Published:Updated:

வெளியேறிய ஆளுநர்... நடந்தது என்ன? - உதயநிதிக்காக விட்டுக்கொடுத்த அப்பாவு - Fixed Deposit - உஷார்

Vikatan Highlights January 9
Listicle
Vikatan Highlights January 9

பாதியில் வெளியேறிய ஆளுநர்... தமிழக சட்டசபையில் நடந்தது என்ன..?, மிஸ்டர் கழுகு: உதயநிதிக்காக விட்டுக்கொடுத்த அப்பாவு, கமல்ஹாசன் அதிரடி ... பின்னணி அரசியல் என்ன?!, Fixed Deposit - உஷார், கழுத்து வலியும் தலையணையும்,அஜித்துக்காக மாறிய சந்தானம்


1
பாதியில் வெளியேறிய ஆளுநர்

பாதியில் வெளியேறிய ஆளுநர்... தமிழக சட்டசபையில் நடந்தது என்ன..?

மிழகத்தில் ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவரும் பல கருத்துகள் திமுக அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிரானவையாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் இயல்புக்கு மாறாக அவர் பேசிவருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

சமீபத்தில் " 'தமிழ்நாடு' என்று சொல்லக்கூடாது 'தமிழகம்' என்றே அழைக்க வேண்டும்" என ஆளுநர் பேசியதும் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், நடப்பாண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மரபுப்படி முதல் நாள், தமிழக அரசு தயாரித்து அளிக்கும் உரையை அவர் வாசிக்க வேண்டும் என்பதால், ஆளுநரின் ரியாக்சன் எப்படி வெளிப்படும் என்பது குறித்து அரசியல் வட்டாரம் மிக உன்னிப்பாக கவனித்தது.

இந்த நிலையில், எதிர்பார்த்தபடியே தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இடம்பெற்றிருந்த பல வார்த்தைகளையும், சில பக்கங்களையும் அவர் தனது பேச்சில் தவிர்த்தார்.

ஆளுநர் தவிர்த்த வரிகள் என்னென்ன..? இதனால் சட்டசபையில் ஏற்பட்ட சலசலப்புகள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிலை,

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட முழு விவரங்களை விவரமாக தெரிந்துகொள்ள கீழ்க்காணும் தலைப்புகளை க்ளிக் செய்யவும்....

சட்டப்பேரவையில் உரை: ஆளுநர் தவிர்த்த வார்த்தைகள்..!

பாதியில் வெளியேறிய ஆளுநர்... ஸ்டாலின் விளக்கம்...!

"அவையில் ஆளுநரை வைத்துக்கொண்டு முதல்வர் செய்தது அநாகரிகமானது..!" - எடப்பாடி பழனிசாமி தாக்கு


2
மிஸ்டர் கழுகு

மிஸ்டர் கழுகு: உதயநிதிக்காக விட்டுக்கொடுத்த அப்பாவு!

மீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியைச் சந்திக்கச் சென்ற அமைச்சர் ஒருவர் நீண்ட நேரமாக வீட்டு வாசலிலேயே காத்திருந்திருக்கிறார். முடிவுசெய்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் சர்ச்சையாவதற்கு முன்பே, உதயநிதிக்குப் புது வீடு ஒதுக்கிவிட வேண்டும் என்று மேலிடத்தில் முடிவுசெய்திருக்கிறார்கள். அதன்படி தமிழக அமைச்சர்கள் தங்கியிருக்கும் கிரீன் வேஸ் சாலையிலுள்ள குறிஞ்சி இல்லம் ஒதுக்கப்படவிருக்கிறது.

New Year Sale

இது தொடர்பாக கழுகார் தரும் எக்ஸ்க்ளூஸிவ் செய்தி மற்றும்

தேசியத் தலைவரைக் குறிவைக்கும் மாஜி காக்கி!

அரைகுறையாகப் புத்தகம் வெளியிட்டதா பள்ளிக்கல்வித்துறை?

