Published:Updated:

Evening Post:"போதை ஒழிப்பு: 'டாஸ்மாக்' மட்டும் விலக்கா?"- ஷர்மிகா விளக்கம்-ரஹ்மான் பர்சனல் நோட்ஸ்!

Vikatan Highlights January 6
Listicle
Vikatan Highlights January 6

"போதை ஒழிப்பில் 'டாஸ்மாக்' மட்டும் விலக்கா?", 'ஆதாரமின்றி பேசுகிறாரா அண்ணாமலை..?!',திமுக அரசின் ஆய்வுக் குழுக்கள்... தீர்வு கிடைத்ததா?,டாக்டர் ஷர்மிகா விளக்கம்,சேமிப்பு, முதலீடு: சுயமாக திட்டமிடலாமா? , விந்தணுக்களின் தரத்தை பாதித்த கோவிட் தொற்று, ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சனல் நோட்ஸ்!


1
டாஸ்மாக் கடை

"போதை ஒழிப்பில் 'டாஸ்மாக்' மட்டும் விலக்கா?"

'திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடப்படும்.'

- இது கடந்த 2016 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய சபாநாயகரான மு.அப்பாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அப்போதைய திமுக பொருளாளரும், தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசியது.

'டார்கெட்' டாஸ்மாக்

2016 ல் திமுக-வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதே சமயம் 2021 சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதையே ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்திலும் பேசி இருந்தனர்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுக்காலம் ஆகிவிட்டது. " பூரண மதுவிலக்கெல்லாம் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் கடைகளின் விற்பனை நேரத்தையாவது குறையுங்கள்" என தாய்மார்களும், சமூக ஆர்வலர்களும், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் 'டாஸ்மாக்' டார்கெட் வைத்து விற்கும் நிலைதான் இன்னும் தொடருகிறது.

முதல்வரின் போதை ஒழிப்பு பேச்சு

இந்த நிலையில்தான், கடந்த 4-ம் தேதியன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

* போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்திடவும்,

* போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்

அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 11 -ம் தேதியன்று நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது பேசிய ஸ்டாலின்,

* சாதாரண நோயாக இருந்தால் அதில் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற அவரது பெற்றோர், குடும்பம், உறவினர்கள் போதும்! ஆனால் போதை போன்ற சமூக நோயாக இருக்குமானால் அதில் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த சமூகமே முயற்சிகள் எடுத்தாக வேண்டும்.

* போதை என்பது ஒருவரை அழித்து, சமூகத்தையும் அழித்துவிடும்" எனக் குறிப்பிட்டார்.

'டாஸ்மாக் மட்டும் விலக்கா?'

இது குறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள்,

* " முதல்வரின் இந்த பேச்சில் இடம்பெற்ற 'போதை பொருள்கள்' என்ற வார்த்தைக்குப் பதிலாக டாஸ்மாக்கில் விற்கப்படும் 'மதுபானம்' என்ற வார்த்தையைப் பொருத்தி பார்த்தாலும் அதே அர்த்தம்தான் வரும்.

போதைபொருள் என்றால் கஞ்சா, அபின், போதை ஊசி, போதை மாத்திரை போன்றவை மட்டுமல்லவே... மதுவும்தானே... இன்னும் கொச்சையாக சொன்னால் 'சாராயம்'. அதைத்தானே அரசின் டாஸ்மாக் நிறுவனம் டார்கெட் வைத்து விற்கிறது.

* முதல்வர் பேசிய 'போதை ஒழிப்பு' பேச்சில் இந்த டாஸ்மாக் சாராயமெல்லாம் வராதா..? அதற்கு மட்டும் விலக்கா..?

'பூரண மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடும்' என்று அரசு தரப்பில் சொல்கிறார்கள். சரி... போகட்டும் விற்பனை நேரத்தையாவது குறைக்கக் கூடாதா..?" என்று ஆதங்கத்துடன் கேட்கின்றனர்.

நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில்தான், தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும், பள்ளி மாணவர்கள் உட்பட 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபான விற்பனை செய்வதை தடுக்க கோரியும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு,

* " பொதுமக்களின் நலன் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையாக குறைக்க பரிசீலிக்க வேண்டும்.

* மதுபான கடைகளில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை உயர் நீதிமன்றம்

விற்பனை நேரமாவது குறைக்கப்படுமா?

" இது அண்ணா வழியில் வந்த ஆட்சி" என அவ்வப்போது பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த அண்ணாதான், "சாராயத்தில் வரும் பணம் தொழு நோயாளியின் கையிலிருக்கும் வெண்ணெய்க்கு சமம்" எனக் கூறி மது விலக்கை தீவிரமாக ஆதரித்தார்.

