வேலையைப் பறிக்குமா AI தொழில்நுட்பம்? - முதல்வரின் திடீர் சமரசம் ஏன்? - அறுவடை நாள்: 80 & 90ஸ் சினிமா

வேலை வாய்ப்புகளைப் பறித்துவிடுமா AI தொழில்நுட்பம்?, கழுகார் அப்டேட்ஸ்: முதல்வரின் திடீர் சமரசப் பின்னணி..! , சேது சமுத்திரத் திட்டம்: சேது சமுத்திர திட்டத்துக்கு பாஜக ஆதரவு!, திங்கட்கிழமை அலுவலகம் செல்ல தயக்கம் ஏன்? , அறுவடை நாள்: 80 & 90ஸ் தமிழ் சினிமா

வேலை வாய்ப்புகளைப் பறித்துவிடுமா AI தொழில்நுட்பம்?
கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் இணையப் புரட்சியின் பின்னணியில் சத்தமில்லாமல் AI (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களும் பெரும் வீச்சைக் கண்டிருக்கின்றன. இன்று கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலுமே ஏதோ ஒரு வகையில் AI தொழில்நுட்பங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கிறது AI.
கூகுள் மேப்ஸில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது வழியில் எவ்வளவு ட்ராஃபிக் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொல்வது AI தான். உணவு டெலிவரி செயலிகள், வங்கி சேவைகள் என இப்படி AI பயன்பாடுகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
இப்படி தூணிலும் துரும்பிலும் இருந்தாலும், இப்போது உலகமெங்கும் செயற்கை நுண்ணறிவு மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. அதற்குக் காரணம் படைப்பாளியாகவும் AI அவதாரம் எடுத்திருப்பதுதான். இதை Generative AI என்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் விஷயங்களை வைத்துப் புதிதாக ஒன்றை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவை இப்படி அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு, 1330 திருக்குறள்களையும் ஒரு செயற்கை நுண்ணறிவிடம் கொடுத்துப் புதிதாக ஒரு குறள் எழுதச் செய்தால் அது Generative AI.
இந்த நிலையில், இந்த AI தொழில்நுட்பங்களால் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும், பல பாதகங்களும் பட்டியலிடப்படுகின்றன.
இது குறித்த விரிவான கட்டுரை இன்றைய ஆனந்தவிகடனில் வெளியாகி உள்ளது. அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க...

கழுகார் அப்டேட்ஸ்: முதல்வரின் திடீர் சமரசப் பின்னணி..!
சட்டப்பேரவையில் ஆளுநர் - ஆளும் அரசுக்கிடையே ஏற்பட்ட மோதல், சமூக வலைதளத்தில் மட்டுமின்றி, களத்திலும் எதிரொலித்தது. #GetOutRavi என்று ட்விட்டரில் டிரெண்ட் செய்தவர்கள், அதை போஸ்ட்டராகவும் ஒட்ட ஆரம்பித்தார்கள். இன்னொரு பக்கம், ஆளுநருக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் புயல் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான சூறாவளியாக வலுப்பெறும் என்று கருதப்பட்ட நிலையில், புயலுக்குப் பின் அமைதி என்று அடங்கிவிட்டது.
"ஆளுநரை யாரும் விமர்சித்துப் பேசக் கூடாது. கொள்கைரீதியிலான பிரச்னையை அரசு பார்த்துக்கொள்ளும்" என தமது கட்சியினரை முதலைமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முதல்வரின் இந்த முடிவு வியூகமா... பின்வாங்கலா? திடீர் சமரசப் பின்னணி என்ன என்பது கழுகார் அப்டேட்ஸில் இடம்பெற்றுள்ளது.
இதை தவிர,
"நான் சிவனேன்னுதானேய்யா இருந்தேன்..." - பதறும் முன்னாள் பால் வளம்!
மாஜி காக்கி மீது தொடரும் புகார்கள்... விசாரணைக்குழு அமைக்கும் பா.ஜ.க மேலிடம்!
திமுக-வில் அடுத்த அதிகார மாற்றம்...
பணி நியமனத்தில் தலையிடும் உடன்பிறப்புகள்...