டி.வி சேனல் தொடங்கும் டி.டி.வி..?

மாங்கனி மாவட்டத்தில் புலம்பும் அதிகாரிகள்...

உள்ளிட்ட சீக்ரெட் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
கமல், ராகுல்காந்தி

பாஜக-வுக்கு எதிராக அதிரடி காட்டும் கமல்ஹாசன்... பின்னணி அரசியல் என்ன?!

2019 நாடாளுமன்ற தேர்தலில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து போட்டியிட்ட கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, 3.78 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதன் மூலம், தமிழக அரசியலில் கமல் கவனம் பெற்றார்.

அதற்கடுத்து, 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், வெறும் 2.62 சதவிகித வாக்குகளையே பெற்றது.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ஏர் இந்தியா

போதையில் விமானத்தில் பெண்மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் என்ன நடந்தது?  

மெரிக்காவிலிருந்து புதுடெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்ற பயணி, குடிபோதையில் தனது பக்கத்து சீட்டிலிருந்த 70 வயது மூதாட்டிமீது சிறுநீர் கழித்துவிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தாலும், கடந்த 4-ம் தேதிதான் ஏர் இந்தியா நிறுவனம் இது குறித்து முறைப்படி டெல்லி போலீஸில் புகார் செய்தது. அதுவும் மூதாட்டி இந்தச் சம்பவம் குறித்து டாடா குழுமத்தின் தலைவருக்குப் புகார் செய்த பிறகே, இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.

இந்த நிலையில், விமானத்தில் என்ன நடந்தது என்பதை மிஸ்ரா அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்த அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சுகதா சாட்டர்ஜி அளித்தப் பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க......


5
ஃபிக்ஸட் டெபாசிட்

ஃபிக்ஸட் டெபாசிட்: முதிர்வின்போது எடுக்காவிட்டால் நஷ்டமா?

பெரும்பாலானவர்களின் பாதுகாப்பான சேமிப்பாக ஃபிக்ஸட் டெபாசிட் இருந்து வருகிறது. சமீப காலங்களில் தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் அனைத்து வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இது சேமிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.

இந்த நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை முதிர்வு அடைந்ததும் எடுக்காவிட்டால் இழப்பு ஏற்படுமா..?

ரிசர்வ் வங்கியின் விதிமுறை என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6

தலையணைக்கும் கழுத்து வலிக்கும் தொடர்பு இருக்கிறதா?

'கழுத்து வலிக்குது' என்று சொன்னாலே, அருகில் இருப்பவர்களில் ஒருவர் 'தலையணை சரியா இல்லையா..?' என்பார்கள். அந்த அளவுக்குத் தலையணைக்கும் கழுத்து வலிக்கும் சம்பந்தமிருக்கிறது.

இதையே வழிமொழிகிற பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன், தலையணை எப்படி கழுத்து வலிக்குக் காரணமாகிறது என்பதையும், அதற்கான தீர்வுகளையும் விளக்குகிறார்.

அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
அஜித் - சந்தானம்

AK 62 Exclusive: அஜித்துக்காக மனம் மாறிய சந்தானம்; ஓகே சொன்னதன் பின்னணி என்ன?

கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் டாபிக், `அஜித் 62'ல் சந்தானம் நடிக்கிறார் என்பதுதான். மீண்டும் காமெடியனாக களமிறங்குகிறார் என பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

`துணிவு' படத்தை அடுத்து அஜித், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். அதன் ப்ரீ புரொடெக்சன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நடிகர்களிடம் தேதிகள் கேட்டு பேச்சு வார்த்தையும் பரபரக்கிறது. இதில்தான் காமெடியனாக சந்தானம் நடிக்கப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

அஜித்துடன் `வீரம்' படத்தில் நடித்திருந்தார் சந்தானம். அதன்பிறகு சந்தானம் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தார்.

இது குறித்து சந்தானம் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...