பூரண மதுவிலக்குதான் இல்லை என்றாலும், குறைந்தபட்சம் நீதிமன்றம் சொன்னபடி டாஸ்மாக் கடையின் விற்பனை நேரத்தையாவது குறைக்க முதல்வர் ஸ்டாலின் முன்வரலாமே... இந்த முன்னெடுப்பு பூரண மதுவிலக்குக்கான முதல்படியாக இருக்கட்டுமே...

சமூக நீதி, சமத்துவம், பொருளாதார, அரசியல், சமூக உரிமைகள், வாய்ப்புகள் போன்றவற்றிற்கு தனது திராவிட மாடல் ஆட்சி முன்மாதிரியாக விளங்குவதாக மேடைக்கு மேடை முழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த திராவிட மாடல் ஆட்சியில், நீதிமன்றம் சொன்னபடி மது விற்பனைக்கான நேரக் குறைப்பும் ஒன்றாக இருக்கட்டுமே..!

செய்வாரா முதல்வர்..?


2
அண்ணாமலை

'ஆதாரமின்றி பேசுகிறாரா அண்ணாமலை..?!' - குற்றச்சாட்டும் பின்னணியும்!

பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை' என்று சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கிறார் காயத்ரி ரகுராம். அதோடு தமிழக பா.ஜ.க-வை சுற்றி ‘ஹனிடிராப்’ என்கிற சொல்லாடலும் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறாக நாலப்பக்கமும் தமிழக பா.ஜ.க-வில் சர்ச்சைகளும், அக்கட்சியின் தலைவர் மீதான தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கும் நிலையில், சில கேள்விகளோடு பா.ஜ.க மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி இது குறித்து சொல்வது என்ன..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
தலைமைச் செயலகம்

திமுக அரசின் ஆய்வுக் குழுக்கள்... இதுவரை தீர்வு கிடைத்ததா?!

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அமைக்கப்பட்ட முதல் குழு, மாநில வளர்ச்சிக்கான கொள்கைக் குழுதான். முதலமைச்சர் தலைமையின்கீழ் செயல்படும் இந்தக் குழுவின் துணைத் தலைவராகப் பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டார்.

இதில் தொடங்கி பல பிரச்னைகளுக்காக, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுக்களால் கிடைத்த தீர்வுகள்தான் என்ன?!

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
டாக்டர் ஷர்மிகா

"நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்?" - டாக்டர் ஷர்மிகா விளக்கம்

“மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசிவரும் டாக்டர் ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன், 2022 டிசம்பர் 31-ம் தேதி விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சர்மிகா அளித்த விரிவான பதில்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
நிதித் திட்டமிடுதல்

சேமிப்பு, முதலீடு: சுயமாக திட்டமிடுவதால் ஏற்படும் இழப்புகள்...

நாம் அனைவரும் பணத்துக்காகக் கடுமையாக உழைக்கிறோம். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நமக்காக உழைக்க வேண்டும். அதற்கு மாற்றாக, அது பெரும்பாலும் வங்கிச் சேமிப்புக் கணக்கில் கிடக்கிறது.

சிலர் சுயமாகவோ அல்லது நண்பர்கள் சொன்னார்கள், உறவினர்கள் சொன்னார்கள் என சேமிப்பு மற்றும் முதலீட்டு விஷயத்தில் கோட்டைவிட்டு விடுகிறார்கள்...

சரியான நிதி ஆலோசகரின் வழிகாட்டுதல் இல்லாததால் ஏற்படும் இழப்புகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
விந்தணு மாதிரி

'விந்தணுக்களின் தரத்தை பாதித்த கோவிட் தொற்று' - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை, எய்ம்ஸ் பாட்னா மருத்துவமனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 19 முதல் 45 வயதுக்குட்பட்ட 30 ஆண்களைத் தேர்ந்தெடுத்து சோதனையை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
ஏ.ஆர்.ரஹ்மான்

'இசைக்கு அடுத்ததாக ...'  - ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சனல் நோட்ஸ்!

சையில் துல்லியமும், புதுமையும் கொண்டு தமிழ் உள்ளங்களைக் கவர்ந்ததில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எனத் தனி ஓர் இடம் உண்டு. தமிழ் இசையை உலக அரங்குகள் எங்கும் நிறைத்தவர்.

இன்று அவரின் பிறந்த நாள்.

ஆஸ்கர் தமிழன் குறித்த சில பர்சனல் நோட்ஸைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...