சேது சமுத்திர திட்டத்துக்கு பாஜக ஆதரவு!
தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவு திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்புடைய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவோம் என்று மத்திய பா.ஜ.க அரசு சொல்லிருக்கிறது. ஆனால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்தது, எந்த மாதிரியான கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. நான்காவது நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
முடங்கிய அமெரிக்க விமான சேவை: காரணம் ரஷ்யாவா..?
உலகம் முழுவதுமுள்ள விமான நிலையங்களில் விமானப் பணிகளுக்கான அறிவிப்பு அமைப்பில் NOTAM எனும் கட்டுப்பாட்டு அறை இருக்கும். இந்த அறையிலிருந்து அந்தப் பகுதிக்குள் வரும் விமானத்துக்கான ஆணைகள், சிக்னல் தொடர்பான தகவல்கள் வழங்கப்படும்.
அமெரிக்காவில் இருக்கும் இந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அமெரிக்காவின் அனைத்து விமானங்களும் அந்தந்தப் பகுதியிலிருக்கும் விமான நிலையங்களில் தரையிறங்க உத்தரவிடப்பட்டது.

திங்கட்கிழமை அலுவலகம் செல்ல தயக்கம் ஏன்?
`திங்கட்கிழமை காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள்தான் உலகத்தின் தாத்தா பாட்டிகள் எந்த நோயுமின்றி இறந்துபோகிறார்கள்' என நான் வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. ஆம், திங்கட்கிழமையன்று ஒரு வணிகனுக்கு அல்லது மேலாளருக்கு வரும் விடுப்பு விண்ணப்பங்கள் இதைத்தான் தெரிவிக்கின்றன.
இல்லாத பாட்டியின் இறப்பு, வராத காய்ச்சல் அல்லது இல்லாத வேறேதோ ஒரு காரணம் நம்மில் பலரை திங்கட்கிழமை அலுவலகம் செல்லாமல் இருக்க வைக்கிறது.
சரி, நாம் ஏன் திங்கட்கிழமை அலுவலகம் செல்ல அப்படித் தயங்குகிறோம்?
ஏன் தவிர்க்கிறோம்?
ஊழியர்கள் உற்சாகமாக வேலைக்கு வர என்ன செய்ய வேண்டும்..?
இன்று வெளியான ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ள 'வணிகத் தலைமை கொள்' தொடரில் தீர்வைச் சொல்கிறார் ராம் வசந்த்.

வாரிசு FDFS - விசில், ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடிய கேரள விஜய் ரசிகைகள்!
விஜய் படங்களுக்கு கேரளாவில் எப்போதும் வரவேற்பு தடபுடலாக இருக்கும். அந்த வகையில், இந்த முறை வாரிசு ரிலீஸுக்கு அங்கு சிறப்பான ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பெண்களுக்காக 'வாரிசு' படத்தின் பிரத்யேக முதல்நாள் முதல் காட்சி நேற்று திரையிடப்பட... தமிழ்நாடே ஆச்சர்யமாக அந்தத் திரையரங்கை திருப்பிப் பார்த்திருக்கிறது.

அறுவடை நாள்: 80 & 90ஸ் தமிழ் சினிமா
இந்தத் திரைப்படத்தை இன்றளவும் பல ரசிகர்கள் நினைவுகூர்வதற்கு ஒரு பாடல்தான் முக்கியமான காரணம். ஆம், ராஜாவின் இசையில் உருவான அதி அற்புதமான பாடல்களில் ஒன்றான ‘தேவனின் கோயில் மூடிய நேரம்’ என்பதின் வழியாகத்தான் ‘அறுவடை நாள்’ படத்தைப் பலரும் இன்று நினைவு கொள்வார்கள்.
‘இறைஞ்சுதல்’ என்கிற உணர்வை இசையாகவும் குரலாகவும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் பாடல் இது.
ஜி.எம்.குமார், பாக்யராஜிடம் பல திரைப்படங்களில் உதவி இயக்குநராக, திரைக்கதையை மேம்படுத்துபவராகப் பணியாற்றினார். என்றாலும் அவரது முதல் திரைப்படத்தில் பாரதிராஜாவின் சாயலைப் பார்க்க முடிந்தது.
படத்தின் டபுள் பாசிட்டிவ் தயாராகி விட்டது. சிவாஜி கணேசன் படத்தைப் பார்க்கத் தயாரானார். “என்னென்ன கரெக்ஷன் சொல்வாரோ... எதை எதைத் தூக்க வேண்டியிருக்குமோ?” என்று நகத்தைக் கடித்த படி வெளியே இயக்குநர். ‘சிவாஜி பார்த்து விட்டு என்ன சொல்வாரோ?’ என்கிற ஒரேயொரு கேள்வி மட்டுமே அந்த அறிமுக இயக்குநரின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.