Published:Updated:

முதல்வர் குடும்பத்திடம் பேசிய டெல்லி - EPS Vs OPS: சின்னம் யாருக்கு? - Whats app டேட்டா திருட்டு!

Vikatan Highlights January 21
Listicle
Vikatan Highlights January 21

முதல்வர் குடும்பத்திடம் பேசிய டெல்லி... காத்திருக்கும் சர்ப்ரைஸ் சந்திப்பு!, எடப்பாடி Vs பன்னீர்... 'இரட்டை இலை' சின்னம் யாருக்கு?, வாட்ஸ் அப் டேட்டா திருட்டு!, ஹார்ட் அட்டாக்: ஆரோக்கியமான நபர்களுக்கும் வருமா?, 'புதுப்பேட்டை' பார்முலாவுக்குத் திரும்பும் தனுஷ்!


1
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

முதல்வர் குடும்பத்திடம் பேசிய டெல்லி... காத்திருக்கும் சர்ப்ரைஸ் சந்திப்பு!

'தமிழ்நாடு - தமிழகம் தொடர்பாக ஆளுநர் பற்றவைத்த வெடி, டெல்லியில் பலத்த சத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த சீனியர் பா.ஜ.க தலைவர்கள்.

"இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றியதை டெல்லி எதிர்பார்க்க வில்லை. 'தேர்தல் நெருங்கும் சமயத்தில், சர்ச்சைப் பேச்சுகள் ஏன்?' என டெல்லி கண்டித்ததன் விளைவாகவே, 'தமிழ்நாடு' சர்ச்சையில் 'யூ டர்ன்' அடித்திருக்கிறார் ஆளுநர்" என்கிறார்கள் அந்த சீனியர்கள்.

தமிழ்நாடு பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களும், ஆளுநருக்கு எதிரான மனக்குமுறல்களை டெல்லியில் கொட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஆளுநரின் 'யூ டர்ன் பின்னணி குறித்த முழுமையான தகவல்கள் இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழின் கவர் ஸ்டோரியாக வந்துள்ளது.

( அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...)

காத்திருக்கும் சர்ப்ரைஸ் சந்திப்பு!

மேலும், இந்த விவகாரத்தில் முதல்வர் குடும்பத்திடம் டெல்லி தரப்பில் பேசியதாகவும், இதன் காரணமாக சர்ப்ரைஸ் சந்திப்பு ஒன்று நடக்கலாம் என்றும் மிஸ்டர் கழுகு தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல் ஒன்றும் உள்ளது.

அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
எடப்பாடி - பன்னீர் செல்வம்

இடைத்தேர்தல்: எடப்பாடி Vs பன்னீர்... 'இரட்டை இலை' சின்னம் யாருக்கு?!

ரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஈ.வெ.ரா திருமகன் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு, பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, இடைத்தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது.

அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.கவே நேரடியாக களமிறங்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தேர்தலில் அ.தி.மு.க.வு-க்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா கிடைக்காதா, அப்படி கிடைத்தால் யாருக்கு கிடைக்கும் என்பதே அரசியல் களத்தில் பெரும் கேள்வியாக இருக்கிறது.

இது குறித்த விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
தயாநிதி மாறன்

விமானத்தின் எமர்ஜென்சி கதவு: தேஜஸ்வி சூர்யாவை கலாய்த்த தயாநிதி மாறன்

டிசம்பர் 10-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ 6E-7339 விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை கர்நாடக பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாகவும், அப்போது அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும், தேஜஸ்வி சூர்யா விமானப் நிறுவனத்திடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், இந்த நிகழ்வை வைத்து தேஜஸ்வி சூர்யாவைக் கலாய்க்கும் விதமாக தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.

இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
மாலுமி ( ட்விட்டர் )

24 நாள்களாக கடலில் தத்தளித்த மாலுமி... 'Help' என்ற வார்த்தையால் உயிர் பிழைத்தார்!

டோமினிக்காவைச் சேர்ந்தவர் எல்விஸ் ஃப்ரான்கொஸ் (Elvis Francois). மாலுமியான இவர், நெதர்லாண்ட்ஸ் அன்டில்ஸ் பகுதியிலிருக்கும் மார்டின்ஸ் தீவில் படகை பழுத்துப்பார்த்து கொண்டிருக்கும் போது, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இவர் கரீபியன் கடலில் தத்தளித்து வந்திருக்கிறார். நண்பர்களை உதவிக்காக அழைத்திருக்கிறார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
கொலை ( மாதிரிப் படம் )

நாயை நாய் என்ற திட்டிய முதியவர் குத்தி கொலை... திண்டுக்கல்லில் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் ​தாடிக்கொம்பு அ​ருகே உலகம்பட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராயப்பன்​(​65​)​. ​இவர் வீட்டிற்கு அருகே வசிப்பவர் ராணி. அவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

அந்த நாய் அப்பகுதியில் உள்ளவர்களை பார்த்து குரைத்துக் கொண்டும், விரட்டிக் கொண்டும் இருந்துள்ளது. இதனால் ராயப்பன் நாயைக் கட்டி போட்டு வளர்க்கும் படி கூறியதில் இரு வீட்டாருக்கும் விரோதம் இருந்துள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
வாட்ஸ் அப்

உஷார்... வாட்ஸ் அப்  டேட்டா திருட்டு! 

வாட்ஸ் அப் குரூப்பில் யாரேனும் ஒருவர் அவரது எண்ணை மாற்றியுள்ளார் என்கிற அறிவிப்பு வந்தால் உடனடியாக அவருக்கு அழைத்து உண்மையில் அவர் எண்ணை மாற்றியுள்ளாரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஹேக்கர்கள் ஒரு அக்கவுண்டை ஹேக் செய்து வேறு எண்ணில் இருந்து பயன்படுத்தி அதில் உள்ள தகவல்களை எடுக்கும் அபாயம் உள்ளது.

இது குறித்து மென்பொருள் வல்லுநர் ஆர்.சர்வேஷ் சொல்லும் விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்: ஆரோக்கியமான நபர்களுக்கும் வருமா?

முன்பெல்லாம் ஆண்களுக்குத்தான் அதிக அளவில் ஹார்ட அட்டாக் வரும். பெண்களில் அதிக அளவில் மாரடைப்பால் உயிரிழந்தது பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இன்று பெண்களுக்கும் மாரடைப்பு அதிகம் வருவது ஏன்?

'நேத்துவரை நல்லாதான் இருந்தாங்க... இன்னிக்கு திடீர்னு இறந்துட்டாங்க...' என ஆரோக்கியமான நபர், ஹார்ட் அட்டாக்கில் உயிரிழப்பது பற்றியும் அதிகம் கேள்விப்படுகிறோம்.

நன்றாக இருக்கும் நபருக்கு இப்படி திடீரென மாரடைப்பு வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் முகமது இத்ரீஸ்.

அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


8
தனுஷ்

D50 EXCLUSIVE: 'புதுப்பேட்டை' பார்முலாவுக்குத் திரும்பும் தனுஷ்; 'கேப்டன் மில்லர்' அப்டேட் என்ன?

ற்சாகத்தில் இருக்கிறார் தனுஷ். தெலுங்கு, தமிழில் உருவாகியுள்ள 'வாத்தி' படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனையடுத்து 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில்தான் அவரது 50-வது படத்தைத் தயாரிக்கவிருப்பது சன் பிக்சர்ஸ் என்று அறிவித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தை எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் 'கேப்டன் மில்லர்'. இதில் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

மேலும் விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...