மாற்றத்தை நோக்கி தல, தளபதி ரசிகர்கள்..! - ஆளுநர் நிகழ்ச்சி ரத்து ஏன்? - 10 Financial விதிமுறைகள்!

மாற்றத்தை நோக்கி தல, தளபதி ரசிகர்கள்!, கழுகார் அப்டேட்ஸ்: ஆளுநர் நிகழ்ச்சி ரத்தான பின்னணி!, திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்களில் பாஜக சாதிக்குமா?, 10 ஃபைனான்ஷியல் விதிமுறைகள்!, தினமும் 9,000 அடிகள் நடப்பது மாரடைப்பைத் தடுக்குமா? -விதி: 80s, 90s சினிமா

மாற்றத்தை நோக்கி தல, தளபதி ரசிகர்கள்..!
இந்திய - சீன எல்லைப் பிரச்னையின்போதுகூட சமூக வலைதளங்கள் இப்படிப் பற்றி எரிந்ததில்லை. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்குக்கூட இந்த அளவுக்கு பரபரப்பு இல்லை. விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் இரண்டு டாப் ஸ்டார்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக, இந்தப் பொங்கலின் வின்னர் யார் என்று ரசிக சண்டை பரபரக்கிறது. அதைத் தாண்டி, சில திரையரங்குகளிலும் பேனர் கிழிப்பு, மோதல் என்று இந்தச் சண்டை தொடர்ந்தது.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜித் என்று இந்த இருதுருவ மோதல் தலைமுறைகளைத் தாண்டித் தொடர்கிறது. இனியும் தொடரும். தமிழ் மரபில் இந்த இரு துருவம் எல்லா இடங்களிலும் இருக்கும். அரசியலில் தி.மு.க Vs அ.தி.மு.க., கருத்தியலில் திராவிட அரசியல் Vs இந்துத்வ அரசியல்.
"இரண்டு நடிகர்களுக்காக நம் இளைஞர்கள் அடித்துக்கொள்கிறார்கள். எப்போதுதான் திருந்துவார்கள் என்று தெரியவில்லை. வேதனையாக இருக்கிறது" என்கிறார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். தமிழர்கள் நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது பற்றிய கிண்டல் எல்லா மட்டங்களிலும் எழுகிறது. வாட்ஸ்அப் சாட்களில் பொங்கல் வாழ்த்துகளை அடுத்து அதிகம் பரிமாறிக்கொள்ளப்பட்டது இதுவாகத்தான் இருக்கும்.
ஆனால், சிலர் எப்போதும் ரசிகர்களாகவே இருப்பார்கள். அவர்கள் சண்டை போடாமல் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழகம் முழுக்க சில ரசிகர்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக இன்றைய ஆனந்த விகடனில் வெளியான விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

