அழகிரி: ஆடிப்போன மதுரை திமுக! - 1% பணக்காரர்களிடம் 40% சொத்துகள் - 'வாரிசு' Deleted Scenes

மு.க அழகிரி - உதயநிதி சந்திப்பு... ஆடிப்போன மதுரை திமுக நிர்வாகிகள்... ஏன்?, காணும் பொங்கல்: களைகட்டிய மாட்டுவண்டிப் பந்தயம்!, 1% பணக்காரர்களிடம் 40% சொத்துகள்..! , தினமும் பிரெட் சாண்ட்விச் சாப்பிடுவது சரியா?, 2023 -ல் ஊதிய உயர்வு அதிகரிப்பு, 'வாரிசு' Deleted Scenes Exclusive

மு.க அழகிரி - உதயநிதி சந்திப்பு... ஆடிப்போன மதுரை திமுக நிர்வாகிகள்!
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வரும் நிலையில், அமைச்சரான பின்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் மு.க அழகிரிக்கும் இடையே நடந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'முரசொலி' நாளிதழ் நிர்வாகத்தை கவனிக்க 1980-களில் மதுரைக்கு வந்த மு.க.அழகிரி, 90 களில் கட்சிக்குள் அதிகாரம் செலுத்த தொடங்கி, தனக்கென்று ஒரு ஆதரவாளர் கூட்டத்தை மதுரை மட்டுமின்றி தென்மண்டலத்தில் உருவாக்கினார். அதன் பின்னரே கட்சிக்குள் அழகிரி அணி, ஸ்டாலின் அணி என கட்சியினர் செயல்படத் தொடங்கினர். பின்பு தென்மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
தென் மாவட்டங்களில் தன் ஆதரவாளர்களையே கட்சி பொறுப்பிலும், எம்.எல்.ஏ, எம்.பி, மேயர் என பதவிகளிலும் அழகிரி கொண்டு வந்தார். அதேநேரம் ஆதரவாளர்களில் ஒருசிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதும் கட்சிக்குள் சர்ச்சை ஏற்படுத்தி மக்கள்மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

காணும் பொங்கல்: களைகட்டிய மாட்டுவண்டிப் பந்தயம்!
பெரு நகரத் திருவிழாக்களில் ஆடம்பரங்கள் வரிசைகட்டும். ஆனால், இன்னமும் கிராமப் பகுதிகளில் பொங்கல் விழா, கோயில் திருவிழாக்களில் மாட்டுவண்டிப் பந்தயங்களை நடத்தி கால்நடைகளுக்கும் தங்களின் நெருக்கத்தைக் காட்டிச் சிலிர்க்க வைக்கிறார்கள் தெற்கத்தி மக்கள்.
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொங்கல் விழா மற்றும் கோயில் திருவிழாக்களின் போது மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தப்பட்டுவருகின்றன. இவ்வாண்டு காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கீழச் செக்காரக்குடியில் மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் பந்தயம் நடத்தப்பட்டது.

'ரிமோட் வாக்குப்பதிவு வசதி'... சாதக, பாதகங்கள் என்னென்ன?
இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தலில் சராசரியாக 70% வாக்குகள் மட்டுமே பதிவாகின்றன. மூன்றில் ஒருவர் வாக்களிப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 67.4% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இதில் பதிவாகாமல் இருந்த 32.6% வாக்குகள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஓட்டுகளே.
வறுமை காரணமாகப் பயணம் செய்ய முடியாமல் போனது, வேலை பார்த்த இடத்தில் விடுமுறை கிடைக்காமல் இருந்தது என இப்படிப் பல காரணங்களுக்காகத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் டாப் 1% பணக்காரர்களிடம் குவிந்துள்ள 40% சொத்துகள்..!
இந்தியாவில் டாப் 1% பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள் குவிந்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இதை உங்களால் நம்பமுடிகிறதா?
உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரிட்டனை சேர்ந்த 'ஆக்ஸ்ஃபேம் இண்டர்நேஷனல்' என்ற அமைப்பு இந்தியாவின் வருடாந்திர சமத்துவமின்மை அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில்தான், இந்தியாவில் டாப் 1% பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள் குவிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

தினமும் பிரெட் சாண்ட்விச் சாப்பிடுவது சரியானதா?
தினமும் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு பிரெட் சாப்பிடலாமா? பிரெட் ரோஸ்ட் அல்லது சாண்ட்விச் சாப்பிடலாமா?
மல்ட்டிகிரெயின் பிரெட் நல்லதா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க...

2023 -ல் ஊதிய உயர்வு அதிகரிப்பு; ஆய்வு சொல்வதென்ன?
`வரவு எட்டணா, செலவு பத்தணா' என்பது போலத் தான், இக்காலகட்டத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், போதாது என்ற நிலை நீடிக்கிறது. எதிர்பாரா செலவுகள், அத்தியாவசிய செலவுகள், அவசர செலவுகள் என ஏதோ ஒன்று, வாங்கும் சம்பளப் பணத்தை அப்படியே அரித்து விடுகிறது.
வருடாவருடம் சம்பளத்தை ஏற்றிக் கொடுக்க மாட்டார்களா என ஏங்காத ஊழியர்கள் இல்லை. இந்நிலையில், கோர்ன் ஃபெரி என்ற நிறுவனம் இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு எப்படி இருக்கும் என ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்த செய்தியை மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

'வாரிசு' Deleted Scenes Exclusive: 'சரத்குமாரின் நண்பன் பிரகாஷ் ராஜ்! விஜய்யின் கபடி!'
விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் 'வாரிசு' திரைப்படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி, அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.
மேலும், அந்த பிரத்யேக நேர்காணலில் நீளம் காரணமாக நீக்கப்பட்ட காட்சிகளையும் அதிலிருக்கும் சுவாரஸ்யங்களையும் கூறியிருக்கிறார்.
இயக்குநர் வம்சி பகிர்ந்த Uncut 'வாரிசு' ... படிக்க இங்கே க்ளிக் செய்க...