Published:Updated:

கமலாலயத்தில் குமுறிய அதிமுக! - சேகர் பாபு காட்டம் - வரி சேமிப்பு ஆலோசனை - ரெடியாகும் விஜய் வாரிசு!

Vikatan Highlights January 24
Listicle
Vikatan Highlights January 24

இடைத்தேர்தல்: பாஜக-விடம் சிக்கித் தவிக்கிறதா அதிமுக?! - கமலாலயத்தில் வெளிப்பட்ட குமுறல்!, அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சேகர் பாபு பதில்!, குஜராத்: ஆவணப் படத்துக்கு தடை! - முழுப் பின்னணி, வருமான வரி சேமிப்பு ஆலோசனை, உடற்பயிற்சி இல்லா எடைக் குறைப்பு சரியா? ரெடியாகும் விஜய் 'வாரிசு'!


1
பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்.

"எங்க வந்து நின்னுட்டு இருக்கோம் பாருங்க..." - கமலாலயத்தில் குமுறிய அதிமுக! 

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி தெளிவான முடிவெடுத்து, வேட்பாளரை அறிவித்து வேலைகளை தொடங்கியுள்ளது. ஆனால், எதிர் தரப்போ தங்கள் கூட்டணியில் யார் நிற்பது என்கிற முடிவுக்கு வருவதற்கே பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

எதிர் தரப்பு கூட்டணியில் ஏற்கனவே அந்த தொகுதியில் நின்ற த.மா.கா-வுக்கு முன்னுரிமை அளித்திருந்தாலும் கள சூழல், இடைத்தேர்தல் ஃபார்முலா ஆகியவற்றை அறிந்து பின் வாங்கியது த.மா.கா. இதனையடுத்து சுமுகமாக முடிந்துவிட்டது என்று இ.பி.எஸ் தரப்பு துள்ளளுடன் வேட்பாளரை அறிவித்து வேலைகளை ஆரம்பிக்கலாம் என்றிருந்த போது, ஓ.பி.எஸ் ஒரு கடிவாளம் போட்டு நானும் போட்டிக்கு வருவேன் என்று அறிவித்தார்.

இந்த நிலையில்தான் அதிமுக-வின் இரு பிரிவினரும் கமலாலயத்துக்கு படையெடுத்து தங்கள் நிலையை எடுத்து வைத்தனர்.

இதையொட்டி கமலாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள், அரங்கேறிய காட்சிகள் உள்ளிட்டவற்றை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

சின்னம்: பாஜக-விடம் சிக்கித் தவிக்கிறதா அதிமுக?!

மேலும், பாஜக-வின் சிக்னலுக்காக காத்திருக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாக முணுமுணுக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

இந்த பிரச்னையால் பாஜக-விடம் சிக்கித் தவிக்கிறதா அதிமுக?!

இது குறித்த விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
சேகர் பாபு

"உண்டியல் பணத்தில்..." - அண்ணாமலை குற்றச்சாட்டு... சேகர் பாபு காட்டம்! 

" 'திருச்செந்தூர் கோயிலில் 5,309 மாடுகள் காணாமல்போகவில்லை' என அமைச்சர் சேகர் பாபு சொல்லட்டும்.

கோயில் உண்டியலில் மக்கள் போடும் பணத்தை எடுத்து மிக்‌ஷர் வாங்கி சாப்பிடக்கூடாது" என திருச்சி விமான நிலையத்தில் வைத்து அமைச்சர் சேகர் பாபுவை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதே திருச்சி விமான நிலையத்தில் வைத்து அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதிலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
பிபிசி ஆவணப்படம்

குஜராத் கலவரம்: பிபிசி ஆவணப் படத்துக்கு தடை!  - முழுப் பின்னணி என்ன?

ங்கிலாந்தின் பிரபல தனியார் ஊடக நிறுவனமான பிபிசி, இந்தியாவில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி ரகசிய விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இதில் இந்த கலவரம் நடக்க அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியும் காரணம் என கூறியிருப்பதாக தகவல் வெளியானது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி இருக்கிறது.

'இந்தியா-மோடிக்கான கேள்விகள்' என்னும் தலைப்பில் வெளியாகிய இதற்கு பல்வேறு தரப்பினரிடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அந்த ஆவணப்படத்திற்கு இந்திய அரசு தடைவிதித்திருக்கிறது.

இதன் முழுப் பின்னணி என்ன..? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
INS Vagir

INS Vagir: நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் - சிறப்பம்சங்கள்! 

2020-ம் ஆண்டு தொடங்கிய கப்பல் கட்டுமான பணி நிறைவடைந்த பின் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் வெற்றியை அடுத்து 'ஐஎன்எஸ் வகிர்' அதிநவீன நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு, நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 'ஐஎன்எஸ் வகிர்' நீர்மூழ்கி கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார் கடற்படை தளபதி ஹரிகுமார். கடந்த 24 மாதத்தில், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கி கப்பல் 'ஐஎன்எஸ் வகிர்'.

இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
Income Tax

வருமான வரியை வலி தெரியாமல் சேர்க்கும் வழிகள்!

நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி வரைக்கு மான 12 மாதங்கள் ஆகும்.பலரும் வருமான வரியை ஆண்டு இறுதியில் கடைசி இரு மாதங்களான பிப்ரவரி, மார்ச்சில் மொத்தமாகக் கட்டுகிறார்கள். அப்போது அவர்கள் சம்பளப் பணத்தை வருமான வரியாகக் கட்டி விட்டு, செலவுக்குப் பணம் இல்லாமல் திண்டாடுகிறார்கள்.

இதனால் கடன் வாங்கும் நிலைமை ஏற்படுகிறது. இந்த நிலையில், இதை தவிர்ப்பது எப்படி..?

வரியாகக் கட்ட வேண்டிய பணத்தை வலி தெரியாமல் சேர்க்கும் வழிகள் என்ன என்பதை விவரிக்கிறார் நிதி ஆலோசகர் ( https://www.wmsplanners.com ) சி.பாரதிதாசன்.

அதனைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
உடற் பயிற்சி

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடைக் குறைப்பு சரியானதா?

Doctor Vikatan: ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காகவே பலருக்கும் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைக்கும் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்.

வொர்க் அவுட் செய்கிறவர்களுக்கு சப்ளிமென்ட்டுகளும் புரோட்டீன் பவுடரும் அவசியமா? உடற்பயிற்சி செய்யாமல் சப்ளிமென்ட் மூலம் எடையைக் குறைப்பது சரியானதா?

வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
வாரிசு விஜய்

கோலிவுட் ஸ்பைடர்: ரெடியாகும் விஜய் 'வாரிசு'!

மல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட தி.மு.க கூட்டணியோடு இணைவது உறுதியாகிவிட்டது. அதோடு தமிழகம் முழுவதும் சென்று கூட்டணிக்குத் தேர்தல் பிரசாரம் செய்யவும் அவரிடம் கேட்கப் போகிறார்களாம். அதனால் இந்த வருடத்துக்கான திட்டங்களைக் கச்சிதமாக முடித்துக்கொண்டு தேர்தலுக்குத் தயாராகப்போகிறார் கமல்.

கோலிவுட் ஸ்பைடர் தரும் மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகள்...

ஹைதராபாத்துக்கு குடிபுகும் தமிழக படைப்பாளிகள்!

அடுத்த தலைமுறைக்கு ரெடியாகும் விஜய் 'வாரிசு'!

'ஜெயிலரி'ல் இணையும் பாலிவுட் பிரபலம்!

அஜித்க்கும் தயாராகும் ஸ்கிரிப்ட்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...