Published:Updated:

ஸ்டாலினை உஷார்படுத்திய மூத்த அமைச்சர் - EPS கோரிக்கை - சனிப்பெயர்ச்சி பலன்கள் - Cibil Score ரகசியம்

Vikatan Highlights January 10
Listicle
Vikatan Highlights January 10

கவர்னர் உரை விவகாரத்தில் ஸ்டாலினை உஷார்படுத்தி பதிலடி கொடுக்க வைத்த மூத்த அமைச்சர் யார்..?, எடப்பாடி கோரிக்கைக்கு சபாநாயகரின் முடிவு என்ன?, புதையும் 'ஜோஷிமத்' நகரம்..., சனிப்பெயர்ச்சி 2023 ராசிபலன்கள், வங்கிக் கடன்: சிபில் ஸ்கோரை பராமரிக்கும் ரகசியம், கோலிவுட் ஸ்பைடர்:


1
தீர்மானத்தை வாசித்த முதல்வர்

கவர்னர் உரை... ஸ்டாலினை உஷார்படுத்தி பதிலடி கொடுக்க வைத்த மூத்த அமைச்சர்!

மிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் உரை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்ததன் பின்னணியில் மூளையாக செயல்பட்ட மூத்த அமைச்சர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இடம்பெற்றிருந்த பல வார்த்தைகளையும், சில பக்கங்களையும் தனது பேச்சில் தவிர்த்தார்.

துரிதமாக செயல்பட்ட துரைமுருகன்

இப்படி ஏதாவது நிகழலாம் என்பதை திமுக- மூத்த அமைச்சர்கள் முன்கூட்டியே உணர்ந்தார்களோ என்னவோ, தங்களிடமிருந்த ஆளுநர் உரையின் நகலை மிக கவனமுடன் வாசித்தபடியே வந்தபோது அதனைக் கண்டுபிடித்துவிட்டனர்.

* குறிப்பாக திமுக-வின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் அருகே சென்று ஏதோ பேசினார். அவர் தலையசைத்ததும் அவையிலிருந்து வெளியேறி சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.

இந்த நிலையில்தான், ஆளுநர் ரவி தனது உரையை 10.48 மணிக்கு முடித்தார். அடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் உரையை 11.31 மணிக்கு தமிழில் வாசித்து முடித்தார். அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் துரைமுருகனால் தயாரிக்கப்பட்ட 2 பக்க தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் கொடுக்கப்பட்டது.

New Year Sale

முதல்வர் கொண்டுவந்த தீர்மானம்

சபாநாயகர் வாசித்து முடித்ததும், இருக்கையில் இருந்து எழுந்த மு.க.ஸ்டாலின், "சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, ஏற்கெனவே அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் சபாநாயகரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் பேசிய பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன்" என தெரிவித்தார்.

வெளியேறிய கவர்னர்

அப்போதுதான், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உஷாராகி தனது கட்சி உறுப்பினர்களுடன் அவையிலிருந்து வெளியேறினார்.

அதேபோல் ஆளுநரும் தனக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டுவருவதை தனது உதவியாளர் மூலம் அறிந்து, மரபுப்படி தேசியகீதம் பாடுவதற்குகூட காத்திருக்காமல் சபையில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினார்.


2
ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி கோரிக்கைக்கு சபாநாயகரின் முடிவு என்ன? 

திமுக பன்னீர், எடப்பாடி என இரண்டு தரப்புகளாகப் பிரிந்திருக்கிறது. இருவரும் ஓரணியாகச் செயல்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் இருவரும் இணைந்தே அமர்ந்திருப்பார்கள்.

ஆனால், இருவரும் இரண்டு அணிகளாக செயல்பட்டுவருவதால் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து பன்னீரை நீக்குவதாக எடப்பாடி அறிவித்தார். பன்னீருக்குப் பதிலாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரைத் தேர்வுசெய்தனர்.

ஆனாலும், சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவருக்கான இருக்கை இன்னும் மாற்றப்படவில்லை.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கணேஷ் ஐ.ஏ.எஸ்

ஷர்மிகா விவகாரம்... விசாரணை பற்றி துறை இயக்குநர் சொல்வதென்ன?

"மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசி மக்களைக் குழப்பிவரும் சித்த மருத்துவர் ஷர்மிகாமீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருந்தார் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இணை இயக்குனர் பார்த்திபன்.

இந்நிலையில், டாக்டர் ஷர்மிகாவுக்கு விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், டாக்டர் ஷர்மிகா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அவரது மருத்துவமனை மீது என்ன நடவடிக்கை? அவர் கைது செய்யப்படுவாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் வைரலாகிவருகின்றன.

இந்தச் சூழலில் இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ் சொல்வது என்ன..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ஜோஷிமத்

புதையும் 'ஜோஷிமத்' நகரம்... என்ன செய்யப்போகின்றன அரசுகள்?!

த்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமத் நகரம் 'பூகோள சொர்க்கம்' என்று குறிப்பிடப்படுகிறது. சமோலி மாவட்டத்தில் இருக்கும் இந்த நகரம், பூமிக்குள் புதைந்துவருவதால் வீடுகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் விரிசலடைந்திருக்கின்றன.

நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக ஜோஷிமத் நகரம் புதையும் அபாயத்தை எதிர்கொண்டுவருகிறது. இந்தப் பிரச்னையை மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாளப் போகின்றன?!

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
சனிப்பெயர்ச்சி

திருக்கணித சனிப்பெயர்ச்சி 2023 ராசிபலன்கள்

நிகழும் சுபகிருது வருடம் தை மாதம் 3-ம் நாள் (17.1.23) செவ்வாய்க்கிழமை அன்று (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி), தன் சொந்த வீடான மகர ராசியிலிருந்து மற்றொரு சொந்தவீடான கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். இதனால் தனுசு ராசிக்கு ஏழரைச் சனி காலகட்டம் நிறைவடைகிறது; மீன ராசிக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. மகர ராசியினருக்கு ஜன்மச்சனி விலகுகிறது.

இந்த நிலையில், ஜோதிடர் பாரதிஶ்ரீதர் விவரிக்கும் 12 ராசிகளுக்குமான திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
சிபில் ஸ்கோர்

வங்கிக் கடன்: சிபில் ஸ்கோரை பராமரிக்கும் ரகசியம்!

ங்கிகளுடன் நாம் மேற்கொள்ளும் கடன் பரிவர்த்தனைகளின் தகுதி அடிப்படையில் கொடுக்கப்படும் மூன்று இலக்க எண், சிபில் ஸ்கோர் (Credit Information Bureau (India) Limited - CIBIL). இது 300 - 900 வரை கொடுக்கப்படுகிறது.

ஒருவர் தன் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட தொகுப்பு விவரங்களின் அடிப்படையில் இது ஒருவருக்கு வழங்கப்படும்.

அந்த வகையில் சிபில் ஸ்கோரை சிறப்பாக பராமரிக்க பின்பற்றிய வேண்டிய வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
கோலிவுட் ஸ்பைடர்

கோலிவுட் ஸ்பைடர்: தட்டிக்கொடுத்த ரஜினி... தவிக்கும் இயக்குநர்!

தேனிலவை ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ஹன்சிகா. கீர்த்தி சுரேஷ் தாய்லாந்திலும், வரலட்சுமி ஸ்பெயினிலும், மாளவிகா மோகனன் உத்ராஞ்சல் மாநிலத்திலும் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். முன்னதாக விஜய் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக இம்முறை லண்டன் பறக்காமல் பாங்காக்கில் கொண்டாடியிருக்கிறார். கூடவே அவரின் நண்பர்களும் சென்று திரும்பியிருக்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர் தரும் மேலும் பல சுவாரஸ்ய சினிமா செய்திகள்...

தட்டிக்கொடுத்த ரஜினி... தவிக்கும் இயக்குநர்!

'பொன்னியின் செல்வன் 2' லேட்டஸ்ட் நிலவரம்

ரகுல் ப்ரீத் சிங் பேட்டிக்கு கிடைத்த பலன்!

காதலில் விழுந்து பட இயக்குநரின் கோபம்!

அனைத்தையும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...