Published:Updated:

முதல்வரின் சீற்றமும் ஆளுநர் விளக்கமும்! - மு.க. அழகிரி: மாற்றம் வருமா? - Tax Saving திட்டங்கள்!

Vikatan Highlights
Listicle
Vikatan Highlights

'தமிழ்நாடு' விவகாரம்: முதல்வரின் சீற்றமும் ஆளுநரின் விளக்கமும்!, முடிவுக்கு வருகிறதா மு.க அழகிரியின் அரசியல் வனவாசம்?, அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம்... பின்னணி என்ன?, சரியான வருமான வரி சேமிப்புத் திட்டங்கள், ஓரிடத்தில் எவ்வளவு நேரம் உட்காரலாம்?, 'அஜித் 62' Exclusive


1
Governor Ravi

'தமிழ்நாடு' விவகாரம்: முதல்வரின் சீற்றம்... ஆளுநரின் விளக்கம்!

மிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, பொறுப்பேற்றது முதல் பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் 'தமிழ்நாடு' என்பதை விட 'தமிழகம்' என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்தது விவாதமானது.

இதற்கிடையில், சட்டமன்றத்தில் நடந்த சலசலப்பும், அண்ணா அறிவாலயத்தில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.

இது தொடர்பாக இன்று வெளியான ஜூனியர் விகடனில் கழுகார் பகுதியில் இடம்பெற்ற

'சீண்டல் ஆளுநர்... சீறிய முதல்வர்'

'டெல்லியில் தி.மு.க அரசுக்கு எதிராகப் புகாரளித்த ஆளுநர்'

உள்ளிட்டவற்றைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும், முதலமைச்சரிடமிருந்து வெளிப்பட்ட சீற்றத்தைத் தொடர்ந்து 'தமிழ்நாடு' வார்த்தை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியின் விளக்க அறிக்கை ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது.

அந்த அறிக்கையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
அழகிரி

முடிவுக்கு வருகிறதா மு.க. அழகிரியின் அரசியல் வனவாசம்?! 

"தென் மாவட்டத்தையே கட்டி ஆண்டவர் அண்ணன் அஞ்சா நெஞ்சர்... இன்று அமைதியாக இருக்கிறார்" என்றுதான் அழகிரி குறித்து நாம் விசாரிக்கும் போதெல்லாம் அவரது ஆதரவாளர்கள் நம்மிடம் குமுறுவார்கள்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க மதுரை சென்ற அமைச்சர் உதயநிதி அழகிரியை அவரது இல்லத்தில் ஜனவரி 16-ம் தேதி இரவு சந்தித்திருக்கிறார். ' அமைச்சர் ஆன பின்னர் முதல் முறையாக மதுரைக்கு செல்கிறாய். அப்படியே பெரியப்பா (அழகிரி) வீட்டுக்கு போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ' என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிதான் உதயநிதி அங்கு சென்றதாக குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த சந்திப்பினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன, மு.க அழகிரியின் அரசியல் வனவாசம் முடிவுக்கு வருகிறதா என்பது உள்ளிட்ட தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம்... பின்னணி என்ன?!

மிழக பா.ஜ.க-வில் சூர்யா சிவா - டெய்சி இடையிலான ஆடியோ விவகாரம் பூதாகரமாகிய போது ட்விட்டரில் கொதித்தெழுந்தவர் காயத்ரி ரகுராம். அக்கட்சியின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம், மாநிலத் தலைமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதனால், அவரை 6 மாத காலத்திற்குக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து வைப்பதாக அண்ணாமலை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காயத்ரி ரகுராம், தொடர்ச்சியாக அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து வருகிறார்.

இதன் பின்னணி என்ன..? அவர் திமுக-வில் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
தேஜஸ்வி சூர்யா

விஸ்பரூபமெடுக்கும் தேஜஸ்வி சூர்யா மீதான குற்றச்சாட்டு..!  

டிசம்பர் 10-ம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ 6E-7339 விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை பயணி ஒருவர் திறந்ததாகச் செய்திகள் வெளியாயின.

அதைத் தொடர்ந்து, சக பயணிகளின் உயிரை ஆபத்தில் சிக்கவைக்க முயன்றவர் கர்நாடக பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா என்றும், அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருந்ததாகவும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்ததாகச் சில தகவல்கள் வெளியாயின.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
வருமான வரி

வருமான வரி சேமிப்புத் திட்டங்கள்... சரியாகத் தேர்வு செய்வது எப்படி?

ரி - விவரம் தெரியாதவர்கள் இதை எப்படியாவது கட்டாமல் தவிர்த்துவிட நினைக்கிறார்கள். ஆனால், அரசுக்கு உரிய வரியைக் கட்டிவிடுவதன் மூலம் நாம் பல வகையிலும் நன்மை அடைய முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

ஒருவரின் சம்பளம் மற்றும் வருமானத்தில் வருமான வரியைத் தவிர்ப்பது என்பது இயலாத காரியமாகும். ஆனால், வருமான வரியை ஒருவரால் கண்டிப்பாகக் குறைக்க முடியும். அதற்கு பேர்தான், வரி விலக்கு. அதற்கு சற்று திட்டமிடல் தேவை.

அந்த திட்டமிடலை விளக்குகிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் சதீஷ்குமார். அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
எவ்வளவு நேரம் உட்காரலாம்?

கழுத்து வலி... ஓரிடத்தில் எவ்வளவு நேரம் உட்காரலாம்?

"நல்லாதான் இருந்தேன்... சில தினங்களா முதுகு வலிக்குது!"

"கழுத்தைத் திருப்பவே முடியலை... ரொம்ப வலியா இருக்கு!"

"நடக்கவே சிரமப்படுறேன்... தசைப்பிடிப்பு மாதிரி தெரியுது!"

- இவ்வாறு சொல்பவர்கள் நம்மில் பலர் உண்டு. சில நேரங்களில் இதுபோன்ற எதிர் பாராத பாதிப்புகள், நம் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போடலாம்.

நாம் அறியாமல் செய்யும் சில பழக்கவழக்கங்கள்கூட, இந்தப் பிரச்னைகளுக்கு காரணமாகலாம் என்று எச்சரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ரம்யா ராகவன்.

அன்றாடச் செயல்பாடுகளில் நம் உடலமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தையும் விளக்குகிறார் இவர்.

அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
அஜித்

AK 62 Exclusive: விக்னேஷ் சிவனிடம் கதை கேட்ட விஜய் சேதுபதியின் ரெஸ்பான்ஸ்!

ஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அவரது இயக்குநர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 'துணிவு' வெற்றி பெற்றதற்காகச் சபரிமலையில் வேண்டுதலை நிறைவேற்றி வந்துள்ளார் இயக்குநர் அ.வினோத்.

அஜித்தை அடுத்து இயக்கும் விக்னேஷ் சிவனும், 'படம் சிறப்பாக வரவேண்டும்' என சபரிமலை சென்று வேண்டி வந்திருக்கிறார்.

இந்நிலையில் லைகா தயாரிப்பில் 'அஜித் 62' படத்தின் அப்டேட் குறித்து விசாரித்ததில் கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...