ஈரோடு தேர்தல்: எடப்பாடியின் கணக்கு - உயரும் குடிநீர் கட்டணம் - திருமாவளவன்:வனிதா விஜயகுமார் அதிரடி!

ஈரோடு கிழக்கு: களமிறங்கும் அதிமுக; எடப்பாடி கணக்கு என்ன?, உயரும் குடிநீர், கழிவுநீர் கட்டணங்கள்... யானைக்கன்றுகளின் தாயுமானவர்கள்!, வருமானத்தின் இரு வகைகள்... தெரிந்துகொள்ளலாம் வாங்க!, காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு அதிகரிக்குமா? - திருமாவளவன்: வனிதா விஜயகுமார் அதிரடி

ஈரோடு கிழக்கு: களமிறங்கும் அதிமுக; எடப்பாடி கணக்கு என்ன?
2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வெ.ரா திருமகன் வெற்றிபெற்றார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் சமீபத்தில் அவர் மரணம் அடைந்தார். இதனால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 18-ம் தேதி அறிவித்தது.
அ.தி.மு.க-வை பொறுத்தவரை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதி கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. த.மா.கா சார்பில் யுவராஜா போட்டியிட்டார்.
அதேபோலவே, தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியிருந்தது. அதன்படி, காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட்ட திருமகன் 67,300 வாக்குகளும், த.மா.கா வேட்பாளர் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 58,296 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், இந்த முறையும், த.மா.கா தாமாக வந்து, அங்கு நிற்பதாக விருப்பம் தெரிவித்தது. ஆனால், அதிமுக களமிறங்குகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே. வாசன் ஏன் விட்டுக்கொடுத்தார்...?
அ.தி.மு.க நிர்வாகிகள் அவரை எப்படி சம்மதிக்க வைத்தார்கள்..?
அதிமுக களமிறங்க முடிவு செய்தது ஏன் என்பது உள்ளிட்ட தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...
மேலும், இதே தொகுதியில் திமுக கூட்டணியில் களமிறங்கும் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளர் ரேஸில் யார் யார் உள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

அடுத்தடுத்து உயரும் குடிநீர், கழிவு நீர் கட்டணங்கள்...!
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்தடுத்து மக்களுக்கு அதிர்ச்சியாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. முதலில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அடுத்து மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது குடிநீர், கழிவுநீர் கட்டணமும், ஏன் லாரியில் வழங்கப்படக் கூடிய தண்ணீர் கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
சென்னையில் குடிநீர் வாரியத்தின் மூலம் 15 மண்டலங்களில் குழாய்கள் மூலமாகவும், லாரி மூலமாகவும் தினசரி 100 கோடி லிட்டர் அளவிலான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பாலியல் குற்றச்சாட்டு: யார் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்?
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ளனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் இந்த பிரச்னை குறித்த விரிவான செய்தி மற்றும் யார் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் என்பது உள்ளிட்ட தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

தாயைப் பிரிந்த யானைக்கன்றுகளின் தாயுமானவர்கள்!
The Elephant Whisperers என்ற ஒற்றை ஆவணப்படம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஆஸ்கர் விருதின் ஆவணக்குறும்படப் பிரிவுப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறது. தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானைக் கன்றுகளுக்குத் தாய் தந்தையாக மாறிக் கடைத்தேற்றி விட்ட பழங்குடித் தம்பதியரின் உண்மைச் சம்பவத்தை எதார்த்தமாகக் காட்டியிருக்கிறார் ஊட்டியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.
காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மனையும், பெள்ளியையும் தேடி முதுமலைக்குக் கிளம்பி, ஆசியாவின் மிகப் பழைமையான தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை அடைந்தோம்.
பொம்மனிடம் அறிமுகமாகி, பேச்சுக் கொடுத்தோம். மூங்கில் தழைகளை யானைக்குத் தின்னக் கொடுத்தபடியே யானைக்கன்றுகள் மீதான தனது பிரியத்தையும் பாசத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க...

வருமானத்தின் இரு வகைகள்... தெரிந்துகொள்ளலாம் வாங்க!
ஒருவருக்கு வரும் வருமானத்தை இரு வகைகளாகச் சொல்லலாம். ஒன்று, செயல் சார்ந்த வருமானம் (Active Income). மற்றொன்று, செயல்சாரா வருமானம் (Passive Income).
ஆக்டிவ் இன்கம் என்பது ஒருவர் செயலை செய்வதன்மூலம் கிடைக்கும் வருமானம் ஆகும். அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் மாதச் சம்பளம் செயல் சார்ந்த வருமானம் ஆகும். இந்த வருமானத்தைப் பெற ஒருவர் தொடர்ந்து உழைப்பது மிக அவசியம். ஆனால், நாம் உழைத்தாலும் உழைக்காவிட்டாலும் நம் செயல்சாராமல் நமக்குக் கிடைப்பதுதான் செயல்சாரா வருமானம்.
இந்த இரு வகை வருமானம் குறித்து விரிவாக விளக்குகிறார் நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன் ( Aismoney.com).

காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு அதிகரிக்குமா? - நிபுணர் விளக்கம்
'இந்த எண்ணெய் தேய்த்தால் தலைமுடி நன்றாக வளரும். இந்த ஷாம்பூ பயன்படுத்தினால் தலைமுடி பார்க்க பளபளவென இருக்கும்' என்றெல்லாம் நாம் பார்த்துப் பார்த்து வளர்க்கும் தலைமுடி, சோடா, ஜூஸ், காபி, டீ போன்ற பானங்கள் குடிப்பதால் உதிரும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
இது தொடர்பாக பீஜிங்கில் உள்ள Tsinghua பல்கலைகழகம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை மற்றும்
இந்த ஆய்வு குறித்து பெங்களூரைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் ஶ்ரீமதி வெங்கடராமன் சொல்லும் விளக்கம் உள்ளிட்டவற்றைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

திருமாவளவன்: வனிதா விஜயகுமார் அதிரடி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிறைவு பெற இன்னும் ஒரே நாள்தான் மிச்சமிருக்கிறது. தற்போது டைட்டில் வெல்வதற்கான இறுதிப் பந்தயத்தில் அசிம், விக்ரமன், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், `டைட்டில் வெல்ல விக்ரமனுக்கு ஆதரவு தர வேண்டும்' என அவர் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ட்வீட் செய்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமாவளவனின் இந்த ட்வீட்டுக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்தவர் நடிகையும் பிக் பாஸ் முந்தைய சீசனின் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார். வனிதா பற்ற வைத்த நெருப்பு சமூக வலைதளங்களில் அப்படியே எரியத் தொடங்கியது எனச் சொல்லலாம்.