கழுகார் அப்டேட்ஸ்: ஆளுநர் நிகழ்ச்சி ரத்தான பின்னணி!
அபகரிப்பு வழக்கில் சிக்கிய மாஜி...
காப்பாற்றிய கொங்கு அமைச்சர்!
மலை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மாஜி அமைச்சர் ஒருவர் மீது நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சொந்த ஊர் ஸ்டேஷனில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பதறிப்போன மாஜி, தனது பழைய நண்பரும், தற்போது அமைச்சராக இருப்பவருமான கொங்குப் பிரமுகரிடம் உதவி கேட்டு மன்றாடியிருக்கிறார்.
"தாய்க் கழகத்தைச் சேர்ந்த ஆள் நீங்க. உங்களுக்கு இந்த உதவிகூடச் செய்யலைன்னா எப்படி..." என கூலாகச் சொன்ன கொங்கு அமைச்சர், உடனடியாகக் காவல் அதிகாரிகளுக்கு போன் போட்டு கைது நடவடிக்கையைத் தடுத்துவிட்டாராம். கைதிலிருந்து தப்பிய மாஜி, கொங்கு அமைச்சரின் 'பவர்' பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறாராம்.
கழுகார் அப்டேட்ஸில் மேலும்...
கிராவல் கொள்ளைக்கு உதவும் டெல்லி பிரதிநிதி!
தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்...
வாடிவாசல் தாண்டாத காளை... ஆளுநர் நிகழ்ச்சி ரத்தான பின்னணி!
உள்ளிட்ட பல அரசியல் சீக்ரெட் செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
"திமுக-வின் சித்தாந்தத்தை ஆளுநர் தகர்க்கிறார் என்பதால் எதிர்ப்பு...!" - வானதி சீனிவாசன் சுளீர்!
'பா.ஜ.க-வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை...' என்ற குற்றச்சாட்டு, ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரங்கேறிய தகிக்கும் காட்சிகள் என அரசியல் தடதடக்கிறது.
இந்தச் சூழலில், அனைத்துக்கும் பதில்கேட்டு பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் அளித்த விரிவான பேட்டியில்,
சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை எப்படி பார்க்கிறீர்கள்..?
பா.ஜ.க ஆளாதா மாநிலங்களில் தொடர்ந்து ஆளுநர்கள் அரசியல் ரீதியாக பல விஷயங்கள் முன்னெடுப்பது சரியானதா?
ஆர்.எஸ்.எஸின் கொள்கைகளைத்தான் ஆளுநர் அதிகமாக பேசுகிறார் என்கிறார்களே..?
ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டை பாஜக பதற்றமாக வைத்திருக்க பார்க்கிறது என்கிறார்களே?
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது அதிபர் தேர்தலுக்கான முன்னெடுப்பு என விமர்சனம் வைக்கப்படுகிறதே?
பா.ஜ.க-வில் 'பெண்களுக்கு பாதுகாப்பில்லை...' என்று வெளியேறியிருக்கிறாரே காயத்ரி ரகுராம்?
என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவற்றைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்களில் பாஜக சாதிக்குமா, சறுக்குமா?! -
சமீபத்தில் நடந்துமுடிந்த பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 'அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பணியாற்றுங்கள்' என்பது உள்பட பல வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தமது கட்சியினருக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 9 மாநில சட்டமன்றத் தேர்தல்களையும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலையும் கருத்தில் கொண்டு பா.ஜ.க-வின் செயற்குழு கூட்டத்தில் விரிவான அளவில் விவாதங்கள் நடைபெற்றதாக பா.ஜ.க நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு, முதலீடு... 10 ஃபைனான்ஷியல் விதிமுறைகள்!
நம் வசதியைப் பெருக்கிக் கொள்வதற்காகச் சொந்தமாக வீடு, கார், ஏ.சி., ஃப்ரிட்ஜ் எனப் பலவற்றையும் இ.எம்.ஐ மூலம் வாங்குகிறோம்.
இவற்றுக்காக இ.எம்.ஐ செலுத்தும் தொகை எத்தனை சதவிகிதத்துக்குள் இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக போகும்..?
இ.எம்.ஐ தொகையை திரும்பச் செலுத்தும்போது எந்தெந்த கடன்களை முதலில் செலுத்த வேண்டும்..?
எவ்வளவு தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.. என்பது உள்ளிட்ட நிதி சம்பந்தமான பல்வேறு கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

தினமும் 9 ஆயிரம் அடிகள் நடப்பது மாரடைப்பைத் தடுக்குமா? - மருத்துவர் விளக்கம்
பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன.
இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் உண்மைத் தன்மை குறித்தும், உடற்பயிற்சிக்கும் இதய நலத்திற்குமான தொடர்பு குறித்தும் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் குருபிரசாத் சொல்லும் விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

விதி: தமிழ் சினிமாவின் விபரீதமான மரபை உடைத்த படம்!
டென்ட் கொட்டாய் டைரீஸ்... 80s, 90s சினிமா
'தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவனையே தேடிச் சென்று திருமணம் செய்து கொள்வதில்தான் ஒரு பெண்ணின் ஒழுக்கம் இருக்கிறது' என்கிற விபரீதமான செய்தி நீண்ட காலமாகத் தமிழ் சினிமாவில் பதிவாகிக் கொண்டிருந்தது. இந்த மரபை உடைத்த படம் இந்த 'விதி'.
இன்றைய காலகட்டத்தை ஒப்பிடும் போது எண்பதுகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தன. எனவே மக்கள் சினிமாவைப் பார்ப்பது மட்டுமல்லாமல் 'கேட்கவும்' செய்தார்கள். ஆம், சினிமாவின் கதை வசனங்களை 'ஒலிச்சித்திரமாக' கேட்டு மகிழ்வது அப்போதைய டிரெண்டாக இருந்தது. அந்த வரிசையில் புகழ்பெற்ற சினிமா என்றால் அது 'திருவிளையாடல்'தான். அது கோயில் விழாவாக இருந்தாலும் சரி, காதுகுத்து நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அதன் எல்.பி.ரிகார்டை ஒலிக்க விடுவார்கள். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதைக் குறிக்கும் வகையில் 'டொடடாய்ங்' என்கிற சத்தம் ஒலிப்பது கேட்கவே குதூகலமாக இருக்கும்.
80 களின் தமிழ் சினிமா கொண்டாட்டங்களில் ஒன்றான இந்த 'விதி' படத்தின் மேலும் பல சுவாரஸ்யங்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...