.

அதன் பிறகு 1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த திமுக ஜூலை 18-ம் தேதி `மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து 23.11.1968-ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969, ஜனவரி 14-ல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' என அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எதிர்ப்புக்கு அண்ணாவின் விளக்கம்

முன்னதாக தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய அண்ணா, " தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்னாள் இருந்த வெங்கட்ராமன் அவர்கள், “ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம் திருத்தி எழுதப்பட வேண்டிவரும், அதனாலே சிக்கல்கள் விளையும்” என்றெல்லாம் சொன்னார்கள்.

அதிலிருந்து அவர்கள் வெளிநாடுகளுக்கெல்லாம் போய் வந்தார்கள் என்பதைத் தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாகச் சிக்கல்கள் இருக்கின்றனவா என்பதைக் கவனப்படுத்தவில்லை.

New Year Sale

மதிப்பிற்குரிய நண்பர் பாலசுப்பிரமணியம் அவர்கள் எடுத்துச் சொன்னபடி “கோல்டு கோஸ்ட்” என்பது “கானா” ஆகி விட்டது. அதனால் எந்தவிதமான சர்வ தேசச் சிக்கல்களும் ஏற்பட்டுவிடவில்லை.

தமிழ்நாடு தனி நாடாகி இந்தப்பெயரை இடவில்லை, இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்து கொண்டு இந்தப்பெயரை இடுவதால் இதிலே சர்வதேசச் சிக்கல்கள் எழுவதற்கு நியாயமில்லை.

ஆகவே, இந்தத் தீர்மானத்தை அனைவரும் தங்கள் தங்கள் கட்சியின் சார்பில் ஆதரிக்க வேண்டு மென்பதை ஒருகடமையுணர்ச்சியாகக் கொண்டதற்காக மிக்க மகிழ்ச்சியடை கிறேன் " என்றார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில், "நாட்டுக்குள்ளேயே ஒரு நாடா? இது பிரிவினை வாதம் இல்லையா?" என அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசில் இருந்தவர்கள் கேள்வி எழுப்பியபோது, " திருத்திக்கொள்ளுங்கள். இந்தியாவே ஒரு நாடு அல்ல. மாநிலங்களின் தொகுப்பு" எனப் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநரின் 'தமிழ்நாடு' குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: அதிமுக-வில் அடுத்த வாரிசு முதல் அமைச்சரின் பழைய பாசம் வரை...!

தேர்தலுக்குத் தயாராகும் தென்னவர்...

காலை வாரக் காத்திருக்கும் சின்னவர்!

நாட்டின் தென்கோடி முனையில் இருந்து எம்.பி-யாகி, இரண்டு முறை மத்திய அமைச்சராக பதவி வகித்த ‘தங்கமான’ அரசியல்வாதிக்கு இன்னமும் ஆசை தீரவில்லையாம். கடைசி வாய்ப்பாக 2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடும் கனவில் இருக்கிறார் என்கிறார்கள்.

சமீபத்தில் டெல்லி சென்ற அவர், பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து தனது விருப்பத்தைப் பணிவுடன் முன்வைத்தாராம். போய்விட்டு வந்த வேகத்தில், கடந்த தேர்தலில் தன் காலை வாரிய பிரச்னைகளை எல்லாம் கையிலெடுத்து, அதற்கு நேர் எதிராகப் பேச ஆரம்பித்துவிட்டாராம்.

கழுகார் அப்டேட்ஸில் மேலும்...

அ.தி.மு.க-வில் அடுத்த வாரிசு...

ஆய்வு செய்த மத்திய அமைச்சர்... கலக்கத்தில் குவாரி உரிமையாளர்கள்!

அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு தாரைவார்த்த அமைச்சர்!

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
டெய்சி சரண் - ஷர்மிகா சரண்

டாக்டர் ஷர்மிகா ' மொத்த' வைத்தியசாலை! 

‘ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு’ன்னு பேசினது சூர்யா. ‘ஒரேயொரு குலோப்ஜாமூன் சாப்பிட்டீங்கன்னா உடனே 3 கிலோ வெயிட் ஏறிடும்’னு பேசினது யார்யான்னு பாத்தா அதுவும் நம்ம டாக்டர் ஷர்மிகாதான்.

சோசியல் மீடியால என்ன பேசினா 'Followers' கிடைப்பாங்கனு ரத்தம், சதை, நாடி, நரம்பெல்லாம் தெரிஞ்ச ஒரு வெயிட்டு கையாலதான் இப்படி எல்லாம் பேச முடியும். 2100 ஆம் ஆண்டுவரை மருத்துவத்துறை சார்ந்த காமெடிகள் எல்லாம் பண்ணிட்டாங்க.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ராகுல் யாத்திரை

ராகுல் நடைபயணம்... மாற்றம் வருமா? 

முன்பு, ராகுல் காந்தியெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று பா.ஜ.க தலைவர்கள் சொல்லிவந்தனர். அந்த நிலையை ராகுல் காந்தியின் நடைப்பயணம் மாற்றியிருக்கிறது.

இன்றைக்கு, பொதுக்கூட்டமாக இருந்தாலும், தேர்தல் பிரசாரமாக இருந்தாலும், செய்தியாளர்கள் சந்திப்பாக இருந்தாலும், ராகுல் காந்தியைப் பற்றியோ, அவரின் நடைப்பயணத்தைப் பற்றியோ பா.ஜ.க தலைவர்களால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இந்த நிலையில், ராகுலின் நடைபயணம் மாற்றங்களுக்கான விதையை தூவியிருக்கிறதா? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
மும்பையில் ட்விட்டர் மூலம் பணமோசடி!

ட்விட்டர் மூலம் பணமோசடி... சிக்காமல் தப்பிப்பது எப்படி?

'எனக்கு எண்டு கார்டே இல்லை' என்பதுபோல் நாள்தோறும் புதுப் புது மோசடிகள் முளைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. இப்படி மோசடிகள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம்? காலம் முன்புபோல் இல்லை, இப்போது மோசடி நபர்கள் பெருகிவிட்டர்கள் என்பதுதானே உங்கள் கூற்று. ஆனால், உண்மையில் நமது அலட்சியமும், அஜாக்கிரதையும்தான் காரணம் என்பதை நாம் உணர மறந்துவிட்டோம்.

இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி...? தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா சொல்லும் முன்னெச்சரிக்கை தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
குறட்டை

மது அருந்தினால் குறட்டை வராதா..?

குறட்டை என்பது சர்வதேசப் பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 45% முதல் 50% பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்றும், அவர்களில் 25% பேருக்கு அன்றாடம் குறட்டைவிடும் பிரச்னை இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறட்டை பற்றிப் பல தவறான நம்பிக்கைகள் உள்ளன.

அத்தகைய சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் தலை, கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவர் ரோகிணி ராதாகிருஷ்ணன்.

அவற்றை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
'ஜெயிலர்' கூட்டணி

'ஜெயிலர்' இசை, டீசர் எப்போது வெளியாகிறது? - லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நான்காவது முறையாக ரஜினியும், இரண்டாவது முறையாக நெல்சன் திலீப்குமாரும் இணையும் படம் 'ஜெயிலர்'.

இதற்கு முன்னர் ரஜினி, அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு 'எந்திரன்', 'பேட்ட', 'அண்ணாத்த' படங்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் நெல்சனும் விஜய்யை வைத்து 'பீஸ்ட்' கொடுத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட 'ஜெயிலர்' படப்பிடிப்பு இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது.

படத்தின் இசை வெளியீடு எப்போது... டீசர், டிரைலர் எப்போது வெளியாக உள்ளது..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...